உடுமலையில் ஒரு பழம் பெரும் நாடகக் கலைஞர் ...
நலிந்து வரும் கலைகளைக்காப்பாற்றி வரும் நாடகக்கலைஞர், எழுத்தாளர், கருத்தாளர், படைப்பாளர் எனப் பன்முகத்தன்மையோடு உடுமலை காந்தி சவுக் பகுதியில் வசித்து வருகிறார் நாடக இயக்குநர், நடிகர் எம்.கே.முத்து.இவருக்கு வயது 83 சுமார் 20 க்கும் மேற்பட்ட சமூக நாடகங்களை இவரே எழுதியுள்ளார்.
இவரது எழுத்தில் வீரப்பெண், நண்பனைப்பார், தீக்கண்ணன், பூதம் காத்த புதையல், நீயின்றி நானேது, அன்பே அமுதா, அமர ஓவியம், ஆசையும் அழிவும், போன்ற நாடகங்களும் 1969 ல் அமைச்சர் சாதிக்பாட்சாவின் எதிர்பாராத முடிவு எனும் நாடகத்திற்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார்.
1970 ல் அரங்கேற்றப்பட்ட தங்கதுரை எனும் நாடகத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அணிந்துரை வழங்கியுள்ளார். உடுமலையில் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி நாடகக் கலாமன்றத்தில் நூற்றுக்கணக்கான நாடகங்கள் நடந்துள்ளது. 1949 முதல் 1953 வரை கிருஷ்ணா டாக்கீஸில் ஜோதி நாடக சபா முகாமிட்டது.
நாடகக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்ய வந்தவர்தான் இந்த எம்.கே. முத்து. அப்பொழுது ஒப்பனை செய்தால் உடனே காசு தரமாட்டார்கள். அந்தக்காட்சியில் நடித்து வரும் காசிலேயே இவருக்கு ஊதியம் தருவார்கள். அவ்வாறு ஊதியம் வாங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கும் போது நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தவர். பிற்பாடு இந்த நாடகக் கலை ஏற்படுத்திய தாக்கம் அவரை நாடகக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இன்றளவும் நாடகத்துறையில் தீராத ஈடுபாடு கொண்டு இயங்கிவருகிறார்.
இவரது முதல் நாடகம் நண்பனைப்பார் ப்ரோவோ திரையரங்கில் அரங்கேற்றம் செய்துள்ளார்.
இவரது தொலைபேசி எண் : 9976054967

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக