எங்கேயோ பார்த்த மயக்கம்.. கேட்கக் கேட்க சலிக்காத ஒரு பாட்டு. யுவன் இசையமைத்ததில் ஆகச்சிறந்த பத்து பாடல்களில் அதிலும் டாப் 3ல் இதுதான் முதன்மையாக வரும்.
யுவன், நா முத்துக்குமார், உதித் நாராயண் ஆகிய மூன்று முரட்டு ஆண்களால் உருவாக்கப்பட்ட சாகாவரம் பெற்ற காலத்திற்கும் நிற்கக்கூடிய காதல் படைப்பு இது. யுவன் சோறு போட, முத்துக்குமார் குழம்பூற்ற உதித் நெய் கலந்து நமக்குக் கொடுத்த பம்பாட் சாப்பாடு. தட்டு வைத்த செல்வராகவனையும் மறக்கமாட்டேன் கவலைவேண்டாம்.
இசையமைத்தது மட்டுமல்ல, யுவன் இதை உதித் நாராயணைக் கூப்பிட்டு பாடவைத்ததுதான் இதன் சிறப்பம்சம். அவரது குரல் இதே வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
இதைக் கேட்கும்போதெல்லாம் தமிழ் சரியாக அறியாத ஒரு சௌகார்பேட்டை சேட்டு ஒரு தமிழ்ப்பெண்ணிடம் காதல் வயப்பட்டு இன்னஸண்டாக கன்னாபின்னாவென்று பாடுவதாகத் தோன்றும். இதுவே இந்தப்பாடலின் முதன்மையான அழகியல்
மழையடித்து ஓய்ந்த ஒரு மாலைநேரத்தில் தனது காதலி சல்வார்கமீஸில் ஒரு தேர்போல தார்ச்சாலையில் இறங்கி நடக்கிறாள். காதலன் பார்த்த மறுகணம் நெஞ்சைப்பிடித்துச் சாய்கிறான். இடி விழுந்த வீட்டில் அவள் பூச்செடியாய் பூக்க ஆரம்பிக்கிறாள். இதற்குமேல் போனால் நான் உளற ஆரம்பித்துவிடுவேன்.
https://youtu.be/m55z41QWyyY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக