கேள்வி : தெலுங்கு மக்கள் இன்னோரு தெலுங்கு மக்களுக்கு உதவி செய்வது போல தமிழ் மக்கள் ஏன் உதவி செய்வதில்லை? முக்கியமாக இந்த தகவல் தொழில்நுட்ப துறையில்.
என் பதில் : ..என் பதிலைவிட துபாயில் பணிபுரியும் என் மதிப்புமிக்க வாடிக்கையாளர் ,ராஜேஷ் -கணிணிப்பொறியாளர் ..அளித்த பதில் ...கொஞ்சம் யோசிக்கவைத்தது ...
தெலுங்கு என்பதை, மலையாளம் என்று மாற்றி, தகவல் தொழில்நுட்பத் துறை என்பதை நான் வேலை பார்க்கும் கட்டிடத் துறை என்று மாற்றி நான் இதற்கு பதில் சொல்கிறேன். ஏனென்றால் எனக்கு அது தான் தெரியும்.
துபாயில் ஒரு நல்ல கட்டுமான கம்பெனியில், ஜூனியர் இன்ஜினியர் வேலை காலியாகிறது.
இரண்டு சீனியர் இன்ஜினியர் வேலை செய்கிறார்கள். ஒருவர் சுரேஷ், என்கூட படித்த நண்பன்! இன்னொன்று ஜோஸ் என்ற மலையாளி!
தன் கம்பெனியில் ஒரு இடம் காலியாக போகிறது என்று தெரிந்த உடனேயே, ஒரு மாதத்திற்கு முன்பே ஜோஸ் கேரளாவிலுள்ள தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் போட்டு, " இங்கு ஒரு வேலை காலி ஆகப்போகிறது, உடனே பாஸ்போர்ட் எடுத்து வா நான் பார்த்துக்கொள்கிறேன், அருமையான சம்பளம் நல்ல வேலை!!! " என்று கேரளாவில் உள்ள தனது நண்பனை இவரே கூப்பிடுவார்!
நம்மாள் சுரேஷ், வேறு மாதிரி சிந்திப்பார்!
ராஜேஷ் என்ற ஒருவன் வேலைக்கு வந்துவிட்டால் நாளை அவன் நம் வேலைக்கு வேட்டு வைத்து விடுவான். அதனால் இந்த வேக்கன்சி பற்றியே வாய் திறக்க மாட்டார்!
நான் யார் மூலமாகவோ தெரிந்துகொண்டு, சுரேஷ்க்கு போன் போட்டு பேசினேன்!
சுரேஷ் உன் கம்பெனில ஒரு வேலை காலி அப்படின்னு சொன்னாங்க, நான் வந்து விடவா?
யார் சொன்னா?
இல்லை நான் கேள்விப்பட்டேன்!
நான் வேலை பார்ப்பது ஒரு டுபாக்கூர் கம்பெனி! இங்கே சம்பளம் ஒழுங்காக தர மாட்டார்கள்! இங்கே உனக்கு தங்குவதற்கும் இடம் கிடைப்பது கஷ்டம்!
நான் ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம் , திரும்ப எப்ப தமிழ்நாட்டுக்கு போவோம் என்று ஏங்கிகிட்டு இருக்கேன்! தயவு செய்து இந்த வேலையை நம்பி வந்துவிடாதே! துபாய் முன்னே மாதிரி கிடையாது, அவ்வளவு பணம் இங்கே இல்லை ராஜேஷ்! அதனால் நீ என்னை நம்பி தயவுசெய்து வந்துவிடாதே! என்று கூறி போனை வைத்துவிடுவார் சுரேஷ் என்ற நம் தமிழ் நண்பர்!
கேரளாவில் இருந்து செல்லும் உறவுக்காரர்கள் நண்பருக்கு ஜோஸ் அந்த கம்பெனியில் உள்ள எல்லா வேலையும் வாங்கி கொடுத்து, Mini கேரளா ஒன்றை தான் சென்ற இடத்தில் உருவாக்குவார்!
ரஜினிகாந்த் சென்னை வந்த பிறகு, மோகன் அர்ஜுன் முரளி பிரகாஷ்ராஜ் பிரபு தேவா என்று தமிழ் திரையுலகமே கன்னட ஹீரோக்கள் வசம் சென்று விட்டது!
பெங்களூர் சென்ற ரவிச்சந்திரன் ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள், நாங்கள் தமிழர்கள் அல்ல, கன்னட காரர்கள் என்று சொல்லி ஒரு தமிழனும் பெங்களூர் பக்கம் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்!
தமிழ் தவளை இன்னொரு தவளை காலை பிடித்து இழுத்து விடும்! மற்ற இந்தியத் தவளைகள், அது மலையாள தவளை, தெலுங்கு தவளை கன்னட தவளை, ஹிந்தி தவளை எதுவாயிருந்தாலும் மேலே தூக்கி விடும்! நான் சொல்வதின் அர்த்தம் புரிந்ததா?
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக