திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்
ஜானகி அம்மாவின் பாடல்களிலேயே மிக உன்னதமானது இந்த பாடல். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனம் நிர்மலமான நிலையை அடைந்து விடுகிறது. சோக ரசத்தை இந்த அளவு அனுபவித்து பாடிய பிறிதொரு பாடல் தமிழில் இல்லை. ராஜாவின் மேன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி.
எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். இந்த இரு பாடல்களும் ஒரே ராகம் .
பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து
"தூரத்தில் நான் கண்ட உன் முகம் ; நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.
பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.
"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.
இது போன்ற பாடல்களை இப்போது வரும் எந்த திரைப்படங்களிலும் காண முடியாது. இவை காலத்தை வென்ற பாடல்கள்
ஆனால் இது காலத்தால் அழிக்க முடியாத பாடல்..இந்தப பாடல் இந்தப் படத்தில் மற்றோர் கதாநாயகனான ராஜசேகரும் புதுமுக நடிகையையும் வைத்து எடுக்கப்பட்ட பாடல் பின்பு நீக்கப்பட்டது
தூரத்தில் நான் கண்ட உன் முகம் :ஒரு சோக கீதம் ;இதோ உங்களுக்காக
https://youtu.be/cxgzG2A9t8c

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக