கட்டபொம்மன் வரலாற்று ஆவணங்கள்
தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் 1670 ல் இருந்து 1907 வரை பல்வேறு வகையான ரெக்கார்டுகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்னர், கட்டபொம்மனின் வரலாற்று ஆவணங்களை நேரடியாக பார்வையிட வேண்டும் என்ற சிறப்பு அனுமதியைப் பெற்று, அதன் பின்னர் தொடர்ச்சியாக
15 வேலை நாட்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 5.45 மணி வரை ஆவணக்காப்பக அறைக்குள் ஒரு கல்லூரி மாணவனை போல சென்று பல்வேறு பருமன்களை தேடி பார்வையிட்டதன் விளைவாக சுமார் 1353 பக்கங்களை தேடி கண்டுபிடித்தேன்.
1) Military consultation
2 )Revenue consultation
3 )Secret consultation
4 )Board of revenue
5 )Political consultation
6 )Secret sundries
7 )Revenue sundries
8 )Military Despatches to england
9 )Legal
10 )Tirunelvelli collectorate record
11 )Secret despatches to england
இது போன்ற பருமன்களில் (volume) மொத்தம் 40 பருமன்களுக்குள் வீரபாண்டியக் கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி முதல் பாளையப்போர், இரண்டாம் பாளையப்போர் என ஒவ்வொரு நாள் போர் நிகழ்வுகளையும், செய்தியையும், அவர்களின் கருத்துக்களையும், ரகசிய பரிவர்த்தனைகளையும், பிரிட்டிஷார் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.
சுமார் 26 பருமன்களில் 1353 பக்கம் முதல் கட்டமாக காப்பி ஆப் டாக்குமெண்ட் கேட்டிருந்தேன். நான் தான் ஆவணக்காப்பக வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு ஆவணங்களை மொத்தமாக கேட்டிருக்கிறேன். இதற்காக அரசு நிர்ணயித்த கட்டணமாக 5095 ரூபாய் கட்டிவிட்டேன்.
இன்னும் 15 பருமண்கள் பார்வையிடாமல் இருக்கிறது, நிச்சயமாக 90% சதவீதம் ஆங்கிலேயர்கள் எழுதிய ஆவணங்களை ஓரளவு எடுத்து விட்டேன், என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்னும் மிஞ்சிப் போனால் 200 பக்கங்களுக்குள்தான் தேட வேண்டியது இருக்கும்.
கட்டபொம்மன் சம்மந்தப்பட்ட வால்யூம்கள் ஸ்கேன் செய்யப்படாமல்தான் இருந்தன. சில வால்யூம்கள் நன்றாக இருக்கிறது, சில வால்யூம்களின் பேப்பர்கள் நொறுங்க ஆரம்பித்து விட்டது. கட்டபொம்மன் தூக்கில் போடப்பட்ட செய்திகள் இருக்கும் ஒரு வால்யூமை மட்டும் தனியாக கண்ணாடி பெட்டிக்குள் வைத்து முக்கியத்துவம் குடுத்து மதித்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு தனியார் நிறுவனம் ஸ்கேன் செய்கிற பணியை அங்கேயே இருந்து செய்து வருகிறார்கள், அவர்கள் அரசு வகுத்து கொடுத்த நெறிமுறையின் படி ஸ்கேன் செய்து வருகிறார்கள், இந்த வகையில் political consultation மட்டும் அனைத்து வருட பருமன்களும் ஸ்கேன் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னொரு நிறுவனம் micro film முறையில் ஆவணப்படுத்துகிற பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். Micro film ஆயுட்காலம் சுமார் 100 வருடங்கள் ஆகும்.
இப்போது புதிய கோரிக்கையாக நான் எழுதிக் குடுத்த 26 பருமன்களையும் மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து இருந்தேன், இதற்கான செலவுத் தொகையை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தேன். பலகட்ட கடுமையான முயற்சிக்கு பிறகு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு நமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு நான் குறித்துக் கொடுத்த 1353 பக்கங்களும் ஸ்கேன் செய்தாகி விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
ஆவணங்கள் இரண்டு தளங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது, மேல்தளத்தில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது, அங்கு தான் பிரிட்டிஷார் கைப்பட எழுதிய உண்மையான பருமன்கள் இருக்கிறது, இவை நொறுங்கிய நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர், நீதிமன்ற வழக்குகளுக்காக மட்டுமே அந்த ஆவணங்களை பார்வையிட முடியும் மற்றபடி பார்வையிட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
கீழ்தளத்தில் உள்ள பருமன்களை வைத்து தான் நமக்கு ஜெராக்ஸ் போட்டு தருகிறார்கள், இவை ஏற்கனவே உள்ள ஓரிஜினல் பருமன்களின் நகல்கள்தான், இந்த பருமன்களில் ரேபான் என்ற துணி ஒவ்வொரு பக்கங்களிலும் ஒட்டப்பட்டிருக்கிறது, இந்த துணி அந்தப் பருமன்களை நன்றாக பாதுகாக்கிறது, ஒரு பருமனின் ஆயுள்காலம் சுமார் 30 ஆண்டுகள் ஆகும், 30 ஆண்டுகளுக்கு பிறகு இதே போல் ஜெராக்ஸ் தயார் செய்து மீண்டும் புதிய பருமனை உருவாக்குகிறார்கள். ஜெராக்ஸ் போடும் போது அதிகமாக கருப்பு அடிக்கிறது, இனிமேல் அந்தக் கவலை நமக்கு இல்லை.
இந்த ஆண்டு 70 ஸ்காலர்கள் ஆய்வுக்காக அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்காலர்களுக்கான அறையில் காத்திருந்து பருமன்களை பார்வையிடுவதுதான் நடைமுறை மரபு, ஆனால் நமக்கு ஒரு சிறப்புச் சலுகையாக நேரடியாக ஆவண அறைக்குள்ளே என்னை அனுமதித்தார்கள், அதனால்தான் என்னால் விரைந்து தேட முடிந்தது, இதில் முக்கியமாக ஸ்கேன் செய்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கிய கண்காணிப்பாளர் திருமதி.அபூர்வா ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
கட்டபொம்மனுக்கு எங்குமே முதலிடம்தான், ஆவணக் காப்பகத்தில் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டது கட்டபொம்மன் வரலாற்று ஆவணங்கள் மட்டும் தான், என்ற பெருமையும் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
நன்றி
பெ.செந்தில்குமார்
7299940159
பாஞ்சை போர்முழக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக