வெள்ளி, 30 மார்ச், 2018

எனது உலகம் ....

உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா .ஏப்ரல் 2018.....
உடுமலைப்பேட்டை ..
தீர்த்தம் .....
மாரியம்மன் தேர் திருவிழா என்றாலே உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ..கொண்டாட்டம் ...தேர் விழா பள்ளி தேர்வுகள் வரும்பொழுது வருவதால் ..குழந்தைகளுக்கு அதிக கவனம் ..கொஞ்சம் கொண்டாட்டம் ..கல்லூரி இளையசொந்தங்களுக்கு கேட்கவேண்டாம் ..எப்பொழுதும் கொண்டாட்டம் தான் ..இன்று பங்குனி உத்திரம் பொன் நாள் ...அதிகாலை அம்மாவுடன் மாரியம்மன் கோவிலில் இருக்கும் கம்பத்துக்கு வீட்டிலிருந்து வேப்பம் தழைகள் குடத்துடன் மாரியம்மன் அருளை எல்லா மக்களும் நலம்  வேண்டி பிராத்தனை செய்வது கோடி புண்ணியம் ..30 வருடங்களுக்கு பின் அம்மாவுடன் சென்று வருவது ஆனந்தம் ..ஆனந்தம் .....அமைதியான தளிசாலையில் நடந்து வந்து முதலில் இரண்டு ஏசு புனித ஆலயம் ஜெபத்தை காதில் கேட்டுக்கொண்டும் ,இறை அல்லாவின் அதிகாலை பாங்கை காதில் இன்புற கேட்டுக்கொண்டு கடந்து வருவது மனதிற்கு புத்துணர்ச்சி  ....நூலகம் அருகில் இருக்கும் பிள்ளையாரை சுற்றி வரும்போது மனதிற்கு ஒரு இனம்புரியாத தெய்வ பக்தி மனதில் தொற்றி கொள்கிறது ..மகிழ்ச்சியுடன் உடுமலை காவல்நிலையம் நிலையத்தை கடந்து பெரியகடைவீதியில் இரண்டு பக்கம் முன்னிரவு சிறு கடை உழைப்பாளர்கள் உழைத்த களைப்பில் அயர்ந்து உறங்கி கொண்டிருக்கும் அழகு பார்க்கும் போது நம் மனதுக்கு கடின உழைப்பு வீண்போகாது என்பதை உணர்த்துகிறது.. கோவிலின் படியேறும்போதே அதிகாலை கூட்டம் அமைதியாக...மனதில் எத்தனையோ பிராத்தனைகளை வேண்டி ..போன்வருடம் பிராத்தனைகள் நிறைவேறி அம்மனுக்கு அங்கபிரதச்சனம் செய்து வழிபாடும் அழகு பிராத்தனைகள் வீண்போகவில்லை அவர்களுக்கு ..கோவிலின் முதல் அடி  எடுத்து வைக்கும் போது நம் முகத்துவாரம் முழுவதும் வேப்பம் தழைகள் ,அதன் சிறிய வெள்ளை வேப்பம் பூக்களின் வாசம் ..நம் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது ..நம் பெரியோர்கள் நமக்கு அளித்த இயற்கை வைத்தியம்...கோவிலின் தரையில் தடம் பதித்து நடக்கும் பொழுது அந்த வேப்பம் தழைகளுடன் இருக்கும் நீரின் ஈரம் உடல் மற்றும் ,காலின்  வெப்பத்தை  தணிக்கிறது ..அதுவும் அதிகாலை வேலையில் எழுந்து பெற்றோர்களுடன் வந்திருக்கும் குழந்தை செல்வங்கள் ஆரவாரமாக ..ஈரத்துடன் நனைந்து அருள் வேண்டி கொண்டிக்கொண்டிருக்கும் அழகோ அழகு ....அம்மா கொண்டு வந்த தீர்த்தநீரை கம்பத்துக்கு ஊற்றும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் நம் உடம்பில் ..முகத்தில் படும்பொழுது முகத்தில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறுவது அப்படி ஒரு ஆனந்தம் ..பொது தரிசன வரிசையில்.கொஞ்ச நேரம் மெதுவாக   அடி மேல் அடிவைத்து மாரியம்மனை பிராத்தனை செய்தது மிக்க மகிழ்ச்சி ...கோவிலின் பெரிய ஆலமர தெய்வங்களை சுற்றி வரும்பொழுது ஆலமர காற்றை அதிகாலைவேளையில் சுவாசிப்பது நமது நுரையீரலை சுத்திகரிக்கிறது .இவை அனைத்தும் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த பாடங்கள் விடாமல் கற்றுக்கொள்ளவேண்டியது இன்றியமையாதது ..மெதுவாக ஈரம் கலந்த தரையில் சில மணித்துளிகள் அமர்ந்து எழுவது ஊடலுக்கு ஆரோக்கியம் .....அதிகாலை வழிபாடுகள் என்றும் மனதில் ஒரு உற்சாகத்தை நாள் முழுவதும் வைத்துக்கொள்ள உதவுகிறது ....உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா ...மாலை நேர கொண்டாட்டங்களுடன் சந்திப்போம் ...அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....வாட்ஸாப்ப் எண் ....கொண்டாட்டங்கள் தொடரும் ...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக