திங்கள், 7 அக்டோபர், 2019

சாதகம் பார்ப்பதில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும்?

உங்களுக்கு நான் கண்ட இரண்டு நிகழ்வுகளை சொல்கிறேன்,
என் நண்பருடைய சாதகத்தை பார்த்த ஒரு ஜோதிடர் சொன்னார், இவருக்கு அமையும் பெண்னுக்கு சுருள் முடியாகவோ, முகத்தில் அம்மையால் ஏற்பட்ட தழும்பு இருக்கும் என்றார். மற்றொருவர் முகத்தில் பார்த்ததும் தெரியும் அளவு மச்சம் இருக்கும் என்றார். இன்னொருவர் அழகான பெண் தான் அமையும், நிலவு போல முகம் என்றார். இப்படி பெண்ணை பற்றி சொன்னார்கள் ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் சொல்ல வரும் கருத்து ஒன்று தான் பெண்ணை கூட்டத்தில் எளிதில் அடையாளம் சொல்லும்படி இருப்பாள்.

அடுத்த நிகழ்வு என் இன்னொரு நண்பர் ஒரு பெண்ணை காதலித்தார். பெண் வீட்டாருக்கு முழு சம்மதம். ஆனால் அவரின் தந்தைக்கு துளியும் விருப்பம் இல்லை காரணம் இருவருடைய சாதகம் பொருந்தவில்லை. பொருத்தம் இல்லை என்பதை வீடே இவற்றை 'குப்பை சாதகம்' என்பார்களாம். பொருந்தவே பொருந்தாத சாதகங்களை அப்படி சொல்வார்கலாம். அவரும் தனிப்பட்ட முறையில் சில சோதிடரகளை சந்தித்த போதும் அதே பதில் தான். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் பிள்ளை உள்ளது.

என்னை பொருத்த வரை மருத்துவம் பார்த்து இறந்தவனும் உண்டு பிழைத்தவனும் உண்டு.

மருத்துவம் ஒன்று தான் மாறுவது. மருத்துவரும், நோயாளியும் தான். சோதிடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர் நல்ல முறையில் சொல்ல முடியும் சிலர் மேன்போக்காக கற்றுவிட்டு கதை அளப்பர். அடுத்த நொடி என்பது ரகசியம் அது தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் போய்விடும். நல்லதோ கெட்டதோ நாம் எடுக்கும் முடிவுகளை பொறுத்தது நல்லதை நினையுங்கள் நல்லது நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக