ஒரு தந்தையின் கடமை ....
சுடு சோம்பேறிகள்........
செல்போனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்?
அலைபேசி, திறன்பேசி, கைபேசி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டாலும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு பெற்றோர்கள் பரிசாக வழங்குவதை சமீப காலமாக அதிகம் பார்க்கிறேன். அவர்களின் அடுத்த மூன்று ஆண்டு கால பள்ளி வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடுகின்றது.
என் மகள்களிடம் சொன்ன விசயங்கள் இது. தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.........
கல்லூரி செல்லும் போது அலைபேசியை உங்களுக்கு வாங்கித் தருவேன். நீங்க விரும்பும் BRAND எதுவாக இருந்தாலும் வாங்கித் தருவேன். அத்துடன் நீங்க விரும்பும் சேர்க்க வேண்டிய சமாச்சாரங்களையும் வாங்கித் தருவேன். ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மகள்களும் சரி என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தோழிகள் ஒன்பதாம் வகுப்பு முதல் பயன்படுத்தி வருகின்றார்கள்.
1. சாலையில் செல்லும் போது இது போலப் புலம்பிக் கொண்டு செல்லக்கூடாது.
2. ஆறாவது விரல் போல உங்கள் கைகளில் வைத்திருக்கக்கூடாது.
3. குறுகிய கால பயணங்களில் இயர் போன் மாட்டிக் கொண்டு சுற்றிலும் இருப்பவர்களைப் பார்க்காமல், பார்வையிடாமல் சங்கீதங்களை ரசிக்க வேண்டிய அவசியமில்லை.
4. செட்டிங் அமைப்பில் முதலில் நோட்டிபிகேசன் சமாச்சாரம் அனைத்தையும் நீக்கி விட வேண்டும். முடிந்தால் நிரந்தரமாகத் தூங்க வைத்து விடவும்.
5. குறைந்தபட்சம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப் ல் இரண்டு மொழி அறிவை வளர்க்க, சோதிக்க உதவும் ஆப் களை வைத்திருங்கள்.
6. படம், பாட்டு, ஸ்டேட்டஸ், என்று எது வேண்டுமானாலும் பாருங்கள்.... கேளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்.
7. கல்லூரிக்குள் செல்லும் போது நிரந்தரமாகத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைத்து விடுங்கள். விடுதியில் தங்கி இருந்தால் படிக்கத் துவங்கும் நேரத்தில் சைலன்ஸ் மோடில் போட்டு வைத்து விடுங்கள்.
8. ஃபார்வேர்டு செய்திகளை படிக்காதீர்கள். உங்கள் சொந்த விபரங்களைப் பதிவேற்றாதீர்கள். எந்த ஃபார்வேர்டு செய்திகளையும் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். சாட்டிங் செய்கிற நேரத்தில் ஒரு மணி நேரம் அரட்டை அடிக்க வேண்டும் என்றால் கூட பரவாயில்லை. சம்மந்தப்பட்டவரை அழைத்துப் பேசுங்கள். அத்துடன் அதனை விட்டு வெளியே வந்துடுங்க.
9. பெண் தோழியாக இருந்தாலும் கருமாந்திரங்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தால் அவரை அழைத்து இலக்கிய செந்தமிழில் உள்ள வார்த்தைகளைப் பேசி உங்களை யார் என்று காட்டுங்கள். ஒரு முறை பார்க்கப் பழகி விட்டால் அந்த காட்சி உங்கள் மனதிலும் ஓடிக் கொண்டேயிருக்கும். அது குறித்த தேடலும் அதன் பிறகு உருவாகத் தொடங்கி விடும். அதுவே நிரந்தர பொழுது போக்காகவும் மாறிவிடும்.
மொத்தத்தில் தொழில் நுட்பம் உங்களுக்கு எதிர்கால தொழில் வாழ்க்கையை அடையாளம் காட்ட வேண்டும். உங்கள் செயல்பாடுகளால் அப்பா அம்மா பணிபுரியும் தொழிலைக் காவு வாங்கி விடக்கூடாது.
|
வியாழன், 3 அக்டோபர், 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக