ஞாயிறு, 6 ஜூன், 2021

கேள்வி :  பிறந்த வீட்டில் அம்மா எவ்வளவு கத்தினாலும் காலை ஆட்டிகொண்டு ஒரு வேலையும் செய்யாமல் பொழுதை போக்கிய பெண்கள் திருமணம் ஆனதும் கணவன் வீட்டில் அனைத்தையும் சமாளிக்கும் திறமை பெறுவது என்ன மாயம்?


என் பதில் : 


நீங்கள் தமிழ் சினிமா நீறைய பார்த்து விட்டு இந்த கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி, கற்பனையான கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க போகிறோம்? நீங்கள் எத்தனை வீடுகளில் இப்படி நடந்து பார்த்திருக்கிறீர்கள்?


உண்மையில், திருமணமான பின் அவர்கள் இன்னும் Relaxed ஆக வாழ்க்கை நடத்துகிறார்கள். கணவன் ஒரு டிரைவர் போல் நடந்து கொள்ளுகிறான்!


திருமணத்துக்கு முன் அம்மாவுடன் நடந்துசென்று காய்கறி வாங்கும் பெண், திருமணத்திற்கு பிறகு கணவன் வண்டி ஓட்ட,, கூடைகள் சுமக்க, க்யூவில் நின்று பொருட்களை வாங்கி, மீண்டும் அவளை பத்திரமாக (நன்றாக Dress Makeup கலையாமல் ) வீட்டில் விடும் காலம்!


கணவன் பத்தாது என்று, மாமியார் மருமகளுக்கு வேலை செய்யும் காலமிது! மனிதர்கள் பத்தாது என்று வாஷிங் machine அது பத்தாது என்று Coffee குடித்து Serial பார்க்கும் வேலைக்காரி! சொல்ல போனால் மாமியார், மருமகள் ஏன் வேலைக்காரி உட்பட அத்தனை பெண்களும் சீரியல் பார்க்கும் காலம்! வீட்டு வேலை செய்வது ஆண்கள்! அதுதான் பல இடங்களில் நடக்கிறது!


சுமார் 40 வருடங்கள் முன்பு ஹோட்டலில் பெண்களையே பார்க்க முடியாது! ஆண்களையும் ஹோட்டலில் சாப்பிட விடாமல் அவர்களே சமைத்துப் போடுவார்கள், இன்று பெண்கள் கூட்டம் தான் ஹோட்டலில் அலைமோதுகிறது


பெண்கள் அம்மி மிதித்து திருமணம் செய்து கொள்வதில்லை, அம்மி அரைத்து சட்னி செய்வதில்லை! இட்லி மாவு பாக்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்! ஆட்டுக்கல் அம்மி போன்றவை இக்காலத்தவர் யாரும் வாழ்க்கையிலே பார்த்து கூட இல்லை!


கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள கணவன் டிரைவர் வேலை பார்க்கிறான். மனைவி நல்ல dress, கணவன் Shorts, Tshirt அணித்து அருமையாக வேலை செய்கிறான்!


உண்மையில் ஆண்களை பார்த்து, நீ ஒரு நாள் கூட உன் அம்மாவை கோவிலுக்கு கூப்பிட்டுக் கொண்டு போனது இல்லையே, தினமும் உன் பொண்டாட்டி யை எப்படி ஆபீஸில் விடுகிறாய்? என்று கேளுங்கள்!


திருமணத்துக்கு முன் சமையல்கட்டில் நுழைந்தது கூட இல்லையே? இன்று உன் மனைவிக்கு எப்படி அவ்வளவு அழகாக காய்கறி நறுக்குகிறாய்? என்று கேளுங்கள்!


ஒரு நாளாவது உன் நண்பனுக்கு, உன் சகோதரனுக்கு, உன் அப்பாவுக்கு, உன் அம்மாவுக்கு ஏதாவது வேலை செய்திருக்கிறாயா? நேற்று உன்னை காய்கறி கடையில் பார்த்தேன்! நீ பொண்டாட்டிக்கு தாசனாக இருப்பது தப்பில்லை, ஆனால் 20 வருடம் வீட்டில் மட்டும் ஏன் சோம்பேறியாக இருந்தாய்? என்று கேளுங்கள்!


நீங்கள் சொல்லுவது போல் நான் எங்கும் நடந்து பார்த்ததில்லை! ஒரே ஒரு இடத்தில் பார்த்தேன்! ஆம் சூரியவம்சம் என்ற சரத்குமார் தேவயானி நடித்த தமிழ் திரைபடத்தில், காதநாயகியாக வரும் தேவயானிதான் நீங்கள் சொல்லும் அந்த கனவுலக, அதர்ச மருமகள்!


பணக்கார பெண், வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்! ஆனால் கல்யாணமான அடுத்த நாள், பழைய சாதத்தை உருட்டி புதுமையான டிபன் செய்கிறாள்!


வீட்டுக்கு வந்த தேவயாணியின் அப்பா, என் பொண்ணு எப்படி மாறிட்டா என்று தன் பணக்கார மனைவியிடம் சொல்லி வியப்படைகிறார்!


நான் நினைக்கிறேன், நீங்கள் அந்த சினிமாவை பார்த்துவிட்டு அப்படியே தூங்கி விட்டீர்கள்! கனவில் வந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எல்லா மனைவிகளும் தேவயானிகள் என்ற அடிப்படையில் கேட்கிறீர்கள்!


மீண்டும் தூங்குங்கள்! கனவு வரும்!


திருமணத்துக்குமுன், படிப்பே வராத பெண் கல்யாணம் ஆனதும் எப்படி கலெக்டர் ஆகிறார்? என்று கேள்வி கேட்கலாம்!


திருமணத்துக்குமுன் புடவை கட்டாத பெண், திருமணம் ஆனதும் எப்படி அழகாக புடவை கட்டுகிறார்? என்று பல கேள்விகளை நாம் கேட்கலாம்


முதல் கேள்விக்கு பதில், நீங்கள் பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும், உங்கள் மனைவி கலெக்டர் ஆக வேண்டும் என்றால், நட்சத்திர ஜன்னல் என்ற பாடலை ஒலிக்க விட வேண்டும்! பாட்டு முடிந்ததும், நீங்கள் நினைத்த எல்லா மாற்றங்களும் நடக்கும்! ஆனால் தேவயானி கலெக்டராக, ஒரு கண்ணாடி போட்டுக் கொண்டால் போதும்! கண்ணாடி போட்டுக் கொண்டால் நாம் எளிதாக கலெக்டர் ஆகிவிடலாம்!


ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு போதும், அத்தனை பேரும் மாறிவிடுவார்கள்!


மீண்டும் சொல்கிறேன் அந்த பாடலை, குறித்து வைத்துக்கொண்டு வீட்டில் பாடினால் எல்லாம் மாறிவிடும்!


நட்சத்திர ஜன்னல்கள், என்று தொடங்கும்!! பெண் என்பவள் குடும்பப்பாங்கான மருமகள் கலெக்டர் மட்டுமல்ல, படிக்காத ஆண் கூட தொழிலதிபராக மாறிவிடலாம்! நீங்கள் கேட்ட மாற்றங்கள் சுலபமாக நடக்கும்! யாருக்கும் தெரியாமல் நைசாக, மாமனார் காலில் விழுந்து வணங்குவார், மருமகள்!


நன்றி ...வணக்கமோ ..வணக்கம் ...


கொரோன காலம் ..படித்திவிட்டு ..டெலிட் செய்து விடுங்கள் ..எதிர் கேள்வி கேட்டால் ..நிர்வாகம் பொறுப்பல்ல ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக