சனி, 2 ஜூன், 2018

..

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், 'கம்பள விருட்சம் அறக்கட்டளை' நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், மாரியம்மன் கோவில், சிறுதுண்டி அம்மன், வரதராஜ பெருமாள், மாலப்பட்டி பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களுக்கு, சிஞ்சுவாடி ஜமீன்தார் பாளையப்பட்டு ஜம்ப நாயக்கர், கோவில் பராமரிப்புக்கு நிலம் வழங்கியுள்ளார்.
சிஞ்சுவாடி, கோலார்பட்டியில் உள்ள கோவில் நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான, 136 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை மீட்டு, கோவில்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், நிலங்களை குத்தகைக்கு, பொது ஏலத்தில் விட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, கோவில்களில் பாதுகாப்பு,
பராமரிப்பு, புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ...தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக