வியாழன், 10 ஜூன், 2021

 கேள்வி : பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நாம் செய்த எந்த தவறினை மிகப்பெரிய தவறாக நினைத்துள்ளீர்கள்? 

மேலும் அந்த தவறினை இனி எப்போதும் செய்ய கூடாது என நினைத்துள்ளீர்களா?



என் பதில் : 


முதலில் ஆரம்ப காலங்களில்  15 வருடங்களுக்கு முன் நான் பங்கு சந்தை வர்த்தகத்தில் செய்த மிகப்பெரிய தவறு தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டதுதான்.



தினசரி வர்த்தகம் என்பது இருமுனை கத்தி மாதிரி. எப்படி பார்த்தாலும் ரத்தம் பார்க்காமல் விடாது.


தினசரி வர்த்தகத்தில் நுழைய சில தகுதிகளை நிச்சயம் வளர்த்து கொள்ள வேண்டும்.


இதற்கு Chart analysing என்பது மிக மிக முக்கியம்.


பங்குசந்தையை பொறுத்தவரை chart ம் indicators ம் ஜாதகம் போன்றவை . இது தெரியாமல் தினசரி வர்த்தகத்தில் இறங்கினால் அதோ கதிதான்.


ஆகவே பங்கு சந்தையில் லாபம் ஈட்ட விரும்பும் நபரகள் நிச்சயம் chart தெரிந்து வைத்து கொள்வது மிக மிக அவசியம். அதற்கென மெனக்கெட்டு நேரம் ஒதுக்கினாலும் பலன் உண்டு.


தினசரி வர்த்தகத்தின் ஆரம்பத்தில் லாபமும் வரும் நட்டமும் வரும் ஆனால் வர்த்தக முடிவில் நிச்சயம் நாம் நட்டத்துடன்தான் வெளியேறுவோம்.


அதற்கு நமது மனோபாவம்தான் முக்கியம்.


நட்டம் வரும்போது லாபம் வரும் என காத்திருக்கும் நாம் லாபம் வரும்போது ஆஹா கிடைத்த வரை லாபம் என உடனடியாக பங்குகளை விற்று விடுவோம். ஆனால் சரிவில் இருக்கும் பங்கு விலை ஏறும் என ரொம்ப நேரம் காத்திருந்து நட்டத்தை அதிகப்படுத்தி கொள்வோம்.


இன்னொன்று average செய்தல் என்ற ரீதியில் மேலும் அதே பங்குகளின் மீது முதலீடு செய்தல். உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் (A) பங்குகளை வாங்குகின்றீர்கள் அது சரிய தொடங்குகிறது. அதன் பங்குகள் 10% சரியும் போது மீண்டும் வாங்குகிறீர்கள் என்றால் மீண்டும் 5% உயர்ந்தால் கூட போதும் நட்டம் 0 என்ற அளவில் வந்து நிற்கும்.


ஆனால் நடப்பது என்னவோ மீண்டும் ஒரு 5% சரிவு. விளைவு பலத்த நட்டம்.


அடுத்தபடியாக hedging எனப்படும் ஒரு வகை trading.


பங்கு சந்தையின் சக்கர வியூகம் என்று கூட கூறலாம்.


ஒரு கம்பெனியின் பங்கை. Buy செய்யும் நாம் அதே சமயம் இன்னொரு contract ல் நுழைந்து sell செய்தல்.


இரண்டையும் லாபம் வரும் போது வெளியே வந்து விடலாம் என புத்திசாலித்தனமாக நினைப்போம்.


சில சமயம் ஒரு பங்கு பலத்த நட்டத்தை நோக்கி போகும் போது அதற்கு எதிராக செயல்படும் மனோ பாவமே இதற்கு காரணம்.


அதாவது ஒரு பங்கை வாங்குகிறோம் அது மிக மோசமாக சரிகிறது.உடனே சரி இன்னொரு contract ல் நுழைந்து விற்றால் என்ன புத்திசாலித்தனமாக யோசித்து sell செய்வோம்.


ஆனால் நடப்பது நமக்கு நேர் எதிராக இருக்கும்.திடீரென sell செய்யப்பட்ட பங்கு நட்டத்தில் போக ஆரம்பிக்கும். இப்போது பங்கு எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதில் குழப்பம் ஏற்படும். இதில் எதை முதலில் cut செய்வது என்பதில் பலத்த குழப்பம் வரும் அதில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும்.


கடைசியாக பார்த்தீர்கள் என்றால் அந்த பங்கு வர்த்தகம் தொடங்கிய இடத்திற்கே வரும் ஆனால் நாம் பலத்த நட்டத்துடன்தான் வெளியேறுவோம்.



ஆகவே hedging என்பது மிக தேர்ந்த நிபுணர்களால் கையாளப்படும் முறை அதில் எக்காரணத்தை கொண்டும் இறங்கிட வேண்டாம்.


Average முறையில் கூட 50% வாய்ப்பு உண்டு hedging ல் அதுவும் இல்லை.


ஆக தினசரி வர்த்தகம் என்பது முதலைகள் நிறைந்த ஆற்றில் நீச்சல் அடிப்பது போன்றது.


இது போன்ற அனுபவங்களால் பொருள் நஷ்டத்துடன் மன உளைச்சலும் சேர்ந்து கொள்ளும்.


பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதை விட முதலீடு செய்வது மிக சிறந்த வழி.


நல்ல பங்குகளை தேர்ந்தெடுங்கள் மாதம் தோறும் உங்களால் முடிந்த அளவு சிறுசேமிப்பு போல முதலீடு செய்யுங்கள்.


பத்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்து பார்த்தால் உங்கள் முதலீடு பெரிய ஆலமரம் போல படர்ந்து விரிந்து இருக்கும்.


உங்கள் முதலீடுகளை ஒரே பங்கில் போடுவதை விட நான்கைந்து விதமான கம்பெனிகளில் போடுவது நல்லது.


பங்கு முதலீட்டாளர்களே இந்திய பங்கு சந்தை வரும் காலங்களில் பல உயரங்களை தொட்டு சாதனை படைக்க உள்ளது. அதன் பலனை பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனுபவிக்க போகிறார்கள். அதே சமயம் நாமும் கொஞ்சமாவது அதில் லாபம் பார்ப்பதில் என்ன தவறு??

நன்றி ...

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக