ஒரு சிறிய குழந்தையை நீங்கள் எப்படி வளர்ப்பீர்கள்?
2008..செப்டம்பர் மாதம் என் செல்ல மகன் பிறந்த தினம் … இப்போது 12 வயது பூர்த்தி ஆகிறது.
நாங்கள் கற்று கொடுத்த சில நல்ல பழக்க வழக்கங்கள்:
வாங்க, போங்க என்று மரியாதையாக பேசுவது.
எடுத்த பொருட்களை திரும்ப அதே இடத்தில் கொண்டு போய் வைப்பது.
தவறு செய்துவிட்டால் , “மன்னிப்பு” கேட்பது
உதவி கிடைத்தால் “நன்றி” தெரிவிப்பது.
மற்ற குழந்தைகளுடன் விளையாடிய பொருட்களை , நம் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்பதை அவருக்கு தெளிவாக கூறி உள்ளோம்.
காபி குடித்த தம்பளர்களை ..சுற்றி பார்த்து..எடுத்து கொண்டுபோய் சமையல் அறையில் வைப்பது.
தாத்தா பாட்டிக்கு .மற்றும் நண்பர்களுக்கு .சின்ன சின்ன உதவிகளை செய்வது.
தன்னை விட பெரியவர்களை பெயரிட்டு கூப்பிடாமல் “அண்ணா”..அக்கா என்று கூப்பிடுவது.
தன்னுடைய பொருட்களை கவனத்தோடு , தொலைந்து போகாமல் ,பார்த்து கொள்வது.
தன்னுடைய செருப்புகளை கழற்றி விடும் போது அதை ஜோடியாக அடுக்கி வைப்பது. ( கூடவே மற்றவர்களுடைய செருப்புகளை கூட அவர் அழகாக அடுக்கி வைத்து விடுவார் .)..இன்னும் விடுபட்டவை ஏராளம் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக