புதன், 21 மார்ச், 2018


Sivakumar Kumar photos — feeling happy in Papanasam.

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!..அன்புடன் சிவக்குமார் ..9944066681...வாட்ஸாப்ப் எண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக