தீபாவளி .....2019..கோயமுத்தூர் ...
தீபாவளி என்றவுடன் சிறிய வயதில் கொண்டாடிய நினைவுகள் இப்போது
சாரளாக பெய்து கொண்டிருக்கும் மழைபோல் வந்துசெல்வது இயல்புதானே ...
என்னதான் சிறுவயதில் உடுமலையில் கொண்டாடிய தீபாவளி எப்படி மறக்க இயலாதோ .அதுபோல் கோவையில் .பணியில் சேர்ந்த பின் தீபாவளியும் ...வாழ்க்கையில் பெரிய தாக்கத்தையோ நினைவுகளையோ திரும்பி பார்க்கவைப்பதில்லை ....வாழக்கையில் தனக்கு பிடித்த மனைவி வந்த பிறகும் ,வாழ்க்கைச்சக்கரத்தில் செல்ல மகனோ ,செல்ல மகளோ வந்தபிறகு வரும் தீபாவளி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் தன்னம்பிக்கை ....
தீபாவளி வருவதற்கு ஒரு வாரம் முன்னோரே ..அந்த பரபரப்பு தொற்றிக்கொள்ளும் ..தீபாவளிக்கு முன்னர் வரும் வெள்ளி மாலை ,சனிக்கிழமை ,ஞாயிறு ..செல்ல ஷியாம் உடன் உட்சாகத்துடன் வடவள்ளி மருதமலை சாலையில் ..அந்தி மாலை நேர மலை மற்றும் மழை சாரலுடன் காரில் அழகாக செல்ல மகனுடன் நெரிசல் மிக்க பாப்பநாயக்கன்புதூர் தாண்டி தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பூத்துக்குலுங்கும் மலர் செடி கொடி மரங்கள் ,பரந்து விரிந்த மரக்கிளைகள் கொண்ட பசுமையை பார்த்துக்கொண்டு பரவசத்துடன் ...எப்போதும் கலகலப்பாக இருக்கும் கலர்புல் லாலிரோட்டை கிராஸ் செய்து ...காரின் சுழலும் சக்கரத்தின் வேகம் ..புது மணப்பெண் எடுத்துவைக்கும் பாதங்கள் போல் திவான்பகதூர் சாலையில் சக்கரத்திற்கும் ரோட்டிற்கும் படாமல் மிதந்து செல்லும் அழகே அழகு... காந்திபார்க் ரவுண்டானா முதலே வாகன நெரிசல் ஆரம்பித்துவிடும் ...
மெதுவாக அடி மேல் அடிவைத்து மெல்ல ஊர்ந்து சென்று டவுன் ஹால் வாகன நிறுத்த இடம் இல்லாமல் காத்திருந்து வாகனத்தை பார்க் செய்வதற்கு முன்னரே வீட்டு நிதிநிர்வாகிமற்றும் உள்துறை அமைச்சர் காரிலிருந்து இறங்கி நல்லி சில்க்ஸ் கடையில் வரவேற்பு பெண்மணியிடம் பட்டு சரிகை இருக்கும் பகுதியை கேட்டுக் நடந்து செல்ல தயாராக இருப்பார் ...நானும் ஷ்யாமும் ...அப்படியே கடையின் எங்காவது உட்கார நாற்காலியோ ,ஷோபாவோ இருக்கிறதா என்று சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை கண்டது போல் உற்சாகமே தனிதான் ..எப்படியும் வர குறைந்தது ஒரு ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று தெரியும் .நாங்கள் உட்கார இடம் கிடைத்த சந்தோசம் படிக்கச் பெரிய பள்ளியில் கிடைத்த சந்தோசம் மாதிரி இருந்தது ..அதுமுடிய எங்களுக்கு என்ன வேலை ...பட்டு துணி வாங்கிக்கொண்டு போகும்போது ..துணிப்பைகள் எத்தனை புது டிசைன்களாக வந்தது ,ட்ராவல்ஸ் பை வாங்குகிறார்களா பார்த்துக்கொண்டு இருப்போம் ...அப்போது தானே நாங்கள் வாங்கும்போது ..அந்த மாதிரி கட்டை துணி பை இல்லையென்று சொன்னால் ..எங்களுக்கு முன்னேற வாங்கிச்சென்றர்களே என்று சொல்லி துணிக்கடைக்காரர் முகம் மலர எடுத்து தருவார் ...பழுத்த மாத சம்பளம் கார்டின் தேய்மானம் ஆரம்பித்துவிடும் ...
அப்படியே அடுத்த டார்கெட் ...கேரளாவின் ஜிமிக்கி கம்மல் ,வளையல் கடைகளின் நுழைந்து கல்யாணத்து கூட இவ்வளவு கொள்முதல் செய்து இருப்பார்களா என்று நினைவில்லை...உள்துறை அமைச்சர் கடைக்குள் இருக்கும் போதே ...நானும் ஷ்யாமும் அழகாக நழுவி சென்று சேட்டு கடையில் விற்கும் பாப்கார்ன் (நம்ம சோளப்பொரி )இருக்கும் ,கரும்பு பால் குடித்துவிட்டு ...கம்மல் கடை முன் முகத்தை சோகமாக ,சோர்வாக வைத்துக்கொள்வோம் ...உள்துறை அமைச்சர் எங்களின் முகத்தை பார்த்த உடனே ..உங்களுக்கு தான் சட்டை ,வேஷ்டி ,பாண்ட் எடுக்கவேண்டும் உட்சாகமாக சொல்லிக்கொண்டு ...வாங்க சூடா அன்னபூர்ணாவில் காபி குடிச்சுட்டு ...சென்னை சில்க்ஸ்ல் ஷியாம்க்கு விஜய் ஸ்டைலில் சும்மா மாஸா எடுத்துவிட்டு ,கடைசியில் நம்மளுக்கு போத்தீஸ்ல் கமல் மாதிரி சட்டை யும் பேண்ட்ம் ,அப்படிக்க சும்மா மாப்பிள மாதிரி ராம்ராஜ் வெள்ளை வேஷ்டி சட்டையும்,வாங்கி கொண்டு ,கார்டை தேய்க்கும் போதுதான் தெரியும் அந்த மாதத்துக்குக்கான மொத்தம் பணமும் கரைந்த இருக்கும் ..வருடம் ஒருமுறை முறைதான் செலவு செய்கிறோம் ..நம் சந்தோசத்திற்கு ,இந்திய பொருளாதாரத்துக்கு ,நாட்டின் செல்வச்செழிப்பிற்கு தீபாவளியின் மகிழ்ச்சி பொங்குவது தப்பில்லை ...பார்க் செய்த காரை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் ...கூட்டத்தில் நம் காரை (சுமந்து செல்லும் உயிர் ) கண்டவுடன் முகத்தில் தெரியும் சந்தோஷத்துக்கு அளவு இருக்காது ..நம்மை சுமந்து செல்லும் காருக்கு உயிர் இருக்கும் என்பதை அப்போது தெரிந்துகொள்ளலாம்...டவுன் ஹாலையே சுற்றி கொண்டிருந்தால் எப்படி ..
கோவையின் இதய பகுதி காந்திபுரம் கிராஸ் கட் ..இறங்கி காலரா ரோடில் நடந்து சென்று நடை பாதை கடை ,மற்றும் ஸ்ரீதேவி ,சென்னை சில்க்ஸ் ,ஈரோட்டின் PSR சில்க்ஸ் சென்று கடைக்குள் பராக் பார்த்துவிட்டு...இரவு ஒன்பது மணி க்கு மேல் ஆகிவிடும் .. கோவை மக்களின் உற்சாக முகங்களை பார்க்கும் போது எப்படி சோர்வு வரும் ..கடைசியாக லட்சுமி பிளாசா வில் நுழைந்து கீழ் மாடி ,மேல்மாடி சென்று ,பெல்ட்டும் ,தலை கிளிப்புகள் ,வாங்கிய பின் தான் தெரியும் முகத்தின் சோர்வு..அப்படியே லட்சுமி பிளாசா அன்னபூர்ணாவில் ...வெங்காய தோசையும் ,காபி குடித்தவுடன் மறுபடியும் உட்சாகம் தொற்றிக்கொள்ளும் ..அப்படியே வடகோவை சிந்தாமணியில் குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்கி கொண்டு ...மெதுவாக காரின் சக்கரங்கள் யாரையும் கேக்காமலே ...
கோவையின் தூங்கா மாநகர் என்று செல்லமாக மலர்களின் வாசம் கமழும் அங்காடிகள் பூமார்க்கெட் கடைகளுக்கு சென்று மலர்களை வாங்கி கொண்டு ...லாலி ரோட்டை தாண்டியதும் நம்மை சுமந்துசெல்லும் காரின் வேகம் கொஞ்சம் கூடும் ...அந்த மலர் மரங்கள் ,கொடிகள் ,அயர்ந்து தூங்கிக்கொண்டு மரக்கிளைகளில் பளீர் என்று தெரியும் ஆந்தையின் கண்கள் ...ஒளி உமிழ்ந்துகொண்டிருக்கும் ...அந்த மருதமலை வடவள்ளி சாலையின் அமைதி பெருத்தக்கடலின் அமைதி போல் இருக்கும் ...இந்த நினைவுகள் ,இந்த ஆரவாரம் மிக்க தீபாவளி கொண்டாட்டங்கள் ...இப்போது சூழ்ந்திருக்கும் பொருளாதார தளர்வுகள் எப்பொழுது மீண்டு எழும் ,இன்னும் எத்தனை மாதம் .?..எத்தனை வருடம் ஆகும் ?
என்று தெரியாது ...ஆனால் நம்பிக்கை மட்டும் இழக்காமல் ...இந்த மகிழ்ச்சி ,இந்த ஆரவாரம் ,மீண்டும் வர காத்திருப்போம் ...நம்பிக்கை தானே வாழ்க்கை ...தீபாவளியின் வாழ்த்துக்களோடு காத்திருப்போம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக