கேள்வி : மாதவிடாய் பற்றி பெண்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயங்கள் என்ன?
என் பதில் : இதற்கு பதில் எனது நண்பர் ராஜி சுகாதார தொழில்துறையில் பணிபுரிந்து வருகிறார் ..அவர் பதில் அளிப்பது சிறப்பானது, உங்களுக்காக ..
முன்குறிப்பு
நான் எழுதுவது தமிழ்நாட்டில் குடும்பத்தோடு அமர்ந்து படிப்பதற்கு என அறிவேன், அதனாலேயே படங்கள், வார்த்தைகள் எல்லாமே ஜாக்கிரதையாக சேர்ப்பேன். கொஞ்சம் பெரியவர்கள் ‘நீ ஏம்மா இதெல்லாம் எழுதிட்டு நாங்க பொண்ணு மாதிரி நினைச்சோமே’ என்பார்கள். And I understand this sentiment. விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த பதிவு.
மாதவிடாய் என்றால் என்ன? The basics
படத்தில் உள்ளது போல பெரும்பாலான பெண்களுக்கு இரு ovaries இருக்கும், இந்த ovaries, கருமுட்டைகளை வெளியிடும், வெளியான கருமுட்டை uterus எனப்படும் கர்ப்பப்பையில் தங்கி, தனக்கான மகாராஜா, அதாங்க விந்தணு (semen) க்காக காத்து இருக்கும். இந்த சேர்க்கை நடந்தால், கரு உண்டாகும். உருவாகிய கரு வளர, முன்னரே பெண் உடல், கர்ப்பப்பையை சுற்றி cushion போல திசுக்களை உருவாக்கும். (பாப்பா வளர சுற்றம் புசுபுசுன்னு இருக்கணுமே?) இந்த கர்ப்பப்பையை சுற்றிய திசுக்கள், (walls/tissues) சேர்க்கை நடக்காது, கரு உண்டாகாது இருந்தால் உடலால் வெளியேற்றப்படும். இந்த வெளியேற்றம் தான் மாடவிடாய், monthly periods/menstruation. கர்ப்பம் ஆகிவிட்டால் periods வராதுபோக இதுதான் காரணம்.
மாதவிடாய் சைக்கிள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். 24–38 நாட்கள் இருக்கலாம் பொதுவாக.
ரத்தபோக்கும் 3–8 நாட்கள் இருக்கலாம். ‘அந்த மூன்று நாட்கள்’ என்பதெல்லாம் சும்மா பேச்சுக்குதான்.
12–51 வயதுவரை மாதம்தோறும் சீரான இடைவெளியில் வரலாம். மாதவிடாய் நிற்பது, பரம்பரை/உடல்நிலை பொறுத்து மாறுபடும்.
Premenstrual syndrome என்பது ovulation அதாவது கருமுட்டை ovary இல் இருந்து ரிலீஸ் ஆகையில் உள்ள ஹார்மோனல் மாற்றங்களால் வரும் மனநிலை தடுமாற்றங்களை குறிக்கும். ஒரேநாளில் 😊🥺😱😭😡😈 இப்படி மாறு்வோம், பார்த்து அனுசரனையாக இருங்கள் ப்ளீஸ். எல்லாருக்கும் PMS இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.
பொதுவாக மாதவிடாய் நேரத்தில் மொத்தமாக 5–35 மில்லிவரை ரத்தம் வெளியேறலாம். 80 மில்லிக்கும் அதிகமாக சென்றால், அது heavy bleeding, அதிக ரத்தப்போக்கு எனப்படும், மருத்துவரிடம் சென்று கேளுங்கள்.
துணியை பயன்படுத்துவதை தவிருங்கள், நீங்கள் டெட்டால் பயன்படுத்தி சுத்தப்படுத்தினாலும் துணி சுகாதாரம் இல்லாதது, அதனால் fungal/bacterial infection வரலாம்.
சானிட்டரி நேப்கின்/டேன்பூன்/கப் என பயன்படுத்தி, உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்யுங்கள். Sanitary pad 5 ml வரை ரத்தம் உரியும், அதற்குமேல் மாற்றிவிடவேண்டும். இரவு நேரத்திற்கும், பகல் நேரத்திற்கும் வேறுபட்ட pad உண்டு. பார்த்து வாங்குங்கள்.
பெரும்பாலான பெண்கள் உடல் அசதி, வயிற்றுவலி, எரிச்சல், கால் உளைச்சல் என அவதியுறுவார்கள். சிலருக்கு pain killer மாத்திரைகள் தேவைப்படலாம். அந்நாட்களில் உங்கள் மகளை/மனைவியை/தாயை, குழந்தைபோல பாவித்து அன்பாய் இருங்கள். உங்களை மனதார வாழ்த்தி விரும்புவார்கள்.
திருமணமாகி, குழந்தையை எதிர்பார்ப்பவர்கள் period tracker app பயன்படுத்தலாம். Apple/android store இல் தேடுங்கள்.
இதைத்தவிர poly cystic ovarian Syndrome, fibroids என பல பிரச்சினைகள் கர்ப்பப்பையில் வரலாம் மாதவிடாய் ரத்த நிறத்தை வைத்தே ஓரளவு அடையாளம் காணலாம் ஏதும் பிரச்சினையா என, அதைப்பற்றி மருத்துவர்களிடம் ஆலோசியுங்கள்.
வருடந்தோறும் பெண்கள் master health checkup செய்கையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சோதனை செய்கிறார்கள் அமெரிக்காவில் (cervical cancer checkup). இந்தியாவிலும் இருக்கலாம், இல்லாவிட்டால் நீங்களே கேட்டு பரிசோதியுங்கள். குறிப்பாக மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ளவர்கள்.
ஒரு பெண்ணை, பெண்ணாக உணரவைப்பது தாய்மை என வாய் கிழிய பேசும் நாம், அந்த தாய்மையின் ஒரு பகுதியான மாதவிடாயை இழிவாக கருத தேவையில்லை. இது taboo இல்லை. நான் சிலவருடங்களுக்கு முன், gym இல் ஆண் personal trainer உடன் train செய்கையில், ‘உனக்கு பீரியட் இருக்கா’ என கேட்டுவிட்டு துவங்குவார், அதற்கேற்ற பயிற்சிகள் வழங்க. என்கூட வரும் எந்த பெண்ணுக்கும் ஒரு ஆண் எப்படி இப்படி கேட்கலாம் என்ற கேள்வி எழவில்லை, மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேச கூச்சப்படாதீர்கள் பெண்களே. பெண் உடலைப்பற்றி பேசும் ஆண்கள், மோசமானவர்கள் அல்ல. இது நம் கலாசாரத்தில் மாறவேண்டிய சிந்தனை.இந்த பதில் படிக்கும் ஆண்கள், உங்கள் மனைவிக்கு தைரியமாக சென்று pad வாங்கித்தர, சகோதரிக்கு ஆடையில் கரையிருந்தால் எச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவே ஒரு Gen X பெண்ணாக என் வேண்டுகோள்.
நானும் ஒரு பெண்...
நன்றி ராஜி அவர்களுக்கு ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக