நம்ம ஊரு விஞ்ஞானி ...வாங்க பேசலாம்..
பிப்ரவரி 28 ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம். உடுமலை பகுதிகளில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பல்வேறு அறிவியல் சார் நிகழ்வுகள் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் வருகின்ற மார்ச் மாதம் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலிலியோ அறிவியல் கழகம்,. உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம் , மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் இணைந்து நம்ம ஊரு விஞ்ஞானி ...வாங்க பேசலாம்.. என்ற நிகழ்வு உடுமலை ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நிகழ்வுக்கு நமது கொங்கு மண்டலத்தின் விஞ்ஞானி இஸ்ரோ நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி தற்போது தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக உள்ளவரும் , பள்ளி மாணாக்கர்களிடையேயும், பொது மக்களிடையேயும் அறிவியல் சார் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டு சேர்த்து வருகின்ற டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்கள் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் அறிவியல் துறையில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அறிவியல் கண்காட்சி , அறிவியலில் நீங்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் , பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள உங்களது கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணாக்கர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம்.ஆகவே நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் , ஆசிரியர்கள் , அறிவியல் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம்.கண்டிப்பாக கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
. மேலும் தகவல்களுக்கு கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் 8778201926.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக