ஞாயிறு, 6 ஜூன், 2021

ஒரு வரம்..! "

 படைப்பாற்றால் பட்டினியாய் பல வருடம் இருந்ததால் 

இந்த பாலகனுக்கு பலநாள் தவம் ஒரு நொடி ஞானத்தில் பிறக்க ஆசை வைத்தது..!  


இவன் இயற்கையின் எதிரி 

எப்போது பார்த்தாலும் அதன் உள்ள கூற்றை ஊராருக்கு உரத்து ஊதி உள்ள பூரிப்படையும் சாதி..! 


எழுத்தாணி ஒன்று துண்டு காகிதங்கள் எப்போதும் அவன் கையில் கைதுயாவோமோ..!

என்ற பயத்திலே அவன்மேல் சட்டை பையில் பக்தி பதியம் பாடியபடி இருக்கும்..! 


சரியாக எழுத்து வராது,

எழுதினாலும் ஏகப்பட்ட சந்தி பிழை முந்தி வரும் முரண்..!


எதுகை மோணை இவனுக்கு 

மருத்திற்க்கு  கூட 

சுத்தமாக வராது..! 


எழுதி பார்த்து அறைகுறையாய் வாசிக்க தெரிந்தவர்களிடம் இவண் புலமை ஏகோபித்த வரவேற்ப்பில் புதுவரவில்

அலையாடும் ,வாசிக்க ஆசை ஆனால் அவ்வளவாய் கலைநயத்துடன் 

தனிதிரனில் ஓரளவும் சேர வாராது..! 


ஆனால் அவனின் கவிதை தன்னை,தானே ஆசிவாசகம் 

செய்ய இருக்கிறது..! 

 வைகையின் வலது புற கரையில் அ.வாடிப்பட்டி

 எனும் கிராமமது 


இயற்கை அன்னை அமுதுண்டு அறவாழ்வை 

நிலைபெற இப்படியான கிராம ங்களே அதற்க்கு சாட்சியாய் இன்றும் இருக்கிறது. 


முனியசாமி பெரிய சம்சாரி மனுசன் பச்சதுண்டு போட்ட பச்சகுழந்தயா அவரு..! 

முகவரிகளை முகத்திலே வைத்த மூத்த பெருசு,

சட்ட போட்டத்தில்ல மல்லுவேட்டியிலே கோவணம்

அசிங்கமா நினைச்சதில்ல..!

அவருக்கு பிள்ள முருகன் 

கல்யாணம் ஆகாத இளங்காளை கிழனாருக்கு வருடங்கடந்த திருமணபரிசு இந்த வாசுரிய்யா ஒத்தபிள்ளை தவத்துல குதிச்ச செல்லகுட்டி..! 


மழை விழாது போல வைச்ச வெள்ளாமைய, எடுக்க ஏது வலினு பலமா யோசனையா இருந்தாரு முனியசாமி..! 


"ஏலே ஐய்யா கிணத்து மோட்டர் ஓடி இருக்கு  கீழ பல மட போறதூரபோல பாலி வைச்சுருக்கேன் படக்குனு போடா" என்றார் முனியசாமி.


வேண்டா வெறுப்பாய் "சரி" என்றான் முருகன்,

எழுத ஆசை  ஆனால் உழவுக்கு பழக்க வேண்டிய கட்டாயகாளை அவன்;

பகுத்தறிவு சிந்தனை உடைய எருதிது..! 


காட்டில் வெங்காயத்திற்க்கு நீர் பாய்ந்து கொண்டிருந்து

மடைகளை சரிசெய்து ஒவ்வொரு பாத்தியாக பாய்ச்ச ஆரம்பித்தான்,

ராமக்கரை பாத்தி சுற்றிவ

ர பொழுதாகும் என்பதால் 

அவன் ஏழாமறிவு ஏகோபமாய்

எழும்பியது,


"கால்வாயில் வரும் தண்ணீர் வழியில்

 வரும்போதே என்ன பேசிக்கொள்ளுமோ" என யோசிக்க ஆரம்பித்தான்


வரும்போதே மரவேர்களில் ஏறி அதன் கால் நனைக்க புருபுருவென சிலிர்பூட்டுவதால் தென்னம் கிளைகள் சிரிக்கிறதோ..! 


முலைக்க ஆரம்பிக்கும் வெங்காயத்தாள்  பார்த்து 

"பச்சை நிற மான்கொம்புகள்

மான் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து மேய்கிறதோ..!


என குறித்துகொண்டான் .

கைதிகளின் மேணியில்..! 


கருப்பசாமி முன்

மழைவேண்டி வரம் கேட்டுகொண்டிருந்தனர் ஊர்மக்கள் சிலர் 


பாலியை வைத்துவிட்டு 

பலி பீடத்திற்க்கருகே போய் நின்றான்.


அவன் கண்ணீல் பட்ட நிகழ்விது.


தாம்பூல  தட்டில்

 காவியணிந்த முனிவனாய்

நெடியதாடி வைத்து நெற்றியில் சந்தன,குங்குமம் வைத்த தேங்காய்,


பச்சை காம்பில் நான்றிக்கு மேற்பட்ட மஞ்சள் பசுகாம்புபோல வாழைப்பழம்

,

ஒற்றைக்கையில் விரலுண்டி

சாய்ந்து படுத்த சுருங்கிய விழிகளில் பார்க்கும் வெற்றிலை,சுருள்பாக்குகள்.


மாட்டுசாணத்தில் ஒற்றை காலில் ஏறிநின்று புகைத்து கொண்டிருந்த நாத்திக ஊதுபக்திகள்,


சாம்பூராணி கரண்டியில் 

நெருப்புதுண்டுகள் சில கருப்பு,சிவப்பு சட்டையை மாறி மாறி போட்டுகொண்டு சம்பவித்துகொண்டிருந்தது,


எதற்க்கென தெரியவில்லை கற்பூரம் தீக்குளித்து கொண்டிருந்தது..? 


குரல்வரை தண்ணீர் குடித்து பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தது

செப்பு செம்பு நீர்..! 


கதம்ப பந்து அலம்பிக்கொண்டு

ஆங்காங்கே சூடியசிலையில் இருந்து..! 


பாய்ந்துகொண்ட தண்ணீர் இடைவெளியில் மழைச்சாரல் 

நிற்க்க இடமில்லாமல் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். முருகன் 

வெளியே இருந்த பச்சை துண்டை எடுத்து துவட்டி கொண்டிருந்தான் .


கனபொழுதில் அவனின் சிந்தனையில் ஒரு கவிதை 

உயிர் பிடித்தது"

"நானும் என் பேனாவும், மழையில் நனைந்தோம்.

என் பேனாவிற்க்கு தலைதுவட்ட காகித தாவணியில் இடம்..!

எனக்கில்லை அப்படி 

ஒரு வரம்..! "

என குறித்து குதுகளித்தான் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக