புதன், 9 அக்டோபர், 2019

உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலகட்டம் எது?

ஆண்கள் பலர் சொல்லாத பதில் இது.

என் திருமணதிற்கு பிந்தைய காலகட்டமே எனக்கு மிகவும் சந்தோஷமானது.

என் மனைவியை போல் சிறந்த, நெருங்கிய நண்பர் எனக்கு இதுவரை வாய்த்ததில்லை. அவரிடம் நான் எதையும் மறைத்ததில்லை. அவர் வந்த பிறகான நாட்களே எனக்கு இனிமையானவை.

ஒவ்வொரு நாளும் என் பணி முடியும் நேரம் நெருங்கும்போது “ எப்படா வீட்டுக்கு போவோம், அவளிடம் வம்பு அளப்போம் ” என காத்திருப்பேன்.


நான் மாதம் ₹4500 (2004)சம்பாதித்த போது என்னை கை கோர்த்த என் மனைவி, இப்போது அதைவிட பல மடங்கு சம்பாதித்தாலும் துளியும் மாறாமல் அதே எளிமையுடன் இருப்பவர்.

நான் ஒரு சுதந்திர விரும்பி. எதிலும் மற்றவர் தலையீடு விரும்பாதவன். ஆனால் என் பெற்றோருடனான காலம், “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படம் போலானது.

என் மனைவி வந்த பின்பு தான்

என் ஆணாதிக்க மனோபாவம் சிதைந்தது.
பெண்களின் புற அழகைக்காட்டிலும் அக அழகு மேன்மை எனப்புரிந்து கொள்ளக் கற்றுக்கொண்டேன்.
பெண்களின் முடிவுகள் பல எதிர்காலத்திற்கானது என தெரிந்தது.
என் தன்னம்பிக்கை,பொறுமையின் அளவு அதிகரித்துள்ளது.
இறந்த கலத்திற்காக கவலைப்படுவதை நிறுத்திக்கொண்டேன்.
புறம்பேசுவது நின்றது.
நேர் மறை எண்ணங்களே இப்போது பெரிதும் மனதில் நிரம்பியுள்ளன.
கடவுளை விட மனிதர்களே முக்கியம் என தெளிந்தேன்.
போதும் என்ற எண்ணம் எவ்வளவு தெளிவையும் நிம்மதியையும் கொடுக்கும் என புரிந்தேன்.
குறைந்த பட்ச பொருள்வாழ்க்கை (minimalism) என்றால் என்ன என்றே தெரியாமல் என் மனைவி அதை வாழ எனக்கு கற்று கொடுத்துள்ளார்.
100 சதம் நல்ல மனிதனாக இல்லாவிடினும் இந்த நல்ல மாற்றங்கள் என் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக