சனி, 10 மார்ச், 2018


என் அன்புக்கினிய குழந்தைகளின் சிறுவர் கதைகள் எழுதும் சென்னை நண்பர் - விழியன் Umanath Selvan...அவர்களின் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது ..ஷ்யாமின் மழலைப்பள்ளியில் பயிலும்போது ஆண்டுவிழா பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் அதை மலரும்மலரும் நினைவுகளாகவே பதிந்துவிட்டார் ..மழலையர் கதைகளில் அழகாக புத்தக வடிவில் கொண்டுவந்துவிட்டார் ...நன்றி ... 

மழலைப்பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டம் என்பது...
திரை விலகியதும் ப்பே என்று மழலையின் கதறல்.. மேடையின் கீழிருந்து ஆசிரியர் அழாதே அழாதே என்று சமாதானம் செய்தும் வேலைக்கு ஆகவில்லை. இசை ஒலித்ததும் இடுப்பில் கைவைத்து நடமானத்துவங்கிவிட்டான் .
கைத்தட்டிக்கொண்டே தன்னத்தானே சுற்றிக்கொள்ள வேண்டும். சுற்றியவன் தன் பின்னால் இருந்த ஆண்டுவிழா பேனரைப் பார்த்து அப்படியே நின்றுவிடுகின்றான். இசை ஒலித்தபடியே இருக்கு அவன் பேனரில் தனக்கு தெரிந்த எழுத்துக்களை படித்துக்கொண்டே இருக்கின்றான்.
அரைவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவராக முன்னே வந்து தங்கள் நிறைத்தை காட்ட வேண்டும் வானவில் பாட்டிற்கு. ஒரு குழந்தை வெளியே வந்து வட்டத்தில் நிற்கவில்லை. இன்னொருந்தி வந்து போ போ லைனில் நில்லு என தள்ளி விடுகின்றான் ..
ஒரே ஒரு குழந்தை மேடையில் அழத்துவங்கியதும் தானும் அழவேண்டுமோ என்று மற்ற குழந்தைகளும் கண்ணில் நீர் கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.
திரைவிலகியதும் தன் பெற்றோர் எங்கே என தேடியது குழந்தை. கண்டுபிடித்து கை காட்டியபடியே நின்றது குழந்தை. ஆனந்த நீர்மல்க அமர்ந்திருந்தார் அம்மா .
பாடல் ஒலிக்க ஆரம்பித்ததில் இருந்து உடல் அசையவே இல்லை. முடியும் தருவாயில் ‘jump' என்ற வார்த்தை கேட்டதில் இருந்து குதிக்க ஆரம்பித்தவன் பாடல் நின்றும் jumpக்கிட்டே இருந்தான்...
மழலைகளின் உற்சாகம் எளிதில் பற்றிக்கொள்ளும்.. பற்றிக்கொள்ளச்சொல்லும்...
திரும்ப திரும்ப.. திரும்ப திரும்ப... சொல்லிக்கொண்டே இருக்கலாம்..
மழலையில் தப்புகளில் இருக்கு அழகியலோ அழகியல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக