கம்பளத்தார் பற்றி எழுதுன வரலாற பூரா படிச்சாச்சு.
சுமார் 8 வருடம் மேல் கடும் உழைப்பு இந்த சமூகத்தை பற்றிய தேடல் எனக்கு இருந்தது.
இந்த சமூகத்தின் பிளஸ், மைனஸ். இவர்களை பற்றிய நல்ல வரலாறு, நல்ல விமர்சனம். கெட்ட வரலாறு கெட்ட விமர்சனம் அனைத்தையும் படித்து இருக்கேன்.
ஜீபி கணக்கில் பல நூல்கள் எனது கம்யூட்டர் ல இருக்கு. யார் கேட்டாலும் தர தயார்.
மதுரை, விஜயநகர என பல அரசுகள் கம்பளத்தார் மரபினருடையது என்பதை தமிழக கம்பளத்தார்கள் அறிய காரணங்களில் ஒருவன்.
நாயக்கர் என்ற பட்டம் கொண்டவர்களில் ஆதிக்க பிரிவினர் கம்மவார்கள். அதே பட்டம் கொண்டவர்களில் சற்று எளக்காரமாக பிற சமூகத்தால் ஏழைகளாக பார்க்க படுபவர்கள் கம்பளத்தார்கள். இந்த சமூகத்தை ஆதிக்கத்துக்கு எதிராக பேச வைத்து தற்போது ஆதிக்க உணர்வு கொண்டவர்களே முற்காலத்தில் இருந்ததை போல அல்லாமல் தற்போது அனைத்து விசயத்திலும் கம்பளத்தார் இல்லாது செய்வது இல்லை என்ற நிலையை உருவாக்குவதில் தற்போது இணையதள இளைஞர்கள் என்றால் மிகையல்ல.
முதல் மோதல். இளம் வயது விதவைகள் மறுமணத்தை பற்றியதை தொடங்கி. இந்த சமூகத்தில் இதுவரை உள்ளுக்குள்ளேயே பேசி அடங்கிய கருத்தை பொது கருத்தாக மாற்றி விவாதம் செய்து பல பல இளைஞர்கள் இதெல்லாம் தவறு, நாம் பெண்களுக்கு எதிராக மட்டுமே செய்கிறோம் என்பதை புரிய தொடங்கி உள்ளனர்.
அதே போல மேலாடை அணியாமல் இருப்பது, பழைய பழக்கம் என்று சொல்லி மூட பழக்கங்களாக இருப்பது போன்ற பல கருத்துகளை விவாதம் செய்து வந்துள்ளேன்.
ஒரு காலத்தில் சாதி வெறி இருந்தது (சண்டைகள் இணையத்தில் நாரும்), பிறகு சாதியை விழிப்புணர்வு செய்ய நேரடியாக பேச தொடங்கினோம்.
தற்போது பல ஆயிரம் இளைஞர்கள் வந்து விட்டார்கள் அவர்கள் வரலாறு, விழிப்புணர்வு செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தற்போது சாதி வெறியை நீக்கி சமூக பற்றாக மாறியுள்ளேன்.
எல்லாம் புத்தகங்கள் செய்த தாக்கம் அதனால் வந்த மாற்றம்.
இதில் தவறு என்று ஏளனம் செய்பவர்கள் செய்யலாம் ஆனால் முன் இருந்ததை விட ஒடுக்கப்பட்ட கம்பளத்தார் மக்களை போன்ற சமூகத்துக்கு உதவி செய்யவே மனம் ஓடுகிறது.
புத்தகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனது வாழ்நாளில் நான் அனுபவித்து விட்டேன்.
பெண் ஏன் அடிமையானாள்
எங்கே போகிறது இந்து மதம்
பெரியாரிய சிந்தனை, பெரியார் எழுதிய குடியரசு நூல்
எங்கே போகிறது இந்து மதம்
பெரியாரிய சிந்தனை, பெரியார் எழுதிய குடியரசு நூல்
லிங்காயத்து சமூகமும், பசவண்ணரும்
கள்ளர் களின் வாழ்வியல் நெறிகள்
காவல் கோட்டம்
மனுதர்மம்
கள்ளர் களின் வாழ்வியல் நெறிகள்
காவல் கோட்டம்
மனுதர்மம்
களப்பிரர் காலம்
ராணி மங்கம்மா என்ற புரட்சி பெண்
அம்பேத்கர் எழுதிய இந்துவாக சாக மாட்டேன்
ராணி மங்கம்மா என்ற புரட்சி பெண்
அம்பேத்கர் எழுதிய இந்துவாக சாக மாட்டேன்
குரான் முழுவதும் படித்து விட்டேன்
தற்போது அய்யா வைகுண்டரின் சாதி மறுப்பு நெறி யை படித்து கொண்டு வருகிறேன்.
தற்போது அய்யா வைகுண்டரின் சாதி மறுப்பு நெறி யை படித்து கொண்டு வருகிறேன்.
புத்தகமே நண்பனாக உள்ளது.

சூப்பர் பாவா
பதிலளிநீக்கு