கேள்வி :
1.மற்றவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும்?
(கற்பனை எண்ணங்கள் நிறைய தோன்றுகின்றன. பயம், பதட்டம், கூச்சமாக ஆகியவை எனக்கு இருக்கின்றன. யாரிடமும் சரியாக பேச முடியவில்லை)
2.மேடை பேச்சுத் திறமை மட்டுமே கொண்டு எப்படி சிலர் வாழ்கிறார்கள்?
என் பதில் : நீண்ட நாட்களாக என் நினைவில் இருக்கும் கேள்வி.
முதலில் இரண்டாவது கேள்வியை பார்க்கலாம்:
கற்பனை எண்ணங்கள், பயம், பதட்டம், கூச்சம் எல்லாம் தோன்றுகின்றன. யாரிடமும் சரியா பேச முடியலை.
நீங்கள் ஒரு அக நோக்கு இயல்புடையவராக இருக்கலாம்.
எண்ணங்களை அருவி மாதிரி கொட்ட நினைத்தாலும், வார்த்தை வராமல் எதோ ஒரு உருளை தொண்டைக்குள் சிக்கி கொண்ட மாதிரி ஒரு எண்ணம். அதானே?
நீங்கள் குறிப்பிட்ட இந்த பயம், பதட்டம் எல்லாம் எப்படி போக்கலாம்? என்று பார்க்கலாம்.
இதை போக்கி விட்டாலே மற்றவரிடம் எப்படி பேசலாம் என்பதும் தெரிந்து விடும்.
ஒரு சின்ன பிளாஷ்பேக்:
+2 வரை உடுமலை அரசு பள்ளியில் படித்து விட்டு, உடுமலையில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து முதல் வார வகுப்புகள் ஆரம்பித்த நேரம்.
பேராசிரியர்கள் எல்லாம் "உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்" என்று தான் வகுப்பை ஆரம்பித்தனர்.
அரசு பள்ளிகளில் படித்த என் சக நண்பர்கள் மிகுந்த தயக்கத்துடன் மெல்லிய குரலில் தங்கள் குடும்ப பின்னணி, பள்ளி எல்லாம் சொல்ல, ஒவ்வொரு முறையும் பேராசிரியர் இரண்டாம் முறை விபரங்களை கேட்க வேண்டிய நிலை.
ஒரு வாரம் முடிந்ததும், வகுப்பில் இருந்த 45 பேருக்கும், 6 பேராசியர்களுக்கும் என் சொந்த ஊர்,பின்னணி மனப்பாடம் ஆகி விட்டது.
நான் பேசியதெல்லாம் சிறிய வரிகள், ஆனால் முழுமையான வரிகள்.
நான் சொல்வது கேட்பவர் மனதில் பதிய வேண்டும் என்பதில் நான் நிச்சயமாக இருந்தேன்.
என் தமிழ் ,ஆங்கிலம் அவ்வளவு பாலிஷ் எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனால் அவர்களிடம் இருந்த அந்த பயம்/தயக்கம் என்னிடம் இல்லை.
போதும் சுய புராணம்.
நமக்கும் புரியாமல், கேட்பவருக்கும் புரியாமல் பேசி என்ன பயன்? இதை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.
சிம்பிளான வரிகளில் உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள்.
எந்தவொரு மொழியிலும் ஆளுமை எல்லாம், பழக பழக வரும். ஆனால் அந்த Attitude நாம் தான் கொண்டு வர வேண்டும்.
கோவிட் நிலைமை சரியானதும், Toastmaster club அருகில் இருந்தால் சேர்ந்து விடுங்கள்.
நீங்க என்ன பேசினாலும், எப்படி பேசினாலும் கை தட்டி விட்டு தான் உங்கள் பேச்சை மதிப்பீடு செய்வார்கள். நல்ல கிளப்பாக பார்த்து விசாரித்து விட்டு சேரவும்.
Ice braker Speech, Elevator Speech என்று படிப்படியாக ஒவ்வொரு வகை பேச்சுக்களை அறிமுகம் செய்து உங்களை பேச வைப்பார்கள். ஆனால் தயக்கம் காட்டாமல் நீங்கள் தான் பேசணும்.
பேச்சு திறமை மட்டுமே கொண்டு எப்படி வாழ்கிறார்கள்?
என்ன இப்படி கேட்டுபுட்டீங் ?
கார்ப்பரேட்டில் வருஷம் பூரா நெத்தி வேர்வை கீபோர்ட்டில் மற்றும் ஊர் பூரா சுற்றி உழைச்சு, செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டே விட்டாலும், "அப்படி என்னத்த ராக்கெட்டு பறக்க விட்ட நீயி ?" என்று தான் கேட்பார்கள்.
எனவே நாம செய்யறோமோ இல்லையோ, எல்லாத்தையும் பாயிண்ட் பாயிண்டா பேசலைனா வருசா வருஷம் பொரிகடலை தான் போனஸா குடுப்பாங்க.
பி.கு: சில நேரங்களில் மவுனம் தான் மிகச் சிறந்த பேச்சாக அமையும் ,தற்பொழுது அதிகம் பேசுவதை விட எழுதிவிட்டால் கொஞ்சம் மனநிறைவு .
மேடை பேச்சு என்றாலே கொஞ்சம் தயக்கம் ..எனது அலுவலக வாடிக்கையாளர்களை சந்தித்து பேசுவது எளிமையான இயல்பு .அதற்கு பதிலாக என்னை சுற்றிலும் மேடை பேச்சு பேசுவதற்கு ஆளுமை நிறைந்த மதிப்புமிக்க நண்பர்கள் வட்டம் எப்பொழுதும் இருக்கும் ..
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக