வியாழன், 3 ஜூன், 2021

 கேள்வி : பீட்டர் கோட்பாடு. என்றால் என்ன ?  சேல்ஸ்மேன் வேலையில் எப்படி பார்க்கப்படுகிறது ..


பதில் : நியாண்டர் செல்வன் அவர்களின் பதிவு ....


நீங்கள் நல்ல சிறப்பான சேல்ஸ்மேன் என வைத்துக்கொள்வோம். விற்பனையில் பின்னி எடுக்கிறீர்கள். இன்க்ரிமெண்ட் எல்லாம் கொடுத்து பாராட்டுகிறார்கள். சில ஆண்டுகள் கழிகின்றன. அடுத்து புரமோசன் கொடுத்தே ஆகவேண்டும். கொடுக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிட்டு போய்விடுவீர்கள்.

அதனால் உங்களை சேல்ஸ் மேனேஜர் ஆக பதவிஉயர்வு கொடுக்கிறார்கள். இப்போது உங்களுக்கு கீழே நாலு சேல்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். உங்கள் பழைய ஏரியா ஒரு புதிய சேல்ஸ்மேனிடம் கொடுக்கபடுகிறது.

உங்கள் பழைய ஏரியாவை புதிய சேல்ஸ்மேனால் உங்களைபோல கையாளமுடியவில்லை. விற்பனை அங்கே தள்ளாடுகிறது. அதே சமயம் சேல்ஸ் மேனேஜராகவும் உங்களால் சரியாக செயல்படமுடியவில்லை. காரணம் அது புதிய தொழில், அதில் ஜெயிக்க வேறுவிதமான திறமைகள் அவாசியம். சேல்ஸ்மேனாக இருந்தபோது கற்றுக்கொண்ட திறமைகள் இதற்கு உதவாது.

கம்பனி இப்போது என்ன செய்யும்?

உங்களை முக்கியம் இல்லாத வேறு ஏரியாவுக்கு சேல்ஸ்மேனேஜராக மாற்றும். நீங்கள் அங்கே திறமையின்மையாக செயல்பட்டாலும் அதனால் பெரிய சிக்கல் எதுவும் இல்லை என்றால் அதன்பின் உங்களை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டுவிடுவார்கள். ஆயுள் முழுக்க பெஞ்சை தேய்த்துக்கொண்டு சம்பளம் வாங்கிக்கொண்டு ஓய்வுபெறவேண்டியதுதான்

நிர்வாகவியலில் இதை பீட்டர் கோட்பாடு (Peter principle) என அழைக்கிறார்கள்.

ஒரு வேலையில் நன்றாக செயல்பட்டு, பதவி உயர்வு பெற்று, செயல்திறனை இழக்கும் தொழிலாளிகள் அதன்பின் அதே வேலையில் தன் கெரியர் முழுக்க நீடிக்கும் நிலைதான் பீட்டர் கோட்பாடு.

பலகம்பனிகளில் ஆண்டுக்கணக்கில் ஒரே வேலையில் தேங்கிநிற்கும் பல பீட்டர்களை காணமுடியும்

~ நியாண்டர் செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக