சனி, 5 ஜூன், 2021

கேள்வி : பிட்காயின் என்றால் என்ன? ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் எப்படி சொல்வீர்கள்?


என் பதில் : 


பணம், துட்டு, டப்பு, தங்கம், வெள்ளி இவற்றுக்கு எப்போதுமே மதிப்பு தான். இதை தான் வள்ளுவனும்"பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்று கூறி சென்றுள்ளார்.


பணத்தை பற்றி அறிந்துகொள்ள யாருக்கு தான் ஆர்வம் இல்லை? சரி இந்த வாரம் கொஞ்சம் வேறுபட்ட பணத்தை பற்றி பார்ப்போம், அது என்ன பணத்தில் வெறுப்படட பணம் என்று யோசிக்கிறீர்களா?


இந்த வாரம் நாம் கொஞ்சம் டிஜிட்டல் பணம் என்று கூறப்படும் பிட் காயினை பற்றி பார்ப்போம்.


என்னால் முடித்த வரை மிக எளிமையாக விளக்க முற்படுகிறேன்.


நானும் நீங்களும் உடுமலைபேட்டையில்  இருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் உங்களுக்கு பசிக்கிறது உண்ண உங்களிடம் ஒன்றும் இல்லை அப்போது என்னிடம் இருக்கும் ஒரே ஒரு வாழைப்பழத்தை உங்களிடம் கொடுக்கிறேன் . இப்போது உங்களிடம் ஒரு பழம் உள்ளது என்னிடம் ஒரு பழமும் இல்லை. இந்த கணக்கு மிகவும் எளிமையாக இருக்கிறது இல்லையா?


இதை சற்று விவரமாய் பார்ப்போமா?


என்னிடம் இருந்த ஒரு பழத்தை உங்களிடம் கொடுத்தபோது, அந்த பழத்தை உங்கள் கையில் பெற்றுக்கொண்டபோது அதை நீங்கள் உணர்ந்தீர்கள், அதாவது என் கையில் இருந்த பலம் உங்கள் கைக்கு மாறியதை நீங்கள் பார்த்தீர்கள், மூன்றாம் நபரின் சாட்சியம் அல்லது மத்தியஸ்தம் தேவை படவில்லை.


என்னிடம் இருந்த ஒரே ஒரு பழம் இப்போது உங்களுடையது. இந்த பழத்தை நீங்கள் சாப்பிடலாம் அல்லது உங்களோடு வரும் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ நீங்கள் கொடுக்கலாம்.


எனவே ஒரு பரிமாற்றம் என்பது இப்படி தான் இருக்கும், அது ஒரு வாழைப்பழமோ, ஒரு புத்தகமோ, அல்லது ரூபாயோ.


மீண்டும் வாழைப்பழ கதைக்கு வருவோம்!


இப்போது, என்னிடம் ஒரு டிஜிட்டல் வாழைப்பழம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இங்கே, எனது டிஜிட்டல் வாழைப்பழத்தை உங்களுக்கு தருகிறேன். என்ன இப்போது சுவாரஸ்யம் கூடுகிறதா? அல்லது தலை சுற்றுகிறதா?


என்னுடையதாக இருந்த டிஜிட்டல் வாழைப்பழம் இப்போது உங்களுடையது, உங்களுடையது மட்டுமே என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். இது மிகவும் சிக்கலானது என்று தோண்றுகிறதா? நான் முதலில் அந்த வாழைப்பழத்தை என் காதலிக்கோ அல்லது என்ன நண்பனுக்கோ ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?


அந்த டிஜிட்டல் வாழைப்பழத்தின் ஓரிரு நகல்களை எனது கணினியில் செய்திருக்கலாம். இப்படி செய்ததை ஒருவேளை இணையத்தில் ஒரு கோடி மக்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம்.


இந்த டிஜிட்டல் பரிமாற்றம் இப்போது ஒரு சிக்கலாக தோன்றுகிறதா? இதை கணினி விஞ்ஞானிகள் இரட்டை செலவு சிக்கல் என்று அழைப்பர். இதனால் தான் டிஜிட்டல் பரிவரித்தனைகள் சிக்கல் நிறைந்ததாக கருத படுகிறது.


தீர்வு இல்லாத பிரச்னை ஏது? இதற்கான தீர்வு என்னவாக இருந்தால் நன்றாக இருக்கும்?


இந்த டிஜிட்டல் வாழைப்பழத்தை கண்காணித்து பதிவு செய்ய ஒரு பேரேடு இருந்தால்?


அந்த பேரேடு மின்னணுவாக இருக்கும் போது, அது துரைச்சார்ந்த யாரவது ஒருவரின் கண்காணிப்பில் இருந்தால்?


அந்த பேரேடு சந்தையில் உள்ள அனைத்து டிஜிடல் வாழைப்பழங்களின் பதிவிடமாக இருந்தால்?


மேலே குறிப்பிட்ட அத்தனை இருந்தாளுக்கும், விடை இருந்தாலும் இன்னொரு பிரச்சனை உள்ளது.


இந்த டிஜிட்டல் பேரேடு கண்காணிக்கும் ஒருவர், சில வாழைப்பழங்களை தனது கணக்கில் சேர்த்து கொண்டால்?


இந்த சிக்கல்களை பார்க்கும் போது மூன்றாவது ஒருவரை ஒவ்வொருமுறை இம்மாதிரியான பரிவர்த்தனை செய்யும் போது மேற்பார்வைக்கு அழைக்கத் தோண்றுகிறதா?


இரயிலில் நாம் செய்து கொண்ட வாழைப்பழ பரிவர்த்தனை போன்று சுமுகமாக இதை எப்படி மாற்றலாம்?


பேரேடு ஒருவரிடம் மட்டும் இல்லாமல், சந்தையில் இருக்கும் எல்லோரிடமும் இருந்தால்? அதுவும் உங்கள் கணினியிலேயே! சந்தையில் நடந்த அத்தனை வாழைப்பழ பரிவர்த்தனைகளும் அதில் பதிவானால் எப்படி இருக்கும்?


இந்த அமைப்பை ஏமாற்றுவது சிரமம் ஏனென்றால் இங்கு யாரும் அதிகப்படியான வாழைப்பழத்தை சந்தையில் இறக்க முடியாது ஏன் என்றால் உங்கள் தகவேடு இந்த பிழையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.


இந்த தகவேடு ஒருவரால் மட்டும் நிர்வகிக்க படுவதில்லை என்பதால் நினைத்த மாதிரி கள்ள நோட்டு அடிக்க முடியாது.


இப்போது இந்த அமைப்பை பரந்து விரிந்து வலைப்பின்னல் போல கற்பனை செய்து பாருங்கள். இந்த அமைப்பு மிகப்பெரியது. கீழே குறிப்பிட்டுள்ள படத்தை போன்றது.


இதற்கான சட்டதிட்டங்கள் மற்றும் குறியீடுகள் ஒரு ஓபன் சௌர்ஸ்(Open Source), எடுத்துக்காட்டாக; ஒரு ஆண்டிராய்டு மென்பொருள் ஓபன் சௌர்ஸ்(Open Source) இது உங்கள் கைபேசியை உயிப்பிக்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உபயோகின்றன. இதை போன்று இந்த ஓபன் சோர்ஸில் நீங்களோ, நானோ, உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ சேர்ந்து நம் பங்களிப்பை கொடுக்கலாம்.


நாம் அந்த பேரேட்டை கண்காணிக்கலாம், சரிபார்க்கலாம், அதில் மாறன்களை கொண்டு வர உதவலாம். உங்கள் பங்களிப்புக்கு சில வாழைப்பழங்கள் அளிக்கப்படும். இதுவே புதிய வாழைப்பழங்களை உருவாக்க ஒரே வழி.


இப்போது இங்கு விளக்கியது தான் பிட்காய்ன் நெறிமுறைகள், அந்த வாழைப்பழங்கள் தான் பிட்காயின்கள்.


இந்த டிஜிட்டல் வாழைப்பழம் அதான் நம்ம பிட்காயின் மிகப் பிரபலம் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து நம்மூர் வட்ட செயலாளர் வண்டுமுருகன் வரை இது குறித்து வாதிடுகிறார்கள்.


இதை பணம் என்கிறர்கள் சிலர் ஏமாற்று வேலை என்கிரார்கள்.


நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்குறீர்களா?


பிட்கய்னோ அல்லது பங்குச்சந்தை பரிவர்த்தனைகலோ வலைவீசும் வாட்ஸ்அப் குரூப்கள், நிதி ஆலோசகர்கள், டெலிகிராம் சேனல்கள் என்று பெருகிக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்க்கக்கூட அந்தப்பக்கம் போய்விடவேண்டாம். முழுக்க சதுரங்கவேட்டையர்கள்... உஷார்.


சிவக்குமார் .V.K 

நிதி ஆலோசகர் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக