வங்கி,தனியார்வங்கி பணிகளில் சந்திக்க கூடிய சவால்கள் என்னென்ன?
முதலில் இந்த வேலை கிடைப்பதே மிகப்பெரிய சவால். மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது இந்த பணிக்கு.
சரி வேலை கிடைத்த பிறகு இந்தப் பணியில் என்னென்ன சவால்கள் உள்ளது என்று வங்கிக் கிளைகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்பு (meeting) போல மிகச்சுருக்கமாக சொல்கிறேன். வங்கிப் பணியாளர்கள் போல பொறுமை இருப்பவர்கள் மட்டும் படிக்கவும்.
முதல் சவால்- புவியியல் என்றால் கிலோ என்ன விலை என்றும் மனிதவள மேலாண்மை எனக்கு ரெண்டு தட்டு(பிளேட்) கிடைக்குமா என்றும் கேட்பவர்கள் நமக்கு என்ன கிளை என்ற கடிதத்தை வழங்குவார்கள். அது நிச்சயமாக சென்னைக்கு மிக அருகில் கன்னியாகுமரியில் நிலம் என்று சொல்லப்படும் விளம்பரங்கள் போல இருக்கும். அதிலும் அதிகாரி நிலையில் சேரும் பெரும்பாலானோர் மொழி புரியாத மாநிலத்தில் சுகமான பணி செய்யும் வாய்ப்பினை பெறலாம்.
அடுத்த சவாலானது கிளைக்குள் நடக்கும் அரசியலை சமாளிப்பது. ஆளுக்கு ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருப்பார்கள் நம் கீழுள்ள குமாஸ்தாக்கள். நம் மேலாளர் நம்மை மிகச்சுலபமாக மானங்கெட திட்டிவிடுவார். நாமோ மேலாளரிடமும் திட்டு வாங்கி நம் கீழுள்ள குமாஸ்தாக்களின் இடியையும் தாங்கி மத்தளமாய் மேளம் இசைக்க வேண்டி வரும். நாக்கை அடக்கி மேலாளர் மனம் குளிர குமாஸ்தாக்கள் இருக்கை குளிர நாதஸ்வரம் அல்ல பீப்பீ வாசிக்க தெரிந்தால் சற்று பிழைக்கலாம்.
அடுத்த சவால் நம் நிறுவனத்தின் மூலாதாரமான வாடிக்கையாளர்கள். மகாத்மா காந்தி சொல்லியுள்ளது போல, வாடிக்கையாளர்கள் நம்மை நம்பி அல்ல நாம் தான் அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டும். இன்முகத்துடன் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தத் தெரிந்தால் இந்த சவாலை மிக எளிதாக கடந்து விடலாம்.
அடுத்த சவால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர இலக்கை அடைதல். நல்லவேளை நம் முன்னோர்கள் காலத்தை கம்மியாக பிரித்து வைத்துள்ளார்கள். இல்லையென்றால் இலக்கு இலக்கு என்று சொல்லி நம்மைப் பிரியோ பிரி என்று பிரித்து இருப்பார்கள் தலைமை அலுவலகத்துக்காரர்கள். இந்த சவாலை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. எப்படியும் அடையமுடியாத இலக்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.
அடுத்த சவால் விடுமுறை தினத்தில் விடுமுறையில் இருப்பது. இது என்னடா புதுசா இருக்கு வேலை நாளில் விடுமுறை எடுப்பது தானே கஷ்டம் விடுமுறை தினத்தில் விடுமுறை தானே நமக்கு என்று நினைத்தால் உங்கள் கனவில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மண் ஒரு லோடு அள்ளிப் போட்டுக் கொள்ளவும். அது எப்படி இப்படி சொல்லலாம் இந்த வேலை எவ்வளவு உயர்வானது விலைமதிப்பில்லாதது தெரியுமா என்று என்னை கேட்க நினைப்பவர்கள் கோலார் தங்க வயலில் மண்ணை அள்ளி தலையில் போட்டுக் கொள்ளவும்.
இந்த பணியில் சேர்வதற்கு முன்பு வரை நானும் சாதாரண மக்களைப் போல நினைத்துக் கொண்டிருந்தேன் சாயங்காலம் 3.30 மணி ஆகிவிட்டால் கதவினை இழுத்துப் பூட்டி விடுவார்கள் நாமும் வீட்டிற்கு சென்று விடலாம் என்று. பணியில் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. ஷட்டரை பூட்டி விடுவார்கள் ஆனால் பூட்டிய ஷட்டருக்குள் அமர்ந்து நம் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருப்பின் நீங்கள் 8.30 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு சென்று விடலாம்.
இதுபோக திருமணமாகாதவராக இருப்பின் அடிக்கடி நடக்கும் இடம் மாறுதல், திருமணமானவராக இருப்பின் துரத்தி அடிக்கும் இடமாறுதல் என்று வாழ்க்கையின் தத்துவமான மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையை புரியவைக்க ஒரு சவால்.
அடுத்த சவால் வாராக்கடன்.. இல்லை இல்லை வரவே வராத கடன்.. கொடுத்தது யார் என்று தெரியாது.. அவர் இடமாறுதலாகிச் சென்றிருப்பார்.. வாங்கியவரும் யார் என்று தெரியாது. அவர் இடத்தையே மாற்றிச் சென்றிருப்பார். இவர்கள் இருவருக்கும் இடையில் இப்பொழுது நம் விழிபிதுங்கும். ஆயினும் ஆடை கசங்காத ஒயிட் காலர் ஜாப் என்று பெருமை பீற்றிக் கொள்ளத் தெரிய வேண்டும்.
சரி நான் பெருமை பீற்றிக் கொண்டது போதும் என்று நினைக்கிறேன். பாவம் கேள்வி கேட்டவர் என்ன நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் நான் எழுதிய பதிலை படித்தபின் அவர் தலைதெறிக்க தூத்துக்குடி சுரேஷ் அகாடமியை விட்டோ அல்லது ரேஸ் போன்ற பயிற்சி மையங்களை விட்டோ இந்நேரம் ஓட்டம் எடுத்திருப்பார்.
சரி நகைச்சுவை போதும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேலை இல்லா திண்டாட்டமிக்க நம் நாட்டில் வங்கிப் பணியில் சேர்தல் என்பது ஒரு குடும்பத்தையே நிர்வகிக்க போதுமான அளவு ஊதியம் அளிக்கும் மற்றும் சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்து அளிக்கும் பணியாகும். இன்றைய சூழ்நிலையில் எந்தப் பணியில் இருப்பவரை கேட்டாலும் அந்தப் பணியின் நிறைகளை விட குறைகளேயே அதிகம் சொல்வர். ஆகையால் எந்த வேலையும் கடினமானது அல்ல. எல்லா வேலைகளிலும் ஒரு நிறை இருந்தால் ஒரு குறை இருக்கும். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா பிடிக்கலையா, தற்போதைய உங்களின் குடும்ப சூழ்நிலை என்ன என்பதை மட்டுமே பாருங்கள். அதன் பிறகு தானாகவே அந்த வேலை பிடித்துவிடும்.
பொறுமையாக படித்தமைக்கு நன்றி..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக