🌧️🌧️🌧️ இரங்கல் செய்தி😭..🙏🙏🙏
திரு .கே .குப்புசாமி -தமிழ்நாடு மின்சாரவாரியம் -ஓய்வு-பெரியகோட்டை -சுந்தர் கவுண்டர் லே -அவுட் , உடுமலைபேட்டை ..வயதுமூப்பின்காரணமாக இன்று மாலை காலமானார் .(04-06-2021)எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழந்த இரங்கல்கள் .
மறைந்த என் தந்தையின் உற்ற நண்பர் ..சிறு வயதிலேயே மிகவும் வாழ்க்கையில் போராடி ..நல்ல நிலைமைக்கு வந்து இன்று அருமையான மகன் ,மகள்களுடன் ,பேரக்குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக எடுத்துக்காட்டாக விளங்கி மறைந்தார் ...என் சிறுவயதில் என் அப்பாவுடன் அவர் வீட்டுக்கு செல்லும்பொழுது எல்லாம் ..அந்த புன்னகை மாறாத சிரித்த முகம் தான் என் நினைவுக்கு வரும் . ..எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரின் கோபத்தை பார்த்து இல்லை ..என் தந்தையும் அவரும் சிறுவயதில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை அவ்வுப்பொழுது என்னிடம் கூறுவார் ..
என் தந்தையும் பெரியப்பாவும் பேசும்பொழுது சிறு வயதில் நடந்து நிகழ்வுகளை கூறி மகிழ்ச்சிகடலில் ஆழ்த்துவர் ..கல்வி ஒன்று தான் வாழ்க்கையில் முக்கியம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்கள் ..நாங்கள் கஷ்டப்பட்டு வந்த மாதிரி நீங்களும் படக்கூடாது தக்க அறிவுரைகளை கூறுவார்...எங்கள் வீட்டின் அருகில் தான் என் சிறுவயதில் மின்சாரவாரிய குடியிருப்பு வளாகத்தில் ..குடியிருந்தார் ..வீட்டுக்கு செல்லும் பொழுது எல்லாம் ..அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை ..பாசம் மாறாமல் வீட்டுக்கு போகும்பொழுது வழியனுப்பிவைப்பார் ..
பெரியப்பா அவர்கள் மின்சார வாரியத்தில் பணிபுரிந்ததால் நேர கட்டுப்பாடுகளை நன்கு உணர்ந்தவர் ..அவரை பார்த்து தான் நேரத்தை எப்படி செலவழிப்பது தெரிந்து கொண்டேன் ...பள்ளி ,கல்லூரி காலம் முடிந்து நான் பணிகாரணமாக கோவை சென்று விட்டதால் ..அவரின் நட்புவட்டம் காலசூழ்நிலை காரணமாக குறைந்தது ..
நான் உடுமலை வரும்பொழுது எல்லாம் அப்பாவை அழைத்துக்கொண்டு அவரின் இல்லம் சென்று ..பேசிவருவோம் ....வயது மூப்பின் காரணமாக எனது தந்தையும் மூன்று வருடங்களுக்கு முன் காலமானார் ..என் அப்பாவின் இறப்பு வந்தபொழுது கூட .அதிகம் வருந்தினார் .என்னிடம் ..அருமையான என் நண்பர் இனிமேலும் கிடைக்கமாட்டார் என்று ..
இன்று அவர் மறைந்தாலும் அவரின் என் சிறுவயது நினைவுகள் நீங்க நினைவுகளாக இருக்கும் ..வாழ்க்கையில் சில இழப்புகளை தாங்கி கொள்ளமுடிவதில்லை ..அவருக்கான இறுதி மரியாதையை .எனது தந்தைக்கு செலுத்தியது போன்று என் வாழ்வின் மறக்கமுடியாதவை ...
எனது தந்தை மறைந்த அன்றும்🌧️🌧️ வான் மேகங்கள் சிறு மழைத்துளிகளுடன் கண்ணீர் சிந்தியது 🌧️🌧️..இன்றும் அவருக்கும் மேகங்கள் சிறு மழைத்துளிகளுடன் அதன் அஞ்சலையை செலுத்தியது ..🌧️🌧️🌈🌈.
என்றும் பெரியப்பா நினைவுகளுடன் 🙏🙏🙏🙏🙏
உடுமலை சிவக்குமார் ..9944066681🥰🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக