வெள்ளி, 9 மார்ச், 2018

ஜஸ்ட் ரிலாக்ஸ் பிளீஸ்: 2 விதமான மக்கள்.!
1. வாழ்க்கையில ரொம்ப நல்ல நிலை வர்ற வரைக்கும், ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒண்ணுதான். ஆனா, அதுக்காக ரொம்ப அல்பத்தனமாகவும் போக கூடாது.! கடன் வாங்கி, லோன் வாங்கி கார் வாங்க வேண்டியதில்லை தான்.! அது நமக்கு அவசியமில்லாமல், பகட்டுக்காக இருக்கும் பட்சத்திலும், நமது ப்ரொபஷனல் இமேஜ் ( ப்ரேக் ஈவன் எல்லாம் தாண்டிய பிறகு), மற்றும் பணி & வியாபாரத்துக்கு அது முக்கியம் எனில்,தவறு இல்லை என்பது விஷயம் தெரிந்தவர்களின் கருத்து.!
2. சில விஷயங்களும் & நேரங்களும் மிக தரமானதை நமக்கு, சொந்தமாக்கும் போது மனது அதீத உற்சாகம் அடைகிறது.!2000 ரூபாய்க்கி ஷர்ட் வாங்கி போடுறது, திடீர்னு எப்போவாவது பர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி.ல ட்ராவல் பண்றது (அதுக்கு ப்ளேன்லயே பயணம் செய்யலாம்.!). வருஷத்துக்கு ஒரு தடவை நல்ல 5 ஸ்டார் ஹோட்டல்ல, ரெண்டு நாள் தங்கிட்டு வர்றது , இந்த மாதிரி விஷயங்கள்...யோசிச்சுப் பார்த்தா..."அட்டர் பணம் வேஸ்ட்" என்று தான் தோன்றும். ஆனால், மனதளவில் ரொம்ப புத்துணர்ச்சியாக உணர முடியும்.! காரணம்...அருமை நண்பர் ஒருவர், பணியின் காரணமாக இவை இலவசமாக கிடைத்த போதும், சொந்தமா காசை செலவு பண்ணியும், இதே மாதிரி செய்யக் கூடியவர். என்ன காரணம் என்று கேட்டேன். "மாமூ , உலகத்துல "தி பெஸ்ட்" என்று சொல்லப்படும், நல்ல விஷயங்களை நம மட்டும் அனுபவிச்சா போதுமா.? குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் செலவிடவேண்டும்.! நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு, நமக்கு 60 வயசுக்கு மேல‌ தான் ஓய்வுவும், மனசும் வரும்.! ஆனா, அனுபவிக்க தெம்பு கிடைக்காது.. சம்பாதிக்கிறதுல,ஒரு பகுதிய நமக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே செலவழிக்கிறேன்...என்றார். யோசிச்சு பார்த்தா சரித்தான்.!
3. இன்னொருத்தர், 100 ரூபாய் பீரை...1800 ரூபாய் கொடுத்து,அங்கே போய் குடிக்கிறேயேடா....இது கொஞ்சம் ஓவர் இல்லையா.!
கஜல் பாட்டு கச்சேரி கேட்டுக்கிட்டு அங்கே வர்ற ஆளுங்களை பாத்துக்கிட்டு குடிக்கிறது ஒரு தனி சுகம். காலைல பப்பேட் பிரேக் பாஸ்ட்,உலகத்துலேயே பெஸ்ட் சாப்பாடு எல்லாம் கிடைக்கும். இப்படி வருஷத்துல ஒரு தடவை, தனியா போய் வருகிறார்.! என்னப்பா, நீயா இப்படி..! "நாளைக்கு நாம பெரிய ஆளு ஆயிட்டா, நமக்கு வர்ற கெஸ்ட்டுக்கு இந்த மாதிரி செலவழிக்கும்போது மலைப்பா இருக்காது பாரு" ங்கிறார். இதுவும் சரித்தான்.!
4. மேல சொன்ன லிஸ்ட் மாதிரி ஆளுங்க எல்லாம் நல்லாத் தான் இருக்கிறாங்க. படிப்பு, வேலை, சம்பளம் ( வருமானம்)...இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.!நம்ம கோவை அவினாசி ரோட்டிலோ,அழகான வடவள்ளி ,தொண்டாமுத்தூரோலோ ...இல்லனா பசுமை மாற பொள்ளாச்சி ..அதுவும் இல்லனா ..நம்ம உடுமலைப்பேட்டையிலோ  நிலம் வாங்கி வீடு கட்டி இருக்காங்க.!. நமக்கு.! ஹௌசிங் லோன் அப்ரூவ் பண்ணவே, நூறு தரம் பேங்க் யோசிக்குது.! கேட்டால், வேணாம்.!
நம்பிக்கை இருந்தால்,நாமளும் இந்த மாதிரி முன்னேறி அனுபவிக்கலாம் என்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருத்தர் சொல்றாரு.! பார்க்கலாம்.ம்ம்ம்.
5. இன்று பேஸ்புக் கர்டெய்ன் ரெய்சர் கிடையாது.! ஒரே ஒரு சங்கதி மட்டும். ப்ரெண்ட்ஷிப் ரிக்வெஸ்ட் வரும்போது, ம்யூச்சுவல் பெரெண்ட் லிஸ்ட்டில், நம்ம பேரு முத 10 ஆளுக்குள்ள இருந்தா, கன்பர்ம் பண்ணுவதற்கு முன் ஒரு முறை, மெசேஜ் அனுப்பியோ அல்லது போன் செய்தோ கேட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக மகளிர். நிறைய போலி அய்.டி. மற்றும் இம்சை அரசர்கள், நம்மளையே வெறுப்பு ஏத்துறாய்ங்க. அப்புறம் உங்க இஷ்ட்டம். அடுத்த வெள்ளிக்கிழைமை இதே மாதிரி வேற ஒரு புலம்பலில் சந்திப்போம்.

அன்புடன் சிவகுமார் ...அழகான கனவு இல்லத்துக்கு   9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக