செவ்வாய், 29 ஜூன், 2021

புங்கனூர் பசு எத்தினை லிட்டர் பால்கொடுக்கும் ..


புங்கணூர் பசுவின் பால் எருமைப் பாலைப் போல் 8 % கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது

புங்கணூர் பசுக்கள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. இதன் சராசரி உயரம் 70 - 90 செ.மீ ஆகும். இதன் எடை 115-200 கிலோ ஆகும். இது ஒரு நாளைக்கு சராசரியாக 3 முதல் 5 லிட்டர் பால் தரவல்லது. இது ஒரு நாளுக்கு 5 கிலோ தீவனம் சாப்பிடும்.📚📚✍️✍️🐄🐄🐄🐄


.புங்கனூர் பசுமாடு ...

புங்கணூர் பசு, ஒரு வகையான பசு இனமாகும். இப்பசுவின் பிறப்பிடம் சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆகும். இந்த வகைப் பசுவின் பால் அதிக கொழுப்புச் சத்துக் கொண்டது. இதன் பாலில் அதிக மருத்துவ குணம் உள்ளது .. பொதுவாகப் பசும்பாலில் 3.5 முதல் 4 சதவீதம் வரையான கொழுப்புச் சத்துதான் இருக்கும்..இன்று  நண்பரின் தோட்டத்தில் ..இதன் வரலாறு தெரிந்துகொள்வதற்கு சென்றபோது ..அருமையான தகவல்களை கூறினார் இதன் உரிமையாளர் ...நன்றி ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

திங்கள், 28 ஜூன், 2021

கேள்வி : 


1.மற்றவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும்?

 (கற்பனை எண்ணங்கள் நிறைய தோன்றுகின்றன. பயம், பதட்டம், கூச்சமாக ஆகியவை எனக்கு இருக்கின்றன. யாரிடமும் சரியாக பேச முடியவில்லை) 

2.மேடை பேச்சுத் திறமை மட்டுமே கொண்டு எப்படி சிலர் வாழ்கிறார்கள்?


என் பதில் : நீண்ட நாட்களாக என் நினைவில்  இருக்கும் கேள்வி.


முதலில் இரண்டாவது கேள்வியை பார்க்கலாம்:


கற்பனை எண்ணங்கள், பயம், பதட்டம், கூச்சம் எல்லாம் தோன்றுகின்றன. யாரிடமும் சரியா பேச முடியலை.


நீங்கள் ஒரு அக நோக்கு இயல்புடையவராக இருக்கலாம்.

எண்ணங்களை அருவி மாதிரி கொட்ட நினைத்தாலும், வார்த்தை வராமல் எதோ ஒரு உருளை தொண்டைக்குள் சிக்கி கொண்ட மாதிரி ஒரு எண்ணம். அதானே?

நீங்கள் குறிப்பிட்ட இந்த பயம், பதட்டம் எல்லாம் எப்படி போக்கலாம்? என்று பார்க்கலாம்.


இதை போக்கி விட்டாலே மற்றவரிடம் எப்படி பேசலாம் என்பதும் தெரிந்து விடும்.


ஒரு சின்ன பிளாஷ்பேக்:


+2 வரை உடுமலை அரசு பள்ளியில்  படித்து விட்டு, உடுமலையில் தனியார்  கல்லூரியில் இடம் கிடைத்து முதல் வார வகுப்புகள் ஆரம்பித்த நேரம்.


பேராசிரியர்கள் எல்லாம் "உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்" என்று தான் வகுப்பை ஆரம்பித்தனர்.


அரசு பள்ளிகளில் படித்த என் சக நண்பர்கள் மிகுந்த தயக்கத்துடன் மெல்லிய குரலில் தங்கள் குடும்ப பின்னணி, பள்ளி எல்லாம் சொல்ல, ஒவ்வொரு முறையும் பேராசிரியர் இரண்டாம் முறை விபரங்களை கேட்க வேண்டிய நிலை.


ஒரு வாரம் முடிந்ததும், வகுப்பில் இருந்த 45 பேருக்கும், 6 பேராசியர்களுக்கும் என் சொந்த ஊர்,பின்னணி மனப்பாடம் ஆகி விட்டது.


நான் பேசியதெல்லாம் சிறிய வரிகள், ஆனால் முழுமையான வரிகள்.

நான் சொல்வது கேட்பவர் மனதில் பதிய வேண்டும் என்பதில் நான் நிச்சயமாக இருந்தேன்.

என் தமிழ் ,ஆங்கிலம் அவ்வளவு பாலிஷ் எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனால் அவர்களிடம் இருந்த அந்த பயம்/தயக்கம் என்னிடம் இல்லை.


போதும் சுய புராணம்.


நமக்கும் புரியாமல், கேட்பவருக்கும் புரியாமல் பேசி என்ன பயன்? இதை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.


சிம்பிளான வரிகளில் உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள்.


எந்தவொரு மொழியிலும் ஆளுமை எல்லாம், பழக பழக வரும். ஆனால் அந்த Attitude நாம் தான் கொண்டு வர வேண்டும்.



கோவிட் நிலைமை சரியானதும், Toastmaster club அருகில் இருந்தால் சேர்ந்து விடுங்கள்.


நீங்க என்ன பேசினாலும், எப்படி பேசினாலும் கை தட்டி விட்டு தான் உங்கள் பேச்சை மதிப்பீடு செய்வார்கள். நல்ல கிளப்பாக பார்த்து விசாரித்து விட்டு சேரவும்.


Ice braker Speech, Elevator Speech என்று படிப்படியாக ஒவ்வொரு வகை பேச்சுக்களை அறிமுகம் செய்து உங்களை பேச வைப்பார்கள். ஆனால் தயக்கம் காட்டாமல் நீங்கள் தான் பேசணும்.


பேச்சு திறமை மட்டுமே கொண்டு எப்படி வாழ்கிறார்கள்?


என்ன இப்படி கேட்டுபுட்டீங் ?


கார்ப்பரேட்டில் வருஷம் பூரா நெத்தி வேர்வை கீபோர்ட்டில் மற்றும் ஊர் பூரா சுற்றி  உழைச்சு, செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டே விட்டாலும், "அப்படி என்னத்த ராக்கெட்டு பறக்க விட்ட நீயி ?" என்று தான் கேட்பார்கள்.


எனவே நாம செய்யறோமோ இல்லையோ, எல்லாத்தையும் பாயிண்ட் பாயிண்டா பேசலைனா வருசா வருஷம் பொரிகடலை தான் போனஸா குடுப்பாங்க.


பி.கு: சில நேரங்களில் மவுனம் தான் மிகச் சிறந்த பேச்சாக அமையும் ,தற்பொழுது அதிகம் பேசுவதை விட எழுதிவிட்டால் கொஞ்சம் மனநிறைவு .

மேடை பேச்சு என்றாலே கொஞ்சம் தயக்கம் ..எனது அலுவலக வாடிக்கையாளர்களை சந்தித்து பேசுவது எளிமையான  இயல்பு .அதற்கு பதிலாக என்னை சுற்றிலும் மேடை பேச்சு பேசுவதற்கு ஆளுமை நிறைந்த மதிப்புமிக்க  நண்பர்கள் வட்டம் எப்பொழுதும் இருக்கும் ..

நன்றி ...




 கேள்வி : ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான் (Men will be Men) என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் என்னென்ன?


என் பதில் :


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்ன்னு கஷ்டப்பட்டு முயற்சி பண்ணும் இந்த ஆண் தன்னோட திருமணத்தில் இருப்பதை மறந்துவிட்டார் போல.


பாக்குற பார்வையை பார்த்தால் அவசரப்பட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டோமோனு நினைக்குராரோ என்னமோ!


கல்யாண ஆல்பம் மனைவியின் கைக்கு வரும் போது இடியுடன் கூடிய பலத்த புயல் வீச வாய்ப்புகள் உள்ளன.


இந்த ஆண்களுக்கு கல்யாணம் ஆகி மனைவி கூட இருந்தாலும் சரி இல்லை காதலி கூட இருந்தாலும் சரி அழகான பெண்களை பார்த்தால் வாய்க்குள் ஈ போவது தெரியாமல் பாக்க தான் செய்யுறாங்க.


அதுல மட்டும் எல்லா ஆண்களும் தவறாமல் ஒற்றுமையை கடைப்பிடிப்பாங்க.


அழகான பெண்கள் உதவின்னு கேட்டால் ஆண்கள் அன்னை தெரசாவாக மாறி ஓடி ஓடி உதவி செய்வாங்க. இதுவே பையன் உதவின்னு கேட்டால், நீீீீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்ன்னு வரும். வெரி பேட் பெல்லோஸ்.


பேருந்தில் எழுந்து சீீட் தருவது முதல் டிக்டாக் வீீீடியோஸ்க்கு லைக் போடுவது வரை பெண்களுக்கே முதலிடம் கொடுக்கும் ஆண்கள். எத்தனை வயசானாலும் கேரக்டரை மட்டும் மாத்த மாட்டறீங்க என்பதை போல் காதல் மன்னர்களாகவே வலம் வரும் ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான்.

நன்றி ..;...


சனி, 26 ஜூன், 2021

 கேள்வி : Internet of Things இன்னும் 10 ஆண்டுகளில் மனித வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என எண்ணுகிறீர்கள்?


என் பதில் : எனது நண்பர் தொழில்நுட்பத்துறையில் உள்ளதால் அவரிடம் (கூகிள்-USA  ) பேசியபோது அவர் அளித்த பதில் வரப்போகும்  தொழிநுட்பத்தில் மாறும் உலகம் பற்றி தெரிந்துகொண்டேன் ..உங்களுக்காக ..


Internet of Things - சுருக்கமாக இணைய வழியாக பேசிக்கொள்ளும் சாதனங்களை கட்டமைக்கும் பொறிமுறை. உங்கள் அமேசான் எக்கோ (யக்கோவ் இல்லிங்க, Echo) ஒரு IOT சாதனமே.

ரொம்ப technical ஆக எழுதினால் யாரும் படிப்பதில்லை, எனவே general audience க்காக இந்த பதில், techies கோபம் கொள்ளாதீர்!

‘Alexa, Play me Yuvan’ என்றால் என்ன நடக்கிறது தோராயமா?

உங்கள் அலெக்ஸாவில் உள்ள sensor/actuator இணையத்தை தொடர்பு கொள்ளும்.

இணைய வழி, அமேசான் data aggregator எனப்படும் கட்டமைப்பு, அந்த சொற்றொடர் சம்பந்தப்பட்ட தரவுகளை ‘யுவன்’ ‘தமிழ் இசை’ ‘சென்னை அசோக்நகர் பயனர்’ என அனுப்பும், அடுத்த நிலைக்கு.

அடுத்து இருக்கும் யுவன் பாடல் அனைத்தும் உங்கள் ரசனையோடு மேட்ச் செய்யப்படும் (Data analytics), நீங்கள் அடிக்கடி கேட்பது ‘ரவுடி பேபி’ என்றால் மேக கணிணியம் அந்த ஆடியோ பிட்டுகளை அனுப்பும், திரும்ப இணைய வழி playback ஆக. உங்கள் request அவர்களின் தரவுதளத்தில் சேமிக்கப்படும். (Cloud based archival)

இதே மின் விளக்கு போட சொன்னால், Alexa , smart bulb க்கு சிக்னல் அனுப்பும்.

இதன் architecture வரைபடம்-

சரி IOT அடுத்த 10 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யும்?

Smart cities- எது இந்த பாண்டிபஜார்ல கலர் பெஞ்சு போட்டு பண்ண காமெடியா? இல்லங்க, நிஜமான smart city களில், smart grid வழியாக மின்சாரம் நெறிபடுத்தப்படும், peaks and valleys, முன்னரே அனுமானிக்கப்பட்டு, பயனர்கள் உஷார் படுத்தப்படுவர், ‘5 மணிக்கு washing machine போட்டா peak, 10 மணிக்கு மேல போட்டா rebate, எப்படி வசதி’ என்று text போகும். இது எங்க ஊர்ல இப்பவே இருக்கு, ohm app, apple store இல் பாருங்க. Water leakage, traffic jam எல்லாமே அல்காரிதம் மூலம் கணிக்கப்பட்டு சீரமைத்து விடுவார்கள். கூடிய விரைவில் நம் ஊரிலும் மின் வாரியம், குடிநீர் வாரியம் எல்லாம் hi tech ஆகும், IOT சாதனங்கள் வாங்கியதில் ஊழல் என எதிர்கட்சி, ஆளுங்கட்சியைப் பார்த்து கூச்சலிடும்.

பாதுகாப்பு சாதனங்கள்

ஆபிஸில் இருந்தபடி வீட்டை பூட்டலாம், லைட்டை அணைக்கலாம், பெற்றோர் பத்திரமா என புலம்பெயர் மக்கள் கண்காணிக்கலாம், வாட்ச் மேன்கள், கூர்க்காக்கள் பிழைப்பில் மண்ணள்ளிப் போடப் போகிறது IOT.

மருத்துவத் துறை

Telemedicine- மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு இது வரப்பிரசாதம். Tel a doc என்ற ஆப் நான் இங்க பயன்படுத்தியது உண்டு. டாக்டரை online இல் பார்த்து, மருந்து வீட்டுக்கே பார்சல் வரும், பாதி விலை வேறு.

Closed Loop System for diabetics (artificial pancreas)- இன்றே glucameter கருவி எங்கும் கிடைக்கிறது. இது அடுத்த லெவல், உங்கள் ரத்த சர்க்கரையை இந்த சாதனமே கணக்கு எடுத்து, insulin/glucagon சப்ளை செய்யும், இடுப்பை சுற்றி பெல்ட் போல கட்டிக்கொண்டு வேலைக்கு போகலாம், இன்சுலின் ஊசி தேவையில்லை. இது diabetes capital ஆன இந்தியாவிற்கு மிகவும் தேவையான ஒன்று

3D printing மூலம் custom made implants, அதாவது உங்கள் உடலுக்கு தக்க மாற்று உறுப்பு, கை, கால் ஊனமானவர்கள் அசவுகரியமாக நடக்க தேவையில்லை.

இவை தவிர auto driving cars, விழுங்கக்கூடி ய sensors, என பல ஆய்வுகள். போலீஸ், மிலிட்டரிக்கும் IOT வரம்.

உங்கள் பிள்ளை switch board என்ற ஒன்றே அறியாது போக வாய்ப்பு அதிகம், இன்னும் 10 வருடத்தில்.


நன்றி ...


பாலமன்னா குலம் ..

என் அருமை பாலமன்னா மாப்பிள்ளைகளிடம் மட்டும் ஒரு புள்ளிவிவரம் எடுத்தேன் அதில் அதிகம் பெண்பிள்ளைகளே அதிகம் வாரிசுகளாக உள்ளார்கள் . ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்த போது டிரவர்ஸ்- வில்லார்ட் ஹைபாதசிஸ் எனும் அறிவியல் கோட்பாடு என்ன சொல்கிறது என்றால் பெற்றோர் அழகானவர்களாக இருந்தால் அவர்களுக்கு பெண்குழந்தை பிறக்கும் சாத்தியகூறு கூடுதல் என்கிறது. பெற்றோர் ரொம்ப அழகானவர்களாக இருந்தால் நிறைய பெண்குழந்தைகள் பிறக்குமாம். என்ற ஆய்வு கூறுகிறது ...அதை ஒரு மாப்பிள்ளையிடம் கூட இது குறித்து கேட்டேன்

அதற்கு மாப்பிளை அளித்த பதில் ஆமாம் மாமா ,"உண்மைதான். எங்களை ஆண்டவன் அழகாக படைத்துவிட்டான். இத்தனை அழகை ஏன் தான் கொடுத்தானோ?" என சலித்துக்கொள்ளுங்கள்.என்று கூலாக காலரை தூக்கிவிட்டு அழகாக பதில் அளித்தார்

குறிப்பு : எனக்கு எப்படியோ (குஜ்ஜபொம்மு ) ஒண்ணே ஒன்னு ,கண்ணே கண்ணு ..ஒரு பையன் .தான் .என் வருங்கால மருமகளுக்கு அதிகம் பொண்ணுங்க வரன் தேடவேண்டியது இல்லை ..வேலை மிச்சம் ...

நன்றி ...அன்புடன் சிவக்குமார் ..

வெள்ளி, 25 ஜூன், 2021

 கேள்வி : இன்று பெரும்பாலும் குளியலறையில் வழுக்கி விழுந்தே பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன? அதுவும் சிமெண்ட் தரை டைல்ஸை விட வழுக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? சிமெண்ட் தரை வழுக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்?


என் பதில் : 


 இன்று பெரும்பாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்தே பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுவும் சிமெண்ட் தரை டைல்ஸை விட வழுக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது. சிமெண்ட் தரை வழுக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்?

இன்று பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கு, உடல் நிலை நன்றாக இருந்தாலும் 80 வயதாகும்போது, கட்டிலில் இருந்து எழும் சமயம் / பாத்ரூமில் செல்லும் போது / வீட்டினுள் நடக்கும் போது / வாசல் படியில் இறங்கும் போதும் லேசாக ஒரு தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.


வீட்டு பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. குடும்பத்தினர் அனைவரும் உபயோகிக்கும் இடங்களை உடனுக்குடன் mop செய்த பின், ஈரமில்லாமல் எப்போதும் உலர்ந்த தளமாக வைத்திருப்பது நலம். இது tiles - ல் பூஞ்சை படிவதை தடுக்கும் என்பது கூடுதல் அனுகூலம்.


வீட்டில் எந்த அறையாக இருந்தாலும் சரி ... உலர்ந்த தரையுடன் இருப்பது நலம். குறிப்பாக குளியலறை. ஏனெனில் வெளிநாடு போல dry washroom - க்கு இன்னும் முழுமையாக நாம் மாறிவிடவில்லை.


மூத்த குடிமக்கள் சில lifestyle changes அவசியம் செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில், குடும்ப மருத்துவர் சொல்வதை புரிந்து டக்கென்று ஏற்று கொண்டு விடுகிறார்கள்.


நம்மூரில், வீட்டில் உள்ள பெரியவர்களிடம், தயங்கி தயங்கி "கட்டிலை விட்டு எழுந்திருக்கும் போதும், பாத்ரூம் செல்லும் போதும், வீட்டு வராண்டாவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் போதும், இந்த LED light உடன் இரவில் ஒளிரக்கூடிய Smart Walking Stick with LED light எதற்கும் ஒரு support ஆக கையில் இருக்கட்டுனு டாக்டர் சொன்னார் ... உங்களுக்கும் அது ஒரு confidence தரும்" என்று நீட்டினால் ...


'படவா ராஸ்கல் ... எனக்கு என்னடா அப்படி வயசாயிடுச்சு ... டாக்டர் சொல்றாருனு இந்த குச்சியை குடுக்கறே ? .. ஐ யாம் ஜஸ்ட் 85 அண்ட் ஃபிட் ...... என் உடம்பிலே தெம்பு இருக்கு... என் வேலையே நானே பார்த்துக்குவேன்....' என்று அந்த வாக்கிங் ஸ்டிக்கில் நம்மை ஒரு அடி கொடுத்து கடிந்தும் கொள்கிறார்கள்.


நாம் எதற்காக சொல்கிறோம் ... விழுந்து விட்டால் எலும்பு நொறுக்கும் வாய்ப்பு அதிகம். மருத்துவம், surgery, joint repair / replacement என்று அலைச்சல் ..சிரமம் ... வலி ..மாத்திரை .... அதனால் வருமுன் காப்போம் என்று ஒரு அக்கறையோடு சொல்கிறோம் ....


ஆனால் அவங்களுக்கு, இது  self - esteem ஐ காயப்படுத்துவதால் அந்த வயதில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கையை மனதார ஏற்றுக்கொள்வதில் ஒரு வித தயக்கம் ... விழுந்தால் பார்த்து கொள்ளலாம் என்ற mindset ....


உங்கள் இந்த கேள்விக்கான பதிலாக 2 வருடம் முன்பு எழுதிய முதியோர்கள் இருக்கும் வீட்டில் எந்த வசதிகள் அவசியம் இருக்க வேண்டும்? கேள்விக்கு நந்தகோபால் கோ (Nandagopal G)-இன் பதில் - ஐ இங்கே பகிர்கிறேன் Radhika Nagaraj … பாருங்களேன் உங்களுக்கு use ஆகுமா என்று ?


இப்போதெல்லாம் நவீன மருத்துவம் காரணமாக நமது ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. எதிர்வரும் 2050 வாக்கில் தற்போது விட மும்மடங்கு மூத்த குடிமக்கள் எண்ணிக்கை கூடும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


ஒவ்வொரு 1000 மூத்த குடிமக்களில் 160 பேர் இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 55 பேருக்கு காது கேட்பதில் சிரமம் அல்லது பார்வை குறைபாடு அல்லது உட்கார / நிற்க / நடப்பதில் சிரமம் உள்ளது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் Geriatrics (முதியோர் நலம் பற்றிய மருத்துவம்) இந்தியாவில் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது.


இது போன்ற வினாக்களுக்கு, மருத்துவ நிபுணர்கள், எலும்பியல் மற்றும் பிசியோதெரபி உபகரண வினியோகம் மற்றும் வணிக நிர்வாகம் செய்து வரும் சீத்தா லக்ஷ்மி (Seetha Lakshmi) மேடம் ,உடுமலைப்பேட்டை ராதா மெடிக்கல் நண்பர் பாலகுமார்  போன்றோர் விடையளித்தால் இன்னும் சில நடைமுறை தீர்வுகள் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். வீட்டில் உள்ள பெரியவர்களை இன்னும் சிறப்பாக கவனித்து கொள்ள நமக்கு ஏதுவாக இருக்கும்...

நன்றி ...


இது நம்ம வீட்டு கல்யாணம் ....ஜூலை 5...2018

 இது நம்ம வீட்டு கல்யாணம் ....ஜூலை 5...2018




A .ஆதித்ய வெங்கடேஷ் .B .E ..Weds ...T .தனநந்தினி ..B .E
ஸ்ரீ முருகன் திருமண மண்டபம் ...கோவை ரோடு ..பொள்ளாச்சி ..
கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண
வாழ்த்துக்கள்
..
A .ஆதித்ய வெங்கடேஷ்ன் தந்தை ..S அசோகன் (ஜெர்மனி )அவர்களை பற்றி சிறு குறிப்பு
நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,பெண்குழந்தைகள் ..கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர் ..எனக்கு தெரிந்து 10 வருடங்களுக்கு மேல் நிதி உதவிகள் செய்துள்ளார்கள் ..இதை கூட அவர் சொல்லவில்லை ..அவரால் பயனடைந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இவரை முதன் முதலாக நான் சந்தித்தது திருப்பூரில்.. எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய நம் சமுதாய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தனது சமுதாய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ...தற்பொழுதும் தொடர்கிறது ..முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கும் பொழுது ...முதல் மனிதராக வந்து அறக்கட்டளை உறுப்பினராக சேர்ந்து நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் முத்தான ஆலோசகர் ....நமது திருப்பூர் மாப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களின் மூலம் இந்த நன்கொடை அளித்தார் ..இப்பொழுதும் நம் கம்பள குழந்தை செல்வங்களுக்கு நமது அறக்கட்டளை மூலம் கல்வி நிதிஉதவி அளித்துக்கொண்டுள்ளார் ... வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் அவரது நினைவுகள் முழுவதும் ..நம் கம்பள சமுதாய குழந்தை செல்வங்கள் கல்வி வளர்ச்சியின் மீது இருக்கும் ..மாதம் ஒருமுறை என்னிடம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்துகொள்வார்..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...


கேள்வி : நீங்கள் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா? என்ன?


என் பதில் : இப்போ இதுதானே டாபிக் .......


கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் இறந்துவிட அங்கு உள்ள பெண்கள் எல்லாம் வரதட்சணை குடுக்க முடியாதுன்னு போர் கொடி தூக்குறாங்க.


இதை தொடர்ந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சு.


ஆண்கள் வரதட்சணை கேட்ப்பது தவறுன்னு பெண்கள் சொல்ல. பெண்கள் மட்டும் வெல் செட்டில்டு மாப்பிள்ளை கேட்ப்பது தப்பில்லையான்னு ஆண்கள் கேட்க்க. நீீயா நானா மாதிரி சூடுப்பறக்குற விவாதங்கள் போயிட்டிருந்தது.


உண்மையா சொல்லணும்னா வரதட்சணை தரதுலையே நிறைய பிரச்சனைகள் இருக்கு.

சில பேர் வரதட்சணை தரதையே கௌரவமாக நினைக்குறாங்க.

சில பேர் மாப்பிள்ளை வரதட்சணை வேண்டாம்னு சொன்னால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையிருக்குன்னு பேசுறாங்க.

சில வீீீீட்டுல ஆறு டிஜிட்ல சம்பளம் கேக்குறாங்க.

சில வீீீீட்டுல காரு, பைக்கு மண்டப செலவெல்லாம் செய்ங்கங்குறாங்க.

சில பேர் ஹை சொஸைட்டி பொண்ணுங்க வைச்ச டிமேன்ட்ஸை பாத்துட்டு எல்லா பொண்ணுங்களும் அப்படி தானு நினைக்குறாங்க.

சில பேர் குணத்தை பாக்காமல் சொத்தை மட்டும் பார்த்து திருமணம் பண்ணி வைக்குறாங்க.

இங்க ரெண்டு பேரு மேலயுமே தப்பு இருக்கு. அதிகமான எதிர்ப்பார்ப்புகளையும், டிமேன்ட்ஸையும் குறைச்சிட்டு பாருங்க. நல்ல பொண்ணுங்களும், பசங்களும் கண்ணுக்கு தெரியுவாங்க.


நன்றி ....


புதன், 23 ஜூன், 2021

 உடுமலைப்பேட்டை  ராஜாவூர் 




தம்பி 🥰N திருமலைசாமி DTT  -S .கீதா B .Sc ., 🥰




🥰கனகலிங்கம் (எ)தினேஷ்குமார் Weds லாவண்யா. 🥰




தம்பதிகளுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக 




திருமண நாள் வாழ்த்துக்கள் -24-06-2021..🌷🌱👍👍🤝🥰🥰

 கேள்வி : பத்து மாதத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு ஏன் பன்னிரண்டு மாதத்திற்கு ஒருமுறை பிறந்த நாள் கொண்டாடுகிறோம்?


என் பதில் : 


பத்து மாதத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு ஏன் பன்னிரண்டு மாதத்திற்கு ஒருமுறை பிறந்த நாள் கொண்டாடுகிறோம்?


வருடத்திற்கு ஒரு முறை அதே நாளில் வரும்போதே பல பேர் பலருடைய பிறந்தநாளை மறந்துவிடுகிறார்கள் இதுல வேற வேற நாள் என்றால் அருமை...


முதலில் நாம் கொண்டாடுவது பிறந்தநாள் தானே தவிர பிறப்பதற்கு ஆகும் நாட்கள் இல்லை.


10 மாதத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு 10 மாதத்திற்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடினால்...


10 மாதம் கழித்து நீங்கள் கொண்டாடுவது உங்கள் பிறந்த தினமாக இருக்காது

ஆறு வருடத்திற்கு ஒரு முறை தான் நீங்கள் உண்மையாகவே பிறந்த நாளன்று உங்கள் பிறந்த நாள் வரும். இது சரியாக 10 மாதம் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால்.


உங்கள் வயதை பொறுத்து தான் LKGஇல் இருந்து வேலை வரை எல்லாமே தீர்மானிக்க படுகிறது. அதையே கணக்கிடுவது கடினம் என்ற நிலை வந்தால் தேவையில்லாத குழப்பங்கள் பல வரும்.


இவையெல்லாம் இல்லாமல் ஒரு வருடம் என்பதே 12 மாதம் என்று இருக்கும் போது 10 மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகிறது.


நன்றி ....


https://youtu.be/yfmIDOyQi84

செவ்வாய், 22 ஜூன், 2021

 கேள்வி : வீட்டை மேம்படுத்த நீங்கள் செய்த மிக முக்கியமான விஷயம் என்ன?


என் பதில் : எனது பணி வீட்டுக்கடன் வழங்குவதுமட்டுமே ..அப்படி ஒரு வீட்டிற்கு எனது வாடிக்கையாளர் கோவையில் ஒரு கொஞ்சம் விலை குறைவு என வாங்கினார் ...அதன் பின் நடந்தை அவரே என்னிடம் பகிர்ந்ததை உங்களிடம் பகிர்கிறேன் அவர் அனுமதியுடன் ....

ஆறு அடுக்கக குடியிருப்பில் ஒன்று எங்களது. வீட்டுக்கடனில் வாங்கியது. அறுத பழதான அதுதான் என் சக்திக்கு எட்டியது. விற்பனை செய்தவர் ஒரு விதவை. அவரது வாரிசுகளும் கையெழுத்திட்டு விற்பனை செய்தனர்.


ஓரிரு வருடங்கள் கழித்து ஒருநாள் அந்த அடுக்ககத்தை நன்கு அறிந்த ஒருவர், என்ன, வீடு நல்லா செட் ஆயிருச்சா என்று விசாரித்தார். அவர் கேட்ட தொணி வித்தியாசமாக தெரிந்தது. ஓ, நல்லா செட் ஆயிருச்சே, என்றேன் நான். அப்படீன்னா சரி, என்றாவாறு விசாரித்தவர் சென்று விட்டார்.


பின்னர் பல நாட்கள் அந்த சிந்தனை என்னை ஆக்கிரமித்திருந்தது. உண்மையில் வீட்டிலும் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கியிருந்தது. ஆனால் அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. பலவாறு அந்த யோசனை ஆக்கிரமித்ததில் சில நாட்கள் கழித்து ஒரு தெளிவு வந்தது.


ஆறு குடியிருப்புகளில், ஒன்று வியாபார ஸ்தலம். நான்கு குடியிருப்புகளில் குடும்ப தலைவர் இல்லை, நான்கின் உரிமையாளர்களும் விதவையர். அவர்களில் ஒருவரிடமிருந்துதான் நான் என் குடியிருப்பை வாங்கியிருந்தேன். ஆறாமவர் வீட்டில், மகன் வெளிநாடு சென்றவர் திரும்பியே பார்க்கவில்லை, அதற்காக அவரது குடியிருப்பு கடன் தவனை கட்ட இயலாமல் மூழ்குகிறது.


இதனை ஆராய்ந்தறிந்ததும் எனக்குள் ஒருவகையான பீதி கிளம்பியது. ஆத்ம நன்பர் ஒருவர். அவர் சோதிட சாஸ்திரத்தில் வல்லுனர். ஆனால் தொழில்முறை ஜோதிடர் அல்லர். எனக்கு அப்போது சோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. மனம் போல் மாங்கல்யம், முயற்சிக்கேற்ற உயர்வு என்ற சிந்தனையுடையவன் நான். இருப்பினும், மன கலக்கம் காரனமாக அவரிடம் மொத்த விஷயத்தையும் கலந்தாலோசித்தேன். ஒருநாள் நேரில் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றார்.


அது போல் ஒருநாள் வந்தார். வீட்டை பார்த்து விட்டு சில விஷயங்களை சொன்னார்.


நுழைவாயில் கதவு அக்கினி மூலையில் இருக்கிறது. அதனால் வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் கொதி நிலையில் இருப்பார்கள். அந்த கதவை ஈசானி மூலைக்கு மாற்றினால் நல்லது என்றார்.


அடுத்தது, கன்னி மூலை ஜன்னல் வைக்கப்பட்டு திறவியாக உள்ளது. அந்த ஜன்னலை அந்த அறையின் வாயு மூலையை ஒட்டி நகட்டி வைத்து, கன்னி மூலையில் காற்று புகாத அளவுக்கு சுவர் வைத்து விடுங்கள் என்றார். ஏன் அப்படி என்ற போது வேறு பேச்சு பேசி மழுப்பினார். அழுத்தமாக கேட்ட போது, கன்னி மூலை திறந்திருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு ஆகாது என்றார். அவர் சொன்னது உரைத்தது எனக்கு. முன் சொன்னபடி, அங்கு நான்கு வீடுகளுக்கு உரிமையாளர்கள் இல்லை. வாரிசுதாரர்கள்தான் இருந்தார்கள்.


நன்பருக்கு நன்றி சொல்லிவிட்டு, உருட்டி பிரட்டி, கடனை உடனை வாங்கி இந்த மாறுதல்களை செய்தோம். அதன்பின் எல்லாம் சுபம் எங்கள் வாழ்வில். அது அதனால்தானோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் அதனால்தான் என்று இன்று வரை ஆணித்தரமாக நம்புகிறேன்.


இந்த மிக முக்கியமான விஷயத்தை எடுத்து சொன்ன நன்பர் இப்போது இறைவனடி சேர்ந்து விட்டார். ஆனால் அவரது நினைவை இந்த மாற்றங்கள் நீங்காமல் மனதில் வைத்திருக்கிறது.


இது மேம்பாடு அல்ல. சிறு மாற்றம்தான். ஆனால் அதன்பின் நான் நல்ல நிறைவான மேம்பாடு அடைந்தேன்...

நன்றி 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com....நன்றி ....


கேள்வி : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய நிதியியல் கல்வி....என்ன என்று விளக்ககமாக கூறமுடியுமா  ?


என் பதில் : 


'சிறுகச் சேர்த்து பெருக வாழ்' என்பது பழமொழி. எனினும், சிறுகச் சேர்க்கும் போது கூட, பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்ய வேண்டியதும் முக்கியம். 

பரீட்சை மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய பள்ளிக் கல்வியில் இது போன்ற செயல்பாட்டு ரீதியிலான படிப்பினைகள் மிகவும் குறைவே. எனவே, குழந்தைகள் மற்றும் பணம் தொடர்பாக உங்களுடைய பெற்றோர்களின் கையேடு என்ன சொல்கிறது என்று பாருங்கள். இதன் மூலம் உங்களுடைய குழந்தைகள் பணத்தை எப்படி பொறுப்புடன் செலவு செய்யலாம் என்று உணரச் செய்யுங்கள்.

பணம் என்றால் என்ன??? குழந்தைகள் தாங்களாகவே தங்களுடைய வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் முன்னதாக அவர்கள் பணம் என்னவோ மரத்தில் காய்ப்பது போன்ற எண்ணத்தில் செலவு செய்து கொண்டிருப்பார்கள். எனவே, பணத்தை கையாளும் பொறுப்புகளில் குழந்தைகளை சிறு வயதிலேயே ஈடுபடுத்தி, நிதிக்கல்வியை அவர்களுக்கு சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் முதிர்ச்சி கூட்டல் அல்லது கழித்தல் என கணக்குகளைக் கற்றுக் கொள்ளும் முன்னரே குழந்தைகள் பணத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். 4-வயதான குழந்தைக்கு கூட தன்னுடைய தந்தை பணத்தை ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து எடுக்கிறார் என்று தெரியும். எனினும், பெற்றோர்கள் உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் புரிந்து கொள்ள, சற்றே முதிர்ச்சியான மனம் வேண்டும் மற்றும் அதன் பின்னர் தான் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டின் நுணுக்ககங்கள் தெரியத் துவங்கும். எடுத்துக்காட்டாக, தன்னுடைய தந்தை வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார் என்று தெரிந்து கொண்ட குழந்தை அவரைப் பார்த்து, 'இன்று வேலை எப்படி இருந்தது? என்று கேட்பார். 'நன்றாக இருந்தது', என்று தந்தை பதிலளிப்பார். உடனே குழந்தை 'நீங்கள் அதற்கு பணம் பெற்றீர்களா?' என்று கேட்க்கும் குழந்தைகள் உண்டு.

சேமிப்பு மனநிறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பணத்தைக் கொண்டு பொம்மைகள், மிட்டாய் போன்றவற்றை வாங்க முடியும் என்று குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது தங்கள் கையில் கிடைக்கும் ஒவ்வொரு காசையும் சேமித்து வைத்துக் கொள்ள அவர்கள் நினைப்பார்கள். இந்த ஊக்கம் தான் குழந்தையை சரியான நிதி மேலாளராக வழிநடத்தி, இளைஞனாக கொண்டு வரும்.

இன்றைய விதை, நாளைய கனி குழந்தைக்கு நிதி தொடர்பான விழிப்புணர்வை இளம் வயதிலேயே கொடுக்கத் தொடங்குவது முக்கியமானதாகும். ஏனெனில், டீன்-ஏஜ் சிறுவர்/சிறுமிகள் இத்தகைய ஆலோசனைகளுக்கு அவ்வளவாக செவி கொடுப்பதில்லை. மேலும், பணத்தை செலவிடுவதில் உள்ள வழிகளிலே அவர்கள் பிஸியாக இருப்பார்கள்.

ஊக்கத் தொகையின் அருமை குழந்தைகளாக இருக்கும் போது சிறிய அளவிலான பணத்தை அவர்களிடம் கொடுத்து தினசரி செலவுகளை செய்யச் சொல்லுவது நல்லது. மேலும் செலவிற்கான கணக்கை அவர்களிடம் பெரியவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் நம்மை ஒரு கண்காணிக்கிறார் என குழந்தைகள் உஷாராக இருப்பார்கள். குழந்தைகள் வளரும் காலத்தில் பெரிய அளவிலான செலவுகளை சுயமாக செய்ய இந்த அனுபவம் உதவும்.

டீன்-ஏஜ் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகள் கணக்குகள், கிரெடிட் அட்டைகள் மற்றும் கடன்களை பரிசோதித்தல் ஆகியவை கல்லூரி செல்பவர்களுக்கான ஆரம்ப கட்ட நிதி செயற்கல்வியாக இருக்கும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வங்கி மற்றும் கடன் தொடர்பான விஷயங்களைப் பற்றி சொல்லித் தருவதன் மூலம், அவர்களுக்கு பணத்தை குறித்து ஒரு சிறந்த அறிவை அவர்கள் மனதில் புகுத்துகிறோம்.

முதலீட்டைப் பற்றியும் இளமையில் கற்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சந்தைகள் மற்றும் உண்மையான பணத்தைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி அந்த வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் இவர்கள் சிறுவையது முதலே பணத்தின் அருமையை உணர்ந்து வாழ்கையை சிற்ந்த முறையில் நடத்துவர்.

நன்றி .....

Sivakumar.V.K


Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com....நன்றி ...

திங்கள், 21 ஜூன், 2021

 கேள்வி : பப்ஜி மதன் சிறுவர்களிடம் எப்படி பணம் பறித்ததாக சொல்கிறார்கள், அது பற்றி விளக்கினால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போம் அல்லவா?


என் பதில் :..நம்ம சொன்ன யாருங்க கேக்கறாங்க.....


இன்றைய நிலையில்.. ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தவறாக பயன்படுத்துவதால் தான் சிறுவர் சிறுமிகள் பப்ஜி மதன் போன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து பணத்தை இழந்து விடுவது அதிகமாகி உள்ளது..


பப்ஜி மட்டும் அல்ல.. ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளிலும்.. இப்படி பணத்தை இழப்பது அதிகமாக உள்ளது..


பதின்ம வயதினர் மட்டும் அல்ல..


ஓய்வுபெற்ற வயதில் உள்ளவர்கள் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் நிறைய பணத்தை இழந்து விடுகிறார்கள்..


என் பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற மூத்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர்.. அவர்கள் மகன் வெளிநாட்டில் இருக்கிறார்..


அந்த பெரியவர்.. சூதாட்ட பேர்வழி.. அடிக்கடி பழைய நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருந்தவர்..


இந்த லாக்டவுன் நேரத்தில்.. ஆன்லைன் ரம்மி விளையாடி.. லட்ச ரூபாய் க்கு மேல் தொலைத்து விட்டார்.. மனைவி என்ன சொன்னாலும் கேட்பது இல்லை..


பேங்க் பேலன்ஸ்.. ஏகத்திற்கும் குறைந்து இருப்பதை பார்த்த மகன்.. வெளிநாட்டில் இருந்து தந்தையை குறுக்கு விசாரணை செய்து உண்மையை அறிந்து இருக்கிறார்


அவர் மனைவிக்கு.. இது போன்ற விளையாட்டுகளில் பணம் இழப்பதைப் பற்றிய புரிதல் இல்லை.. இருவரும் எழுபது வயதை தாண்டியவர்கள்.


அந்த பெரியவர்.. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வேறு.. சிலர் இந்த பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி செய்து கொள்ளும் அவலமும் நடக்கிறது..


பெரியவர்களே இப்படி இருக்கும் போது பதின்ம வயது பிள்ளைகளை நாம் அதிகம் கண்காணிப்பு செய்ய வேண்டும்..


GOOGLE PAY. . BHIM.. PAYTM.. PHONE PE மற்றும் net banking போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை கணக்குகளை தினமும் கவனியுங்கள்.


உங்களது.. டெபிட் கார்டை பிள்ளைகள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வும்..


ஒரு பதினைந்து வயது சிறுவன்.. தனது தந்தையின் டெபிட் கார்டு மற்றும் PIN NUMBER ஐ அறிந்து கொண்டு… இந்த மதன் போன்ற ஏதோவொரு குற்றவாளியிடம் பணத்தை இழந்ததை அவன் பெற்றோர் சொல்லி தெரிந்து கொண்டேன்..


இது எல்லாவற்றையும் விட பெரிய அளவில் நடக்கும் குற்றம்.. ஆபாச படங்கள் மற்றும் மெசேஜ் களை வைத்து… சிறுவர் சிறுமிகளை பயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் இந்த மதன் போன்ற சைபர் கிரிமினல் கள்..


பலகாலமாக.. இணையத்தில் போலி ஐடிக்கள் மூலமாக இருபாலரும் ஒருவரை ஒருவர் முகம் தெரியாத காதல் என்ற பெயரில் ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.


முதலில்.. கல்லூரி மாணவ மாணவிகளை காதல் என்று முகநூலில் வலைவீசி கொண்டு இருந்தவர்களுக்கு பல்வேறு வகையான வழிகள் கிடைத்துவிட்டது..


ஒரு வடக்கன் செல்ஃபி என்ற மலையாள சினிமாவில்.. இதை காண்பித்திருப்பர்.


பிள்ளைகளிடம்.. மனம் விட்டு பேசுவது ஒன்றே.. இது போன்ற குற்றச்செயல்களை தடுக்கும் நல்ல முயற்சி யாக இருக்கும் ..

நன்றி ....


கேள்வியும்,நானே  ......பதிலும்,நானே !     


ஆண்களுக்கு நாற்பதாவது வயதில் நாய்க் குணம் வரும் என்பது சரியா    ?.......தப்போ தப்பு   !


 ஒரு ஆண் தன் 25 வது வயதிலிருந்து 30 வயதுக்குள் திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு கணவனாகி வாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.35 வயதுக்குள் இரண்டுகுழந்தைகளுக்கு அப்பாவாகிறான்.அவன் தன்னுடைய  நாற்பதாவது வயதைத் தொடும்போது குழந்தைகளுக்கு பத்து வயது நிரம்பியிருக்கும்.முதல் குழந்தை பெண் குழந்தையாய் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு அடிமனதில் ஒரு பயம் தோன்றும்.


பெண் இன்னும் இரண்டு வருடத்தில் வயதுக்கு வந்துவிடுவாள்.அடுத்த சில வருடங்களுக்குள் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் காரணமாக அவனுக்குள் ஒரு பொறுப்பும்,நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும் முதல்குழந்தை ஆணாக இருந்தால் நன்றாக படிக்க வைக்கவேண்டுமே என்கிற கவலையும் எழும்..எது நல்லது  எது கெட்டது என்று எண்ணிப் பார்க்கின்ற நியாமான குணங்கள் தோன்றுவது என்பது ஒருஆணின் நாற்பதாவது வயதில்தான்.இந்த நியாய குணம் என்பது நமது பாமர மக்களின் உபயத்தால் நாய் குணமாக மாறிவிட்டது 

ஞாயிறு, 20 ஜூன், 2021

 தந்தையர் தினம் ,,,,,

இன்று அப்பா தினமாம்

தினங்களுக்குள் அடக்கப்படுபவரா அப்பா?
ஜூன் அப்பாவின் அரவணைப்பு... தினம் !!!!!!-
குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு ! .........(ஷ்யாம் அப்பா ....)..........
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை
சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.
அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.
படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.
அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.
அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.
படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
முதல் 5 ஆண்டுகளுக்கு உங் கள் குழந்தைகளை அன்பு டன் நடத்துங்கள்.
அதன் பிறகு கனிவாக கண்டியுங்கள், 16 வயது ஆகி விட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.....
எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் .....அப்பா -மகன் பிணைப்பு ...சில நல்ல உள்ளங்களுக்கு எங்கே தெரியப்போகிறது...அப்பாவின் அருமை ..
ஷ்யாம் அப்பா ....ஷ்யாம் சுதிர் சிவகுமார் ...👍💐💐💐💐🌿🌿🌿🌿

வியாழன், 17 ஜூன், 2021

 ‘பூங்கதவே, தாழ் திறவாய்!’.........

‘நிழல்கள்’ படத்தில் எல்லாப் பாடல்களுமே அற்புதமானவைதாம். ஆனால் இந்தப் பாட்டுக்கு ஒரு விசேஷம், இதில் மெட்டைவிட இசை ஒரு படி மேலே நிற்கும். அதாவது, சுமார் 250 விநாடிகள் ஒலிக்கும் பாடலில் பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என பாடகர்கள் பாடுகிற நேரம் பாதிக்கும் குறைவு, அதிலும் சரணம் மிக மிகச் சிறிது, ஐந்தே வரிகள்தாம், மீதி நேரத்தையெல்லாம் வாத்திய இசை நிரப்பியிருக்கிறது.

அதிலும் ராஜா ஒரு விசேஷம் செய்திருப்பார். இந்தப் பாடல் முழுவதும் இரண்டு இசைக் கருவிகள் இணைந்து டூயட் பாடுவதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கும். வயலின், வீணை, அப்புறம் வீணை, புல்லாங்குழல், அப்புறம் நாதஸ்வரமும் வயலினும், அப்புறம் வயலினும் மணியோசையும் என்று ஜோடி ஜோடியாக ராணுவ அணிவகுப்புபோல் நிறுத்திவைத்திருப்பார். ஆனால் மொத்தமாகக் கேட்கும்போது ஏகப்பட்ட கருவிகள் ஒரே நேரத்தில் இணைந்து இசைத்த ஒரு Rich Orchestration தருகிற திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும்.

பாடலின் தொடக்கம் மழை நாளை நினைவுபடுத்துகிறது. பலமான சூறைக் காற்றில் தொடங்கிப் பல திசைகளில் இருந்து மெல்லச் சுழன்று சுழன்று வலுப்பெற்றுக்கொண்டு கடைசியில் மின்னல், இடி, பெரு மழையாகப் பொழியும்.

’ஆல்பம்’ என்ற படத்தில் ‘காதல் வானொலி’ என்று எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு பாடல் உண்டு. அதில் நா. முத்துக்குமார் எழுதிய ஒரு வரி:

மழை நின்று போனாலும், மரக்கிளை தூறுதே

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் உணர்வு ‘பூங்கதவே’யின் ஆரம்ப இசையிலும் உண்டு – பிரமாண்டமான பெருமழைக்கான ஒலி முடிந்த மறுவிநாடி, மழை நின்றபின் மரங்களிலிருந்து சொட்டும் நீர்த்துளியின் தூறல்போல மென்மையான ஒரு சின்ன வீணை ஒலி,  அதோடு சேர்ந்து டூயட் பாடும் புல்லாங்குழல், பின்னர் நைஸாகப் புல்லாங்குழலைப் பின்னே தள்ளிவிட்டு வயலினோடு சேர்ந்துகொள்ளும் வீணை… கடைசியாகப் பாடகரின் (தீபன் சக்கரவர்த்தி) குரல் ஒலிக்கும்போது, இதற்கே முக்கால் நிமிஷம் தீர்ந்துவிட்டது!


இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், பாடகர் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன், அதுவரை அதகளம் பண்ணிக்கொண்டிருந்த இசைக் கருவிகள் காணாமல் போய்விடுகின்றன. பின்னணியில் பெரும்பாலும் தாளம்மட்டும்தான். இதை நாம் உணர்வதற்குள் (முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிடுகிறது. மீண்டும் இசையின் ஆட்சி.

இந்த இடையிசையும் சரியாக முக்கால் நிமிடத்துக்கு நீடிக்கிறது. கல்யாண நாதஸ்வரமும் மேளமும் சேர்ந்து பாரம்பரியமான கெட்டிமேளத்தில் முடிய, அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மெட்டில் பெண் குரல் (உமா ரமணன்) அறிமுகமாகிறது.

சாதாரணமாக இதுபோன்ற ஓர் இசையையும் மெட்டையும் வித்தியாசம் தெரியாமல் தைப்பது மிகவும் சிரமம். கொஞ்சம் அசந்தாலும் இரண்டும் தனித்தனியே உறுத்திக்கொண்டு நிற்கும்.

ராஜா இந்த விஷயத்தில் பெரிய கில்லாடி. உதாரணமாக, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாடலின் முன்னிசையைக் கேளுங்கள், அந்த இசை முடியப்போகும் நேரம், பல்லவியின் முதல் வரி ஒலிக்கவேண்டும், ஆனால் இசைக்கும் அந்த வரிக்கும் பொருந்தாதே என்று நமக்குத் தோன்றும், சரியாகக் கடைசி விநாடிகளில் ஒரு சின்ன மணி ஒலியைச் சேர்த்து அதை அட்டகாசமாகப் பல்லவியில் பொருத்திவிடுவார் ராஜா.

ஆனால் இந்தப் பாடலில் அதுபோன்ற ஜிம்மிக்ஸுக்கெல்லாம் அவசியமே ஏற்படவில்லை. திருமணத்தின் Climax ஆகிய கெட்டிமேள ஒலியை அப்படியே நிறுத்திவிட்டு அரை விநாடி அமைதிக்குப்பிறகுதான் ‘நீரோட்டம்’ என்று சரணத்தைத் தொடங்குகிறார் ராஜா. அடுத்த காட்சி என்ன (முதலிரவு? ஹனிமூன்?) என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.

சரணத்தில் இன்னொரு விசேஷம், மெட்டு நின்று திரும்புகிற எல்லா வார்த்தைகளும் ‘ம்’ என முடியும் : நீரோட்டம், போலோடும், ஊர்கோலம், ஆனந்தம், பூவாரம், தெய்வம், வாழ்த்தும், ராகம், திருத்தேகம், எனக்காகும், உள்ளம், பொன்னாரம், பூவாழை (இது ஒன்றுமட்டும் odd man out), ஆடும், தோரணம், எங்கெங்கும், சூடும், அந்நேரம், கீதம், இந்த ஒவ்வொரு ‘ம்’க்கும் மெட்டு எப்படி வளைந்து நெளிந்து குழைந்து ஓடுகிறது என்று கேட்டால்தான் புரியும்.

இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவராக விரும்பி இத்தனை ‘ம்’களைப் போட்டாரா, அல்லது ராஜாவின் ஐடியாவா என்பதும் தெரியவில்லை, ஆனால் பாடல் வரிகளில் இத்தனை ‘ம்’ இருப்பதால் ராஜா அந்த ‘ம்ம்ம்ம்ம்ம்’மையே ஒரு தனித்துவமான கோரஸாக மாற்றிக்கோண்டிருக்கிறார், உண்மையில் இந்தப் பாடலை அழகாக முடித்துவைப்பதும் அந்த ‘ம்ம்ம்ம்ம்’கள்தான்.

‘ம்’களில்மட்டுமில்லை, இந்தப் பாடலின் சரணம்முழுவதுமே ஏகப்பட்ட twists and turns. உதாரணமாக முதல் சரணத்தில் இங்கே ஒற்றை மேற்கோள்குறி உள்ள இடங்களையெல்லாம் கவனித்துக் கேளுங்கள், பாடல் வரிகளையும் தாண்டிய ஒரு நீட்சியும் நடுக்கமும் தெரியும், அது கவனமாக யோசித்துச் செய்யப்பட்டதாகதான் இருக்கவேண்டும்: நீ’ரோட்டம், ஆ’சைக் கனவுகள், ஊ’ர்கோலம், ஆ’னந்தம், பூ’பா’ரம், கா’தல், கா’தலில், ஊ’றிய.

ஐந்தே வரிகளில் (மீண்டும் முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிட, எட்டே விநாடிகளில் பல்லவியைச் சுருக்கமாகத் தொட்டுவிட்டு வாத்திய இசைக்குப் போய்விடுகிறார் ராஜா. மீண்டும் சுமார் முக்கால் நிமிடத்துக்கு இன்னொரு விஸ்தாரமான இடையிசை. அதைத் தொடர்ந்து மழைத் தண்ணீரினால் தோன்றிய சிற்றோடைபோல் வளைந்து நெளிந்து ஓடும் சரணம்.

இந்தப் பாடல் தருகிற அனுபவத்தை எத்தனை விளக்கமாக எழுதினாலும் போதாது, கேட்கத்தான் வேண்டும், இதுமாதிரி நேரங்களில்தான் இசையின்முன்னால் மொழி எப்பேர்ப்பட்ட ஏழை என்பது புரியும்.

இத்தனை அழகான பாட்டுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு இல்லாமல் எப்படி? அதுவும் உண்டு : பாடலின் முதல் வரி ‘பூங்கதவே, தாழ் திறவாய்’. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இருவருமே பிடிவாதமாகத் திரும்பத் திரும்பத் ‘தாள் திறவாய்’ என்றுதான் பாடுகிறார்கள். ஏனோ ராஜா இதைக் கவனித்துத் திருத்தாமல் விட்டுவிட்டார்.

‘தாழ்’ என்பது ‘தாழ்ப்பாள்’ என்பதன் சுருக்கம். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்று திருக்குறளில் வரும்.

‘தாள்’ என்றால் பாதம். நாம் பாதத்தால் தட்டுவதால்தான் ‘தாளம்’ என்று பெயர் வந்தது எனச் சொல்வார்கள். ‘தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்’ என்று குழந்தைக் கண்ணனைப் பாடுவார் பெரியாழ்வார். அதாவது, பாதத்தை நீட்டிச் சக்கரத்தை உதைத்து அசுரர்களைக் கொன்றானாம்!

ஆக, இந்தப் பாடலில் ‘தாழ் திறவாய்’ என்பதுதான் சரி. யாரிடமாவது ‘தாள் திறவாய்’ என்று கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள், அதற்கு விவகாரமான அர்த்தம் Smile

https://youtu.be/rWqWrC78QCM



 மழை

In: Ilayaraja | Music | Rain | Tamil |

சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் போய்விட்ட எம்பி3 ப்ளேயரை மூக்கணாங்கயிறு போட்டுப் பின்னால் இழுத்து முந்தைய பாட்டை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்போம். நேரம் ஓடுவதும் தெரியாது, செய்யவேண்டிய வேலைகளும் மறந்துபோய்விடும்.

போனவாரம் அப்படி ஒரு பாட்டில் மாட்டிக்கொண்டேன் : ‘அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே’ (http://www.youtube.com/watch?v=errR7iLYuuU).

 கேள்வி :  ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?


என் பதில் : 


குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறோம் என்றாள் அதிலே நாம் ஒருவர் தான் சம்பாதிக்கிறோம் என்றால். சிக்கனமாக செலவு செய்தாலும் குறைந்தது மாதம் பத்தாயிரம் ரூபாய் வேண்டும். கொஞ்சம் நல்லபடியாக சாப்பிட வேண்டும் என்றால் 12000 ரூபாய் வேண்டும். (என்னைப் பொருத்தவரை எனக்கு எட்டாயிரம் ரூபாய் போதும்)


நிலைமை இப்படி இருக்க ஒரு சராசரி மனிதன் நமக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறதோ, அந்த அளவுக்கு உழைக்க வேண்டும். அல்லது பணம் வருகிற வழியை தேட வேண்டும். என்று நினைப்பது இல்லை. 


தனக்கு வருகிறவருமானம் போதிய செலவுக்கு பத்தாது என்பது தெரிந்தும்.. ஒரே வேலையிலேயே முப்பது வருடம் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு மாதமும் செலவுபற்றாக்குறைக்கு, கடன்களை வாங்கிக் கொண்டும். தன்னைச் சேர்ந்தவர்களிடம் கையேந்திக் கொண்டும். காலத்தை கழிப்பார்.


ஒரு குடும்பத்தலைவனுடைய இந்த நிலைமையை கண்டு.. தனது மனைவியும் பிள்ளைகளும் சமூகத்தின் மத்தியில் எந்த அளவு கூனிக்குறுகி நிற்கிறார்கள்? _அவர்களுக்கு உரிய கௌரவம் எப்படி தேடித்தர வேண்டும்? என்பதை துளியளவு கூடநினைத்துப் பார்ப்பது இல்லை.


தன்னுடைய சிந்தனையற்ற செயல்பாட்டினாள்.. தன் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை என்பது_ இவனுக்கும் கீழாக சரிந்து வருவதை உணர்வது இல்லை. உன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப சமம் உடைய நட்பும் சுற்றமும் தான் உன்னை சூழ்ந்து இருக்குமே தவிர.. உன்னைவிட திறமையிலோ, படிப்பிலோ, செல்வாக்கிலோ நிறைந்தவர்களை.. ஒருவித தயக்கம் காரணமாக, தாழ்வு மனப்பான்மை காரணமாக, நீயும் நெருங்க தயங்கி.. அவர்களும் உன்னிடம் நட்புக்கு அழைக்காமல்.. உலக நடைமுறை வாழ்க்கையின்.. எதார்த்தங்களோ, முன்னேறுவதற்கான இலகுவான வழிவகைகளோ.. எதுவுமே தெரியாமல்.. கூலித் தொழிலாளியாகவே கடைசி வரை வாழ்ந்து. உனக்கு அடுத்து இன்னொரு கூலி தொழிலாளியாக உலகத்துக்கு உன் பிள்ளைகளை விட்டுவிட்டு.. சளியும் இருமலுமாய்.. வீட்டிற்குள் ஒரு மூலையில் முடங்கிப் போகிறாய்…?


அல்லது இடையில் தப்பான யோசனைகளை யாராவது சொன்னால் அதைக்கேட்டு_தப்பான பாதையில் தடுமாறி.. சக மனிதர்களுக்கும் அந்நியப்பட்டவணை.. வேறு எங்கோ முடங்கிப் போகிறாய்? இதெல்லாம் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் தானே!


நன்றாக சம்பாதிப்பவர்களை கவனிக்கணும். அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். என்பதை தெரிஞ்சிக்கனும். நாலு நல்ல மனிதர்களோடு நல்லா பழகனும். இன்னும் நாலு நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கணும். அல்லது கத்துக்கணும். 


*நரம்பு வெடித்து வெளியில் தெறிக்கும் அளவு.. உடம்பில் ரத்தம் சூடேறி கொதிக்கும் அளவு.*. உழைக்கனும். 


அதுவும் கருத்தோடு, சாதுரியத்தோடு, திறமையாக உழைக்கணும்.நம்மை ஏமாற்றி இன்னொருவன் பிழைப்பதற்காக அல்ல.. நம்முடைய குடும்பம் உயர்வதற்காக என்ற எண்ணத்தோடு உழைக்கணும். (அதுவரை எனக்கு என்று எந்த ஆசாபாசமும் அறவே இருக்கக்கூடாது) என்று நினைக்கனும்.


இப்படி அல்லாமல்.. ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்.. வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். என்பதே அர்த்தம். 


நன்றி.



கேள்வி :  பெரும்பாலான இளைஞர்கள் தவறாகப் புரிந்துகொள்ளும் விஷயங்கள் என்னென்ன?


என் பதில் : 


பெட்டி நிறைய பணம் இருந்தால் அதை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம்.. என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


அந்தப் பெட்டி நிறைய பணம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? 

எப்படி இருக்க வேண்டும்? 

எதை சேர வேண்டும்? என்பது புரிந்து கொள்வது இல்லை.


நிறைய எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், வைத்திருக்கிறார்கள்?


குடும்பத்தினர் நம்மை எண்ணி வைத்துள்ள எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என்ன என்பது புரிந்து கொள்வது இல்லை.


தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.


பெண் கேட்டு செல்கிற இடத்தில்.. எந்தத் தகுதியை கேட்கிறார்கள்? என்பது புரிந்து கொள்வது இல்லை.


தாயை தந்தையை மிகவும் நேசிக்கிறார்கள். மதிக்கிறார்கள்.


இவர்களுக்கு செய்யவேண்டிய கைமாறு என்ன? என்பது புரிந்து கொள்வது இல்லை.


திரைப்படத்தின் கதாநாயகனின் பர்சனாலிட்டி தெரிந்து இருக்கிறார்கள்.


தன்னுடைய பர்சனாலிட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது புரிந்து கொள்வதில்லை.


தன்னுடைய எதிர்காலத்தை, ஆசைகளை, கனவு காண்கிறார்கள்.


மற்றவர்களுடைய எதிர்காலத்தை, ஆசைகளை.. எந்த அளவுக்கு தன்னால் நிறைவேற்றித் தர முடியும்? அதில் தன் பங்கு என்ன? அதற்காக..உபயோகமான சிந்தனை. உபயோகமான செயல். உபயோகமான முயற்ச்சி. என்ன? என்பது புரிந்து கொள்வது இல்லை.


பெத்த வயிறும், வளர்த்த நெஞ்சும்,நித்தம் நித்தம் இவர்களை எண்ணி பரித விக்கின்ற போதும், இவர் வருந்துவதில்லை.சம்பளத்தில் அட்வான்ஸ் வாங்கி.. மகனுக்காக அப்பா புரோட்டா வாங்கி வந்தால்.. என்னா ஆம்லெட் வாங்கலையா? என்று கேட்பார். பக்கத்துக் கடையில் கடனுக்கு அரிசி வாங்கி அம்மா புளிக்குழம்பு வைத்தாள்.. ஏம்மா என்னை கொல்லுற என்பார்.


பலர் அல்ல சில இளைஞர்கள். வாழ்க்கையை தவறாக வாழ்ந்து.. புரிதல்கள் இல்லாத புதிர்களாக இருக்கின்ற போது. சாக்கிரட்டீஸ் பற்றியும், தினேஷ் மல்கோத்ராவை பற்றியும், அறிந்துதான் என்ன பயன்.


வாழ்க வளர்க . அனைவருக்கும் நன்றி.


புதன், 16 ஜூன், 2021

கேள்வி : தற்போது முதலீடு செய்ய சிறந்த கிரிப்டோகரன்சி (Cryptocurrency) எவை?


என் பதில் : 


இது ஒரு நிதி ஆலோசனை அல்ல.


2010 ஆம் ஆண்டு பிட்காயின் வாங்குவது குறித்து நானும் எனது நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டது. அப்போது கிரிப்டோகரன்சி என்றால் என்னவென்று கூட தெரியாது. அது குறித்து அறிய முயன்ற போது பெரிதாய்ப் புரியவில்லை என்றாலும், decentralization கொள்கை பிடித்திருந்தது. அப்போது பிட்காயின் விலை சந்தையில் கத்திரிக்காய் வாங்கும் விலையை விடக் குறைவுதான். ஒரு 4 கிலோ வாங்கி இருக்கலாம். எப்படி வாங்குவது, அந்நிய செலாவணி, இந்தியாவில் கிரிப்டோ ஒருவேளை தடை செய்யப்பட்டால் என்று அந்த காசு முழுவதற்கும் கத்திரிக்காய் வாங்கி பொரிச்சாவது சாப்பிடலாம் என்று பொங்கித் தின்று விட்டோம். நமக்குச் சோறுதானே முக்கியம். இன்றைக்குக் கிட்டத்தட்ட 2.87 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பு படி - 200900000/-). கொஞ்சம் காஸ்டலியான கத்திரிக்காய் பொரியல்.


சரி அதுக்குப் பின்னாலாவது கொஞ்சம் சுதாரித்து வாங்கி இருக்கலாம். அதுக்குள்ள பிட்காயின் விலை $1000 தாண்டிப் போய் விட்டது. அவ்ளோ காசுக்கு நான் எங்க போவேன்னு அப்டியே விட்டுட்டேன்.


2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் பிட்காயின் விலை $50000/- தாண்டியது. சரி எப்போவோ விட்ட ப்ராஜக்டை கொஞ்சம் தூசி தட்டுவோம் என்று கொஞ்சம் கிரிப்டோ ஆராய்ச்சியில் இறங்கினேன். நிறைய வாசித்து கொஞ்சூண்டு தெரிந்து கொண்டேன். சில்லறை விலையிலும் கிரிப்டோ வாங்கலாம் என்று தெரிந்து கொண்டது பேரதிர்ச்சி. அதாவது ஒரு பிட்காயினின் விலை $50000/- என்றால் நீங்கள் $100 கொடுத்து அதற்கான பிட்காயினை வாங்கிக்கொள்ளலாம். (மளிகை கடையில் நாம் வாங்கும் ரூ. 30/- க்கு முந்திரி போல. நாளைக்கு வெண் பொங்கல் பண்ணனும்). இத்தனை நாளாய் இது தெரியாது போச்சே என்று நினைத்துக்கொண்டு மேலும் ஆராய்ச்சியில் இறங்கினால் பல்லாயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சி சந்தையில் இருப்பது தெரியவந்தது. கத்திரிக்காயில் இந்தியாவில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு.


சரி இதை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று வாசித்து அறிந்து கொண்டது. ஒவ்வொரு காயினின் அடிப்படையும் அந்த காயினை உருவாக்கும் நிறுவனத்தின் தொழில் சார்ந்தது. தற்போது இருக்கும் பல்வேறு வகையான வணிகமும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் மேலும் பாதுகாப்பாகவும் (?), decentralized ஆகவும் செயல்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட பல நிறுவனங்களில் நான் தேர்ந்தெடுத்த சில கிரிப்டோ கரன்சிகள் கீழே. கிரிப்டோ கரன்சிகளின் விலை நாள்தோறும் மிக வேகமாக மேலும் கீழும் போகும். ஆகவே இது தினசரி டிரேடிங் செய்ய உகந்ததல்ல. ஒரு 10 வருடத்திற்கு (குறைந்தது 3) சேமிக்க நினைத்துச் சேர்க்கலாம். அதிலும் ஒரு சில நாணய மதிப்பு மட்டும் உயரும் வாய்ப்புள்ளது. சில மாதங்களிலும் உயரலாம். ஆகவே ஒரு மிகச் சிறிய சேமிக்க இயன்ற பணத்தை மட்டும் (கிணற்றில் போடுவதாய் நினைத்து) கிரிப்டோவில் போட்டால் மண்டை பத்திரமாக இருக்கும்.


1. Bitcoin - கிரிப்டோ உலகின் ராஜா. இதன் விலை 1 மில்லியன் டாலர் அளவிற்கு உயரும் என்று கூறுகிறார்கள். தற்போது ஒரு பிட்காயின் இந்திய ரூபாய் மதிப்பின் படி - 4061001.76/- .


2. Ethereum - நம்ம சந்தையில் தங்கத்திற்கு ஒரு வெள்ளி மாதிரி கிரிப்டோவில் பிட்காயின் தங்கச்சி. வேகமாக மதிப்பு உயர்ந்து வரும் இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 283821.55/-


3. XRP - ரிப்பில் என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த நாணயம் கிரிப்டோ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்பட்டது. இந்த நிறுவனத்தின் மீது US SEC (US Security Exchange Commission) ஒரு வழக்கு தொடுத்தது (வழக்கு என்னன்னு நமக்கு தேவை இல்லாத ஒன்று. அவங்க ஊரு வாய்க்கா தகராறு). வழக்கு காரணமாக இந்த நாணயத்தின் விலை பல மாதங்களாக உயரவே இல்லை. தற்போது இந்த வழக்கில் SEC வாய்தா மேல வாய்தா கேட்டு இழுத்து அடித்துக் கொண்டிருக்கும் போதும் இதன் விலை சற்றே மேலே சென்றது. இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 103.23/-


4.Binance coin - மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த நாணயம் 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நிறுவப்பட்டது. Ethereum ப்ளாக்சைன் வடிவமைப்பில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அதிகம்.அதைக் குறைக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. தற்போதைய கிரிப்டோ சந்தை மதிப்பின் படி உலகின் 3வது சந்தை மூலதனம் உள்ள நிறுவனம். இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 47185.88/-


5.Tron - இணையத்தில் இருக்கும் Netflix, Amazon prime போன்ற OTT தளத்தை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கொண்டுவர நினைக்கும் நிறுவனம். இதன் மூலம் குறைந்த செலவில் பல உள்ளடக்கங்களை உருவாக்கி மிகக்குறைந்த சந்தாவில் மக்களுக்கு வழங்க இயலும். இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 9.29/-


6. Cardano - நிறுவனங்கள் மிகப்பெரிய project செய்யும் பொழுது ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். அந்த ஒப்பந்தங்களை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கொண்டுவர நினைக்கும் நிறுவனம். மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பம். இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி 120.07/-


7. Dogecoin - இது ஒரு meme கிரிப்டோவாக நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு நாணயம். இது உண்மையில் இது வரை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதை உருவாக்கியவர் இதன் வளர்ச்சி குறித்து தற்போது வரை ஆச்சரியத்தில் உள்ளார். இந்த நாணயத்தின் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 33.95/-


இவை தவிர்த்து sushi, bake, cake, banana, vechain, btt, stellar, matic, shibu, chia, safemoon, ravencoin எனப் பல்லாயிரக்கணக்கான நாணயங்கள் உள்ளன. நீங்கள் எதை வாங்கினாலும் அது குறித்து வாசித்து நன்கு அறிந்து பின்னர் வாங்குங்கள்.


இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி தடை செய்யவிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்திய அரசின் நிலையை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் முதலீடு செய்யுங்கள்.


இது ஒரு நிதி ஆலோசனை அல்ல.


நன்றி ....

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 15 ஜூன், 2021


 கே .கே .சண்முகம்..(85)பழனி ..

(அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்-ஓய்வு பணியாளர்  ) 


இன்று இறப்பு நிகழ்வு ..வயது மூப்பின் காரணமாக ..பழனி வரை சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது...எனது அக்காவின் கணவர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்களின்  அப்பா என்பதாலும் .எங்கள் முதல் சம்பந்தி என்பதாலும் ..அவருக்கு செய்யவேண்டிய ..சடங்குகள் செய்து வழியனுப்பியது மரியாதையாகவும் அஞ்சலியாகவும் அமைந்தது .என் அப்பாவுடன் ..விசேஷ நிகழ்ச்சிகள் ..எங்கள் சொந்தங்களிலும் அவர்களின் சொந்தங்களிலும் கண்டிப்பாக கலந்துகொண்டு .இனிய நிகழ்ச்சிகளை பேசி மகிழ்வுடன் செல்வர் ..என் தந்தையின் இறப்பு நிகழ்வில் உங்கள் அப்பா அருமையான நண்பராக ,அருமையான தந்தையாக பொறுமை ,சகிப்புத்தன்மை ..எப்பொழுதும் நான் வரும்பொழுது சிரித்த முகத்துடன் வரவேற்பார்.என்னிடம் சொன்னது பசுமையான நினைவுகளாக இருக்கிறது ..எனது தந்தைக்கு தன் இறுதி ஆத்மார்த்தமாக அஞ்சலியை செலுத்தி சென்றார் . 


நான் சிறு வயதில் விவரம் தெரிந்து மாதம் தவறாமல் கார்த்திகை தினத்தன்று பழனி சென்று முருகனை நீண்ட நேரம் நின்று வரிசையில் தரிசனம் செய்வது என்னுடைய வழக்கமாக இருந்தது ..எனது திருமணம்  2004 வருடம் நடந்தது .அன்று முருகனை தரிசிப்பதற்கு என் மனைவியுடன் சென்றபோது முருகனை அருகில் நின்று தரிசிப்பதற்கு எனக்கு மிகவும் உதவினார் ..இந்த நிகழ்வு வாழ்வில் என்றும் மறக்க முடியாது ..இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நின்றபோது என் மனதில் முருகனின் தரிசனம் தான் வந்துபோனது ...நமது சொந்தங்கள் யார் வந்தாலும் அவர் பணியில் இருந்தால் ,சிறப்பு தரிசனம் செய்ய அழைத்துச்செல்வார் ,


அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அவரின் பேரப்பிள்ளைகள் பூக்கூடை எடுத்து ,தீபம் ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவர் வாழந்த வாழ்வுக்கு அர்த்தம் உள்ளதாக இருந்தது ..


அவரின் இறுதி அஞ்சலிக்கு கோவையில் இருந்து சொந்தங்களும் ,பொள்ளாச்சி யில் இருந்து வேதா அக்ரி பார்ம்ஸ் வேதா மேடம் ,தம்பி அரவிந்த் அவர்களும் வந்து இறுதிஅஞ்சலி செலுத்தினர் ..பெரியகோட்டை முன்னாள் கவுன்சிலர் சுசிலா அவர்கள் தன் சித்தப்பாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் . 


இறுதி அஞ்சலி நிகழ்வுநடக்கும்பொழுது ..தந்தை இழந்து  சோகத்தில் இருக்கும் போது ,அடுத்தடுத்து நிகழ்வுகளை  அண்ணன் செந்தில்குமார்-ம் ,எனது அம்மாவும் ,என்னென்ன சடங்குகள் செய்யவேண்டும் என்பதை இறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மிக்க உறுதுணையாகம் ,அவருக்கு செய்யவேண்டிய இறுதி மரியாதையாக அமைந்தது ..உடுமலைஅவருக்கு செலுத்தவேண்டிய இறுதி மரியாதையை செலுத்திவிட்டு மலைமேல் இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியை நோக்கி தரிசனம் செய்து உடுமலைநோக்கி வரும்பொழுது  சாரல் மழை பெய்துகொண்டே இயற்கை தன் அஞ்சலியை செலுத்தியது.


குறிப்பு : தன் பேரக்குழந்தைகளைக்கு   சரியான கல்வி கொடுத்து இன்று மருத்துவராகவும் ,பொறியாளர்களாகவும் ,வழக்கறிஞர்களாகவும்,தொழில்முனைவோர்களுக்கு  ,பேரக்குழந்தைகளுக்கு அருமையான சொந்தங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து தன் உயிர்மூச்சை தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டார்  இந்த உலகில் ......


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681..    


 

சனி, 12 ஜூன், 2021

 இயற்கை குளுகுளு வசதி ....

என் நீண்டகால நண்பன் அவருடைய தம்பி கல்யாணம் விசாரிக்க சென்றிருந்தேன் .மணி மதியம் 12 . 50 இருக்கும் .புதிதாக கான்கிரீட் வீடு கட்டி இருந்தார்கள் . எதிரே ஓட்டு வீடு இருந்தது . முதலில் ஓட்டு வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தேன் . காற்றாடியை போட்டார்கள் . அனல் காற்று பயங்கரமாக வீசியது . சரி என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு , புதிதாக கட்டிய வீட்டிற்கு போக கூப்பிட... கான்கிரீட் வீடு என்பதால் அனல் காற்று அங்கு இன்னும் அதிகமாய் இருக்குமே என பயம் !
சரி என்று வீட்டிற்கு சென்றேன்... குளுகுளுவென இருந்தது ஆனால் A / C வசதி இல்லை . எனக்கு ஒரே ஆச்சரியம் . என்ன குளுகுளுவென இருக்கிறதே என்ன செய்தீர்கள்? என கேட்டேன்... அது ஒன்னும் இல்லை தென்னை மட்டை மாடியில் கிடக்கு அதனால் இப்படி இருக்கு என்றார்கள் . போய் மாடியில் பார்த்தேன் . வரிசையாக தென்னை மட்டை போட்டிருந்தார்கள் . தென்னை மட்டைக்கு இப்படி ஒரு அற்ப்புதம் இருப்பதை பார்த்து வியந்துவிட்டேன். மின்சாரம் இல்லாமல் இலவச குளுகுளுப்பு தன்மையை கொடுக்கும் சக்தி இயற்கைக்கும் இதுக்கும் மட்டுமே...
( மழை காலங்களில் எடுத்து விடுவார்களாம் )

அழகு_எது ??????

என் மனம்  நீண்ட நாட்களாக விடை தேடிய ஒரு கேள்வி

அனுபவம் கூறிய. விடை

அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்

அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்;

அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்;

அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்.

 எது அழகு ?

சிவந்த நிறமா? 

கூறான மூக்கா?

 வேல்போன்ற விழிகளா? 

வனப்பான உடல் அமைப்பா?

 வண்ண,வண்ண உடைகளா? 

வித விதமான சிகை அலங்காரங்களா?

 விலை உயர்வான நகை அலங்காரங்களா?

 இவைகளெல்லாம் அழகுதான். 

ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல

 1.குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.

 2.  அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு.

 3. மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.

 4. கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.

 5.பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.

 6.நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட  பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.

 7.  செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.

 8.தொழிலில் அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் அழகு.

 9. கையூட்டு வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககார்ர்கள் அழகு.

10.  பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.

11.பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.

12.  சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.

 13. பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.

 14.அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.

 15.   சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.

16.  பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.

17.மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு.......

https://youtu.be/xdhY-uRL0Gw

கேள்வி : வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் என்ன?

 கேள்வி : வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் என்ன?


என் பதில் :..இப்பொழுது கொரோன காலம் WORK FROM HOME ..


1. டீம்ஸ் காலில் இருக்கும் போது, மறந்தும் வீடியோ ஆன் செய்யாதீர்கள்..


சமீபத்தில் மேனேஜர் ஸ்கில் நடத்தும் ஒரு டீம்ஸ் மீட்டிங்கில், வேற ஏதோ அணியில் வேலை பார்ப்பவர் போல, தெரியாமல் வீடியோ ஆன் செய்து விட்டார்..


மனிதர் சட்டை போடாமல், வெறும் கால் சட்டை தான் போட்டு இருப்பாரு போல.. இந்த லட்சணத்தில் காலை வேற லேப்டாப் இருந்த டேபிள் மேல் வைத்து கொண்டு இருந்தார்


பின்னால் பார்த்தல் மாட்டு கொட்டஹை போல் இருந்தது..


நல்ல வேலை வாயில் இருந்த பானை, பொளிச் என்று திரையில் துப்ப வில்லை.


2. குழந்தைகைளை தயவு செய்து அலுவலக கணினியை தொட அனுமதிக்காதீர்கள் . உங்கள் மேனேஜர் சிறிது நேரம் கழித்து போன் செய்து கழுவி ஊற்றினால் ஏன் என்று கேட்காமல் வாங்க தயார் ஆகிக்கொள்ளுங்கள்


3. நல்ல பிராட்பேண்ட் பிளான் எடுத்துக்கொள்ளவும், 2 வருஷம் ஆக போகிறது. இன்னும் சிலர் டாங்கில் வைத்துக்கொண்டு வேலை செய்வது எல்லாம் டூ மச்


4. அடுத்தது, வீட்டில் இது நாள் வரை இன்வெர்டர், பேக்கப் இல்லை என்றால் வாங்கி கொள்ளுங்கள்.. 2 வருடம் கழித்து கூட எங்கள் ஏரியா வில் கரண்ட் இல்லை, நான் 2 மணி நேரம் கழித்து லாகின் செய்கிறேன் பேர்வழிகளாய் சுற்றாதீர்கள்


5. முடி வெட்ட முடியாது தான்.. ஆனால் ஆண்கள் முகச்சவரம் செய்யலாம்.. ஏதோ ஆதித்யா வர்மா படத்தை உங்களை வைத்து பாலா மாமா எடுக்கப்போவது போல் ஏன் இந்த கண்றாவி


6. அலுவலக கணினியை, படம் பார்க்கவோ, ஒன்லைன் புக் செய்யவோ, குழந்தைகளுக்கு அசைன்மென்ட் பிரிண்ட் கொடுக்கவோ வேண்டாம்.. வேலையே போய்விடலாம்.. ஜாக்கிரதை...

நன்றி ...


 சிமெண்ட் செலவை குறைக்கபோய் ஏடாகூடமா சிக்கிக்கொண்டவர்களின் அனுபவம் இருந்தால் பதிவுவிடமுடியுமா ?


என் பதில் : 


புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு சிமெண்ட் தேவையானது 100க்கும் மேற்பட்ட மூட்டைகளாக  இருக்கும்போது, ஏஜென்டுகள் மூலமாக வாங்காமல் நேரடியாக ஃபேக்டரியிலே வாங்கி கொள்ளலாமே? என்ற எண்ணம் வீடு கட்டுபவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். எப்படியாவது காசை மிச்சம் செய்துவிட மாட்டோமா? என இருக்கும் எல்லா வழிகளையும் யோசித்து கொண்டிருப்பார்கள். அதில் ஒன்று தான் சிமெண்ட் மூட்டையை நேரடியாக ஃபேக்டரியிலே சென்று எடுத்துக்கொள்ளும் ஐடியா. 


நேரடியாக ஃபேக்டரியிலே சென்று வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் 200 மூட்டையாவது வாங்க வேண்டும். வாகன வசதி நாம் தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ஃபேக்டரி ரொம்ப தூரத்தில் உள்ளதென்றால் வாகன செலவு எகிறிவிடும். இப்படி வாங்க நினைத்தால், சிமெண்ட் கம்பெனியின் அந்த மாநிலத்திற்கு உரிய அலுவலக எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது. 


நாம் டீலரிடம் வாங்கும்போது பேரம் பேச வாய்ப்புண்டு. ஆனால் ஃபேக்டரியில் வாங்கும்போது விலை ஃபிக்ஸ்ட் ரேட் தான். அதுவே டீலர்களுக்கு ஃபேக்டரியில் சிறப்பு சலுகை உண்டு. ஒரேமுறை மட்டும் வாங்கும் நமக்கு தள்ளுபடி கிடையாது. அதுவே டீலர்கள் என்றால், அடிக்கடி டன் கணக்கில் லோடு எடுப்பார்கள்.


அதேபோல் ஃபேக்டரியில் வாங்கும்போது சொன்ன தேதிக்கு டெலிவரி செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஸ்டாக் இருக்காது. வந்த உடனே கொள்முதல் செய்யப்பட்டுவிடும். இது இல்லாமல் டீலர்கள் ஏற்கனவே புக் செய்திருப்பார்கள். அவர்களுக்கு கொடுத்தது போக மீதி தான் நமக்கு கொடுப்பார்கள். வீடு கட்டுபவர்கள் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். சிமெண்டை நேரடியாக ஃபேக்டரியிலே சென்று வாங்கி கொள்ளலாமே? என்று. அது புத்திசாலித்தனம் அல்ல. டீலர்களிடம் வாங்குவது தான் நல்லது என கூறவே இந்த பதிவு. 


நன்றி ...கனவு இல்லம் நிறைவேற வாழ்த்துக்கள் ..

சிவக்குமார் VK 

வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

வெள்ளி, 11 ஜூன், 2021

 கேள்வி :  நகைக் கடன் வாங்கி, வீட்டுமனை வாங்குவது நல்ல முதலீடு திட்டமாக இருக்குமா?


என் பதில் : 


உங்களுக்கு சில கேள்விகள்.


1. உடனே வீடு கட்டுவதற்காக மனை வாங்குகிறீர்களா ?


நீங்கள் வீட்டுமனையினை நீங்கள் வீடு கட்டுவதற்காக வாங்கும் பட்சத்தில், வீட்டுக் கடன் வங்கியில் கிடைக்கும். அத்தகைய கடனில் சில அம்சங்கள் உள்ளன.


வட்டி விகிதம் குறைவு.

அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு.

வீடு அடிப்படைத் தேவை. வாடகையின் மூலமாக பணம் வீணாவதைத் தடுக்கும்.

வீட்டுக் கடன் வாங்குங்கள்.


2. மனை வாங்கி எதிர்காலத்தில் வீடு கட்டப் போகிறீர்களா ?


அல்லது, நீங்கள் சிறிது காலம் கழித்து வீடு கட்டப் போகிறேன். அதுவரை, மனையாக வைத்திருப்பேன் என்று நினைத்தால், அதற்கும் மனைக் கடன் வங்கிகளில் கிடைக்கிறது. அதற்கு சில அம்சங்கள் உண்டு.


அது வீட்டு மனையாக இருக்க வேண்டும். விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது.

எதிர்காலத்தில், வீடு கட்டும் போது, இந்தக் கடனை வீட்டுக் கடனாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட இரண்டு கடனும் அத்தியாவசிய தேவைக்கான கடன். தங்க கடன் இன்றி மற்ற கடன்கள் வழியாக சமாளிக்கலாம். தங்கத்தை அடமானம் வைக்கத் தேவையில்லை.


3. மனையினை முதலீட்டிற்காக, தங்க நகை கடன் வாங்குகிறீர்களா?


இப்போது, நீங்கள் மனையினை முதலீட்டிற்காக, நகைக் கடன் எடுத்து வாங்குகிறீர்கள் என்றால், பல விதங்களில் உங்களது பணம் இழப்பு.

நகைக் கடனில், மாதா மாதம் வட்டி செலுத்த வேண்டும்.

நகைக் கடனானது, நகையின் மதிப்பில் 80% - 90% வரை மட்டுமே வாங்க முடியும். நகையின் மொத்த மதிப்பினை பயன்படுத்த முடியாது.

நகைக் கடன் வாங்கும் போது, பல்வேறு கட்டணங்கள் வாயிலாக பண விரயம்.

மனையில் உங்களுக்கு எந்த ஒரு லாபமும் வராது. அது சும்மா இருந்துக் கொண்டு இருக்கும். பணம் ஈட்டித் தராத படியால், முதலீட்டுப் பணம், வீட்டினில் கிடைக்கும் வாடகை போல், கடனை அடைக்க உதவாது.

அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமென்றால், மனை விலை ஏறாமல் போனால், அதனை விற்க வேண்டுமென்று நினைத்தால், உடனே விற்பது எளிதல்ல. அதற்கு நீர்ப்புத் தன்மை குறைவு. நஷ்டத்தில் விற்றால் பண இழப்பு நேரலாம்.

ஏதோ காரணத்தினால், தங்க கடனிற்கு தவணை செலுத்த முடியாமல் போனால், மொத்த தங்கத்தினையும் இழக்க நேரிடலாம்.

எனவே, சொந்தப்பணத்தில் வாங்குவது நல்லது.

என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு முதலீடும் சொந்த பணத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏதேனும் காரணங்களால், முதலீடானது பொய்த்துவிட்டால் , உங்களது சொந்தப் பணம் என்றால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். கடன் பணம் என்றால், கடன் காரருக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.

மேலும், கடன் வாங்கி முதலீடு செய்வதென்பது, பண இழப்போடு ஆரம்பிக்கும் முதலீடு. முதலீடானது, கடன் வட்டித் தொகையினை விடவும், அதிகமான லாபத்தினைக் கொடுத்தால் மட்டுமே, அந்த முதலீடு நிஜமாகவே நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும். இல்லையேல், நஷ்டம் தான் மிஞ்சும்.

சொந்த பணத்தைக் கொண்டு, எந்த ஒரு முதலீடும் செய்வோம்.


நன்றி ..

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் ,

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

கேள்வி : பெரும்பாலான நபர்களுக்குத் தெரியாத கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எது?

 கேள்வி : பெரும்பாலான நபர்களுக்குத் தெரியாத கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எது?


என் பதில் : 


"கையில் வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்யிக்கு அலைந்தானாம்"

மேற்குறிப்பிட்ட பழமொழிக்கு தகுந்தவாறுதான் இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனநிலையும் உள்ளது. எதற்காக இப்படி சொல்கிறேன் என்றால் இன்று மலையாளம்,கன்னடம், தெலுங்கு திரைப் படங்களை பார்த்துவிட்டு தமிழ் படம் அந்த அளவுக்கு ஏன் இல்லை என்று இங்க  சில கேள்விகள் வலம் வருவதை பார்க்க முடிகிறது.


தமிழிலும் பல அபாரமான படங்கள் உள்ளது. அதுவும் தமிழில் நாம் கேள்விபடாத பல நல்ல படங்கள் தமிழ் ரசிகர்களாலே இறுதிச்சடங்கு நடத்தி சமாதிகட்டி விட்டனர்....ஏனென்றால் நாம்தான் சிறிய பட்ஜட் படங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே..சினிமா துறையில் 10 பேர் வாழ்ந்தார்கள் என்றால் 100 பேர் அடையாளம் தெரியாமல் காணமல் ஆக்கப்படுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை. ஆதலால் பெரிய பெரிய ஸ்டாருங்க படத்தை மட்டும் கொண்டாடாமல்..இது போன்ற சில நல்ல படங்களையும் ஆதரியுங்கள் தோழமைகளே!


இந்த கேள்விக்கு ஏற்கனவே ரசிகர்களிடம் பாரம், நெடுநல்வாடை போன்ற பெரும் வரவேற்பை பெறாத சில நல்ல தமிழ் படங்களை சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் நான் பார்த்த சில நல்ல தமிழ் படங்களை இங்கு பட்டியலிடுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.


1.ஒரு கிடாயின் கருணை மனு.

2017 இல் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் தரமான ஒரு படம் என்று நான் இங்கு சொல்லுவேன். அதற்கு முக்கிய காரணம் ஒரு எதார்த்தமான திரைப்படம் என்பதாலே.புதுமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா என்பவரால் இயக்கப்பட்ட இப்படத்தின் நாயகன் விதார்த்.. நாயகி ரவீணா (அறிமுகம்).மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.. கிராமத்தினரின் அடாவடி, அலப்பறை, நக்கல், நய்யாண்டி என சிரிப்பலையுடன், சென்டிமண்ட் என பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் ஒரு படம்.. படத்தில் சில திருப்பங்களுடன் மனித உயிரைக் குறித்து இவ்வளவு கவலை கொள்ளும் சக மனிதர்கள், ஆடு, மாடுகளைப் பற்றி ஏன் கவலையேபடாமல் வெட்டித் தள்ளுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம்...இந்த படத்தை பற்றி இன்னும் நிறையா சொல்லிக்கிட்டே போகலாம். ஆதலால் பார்க்காதவர்கள் குடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள்.


2. கமலி From நடுகாவெரி.

இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிட்டார்கள். தனுஷ் நடித்த கர்ணன் என்ற திரைப்படத்துடன் வெளியானதால் இந்த படத்தை யாரும் அவ்வளவாக கண்டு கொல்லவில்லை என்பதே உண்மை.. புதுமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்...கதாநாயகி, நாயகன் எல்லாம் கயல் ஆனந்திதான்... பெயரளவில் நாயகனாக ரோகித் சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரதாப் போதன், இமான் அண்ணாசி போன்ற பல நடிகர்களும் நடித்துள்ளனர். சண்டைக் காட்சி, கலவரம் என்று எந்தவித தொந்தரவும் இல்லாத அருமையான ஒரு படம்.. எந்த வித வசதியும் இல்லாத கிராமத்திலிருந்து தான் நினைத்ததை அடைய(ஒரு தலை காதலுக்காக) கமலி (கயல் ஆனந்தி) என்ற பெண் ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்து எவ்வாறு வெற்றி காண்கிறாள் என்பது தான் கதையின் கரு..ஒரு வகையில் பெண் பிள்ளைகளின் படிப்பின் அவசியத்தையும் இந்த படம் உணர்த்துகிறது.இந்த படத்தை பார்க்காதவர்கள் குடும்பத்துடன் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்..


3. இஃக்லூ (Igloo)

இந்த பெயரை கேட்டவுடன் வேற்று மொழி படம் என்று நினைக்க வேண்டாம். இஃக்லூ என்பதற்கான அர்த்தம் இந்தப் படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.இந்தப் படம் ஒரு வெப் மூவி என்பதால் யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஜீ5 ப்ளாட்பார்மில் இந்த படம் உள்ளது. பரத் மோகன் என்னும் புதுமுக இயக்கனரால் படமாக்கப்பட்டது. இது ஒரு ரொமாண்டிக் டிராமா வகையை சார்ந்த படமாகும்..இந்த படத்தை நீங்கள் பாருங்கள் கண்டிப்பாக உங்களை நெகிழ வைக்கும். ஒரு சிறந்த படம் பார்த்த அனுபவம் உண்டாகவில்லை எனில் என்னை கேளுங்கள்.. படத்தின் நாயகி புற்று நோயால் அவதிப்பட்டு இறுதியில் நாயகனை விட்டு உயிர்விடும் போது நம் நெஞ்சை உலுக்கி நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது..படத்தில் ஒரு சில லிப் லாக் காட்சிகள் உள்ளதால் முதலில் நீங்கள் பார்த்து விட்டு குடும்பத்துடன் பார்க்கலாமா என முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தரமான படம். படத்தின் இறுதி காட்சியில் நீங்கள் அழுதால் நான் பொறுப்பல்ல.


4. குற்றமே தண்டனை.

இந்த படம் ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்தப் படத்தை நான் ஜீ திரை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பார்த்த முதல் கனமே திரையரங்கில் பார்க்காமல் தவற விட்டுவிட்டோமே என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு ஒரு தரமான கிரைம் திரில்லர் மூவி. ஏன் இந்த படம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. காக்கா முட்டை இயக்குனர் M.மணிகண்டன் என்பவரால் இயக்கப்பட்ட இப்படத்தின் நாயகன் விதார்த்.நாயகி ஐஸ்வர்யா , பூஜா தேவாரியா மற்றும் ரகுமான், நாசர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.....இந்த படத்தை புதிதாக பார்ப்பவர்கள் படத்தின் இறுதியில் ஒரு பெரிய தரமான டிவிஸ்ட் காத்துகிட்டு இருக்கு என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.2016 இல் வெளிவந்த இப்படத்தை பார்க்காதவர்கள் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.


5. டுலெட் (ToLET)

கண்டிப்பாக உலகம் போற்றக்கூடிய ஒரு தமிழ் படம் என்றால் இதை சொல்வேன்.ஏன் என்றால் நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத இந்தப் படத்தை இயக்கிய செழியன் அவர்கள் ஒவ்வொரு காட்சியும் உணர்வுப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் செதுக்கி வைத்திருப்பார்.. எழுத்தாளராக இருக்கும் நாயகன் தற்போது குடியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து வேறு ஒரு நல்ல வீட்டிற்கு குடி பெயர நினைக்கிறார். ஆனால் வறுமையின் காரணமாக படாத பாடு படும் நாயகன் எப்படி வேறு ஒரு நல்ல வீட்டிற்கு குடிபெயர்ந்தார் என்பது தான் கதையின் கரு. அவருடைய வறுமையை காட்சிப்படுத்தும் விதம் கண்டிப்பாக படம் பார்க்கும் நமக்கும் வலியை ஏற்படுத்தும். இந்த படத்தை எந்தக் காரணம் கொண்டும் தவற விடாதீர்கள். நெட்ப்ளிக்ஸில் உள்ளது. தேசிய விருது பெற்ற இப்படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் பாருங்கள்.


6. அப்பா

2016 இல் இயக்குனர் சமுத்திரகனியால் இயக்கி நடிக்கப்பட்ட ஒரு படம்தான் இது..இந்த படம் வெளியான சமயம் ரஜினி நடித்த காலா படமும் வெளியிடப்பட்டதால் அப்பா படத்திற்கு ஒரு சில திரையரங்கமே கிடைத்தது. இந்தப் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்பா மகனுக்கு இடையே இருக்கும் உறவு எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதை அழுத்தம்,திருத்தமாக சொல்லக்கூடிய ஒரு படம். நல்ல திரைக்கதை, நல்ல நடிப்பு என குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு சிறந்த படம் இது. பார்க்காதவர்கள் பார்த்து மகிழுங்கள்.


7. கே.டி என்னும் கருப்புத்துரை.

2019இல் வெளியான இந்த படத்தை மதுமிதா என்ற பெண் இயக்குனர் இயக்கி இருப்பார்.ஒரு வயதானவரையும், ஒரு சிறுவனையும், வைத்துக் கொண்டு, செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை என இரண்டையுமே எதார்த்தமாக கையாண்டிருப்பதோடு, வாழ்க்கையின் மறுபக்கத்தை ரொம்ப சாதாரணமாக விளக்குவது தான் ‘கே.டி (எ) கருப்பு துரை’ படத்தின் கதை கரு. எழுத்தாளர் மு.இராமசாமி கருப்புத்துரையாகவும், குட்டி என்ற சிறு வயது கதாபாத்திரத்தில் நாகவிஷால் ஆகியோர் தங்களது நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். வயதாகிவிட்டால் எல்லாமே முடிந்துவிடாது என்பதை உயிரோட்டமாக விளக்குகிறது இந்த படம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தரமான படம் இது.


8.8 தோட்டாக்கள்.

இந்தப் படம் ஆக்ஷன், கிரைம், திரில்லர் வகையை சார்ந்த படம். 2017 இல் வெளிவந்த இந்தப் படம் புதுமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என்பவரால் இயக்கப்பட்டது. படத்தின் நாயகன் சத்யா மற்றும் நாயகி அபர்ணா இருவரும் அறிமுகங்களாக இந்த படத்தில நடித்துள்ளனர். மேலும் நாசர், பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.....இந்த படத்தை அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் நம்ம ஆளுக ஆகா ஓகோ என்று கொண்டாடி தீர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.புதிதாக வேலைக்கு சேரும் இளம் போலீஸ் எஸ்.ஐயிடம் (நாயகன்) ஸ்பெஷல் கேஸ் ஒன்றிற்காக 8 குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கி ஒன்றை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வழங்குகிறார். அதை தன் கவனக்குறைவால் தொலைக்கும் எஸ்.ஐ படும் பாடும், அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் பயன்பாடும் தான் இந்த "8 தோட்டாக்கள்" படத்தின் கரு. நேரம் கிடைத்தால் இந்த படத்தையும் பாருங்கள். கண்டிப்பாக விருவிருப்பாக இருக்கும்.


9.தேன்.

ஓர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் வலிகளை எதார்த்தமாக கூறியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியவர் கணேஷ் விநாயகன். நாயகன் தருண்குமார், நாயகி அபர்ணா..... படத்தின் முடிவில் சில அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் சொல்லி இருக்கிறது இப்படம்.. படம் முடிவில் சில காட்சிகள் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.


10.மெஹந்தி சர்க்கஸ்.

குக்கு, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜெந்திரனின் அறிமுக படம் தான் இந்த மெஹந்தி சர்க்கஸ். 2019 இல் வெளியான இந்த படத்தின் பாடல் (கோடி அருவி, வெள்ளாட்டு கண்ணழகி) அனைவரும் கேட்டிருப்பீர்கள்.ஆனால் படத்தை பார்த்திருப்பீர்களா என்று எனக்கு தெரியாது. ஒரு தரமான காதல் கதை படம் இது. நாயகனின் காதுலுக்கு பல தடைகள்,தடங்கள்கள் ஏற்படுகிறது இதனை முறியடித்து எவ்வாறு தனது காதலியை கரம் பிடித்தார் என்பதே கதையின் கரு. இறுதி காட்சியில் சர்கஸ் கேங்கில் இருக்கும் நாயகியை பல அடி தூரம் நிற்க வைத்து அவர் மீது கத்தி படாமல் நாயகன் வீசும் காட்சி நம்மை பதைபதைக்க வைக்கும்.அனைவரும் பார்க்க கூடிய ஒரு சிறந்த தரமான படம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.


11. மேற்கு தொடர்ச்சி மலை.

இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பெறுமை சேர்த்த படம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு தரமான படம். லெனின் பாரதி என்பவரால் இயக்கப்பட்ட இந்த படம் மலைவாழ் மக்களின் கடினமான வாழ்வியல் முறையை பிரதிபலிப்பதாக இருக்கும். படத்தின் நாயகன் ஆண்டினி, நாயகி காயத்திரி தங்களது நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர்....விவசாயம் செய்ய நிலம் வாங்க ஆசைபடும் நாயகன் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து முடிவில் நிலம் வாங்க முடியாத காரணத்தையும், கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் அழுத்தம், திருத்தமாக சொல்லும் படம்தான் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை. பார்க்காதவர்கள் இருப்பீர்கள் ஆனால் இன்றே பாருத்துவிடுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு உணர்வு பூர்வமான படம் இது.


12. செத்தும் ஆயிரம் பொன்.

இந்தப் படத்தை பலரும் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.2019 இல் வெளிவந்த இப்படத்தை ஆனந்த் இரவிச்சந்திரன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கி இருப்பார்... படத்தை பொறுத்த வரையில் பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களே நடித்துள்ளனர். முக்கியமாக பாட்டிக்கும், பேத்திக்கும் இடையில் நடக்கும் ஒரு கதைதான் இது... தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வரலாம் ஆனால் சில படங்களே அந்த படத்தை பற்றி உங்களை பேச வைக்கும்.நிச்சயமாக இந்த படம் உங்களை பேச வைக்கும்.... இயற்கையின் அமைப்பில் இறப்பின் முக்கியத்துவமும், மனித வாழ்வில் அதன் மகத்துவமும் பற்றி பேசுகிறது இந்தப் படம். மரணத்தை கொண்டாடுவதே இறந்தவரின் வாழ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலி என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர்.....குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம். நிச்சயமாக இந்தப்படத்தை குடும்பத்துடன் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.


இது போன்று பலருக்கு தெரியாத கொண்டாட வேண்டிய படங்கள் தமிழில் பல உள்ளது. இப்பதிவை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் பார்ப்பதற்கு ஏதுவாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருப்பதற்கு இது போன்ற சில சிறிய பட்ஜட் படங்களும் பெறும் பங்காற்றுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இது போன்ற நல்ல படங்கள் எதற்காக திரையரங்கத்தில் ரசிகர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது தான் புதிராகவே உள்ளது.

இது போன்று எவ்வளவோ படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட தவறவிட்டு விட்டனர் என்பது தான் ஒரு வருந்தத்தக்க விடயம்...இவ்வளவு ஏன் இங்கு  கூட பல நல்ல தரமான பதில்களும் பலரது கண்களுக்கு தெரியாமல் உள்ளது என்பது மற்றொரு வருந்ததக்க விடயம். ஆக நல்ல சினிமா படங்களை கொண்டாடுங்கள் அது மட்டும் இல்லாமல்  பலர் எழுதும் நல்ல பதில்களையும் ஆதரியுங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்.


நன்றி! வணக்கம்.