புதன், 9 அக்டோபர், 2019

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் வாழ்க்கை துணைகளை இழந்த பிறகு அல்லது பிரிந்த பிறகு மறுமணம் செய்து கொள்வது சரியா, தவறா?

" என்னது மறுமணமா ??? அதெல்லாம் பெரிய குற்றம் ! " என இன்றும் சிலர் கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மறுமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது ?


துணையின்றி இருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ விருப்பப்பட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம்.

" தனிமை கொடியது !" - இது தனிமையில் வாழ்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

உலகிலுள்ள பெரும்பாலானோர் ஒரு துணையுடன் வாழவே விரும்புகின்றனர். சிலர் துணையின்றி வாழவும் விரும்புகின்றனர்.

இக்காலகட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் நம் நாட்டில் மறுமணம் செய்ய தொடங்கிவிட்டார்கள். இது பலரால் வரவேற்கப் பட்டாலும் சிலர் இதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்றும்கூட நம்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களுக்கு அவ்வளவாக நல்ல வரவேற்பு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. மாறாக சில பழி சொற்கள் தான் கிடைக்கின்றன.

மறுமணம் செய்து கொள்வதோ அல்லது தனியாக வாழ்வதோ அவரவர் விருப்பம்தான்.

"மறுமணம் செய்து கொள்பவர் ஆணாக இருந்தாலும் சரி ! பெண்ணாக இருந்தாலும் சரி ! எந்த ஒரு தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக