உடுமலைப்பேட்டை ....என்றலே தனி அழகு தான் ...
வரலாறு சொல்லும் பழங்கால கோவில்; அழகு மிளிரும் சிலைகளின் ஆச்சரியம் ! பரம்பை...பூக்கள்...அழகு .
உடுமலை அருகே, பழங்கால வரலாற்றையும், தொன்மை வழிபாட்டையும், தாங்கி நிற்கும், கோவிலை தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மரங்களை, சுற்றுச்சுவராக கொண்டு, வளாகத்தில், கிணற்றுடன் காணப்படும் இக்கோவில், பல்வேறு வரலாற்று தகவல்களை இன்றும் இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்தி வருகிறது.இதன் பழமையை வெளிப்படுத்த, கருவறை நேராக உள்ள நுழைவாயிலில், பெரிய கற்கள் நடப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் உள்ளே வருவது போன்ற பல்வேறு கட்டமைப்புகளை கூறலாம்.சிலிர்க்க வைக்கும் சிலைகள்கோவிலில் உள்ள செல்லாண்டியம்மன் சிலை தொன்மை வாய்ந்ததாகும். அஷ்ட துர்க்கை எனப்படும் வடிவமைப்பில், கருவறையில் அம்மன் சிலை உள்ளது. முன்கோபுரத்தின் மேற்பகுதி முழுவதும் பெரிய கற்களை அடுக்கி, சுண்ணாம்பு காரையால், பூசப்பட்டுள்ளது. கோபுரமும், இத்தகைய கட்டுமான பொருட்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குள் எப்போதும், ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே நிலவும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.அம்மனுக்கு எதிரில், நந்தியும், அதிக உயரம் கொண்ட, வேலும் காணப்படுகிறது. அம்மன் சிலை வடிவமைப்பை வைத்தே, அது, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல், அம்மன் சன்னதிக்கு இருபுறமும், அப்போதைய ஆட்சியாளர்களின் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளின் வடிவமைப்பு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ஆபரணங்களும் அழகும் !அங்குள்ள ஆட்சியாளர்கள் சிலை குறித்து விசாரித்த போது, உடுமலை அருகே, பல்வேறு சிறப்புகளுடன், ஆட்சி புரிந்த தளி பாளையக்காரர்கள் குறித்த தகவல்கள் வெளிப்பட்டன. இதில், கிழக்கு நோக்கி, அமைந்துள்ள பாளையக்காரர் எத்தலப்பரின் சிலையில், வாளும், அதை உடலோடு, சேர்த்து பிடிக்கும், கச்சையும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதே போல், அப்போது ஆண்கள் அணியும், ஆபரணங்களும், தற்போது பார்த்தாலும், பொலிவு மாறாமல், காட்சியளிக்கிறது. கிழக்கு பகுதியிலும், பாளையக்காரர்கள், குடுவை மற்றும் ஆயுதம் தாங்கிய உதவியாளர்களுடன் இருக்கும் சிலை உள்ளது.இந்த கோவில் பராமரிப்புக்கு, சுற்றுப்பகுதியிலுள்ள பல கிராமங்களில், நிலங்களை மானியமாக பாளையக்காரர்கள் வழங்கியுள்ளனர். மானியத்துக்கு நிலங்கள் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டே, இந்த கோவிலின் வரலாறு வெளிப்படுகிறது.செழித்து நிற்கும் மரங்கள்குறிஞ்சேரியிலுள்ள குறிஞ்சேரியம்மன் கோவில், எலையமுத்துார் ஏழூராம்மன் கோவில் உட்பட உடுமலை பகுதியிலுள்ள சில கோவில்கள், தனித்து தெரியும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள் வளர்ப்பும், அதற்கான கிணறும் இக்கோவில்களை தனித்து காட்டுகின்றன. இலுப்பை மரமும், பரம்பை மரமும் இக்கோவில்களில், தவறாமல் இடம் பெற்றிருக்கும். இதில், பரம்பை எனப்படும் மரத்தில், பூக்கும் பூக்களை, அப்போதிருந்த ஆட்சியாளர்கள் விரும்பி சூடுவார்கள் என்ற தகவலும் ஆச்சரியமளிக்கிறது. கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுற்றுசுவர் மட்டும் இருந்தாலும், செழித்து வளர்ந்துள்ள மரங்களே கோவிலுக்கான அழகை மெருகூட்டுகின்றன.புதுப்பிக்க வேண்டும் பழமை வாய்ந்த கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலை, தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள, கற்களை கீழே இறக்கி, மீண்டும், அவற்றை அடுக்கி, பழமையான முறையில், பூச்சு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜையும், பரம்பரை பூசாரிகளின் பராமரிப்பும் கோவிலை பாதுகாத்து வருகிறது. இக்கோவிலை தற்போதுள்ள கட்டமைப்பு மாறாமல் புதுப்பித்தால், அழியும் வரலாற்று தகவல்களை பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கலாம்.
பரம்பை...பூக்கள்....
;உடுமலை அருகே பழமையான கோவிலில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, பூத்துள்ள அரிய வகை மலரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில், சில அரிய வகை மரங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதில், பரம்பை எனப்படும் மரத்தில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது பூக்கள் மலர்ந்துள்ளன. நாகலிங்க பூ போன்ற வடிவில், காணப்படும் இந்தப்பூ, கடந்த, 15 ஆண்டுகளுக்கும் முன்பு வேறோரு நிறத்திலும், தற்போது, நிறம் மாறி, பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில், பூத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவில் பரம்பரை பூசாரியினர் கூறியதாவது: கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவில், தளி பாளையக்காரர்களால் கட்டப்பட்டு, சிறப்பாக வழிபடப்பட்டு வந்துள்ளது. கோவிலில் உள்ள, பரம்பை மரத்தில், பூக்கும் மலர்களை பாளையக்காரர்கள் தங்கள், கிரீடத்தில், சூடிக்கொண்டிருந்ததாக, செவிவழி தகவல்கள் உள்ளன.
இதை உறுதி செய்யும் வகையில், கோவில் வளாகத்தில், பாளையக்காரர்கள் சிலையும், பிற பகுதிகளில் அவர்கள் கட்டிய கோவில்களில், இவ்வகை மரங்கள் நடப்பட்டு, தற்போதும் பராமரிப்பில் உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.இந்த மரத்தைக் கட்டிப் பிடித்தாலோ, இதன் நிழலில் அமர்ந்தாலோ, மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள், அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் மற்றும் மூலிகை சாஸ்திரங்கள்.
வேல மரத்தை வெள்வேலம், கருவேலம், குடைவேலம் என்று வகை பிரித்துள்ளனர். இதில் 'பரம்பை’ என்றும் சிறப்பிக்கப்படும் வெள்வேல மரம், பல ஆலயங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோவில் வளாகத்தில், பூத்துள்ள அரிய வகை பூக்களை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.
பதிவு செய்த நாள்..27 March..2018 நன்றி :தினமலர் ...💐🌷🌷🌷🙏🙏🙏🙏
என்றும் அன்புடன் சிவகுமார் ....9944066681...வாட்ஸாப்ப் எண்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக