புதன், 6 ஜூன், 2018

மலரும் நினைவுகள் ...
Sivakumar Kumar is feeling happy in Coimbatore, Tamil Nadu.
ஒரு தந்தையின் பரிதவிப்பு ...
பள்ளியின் முதல் நாள்...
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....
யானை சவாரி செய்ய நெனச்சா நாம யானையா மாறணும்!
குதிரை சவாரி செய்ய நினைச்சா நாம குதிரையா மாறணும்!
நாய் கதை சொன்னா நாய் மாதிரி நடிச்சி குறைக்கணும்!
கரடி கதை சொன்னா கரடியா மாறி கத்தணும்! இதையெல்லாம் மறந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரும்போது ..ஏதோ மனம் கனத்து விடுகிறது .
பள்ளியின் முதல் நாள் 4 மணி நேர பிரிவு ...எனக்குதான் தொண்டைக்குழயில் பேச்சே வரமுடியாமல் தவித்தது .(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க பயப்படாம ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் ஷியாம் தன் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக