வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் இவன் ஏன் ஜெஸியை லவ் பண்ணான்? 
பத்து வருஷம் கழிச்சும் ஜெஸி ஏன் ஞாபகத்திற்கு வருகிறாள்? என்கிற கேள்விக்கு எல்லாம் எப்பவும் பதிலே இருக்காது. ஆயிரம் வருஷம் ஆனாலும் முதல் காதல் ஞாபகம் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷல் தானே? விண்ணைத்தாண்டி வருவாயா முதல் தடவை பார்க்கும் போதே நாம் கடந்த நினைவுகளை ஒரு மயில் இறகால் வருடியது போல் இருக்கும். எனக்கும் இருந்தது. VTV க்காக பத்தாண்டு பின்னோக்கி கூட வாழலாம். ஜெஸி போன்ற பெண்கள் எல்லாம் நாம் பார்க்கும் முதல் பார்வையில் காதலில் விழ வைக்கும் வம்சம். புது காட்டன் புடவை வாசத்தோட எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் எந்நேரத்திலும் ஆண்களை காதலில் விழ வைக்க கூடிய ஆபத்தானவர்கள்.
கார்த்திக்கு ஜெஸி ஒரு அழகான ஆபத்து. நாம் நண்பர்களாக இருக்கலாம் இல்லை காதலர்களாக தொடரலாம் என்கிற குழப்பத்தை தோற்றுவிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஜெஸிதான். "என்னை ஏன் பிடிக்கும்?" என்று கேட்கும் ஆண்களிடத்தில் "உன் கண் வழியா என்னை யாரும் பார்க்கலை"ன்னு சொல்லும் ஒவ்வொருத்தியும் பசங்களுக்கு ஜெஸி தான். ரெண்டு பேர் மீட் பண்ணாங்க, பழகினாங்க, சுத்தினாங்க, காதலிச்சாங்க, ஒண்ணு சேர முடியாமல் போனாங்க. இதுவொரு சாதாரண காதல் கதைதான். தன்னுடைய லட்சியத்திற்கும் தன் காதலுக்கும் இடையே அலைகழிந்த கார்த்திக் இங்கே ஏராளம். இது சாதாரணமில்லை. கடைசியா தான் சாதிச்ச பிறகு தன்னுடைய காதலியை கூட்டிட்டு வந்து காட்டி பெருமிதம் கொள்ளும் கார்த்தியை கொண்டாடியே ஆகணும். ஒரு காதலி குட்பை சொல்லிட்டு போகும் போது அவள் மறையும் வரையில் பார்த்து ரசிக்கும் கார்த்திக் எப்போதும் வாழ்வான்.
வாழ்வான் தானே?
https://youtu.be/YFYiTS46x-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக