தெரிந்தோ தெரியாமலோ ....
ஆசாமி யூட்யூபில் பேமஸாகி விட்டார். இரண்டு யூட்யூப் சானல்களில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இவரது வீடியோக்கள் பேஸ்புக்கிலும் வாட்ஸாநிறைய ஷேர் செய்கிறார்கள். மிடில் க்ளாஸுக்கு எழும் பொருளாதார பிரச்சினைகள், பணம் ஈட்டுதல், எதிர்காலம் குறித்த கேள்விகள் இவரிடம் முன்வைக்கப்படுகின்றன.
முன் வைக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பொருளாதாரம், நாட்டு நடப்பு இவற்றில் கொஞ்சமாக புள்ளி விபரங்களை தெரிந்து வைத்துக்கொண்டு டான் டான் பதில் கூறுகிறார். இவர் வாயிலிருந்து இதுவரை வாழ்க்கையில் முன்னேற ஒரேயொரு உருப்படியான ஆலாசேனையைக் கூட வந்ததில்லை.
சார்.. ஷேர் மார்க்கெட்ல பணம் போடலாமா?
போடாதீங்க.. தொடைச்சிட்டு போயிரும்
ம்யூட்சுவல் ஃபண்டு?
வேனாம்.. மொத்தமா அடிச்சிட்டு போயிடும்..
சிறு தொழில் ஆரம்பிக்கலாமா?
இப்ப வேனாம்.. சரியான நேரம் இது இல்ல.. ஒரு பத்து வருஷம் போவட்டும்..
சார்.. இடம் வாங்கலாமா?
வானவே வானாம்.. ரியல் எஸ்டேட் டவுன் இப்ப..
வானவே வானாம்.. ரியல் எஸ்டேட் டவுன் இப்ப..
அபார்ட்மெண்ட்?
எதுக்கு..? அதுல அப்ரிசியேஷனே கிடையாதுங்க..
எதுக்கு..? அதுல அப்ரிசியேஷனே கிடையாதுங்க..
கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் ஸார்..
அந்தமாறி நெனப்பிருந்தா இப்பவே மனசுல இருந்து அழிச்சிடுங்க.. உங்களால செலவ சமாளிக்க முடியாது
ஸார்.. எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சி.. கொழந்தயாச்சும் பெத்துக்கலாமா?
நோ வே... இருக்கற பணத்த எல்லாம் அதுங்களுக்கு செலவு பண்ணிட்டீங்கன்னா கடைசி காலத்துல சோத்துக்கு என்ன பண்ணுவீங்க..!!
நல்லதா ஒரு சேவிங்க்ஸ் ஸ்கீம் சொல்லுங்க சார்..
மூனே மாசத்துல ஏதாச்சும் பெருவியாதி வந்து செத்துருவீங்க.. இல்லனா நாளைக்கே சுனாமி வரலாம்.. எங்கயாச்சும் எரிமலயோ பூகம்பமோ வெடிக்கலாம்.. எதுக்கு உங்களுக்கு சேவிங்ஸூன்னேன்!!
இப்படியாகத்தான் அவரது பதில்கள் இருக்கின்றன. இவரது சித்தாந்தத்தின் படி மிடில்கிளாஸ் என்றால் எல்லாக் கனவுகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு மூனு வேளை சோத்துக்கு வழிபண்ணிக்கொண்டு ரிஸ்கே எடுக்காமல் காலம் தள்ளவேண்டும். அதுதான் வாழ்க்கை. சின்னச்சின்ன ரிஸ்க் இல்லாமல் இந்த அவசர உலகத்தில் ஒரு கேசத்தில் ஒரு இழையைக்கூட புடுங்க முடியாது என்று யாராவது இவரிடம் தெரிவியுங்கள்.
அண்ணாத்தை எப்போதும் கையில் ஆப்பிள் வாட்ச் கட்டிக்கொண்டுதான் பேசவே ஆரம்பிக்கிறார். ஆனால் ஆலோசனை பெறுகிறவர்களை மட்டும் எப்போதும் ரவா கஞ்சியே காய்ச்சி குடித்துக் கொண்டிருக்க வழி சொல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக