சனி, 24 மார்ச், 2018

அருமையான நீண்ட 30 வருடதிற்கு பிறகு ஒரு சந்திப்பு ...

திரு .பார்த்தசாரதி  அருமையான பள்ளிக்கால நட்பு ...கடந்த வாரம் பல்லடம் தெற்கு பாளையம் தமிழ் தைப்பள்ளி ஆண்டுவிழா வில் கலந்துகொள்வதற்கு செல்லும் பொழுது உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வாளர் திரு அருள்செல்வம் அவர்களின் மூலம் 30 வருட கால பள்ளியில் இருந்த நட்பு துளிர் விட செய்துள்ளார் ..அவருக்கு நன்றி ..பார்த்தசாரதி பள்ளிகால நட்பை பற்றி பிறகு பகிர்கிறேன் ..கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் பள்ளி Great Human Play School ..ஆண்டு விழா நடக்கிறது கண்டிப்பாக வாருங்கள் அன்பு கட்டளையிற்றார் ...அழகான மழலை பள்ளி ஒன்றை ஆரம்பித்து ...மழலை சிறார்களின் அப்துல்கலாம் ,பாரதியார் ,கண்ட கணுவுகளை மெய்ப்பித்துக்கொண்டு கொண்டுள்ளார் ..நேற்று நடந்த அவரின் பள்ளி விழாவை காண சென்று வந்தேன் ..அருமையான பள்ளி ..காந்திநகரில் ..விநாயகர் கோவில் எதிர்புறம் காற்றோட்டம் உள்ள ...நகரின் மத்தியில் இயற்கை சூழந்த அதுவும் மழலை குழந்தைகள் ஏற்ற சூழநிலை கொண்ட பள்ளியை பார்த்தவுடன் தெரிந்தது ...மண் ...அழகாக வாழ்வில் எதை மறந்தோமோ அதில் குழந்தைகள் சிறிய கிண்ணத்தில் மண்ணை அள்ளிக்கொண்டு கூட்டான்சோறு செய்து இரண்டு மூன்று குழந்தை செல்வங்கள் அழகாக ..அதில் வண்ணம் கலந்த சிறு கொடி வைத்து விளையாடி கொண்டு இருந்தது மகிழ்ச்சி ..பாரதி சொன்ன வார்த்தைகள் ..ஓடி விளையாடு பாப்பா ..நீ ஓயுந்து திருக்க லாகாது பாப்பா என்ற வார்த்தைகளை அங்கிருக்கும் சறுக்கு விளையாட்டு ..கருவி ..இன்னும் புதுவிதமான சாதனங்கள் கொண்டு குழந்தைகள் ஆரவாரம் மிக்க விளையாடி கொண்டு இருந்தது மனதிற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது ..அதை பார்த்துவிட்டு விழா நடக்கும் அரங்குக்கு சென்றேன் உள்ளே அரங்கின் மேடையில் உடுமலையின் கல்வியாளர் ..மற்றும் விவேகானந்த பள்ளியின் தாளாளர் .திரு மூர்த்தி அவர்கள் ..அற்புதமாக இன்றைய குழந்தை செல்வங்களுக்கும் ..பள்ளிக்குழந்தைகள் பெற்றோர்களுக்கும் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அழகாக அற்புதமாக பேசிகொண்டுருந்தார் மகிழ்ச்சியாக இருந்தது ..இவரின் தந்தையார் மறைந்த செந்தில் ஆறுமுகம் -வள்ளிநாயகி அவர்களின் புதல்வன் ஏற்கனவே நான் அறிந்துள்ளேன் ..இவரின் தந்தையார் மூலம் தான் எம்பெருமான் முருகக்கடவு லின் ஆசிபெற்ற திரு.கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகளை உடுமலை அரசு பள்ளி வேம்பு சதுக்கம் வாழ்வில் எந்த உயரிய இடத்திற்கு சென்றாலும் மறக்க இயலாது... நன்றி ...பள்ளி குழந்தை செல்வங்களின் பெற்றோர்களுக்குகாக ...இலவசமாக ..தற்போது இருக்கும் மருந்துகள் இல்ல உலகம் எப்படி இருக்கும் என்று ..ஹீலர் ..திருப்பூர் திரு .மோகன் ராசு அவர்களின் இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை ..அந்தளவுக்கு நாம் எதிர்கொள்ளும் உடல் சம்பந்தமான நோய்கள் ..அதை செலவே இல்லாமல் குணமானதை மிக எளிதாக பேசியது வெகு அருமை ...இன்னும் இவரின் சேவையை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ஆர்வம் மனதில் தொற்றி கொண்டது ..பள்ளி குழந்தைகள் திறனிற்கு ஏற்ற விளையாட்டு போட்டிகள் நிறைவுற்று ...சிறப்பு விருந்தினர்கள்  ...குழந்தை செல்வங்களுக்கு தன் தலைவணங்கி பரிசு வழங்கியது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது ..ஏனென்றால் எதிர் கால இந்தியாவை வழிநடத்த செல்லும் குழந்தைகளுக்கு இப்படி தலைவணங்குவது மாண்பு தானே ...குழந்தைகள் பரிசு வாங்கும் போது மற்ற குழந்தைகள் மிக பெரியஆரவாரம் செய்து குழந்தைகளை உற்சாக படித்திக்கொண்டே இருந்தார்கள் .அந்த குழந்தைகள் வாங்கிய மெடல்கள் ..சான்றிதல்கள் வாங்கி தன் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் கண்ட கனவு ...தங்களின் பிள்ளைகள் மூலம் பெற்றது ..புகைப்படம் பாருங்கள் ..அதுவே பதில் சொல்லும் .ஏன் நாம் சகா நண்பர்களை ..திறமையாளர்களை இப்படி உற்சாகபடுத்துவது இல்லை ..கொஞ்சம் வருத்தம் தான் ...அதையெல்லாம் குழந்தைகளிடம் கொண்டுள்ளோம் ...நன்றியுரை தோழர் கொழுமம் ஆதி ...உடுமலையின்  தமிழ் வேந்தர் தினம் தோறும் பகிரலியில் தமிழை அழகாக தினம் ஒரு சொல் தினம் படித்து வாழ்வில் நம் செந்தமிழை நமக்கு ஊட்டிக்கொண்டுள்ளார் ..அவரின் நன்றியுரை பேச்சு இன்னமும் மனதில் மறவா நிகழ்வாக உள்ளது ..30 வருடகால..பார்த்தசாரதி  நண்பரின் பள்ளிவிழா  ..நட்புகளை புதுப்பித்துள்ளது ...நன்றி என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக