செவ்வாய், 29 அக்டோபர், 2019

வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா?

உண்மையிலேயே லாபகரமானது.

வருமானம் தேவைப்படுகிறது.

கையில் உள்ள பணத்தை எதில் போடுவது.

நிலத்தில் போடலாம்.

விவசாயம் செய்யலாம்.

ஆனால் நாம் அந்த விவசாய நிலத்திற்கருகே இருக்க வேண்டும். அப்பொழுது தான் முழுப்பலனைப் பெறமுடியும்.

விவசாய நிலம்வாங்கனும் அதில் நீரைஉருவாக்கனும். அந்த விவசாய மண்ணிற்கேற்ற பயிர் பச்சைகளை போடவேண்டும்.

பலன்பெற சிறிது காலம் ஆகும்.

போட்ட காசை எடுக்க முடியாது.

மனம் நிறையும். பச்சை பசேல் என்ற நிலத்தை பார்க்கும் போது ஏற்படும் மனநிறைவை அனுபவத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

சரி வீட்டிற்கு வருகிறேன்.

உடன் வருமானம் வேண்டும்.

சொந்தமான வீட்டுமனை இருந்தால் உடன் தச்சு(கடக்கால்)போடவேண்டியதுதான்.

கையில் காசு வைத்துக்கொண்டு வீட்டைக்கட்டினால் நல்லது.

அப்படி இல்லாதபட்சத்தில் நல்ல  வங்கியில் குறைந்த அளவு கடனும் குறைந்த வருட தவணையும் பெற்றுக்கொள்வது சிறந்தது.

அடுத்து உங்கள் குலதெய்வத்தைவேண்டிக்கிட்டு உங்கள் ஊர் மாரியாத்தாள வேண்டிக்கிட்டு நல்ல கொத்தனாரோ நல்ல இன்ஜீனியரோ தேடுங்கள்.

ஆறேமாதம்தான் வீடு ரெடி.உடன் பாலைக்காய்ச்சி குடி வைச்சுரலாம்.

ஊரைப்பொருத்து வாடகை அதிகமாகக் கிடைக்கும்.

இப்படித்தான் நான் தைமாசம் சாமி கும்பிட எங்க ஊரானதளி ஜல்லிபட்டி  சின்னகிராமத்திற்கு போயிருந்தேன்.

எங்க ஊரில ஒரு பலசரக்கு கடை கூட இல்லை. இரண்டே இரண்டு மட்டமான டீக்கடைதான் இருக்கும்.

திருவிழா நேரத்தில் சின்ன சின்ன திடீர் கடைகள் இருக்கும்.


எனவே யோசிக்கவே வேண்டாம். வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுங்க.நல்ல நாணயமான குடித்தனக்காரர்களை குடி வையுங்கள்.

சாமர்த்தியமாக வாடகை வாங்குங்கள்.

எனக்கு தெரிந்ததை சொல்லிட்டேன்.

எல்லாத்துலையும் நல்லதும் கெட்டதும் இரண்டும் இருக்கும். நல்லதையே நினைப்போம்.

நன்றி.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681


நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?

கேட்டமைக்கு நன்றி….

எங்கடா 10... நாளாச்ச இன்னும் கல்யாணம், குடும்பம் பற்றி ஏதும் கேள்வியே வரலேயே நெனச்சேன்,இதோ வந்துட்டேன்னு சொல்ற மாதிரி ஒரு கேள்வி…..

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ?

எங்கயா பொண்ணு இருக்கு….

70ஸ் அண்ணா எல்லாரும் 80 பொண்ண கட்டிக்கிறாங்க…

80ஸ் அண்ணா எல்லாரும் 90 பொண்ண கட்டிக்கிறாங்க…

2k கிட்ஸ் எல்லாம் 2k கிட்ஸ்யே கல்யாணம் பண்ணிக்கிறாங்க..

90ஸ் கிட்ஸ் ஏது பொண்ணு எல்லாம்…?

அப்படியும் இருந்தா அவுங்களும் commited status போடுறாங்க…

90 கிட்ஸ் 2k கிட்ஸ் ஆஹ் கல்யாணம் பண்ணலாம் பார்த்த ,அவங்க சொல்றாங்க நாங்க outdate ஆய்ட்டோமா, அவங்க trendக்கு நாங்க இல்லையாம்

அப்படியும் போய் பொண்ணு கேட்டா…!

ஒரு பக்கம் இப்படி கேட்டு கழுத்தை அருபாங்கா…

மாப்ள அமெரிக்காவா,இல்லைங்க உடுமலை பெதம்பம்பட்டி

மாப்ள கிட்ட debit கார்ட் இருக்க இல்லைங்க, அவனுக்கு எல்லா பேங்க்லையம் debit மட்டும் தான் இருக்கு…
மாப்ள கிட்ட audi இருக்கா இல்லங்க ஆடி மாசத்துல ட்ரெஸ் வாங்க தான் காசு இருக்கு…
மாப்ள கிட்ட சொந்தமா வீடு இருக்கா இல்லைங்க அவன் மட்டும் தான் அவனுக்கு சொந்தமா இருக்கான்…
ஒரு பக்கம் இப்படி சொல்லி உயிரை வாங்குவாங்க.

என் பொண்ணுக்கு சமைக்க தெரியாது
துணி துவைக்க தெரியாது…
சேலை கட்ட தெரியாது,
குடும்பத்தை adjust பண்ணி போகத்தெரியது
இதெல்லாம் ஒருத்தன் கேட்டுட்டு கல்யாணம் பண்ணறாதுக்கு அவன் பேசாம சாமியார் ஆஹ் போயிரலாம்…….


குறிப்பு:திருமணம் ஆகாமல் இருக்கும் எல்லா 90ஸ் கிட்ஸ் இப்பதில் சமர்ப்பணம்…
இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை..

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு வாக்களித்ததற்கு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் பட்ட அவதியும் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இரு மாநிலங்களிலும் பிரச்சாரத்தின்போது மோடியும் அமித்ஷாவும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதைப் பற்றியே பேசியது நினைவிருக்கலாம். ஆனால்  காஷ்மீரில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இன்னும் சிறிது ஒருங்கிணைப்பு சரியாக இருந்திருந்தால் ஹரியானாவில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். 

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. 

எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் நிதியமைச்சர், இன்னாள் நிதியமைச்சரின் கணவர்.... இவ்வளவு ஏன், நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர் வரையிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சிறிது சிறிதாக நலிவடைந்து வந்துள்ளது என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம்தான் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை.

இதில் தான் சிக்கலே....

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விஷயத்தில் நடந்துக்கொள்வதுபோன்றுதான் மத்திய அரசும் பொருளாதார விஷயத்தில் self denial modeல் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதும் அது வேகமாக பரவி வருவதும் உண்மைதான் என்பதை தமிழக அரசும் பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை அடைந்திருப்பது உண்மைதான் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டாலே போதும், பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். 

இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதை அதன் பிறகுதான் எடுக்க முடியும். நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை... அமேஜான் ஆன்லைன் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சுமார் இருநூறு கோடிக்கு செல்பேசிகள் விற்பனை ஆகியுள்ளன... கடந்த ஒரே மாதத்தில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் முன்னூறு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன என்பன போன்றவற்றையெல்லாம் பாமரத்தனமாக சுட்டிக்காட்டி  இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தேக்கமும் ஏற்படவில்லை என்றெல்லாம் கூறிவருவதைப் பார்க்கும்போது இதே அமேஜானின் கடந்த வருட நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த லாபத்தை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பொருளாதரம் நலிவடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்ற அதிபர் டிரம்ப்புக்கும் நம்முடைய பிரதமர் மோடிக்கும் இடையில் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பது தெரிகிறது. 

இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது என்றால் உலகமெங்குமே இதே நிலைதான் என்று உலக வங்கியே கூறுகிறது என்கிறார் நிதியமைச்சர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிக, மிக குறைவு என்று நம்முடைய சுகாதார அமைச்சர் கூறுவது போல்தான் உள்ளது இது. நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!

சில தினங்களுக்கு முன் பொருளாதாரத்தில் 2019ம் ஆண்டுக்கான  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சரியான பாதையில் பயணிக்கவில்லை என கூறியிருந்ததை பத்திரிகைகளில் வாசிக்க முடிந்தது. அதாவது மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்துதான் இந்த நிலை என்பதை சூசகமாக கூறியிருந்தார் அவர்.

இதையேத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய மத்திய நிதியமைச்சரின் கணவரும் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் முந்தைய ஆட்சி காலங்களில் அதாவது நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் ஆகியோர ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் வழிநடத்திய முறையை பின்பற்றியிருந்தாலே இந்த சரிவை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ராஜன் அவர்கள் கூறும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் இந்திய பொருளாதாரம் முடங்கிப்போனதற்கு முக்கிய காரணம் என்றார். 

அதென்ன முக்கிய சீர்திருத்தங்கள்?

முதலாவது 2016ஆம் ஆண்டு அவசர, அவசரமாக மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

அதன் பாதிப்பில் இருந்து நுகர்வோரும், சிறு, குறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் மீள்வதற்கு முன்பே கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட .ஜி.எஸ்.டி வரி திட்டம்.

முதலாவது முடிவால் நுகர்வோர் கைகளில் இருந்த ரொக்கப்பணம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அப்படி சேர்ந்த தொகையையும் முழுவதுமாக மக்களை எடுக்க விடாமல் ரேஷன் முறையில் அலைக்கழித்தது. இது மட்டுமா? வங்கிகளும் கூட இந்த பணத்தை முழுமையாக பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்காமல் அதில் பெரும் விழுக்காட்டை முடக்கிப் போட்டது. ஆக நுகர்வோர் பணம் சந்தையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொருளாதார வல்லுநர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சந்தையின் தேவைகளை (Market Demand) பெருமளவு குறைத்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்தாலே அவர்களின் தேவையும் குறைந்துவிடும் அல்லவா? இதுதான் பொருளாதார வீழ்ச்சியின் துவக்கம்..

இரண்டாவது முடிவு தொழில், வணிகம் செய்வோரை முடக்கிப்போட்டுவிட்டது. வல்லுநர்கள் பாஷையில் வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை இந்த புது வரி உயர்த்தியதால் ஏற்கனவே வாங்கும் திறனை இழந்திருந்த நுகர்வோரிடமிருந்து வரக்கூடிய மீதமிருந்த தேவையையும் குறைத்துவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து (Supply) குறைந்துபோனது. 

பொருளாதார வீழ்ச்சியிலும் விலைவாசி அதிக அளவில் உயராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எப்படி?

நாளை பார்க்கலாம்....

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

அலுவலகமும் வீடும் ஒன்றல்ல.....

மேற்கூறிய மனப்பாண்மைகளை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களைந்தாலும் வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை முழுமையாக உணரும் வரையிலும் இரண்டையும் முழுமையாக நிர்வகிப்பது எளிதல்ல.

அலுவலகம் என்பது நாம் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றுசேரும் இடம். ஆகவே அதற்கென்றே பல சட்ட திட்டங்கள், ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி நடக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. அவற்றில் சிலவற்றுடன் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. அதுபோன்றே நம்முடன் பணியாற்றும் சிலருடன் நம்மால் ஒத்துப்போக முடியாமல் போகலாம். அவர்களுடைய சில பழக்கங்கள், பேச்சு, செயல்பாடு ஆகியவற்றுடன் நமக்கு உடன்பாடில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால் அத்தகையோருடன் ஒத்துப்போய்த்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத சக ஊழியர்களை விட்டு விலகிச் செல்கிறோம். நாம் உண்டு நம் வேலையுண்டு என இருந்துவிடுகிறோம்.

ஆனால் நம் வீடு அப்படியல்ல. நம்முடன் வீட்டில் உடன் வசிக்கும் அனைவரும் நம் சொந்தங்கள், ஒரே இரத்தம். ஆகவே அவர்களை அவர்களுடைய நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. அலுவலகத்திலுள்ளதைப் போன்ற சட்ட திட்டங்களையோ அல்லது ஒழுங்குமுறைகளையோ வீட்டிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். பல குடும்பங்களில் குடும்ப தலைவன் வைத்ததுதான் எழுதா சட்டம். இதை குடும்பத் தலைவியிலிருந்து குடும்பத்திலுள்ள அனைவரும் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்திலுள்ளவர்களை நிர்பந்திக்க எண்ணுவது காலங்கடந்த செயல் என்பதை ஆண்கள் பலரும் உணர்வதில்லை. இதை என்றைக்கு உணர்கிறார்களோ அன்றுதான் வீடு வீடாக இருக்கும்.

அலுவலகத்தின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்கவில்லையென்றால் வேலையை உதறிவிட்டு சென்றுவிட முடியும். ஏனெனில் நம்முடைய நோக்கம் ஊதியம் மட்டுமே. மாறாக நாம் பணியாற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதல்ல. எந்த நிறுவனம் நமக்கு அதிக ஊதியம் அளிக்க முன்வருகிறதோ அதற்கு நம்முடைய உழைப்பை அளிக்க முன்வருகிறோம்.

இப்போதெல்லாம் குடும்பத்திலுள்ளவர்களுடன் ஒத்துப்போக முடியாமல் போகும் சூழலில் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற மனப்பாங்கு சிலரிடம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையோருக்கு அது இன்றும் அத்தனை எளிதல்ல. சொந்தங்களை உதறிவிட்டு செல்வது எளிதல்ல என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நம் நாட்டை பொருத்தவரை இன்றும் திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே என்கிற மனப்பாங்கு வெகு சிலரிடமே காணப்படுகிறது.

இதில் வேறொரு உண்மையும் உண்டு. 'என்னுடைய ஆஃபீஸ் பிரச்சினைய சால்வ் பண்றதுக்கே எனக்கு நேரம் போற மாட்டேங்குது இதுல வீட்டு பிரச்சினைகள வேற எங்கிட்ட ஏன் சொல்லி என் டென்ஷன் பண்றே?' இது பல ஆண்கள் தங்களுடைய மனைவியிடம் கூறும் முறையீடு. ஏதோ வீட்டு பிரச்சினை பெண்களின் பிரச்சினை என்பதுபோல. Charity begins at home என்பதுபோன்று வீட்டு பிரச்சினை தீராமல் அலுவலக பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. வீடு வீடாக இருக்கும் வரைதான் அலுவலகத்தில் நாம் திறம்பட பணியாற்ற முடியும். அலுவலக தோல்விகளில் சிலவற்றிற்கு வீட்டிலுள்ள சுமுகமற்ற சூழலும் கூட காரணிகளாக இருக்கலாம். அதுபோன்றே குடும்பத்தில் ஏற்படும் சில சச்சரவுகளுக்கு அலுவலக தோல்விகளும் காரணிகளாக அமையலாம்.

ஆகவே வீடும் அலுவலகமும் வெவ்வேறு என்றாலும் இரண்டையும் சரிவர நிர்வகிப்பது நம்முடைய வெற்றிக்கு மட்டுமல்லாமல் மனநிம்மதிக்கும் மிக, மிக அவசியம்.


பணிக்கு செல்லும் பெண்கள்......

 பணிக்கு செல்லும் பெண்களுக்கு அதிகார ஏணியில் இன்று பல பெண்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத நிலைகளில் அமர்ந்துள்ளனர். ஆகவே நிர்வாக பொறுப்பிலுள்ள ஆண்கள் உள்ளாகும் அனைத்து மனப்பதட்டங்களுக்கும் இத்தகைய பெண்களும் உள்ளாக வாய்ப்புண்டு.

அதிகார வர்க்கத்தில் ஆண்களுக்கு நிகரான நிலையிலுள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத பொறுப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலகத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு நிர்வாகத்தில் அதே அளவுக்கு பங்கு இல்லை என்பதும் உண்மை. குறிப்பாக, பெண்கள் பணிக்கு செல்லாத காலத்தில் இருந்துவந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்றும் அவர்கள் தலையில் சுமையாக உள்ளது.

குடும்பத்திற்கு தேவையானவற்றை (சமையல் சாமான்கள் எனப்படும் மளிகை, காய்கறி ஆகியவற்றிலிருந்து டாய்லெட்றி எனப்படும் சில்லறை பொருட்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போவதுண்டு) கொள்முதல் செய்வது, சமைப்பது, குழந்தைகளுடைய வீட்டுப் பாடம் உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வது , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக/பேராசிரியராக பணிபுரியும் பெண்களுக்கு அடுத்த நாள் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் செய்வது, தேர்வுத்தாள்களை திருத்துவது ஆகியவை வெறுப்பையளித்தாலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களில் சில.

எனவே ஆண்களை விடவும் அதிகமான அளவு மன உளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்றால் மறுப்பதற்கில்லை.

இதை எப்படி எதிர்கொள்வது?

அ) குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது

புருஷ லட்சணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதுபோன்ற பண்டைகாலத்து நிலைப்பாட்டை முழுமையாக கைவிடுவது. சமையலில் இருந்து குழந்தைகளை குளிக்க வைத்து, உடை மாற்றி, உறங்க வைப்பது வரை ஆண்களையும் துவக்கத்திலிருந்து (அதாவது திருமணம் ஆன நாளிலிருந்தே) ஈடுபடுத்துவது. குடும்பத்தில் ஆண்கள் செய்யத்தகாத வேலை என்று ஒன்றுமே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். வீட்டு அலுவல்களுக்கென பல்வேறு இயந்திரங்கள் பயன்பாட்டிலுள்ள இன்றைய சூழலில் எந்த அலுவலையும் எவ்வித கவுரவு இழப்பும் இல்லாமல் ஆண்களாலும் திறம்பட செய்ய முடியும் என்பதை ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பெண்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அவற்றுள் கணவனை தன்வயப்படுத்தி குடும்ப அலுவல்களில் தனக்கு உதவியாய் இருக்கச் செய்வதும் ஒன்று. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்பதுபோன்று ஆண்களை அவர்கள் வழியிலேயே சென்று குடும்ப அலுவல்களில் சரிபாதியை அவர்கள் தலையில் சுமத்துங்கள். உங்களுடைய சுமை வெகுவாக குறைந்துபோகும்!

ஆ) குழந்தைகளுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்துவது

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்களுடைய அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய முயல்வது தேவையற்றது. ஆங்கிலத்தில் இதைத்தான் Spoon feeding என்பார்கள். உண்ணும் உணவிலிருந்து, உடுத்துவது, படிப்பது என எல்லாவற்றிலும் அவர்களுக்கு உதவ முயலாதீர்கள். இப்போதெல்லாம் குடும்பத் தலைவிகளின் பெரும்பாலான நேரம் இதற்காகவே செலவிடப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு தேர்வு என்றால் அது குடும்பத்தலைவிகளுக்கே தேர்வு என்பதுபோலாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தேர்வு என்று தொடங்குகிறது என்பது கூட தெரிவதில்லை. இத்தகைய குழந்தைகள் தேர்வுகளில் வேண்டுமானால் முதலிடம் பிடிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெறுகிறார்களா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்வதும் கைநிறைய ஈட்டுவதும்தான் என்றால் ஒருவேளை அது இத்தகைய குழந்தைகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் திறம்பட நிர்வகிக்கக் கூடிய நல்ல நிர்வாக திறனுள்ளவர்களாக உருவாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய திறன் மிகவும் அவசியம். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவது மிக மிக அவசியம். இதனால் தங்களின் பாரமும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இ) வீட்டில் முதியவர்களின் வழிகாட்டுதல்

சமீப காலங்களில் nuclear family எனப்படும் நான், என் கணவர், என் குழந்தைகள் என யாரையும் குறிப்பாக கணவனின் குடும்பத்தினரை சார்ந்திராத குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவருவதை காண முடிகிறது.

வீட்டில் உடன் வசிக்கும் முதியவர்களால் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணரும் பெண்கள் தாங்களும் அந்த நிலையை அடையப் போகிறவர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. Generation gap எனப்படும் இரண்டு தலைமுறைகளுக்கிடையில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது மிகவும் சகஜம். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சச்சரவும் சல்லாபமும் கலந்ததுதான் தாம்பத்தியம் என்பார்கள். கட்டியவனுடன் சல்லாபமும் அவனுடைய குடும்பத்தாருடன் சச்சரவும் என்பதைத்தான் முன்னோர்கள் இப்படி நாசூக்காக கூறி வைத்துள்ளனரோ என்னவோ.

ஒரு குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கருத்து பேதங்களுக்கும் அதனால் ஏற்படும் சச்சரவுகளுக்கும் முதியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட பல சமயங்களில் காரணங்களாகிவிடுகின்றன. குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்துவிட்டால் குழந்தைகளை பேணுவதற்கு வீட்டில் முதியவர்கள் மிகவும் அவசியம். பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் குழந்தைகளுக்கு யாரும் இல்லாத வீடு ஒரு பெரிய வெற்றிடத்தை அவர்களுடைய மனதில் ஏற்படுத்துவதுதான் அவர்களால் ஏற்படும் பல சச்சரவுகளுக்கு காரணிகளாக அமைகின்றன . இந்த வெற்றிடத்தை போக்க வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டியால் நிச்சயம் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இருவேறு சுமைகளை ஏற்கனவே சுமந்துக்கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகளை பேணுவது என்ற பாரத்தையும் தனியே சுமக்க வேண்டுமா என்ன?

வீடு - அலுவலகம். இரண்டும் வெவ்வேறுதான் என்றாலும் இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒன்றில் நாம் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறோமோ அந்த அளவுக்குத்தான் மற்றதிலும் வெற்றிபெற முடியும் என்பதில் ஐயமில்லை.




மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது

குடும்பத்தில் நம்மைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள் ஜடப் பொருட்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டு. 'நம்மைச் சார்ந்திருப்பவர்கள்' என்ற வாக்கிலேயே அவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதலை எதிர்நோக்கியிருப்பவர்கள் என்பதும் தெளிவாகிறதே. 'குழந்தைகள் விஷயத்த எங்கிட்ட சொல்லாதே அத நீயே பாத்துக்கோ' என்று மனைவியிடம் வேண்டுமானால் விட்டுவிடலாம் ஆனால் மனைவியின் குறைகளை நம்மை விட்டால் யாரால் தீர்க்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.

ஒருநாளில் பத்து மணி நேரம் அலுவலகத்திற்கு ஒதுக்குவதில் ஆண்கள் யாரும் முறையிடுவதில்லை. ஆனால் ஒரு மணி நேரம் மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குவதென்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. 'ஏங்க சனி, ஞாயிறுலயாவது பசங்க என்ன படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு ஏதாச்சும் கேக்கறீங்களா?' இந்த முறையீடு இல்லாத வீடுகள் இன்று உண்டா என்று கேட்கும் அளவுக்கு சனி, ஞாயிறிலும் அலுவலகத்தை தஞ்சம் அடைவது அல்லது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆண்களின் வழக்கமாகி வருகிறது.

பணிக்கு செல்லும் பெண்களுள்ள குடும்பங்களிலும் அலுவலக பணிகளுடன் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்வது பெண்களின் கடமையாகிவிடுகிற அவல நிலை இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது என்றால் மிகையல்ல.

ஆண்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் என்னதான் வெற்றியடைந்தாலும் மாலையில் நீங்கள் திரும்புவது மனைவியிடம்தான். இதை ஒருபோதும் மறக்கலாகாது. அலுவலகத்தில் நீங்கள் அடையும் வெற்றியை உண்மையான மகிழ்ச்சியுடன், பெருமையுடன் கொண்டாடி மகிழ்வது உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். அவர்களுடைய தேவைகளை, மனத்தாங்கல்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் ஆண்களின் அலுவலக வெற்றிகள் காணல் நீர் போன்றவையே.

இளம் வயதில் நேரமின்மையை காரணம் காட்டி குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற மறக்கும் குடும்பத்தலைவனை அவனுடைய முதிய வயதில் குடும்பத்தினரும் மறந்துவிடக் கூடிய சூழல் உருவாகலாம்,ஜாக்கிரதை!

இங்கு குடும்பத்தினரின் 'தேவைகள்' என்பது அவர்களுடைய பொருளாதார தேவைகளை மட்டும் குறிப்பிடவில்லை. அன்பு, பாசம், பராமரிப்பு எனப்படும் உணர்வுபூர்வமான தேவைகள் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அளிக்கக்கூடிய பொருளாதார தேவைகளை விடவும் முக்கியமானவை. ஒரு கணவன் அல்லது தகப்பனிடம் இருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய இத்தகைய தேவைகளை மனைவியோ மக்களோ வேறொரு ஆணிடமிருந்து பெற முடியுமா என்ன?

ஆங்கிலத்தில் Quality time என்பார்கள். அதாவது இவ்வளவு நேரத்தை என் குழந்தைகளுக்கென தினமும் ஒதுக்குகிறேன் என்றால் போதாது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் செலவிட்டேன் என்பதை விட அதை எப்படி செலவிட்டீர்கள் என்பதுதான் முக்கியம். Quality என்பதை 'தரமுள்ள' என புரிந்துக்கொள்வதை விட 'பயனுள்ள' என புரிந்துக்கொள்வது நலம் என கருதுகிறேன். தந்தை என்ற நிலையிலிருந்து குழந்தைகளின் நண்பன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே, அதாவது நம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறினால் மட்டுமே, அவர்களுடன் நாம் செலவிடும் நேரம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன், உங்களுக்கும் அது எத்தனை புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதை உணர்வீர்கள்! பெண்களும் தங்களுடைய தாய் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் தோழியாக மாறினால் மட்டுமே அவர்களுடைய செலவிட்ட நேரத்தின் உண்மை பொருளை உணர முடியும்.

கணவன் தன் மனைவிக்காக ஒதுக்கும் நேரமும் அப்படித்தான். கணவன் என்கிற நிலையிலிருந்து காதலன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே மனைவியுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவும் புத்தணர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இது மனைவிக்கும் இது பொருந்தும்.

மனைவி, குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றும் கணவர்களால் மட்டுமே வீட்டு நிர்வாகத்தில் வெற்றி காண முடியும் என்பதும் அவர்களால் மட்டுமே அலுவலக நிர்வாகத்திலும் வெற்றியடைய முடியும் என்பது உறுதி!
நியூஸ் 18 நெறியாளர் திருநாவுக்கரசு

காலத்தின் குரல்: 

திருநாவுக்கரசு

தினமலர் நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் திருநாவுக்கரசர். அதனை தொடர்ந்து நியூஸ் 18 செய்தி சேனலில் மூத்த ஊடகவியாளராக சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார்.  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். திருநாவுக்கரசரின் உடல் மந்தவெளி திருவள்ளூவர் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றமும் இரங்கல் தெரிவித்துள்ளது.


மூத்த செய்தியாளர் திருநாவுக்கரசு மறைவுக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி, ஸ்டாலின், திருமாவளவன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

உடுமலையில் அவரது சொந்த ஊரான எரிசனம்பட்டியில் இறுதி நிகழ்வில் ..தினமணி பத்திரிகையாளர் ராஜமாணிக்கம் அவர்கள் இரங்கல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் ..திராவிட கழகத்தின் குளத்தூர் மணி ,தா மு மு கா  அப்துல்கயும் ,தனியரசு ,எழுத்தாளர் பாமரன் ,கம்யூனிஸ்ட் கட்சி பாலபாரதி ,நியூஸ்18 தலைமை செய்தியாளர் குணசேகரன் மற்றும் சொந்தங்கள் ,நண்பர்கள் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டனர் ..

சனி, 26 அக்டோபர், 2019

சிறுவயது தீபாவளிகள்
தொலைந்துபோன_தீபாவளிகள்
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ஊருக்கு ஊர் மாறுபட்டாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. மற்ற பண்டிகைகள் விதவிதமாய் கொண்டாடினாலும் தீபாவளியை மட்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் முறையும் மகிழ்வும் கூட. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கொஞ்சம் சவாலும் கொஞ்சம் பயமும் கலந்தே இந்த பண்டிகை கடந்து போகும். பெரிய அளவில் செலவு வைக்கும் பண்டிகைதான் ஆனாலும் நினைவுகளில் எப்போதும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு தீராத மத்தாப்பைப்போல வெளிச்சங்களால் நிரம்பியவை.

திரியைக்கிள்ளி தீ வைத்தவுடன் சத்தமிட்டு வெடிக்கும் வெடியைப்போல தீபாவளி என்ற சொல்லுக்குள் தான் எத்தனை வெடிகள் எத்தனை சத்தங்கள் புதைந்து கிடக்கின்றன. எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள பல கதைகளையும், நினைத்து நெக்குருக பல நினைவுகளையும் சில தீபாவளிகள் கொடுத்திருக்கும். வளர்ந்து படித்து முடித்து பட்டம்வாங்கி கல்யாணமும் முடித்து குழந்தை பேரன் பேத்திகளையும் பார்த்த பின்பு நினைத்துப்பார்க்கும் தீபாவளிகளை விட பால்யத்தின் பரணில் வெடிக்காத பட்டாசுகளைப்போல தப்பிவிட்ட தீபாவளிகள் தான் கைகளில் ஒட்டிக்கொண்ட மருந்துகளைப்போல பிசுபிசுப்பாய் எப்போதும் நினைவுகளில் இருந்து அகலாதவை.

அவரவர் கொண்டாடி, சந்தோஷித்து, திளைத்து, இழந்து, களைத்து, மறந்து, வெறுத்து ஒதுக்கிய பண்டிகைகளும் , இப்படி கொண்டாட வேண்டுமென  பலநாட்கள் திட்டமிட்டு எல்லாம் வாங்கி குவித்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாளுக்குமுன் எதிர்பாராமல் உறவுகளில் ஒருவர் இறந்துவிட அத்தனை கனவுகளும் நொடியில் உடைந்து துக்கம் வந்து அப்பிக்கொண்ட பண்டிகைகளையும் அவரவர்களால் தான் சொல்லிக்கொள்ளவோ நினைத்துப்பார்க்கவோ முடிகிறது. அப்படி சொல்லிக்கொள்ள பத்தாயிரம் வாலா போல என்னிடமும் பல கதைகள் நீண்டுகொண்டே போனாலும் கேட்பதற்கு காதுகள் இல்லாத காரணத்தால் நினைத்துப்பார்க்கிறேன்.

நிச்சயமாய்… தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வயதுகளில் பட்டாசு சத்தம் கேட்டு அதைவிட சத்தமாய் அழவோ, அல்லது அந்த திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு எழவோ செய்திருப்பேன். ஆனால் இது தீபாவளி , இது பட்டாசு, இதை இப்படி வெடிக்கணும், இந்த மத்தாப்பை இப்படி பிடிக்கணும் என தெரிந்து கொண்ட வயதிலிருந்து இன்று வரை எத்தனையோ தீபாவளிகளைக் கடந்துவந்த பின்னும் அந்த சிறுவயதின் கொண்டாட்டக்கனவுகள் இப்போதும் துளிர்க்கின்றன. பத்த வெச்ச நெலபுருசு போல பொங்கி மேலெழும்புகின்றன சந்தோசங்கள்.

இப்போது காலம் வளர்ந்து நேரம் சுருங்கிவிட்ட காரணங்களால் சின்ன சின்ன குழந்தைகளைக்கூட துணிக்கடைகளுக்கு அழைத்துப்போய் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி போட்டுப்பார்த்து ரெடிமேடாக எடுத்து வந்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பால்யத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை ஆனால் அதைவிட அழகான, வார்த்தைகளால் உணர முடியாத, சொல்லிப் புரியவைத்துவிட முடியாத பல சந்தோசங்கள் கொட்டிக்கிடந்தன. அப்போதெல்லாம் இத்தனை ரெடிமேடு துணிகள் கிடையாது, துணி எடுத்துதான் தைக்க வேண்டும். எங்களிடம் எதுவும் கேட்காமலேயே அவர்களாகவே துணிகளை எடுத்துவந்துவிடுவார்கள். எனக்கும்  தம்பிகும் ..ஒரே நிறத்தால் பேண்ட்டும் வெவ்வேறு நிறத்தில் சட்டை துணியும் வாங்கிவருவார்கள். அக்கா ..தைப்பதென்றால் பட்டுப்பாவாடை-சட்டை, ரெடிமேடெனில் வெல்வெட் ஆடை. ஒருமுறை எங்கள் இருவருக்கும் நல்ல அடர்மஞ்சள் நிறத்தில் பேண்ட் துணியும் எனக்கு சிகப்புகலர் சட்டை துணி அண்ணனுக்கு பச்சைகலர் சட்டை துணியும் வாங்கிவந்தார்கள். அதைக்கொண்டு போய் டெய்லரிடம் கொடுத்து அளவு கொடுக்க நின்ற போது அவர் மேலும் கீழும் ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு “தீபாவளியே உங்களுக்குதான்டா" என்றார், அந்த வயதில் அந்த வார்த்தைகள் வெட்கத்தை மட்டுமே கொடுத்தன. இப்போது அந்த காம்பினேஷனில் உடை அணிந்தால் எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்தால் பல மாடுகளும் சில மனிதர்களும் தெறித்து ஓடும் காட்சி அப்பட்டமாய் கண்களுக்குள் வந்து போகிறது.

துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்த அடுத்த நாளிலிருந்து நினைப்பெல்லாம் டெய்லரிடமே இருக்கும். "இந்நேரம் நம்ம துணியை எடுத்திருப்பாரா? அண்ணனுக்கு முதல்ல தெப்பாரா இல்ல எனக்கா? ஐயையோ சட்டைக்கு என்ன கலர் பட்டன் வைக்கணும்னு சொல்ல மறந்துட்டமே, ஒருவேளை தீபாவளிக்குள்ள சட்டை தைக்கலைன்னா நாம என்ன பண்றது?" என்னும் விதவிதமான கேள்விகள் சங்கு சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும். ஒருவழியாய் துணிகள் தைத்து வீட்டுக்கு வந்ததும் போட்டுப்பார்ப்போம், யாராவது "உன்னுடையதை விட அண்ணனுது நல்லா இருக்குன்னு" சொல்லிட்டா வரும் பாருங்க ஒரு கோவம் வீடு ரணகளமாகும் கடைசியில் அடிவாங்கி என் உடம்பு ரணமாகும்.

வழியும் எண்ணெய் காதுக்குள் குறுகுறுக்க, தலையில் தேய்த்த அரப்பு வாய்க்குள் புகுந்து கசக்க குளித்துவிட்டு வந்து போட்ட புதுத்துணியை எல்லோர்கிட்டையும் காட்டனும்ல, ஒவ்வொரு நண்பர்கள் வீடு சொந்தக்கார வீடாக போய் காட்டிவிட்டு அவர்களின் வாசலில் ஒரு பட்டாசைப் பற்றவைத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் இனிப்பை மென்றுகொண்டே  நோம்பிக்காசு கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தால் குளித்துவிட்டு வந்திருக்கும் பாட்டி நாங்கள் கேட்காமலேயே தன் சுருக்குப்பையிலிருந்து "நோம்பிக்காசு" என்னும் பெயரில் எடுத்து நீட்டும் ஐந்துரூபாயோ பத்துரூபாயோ இனி எத்தனை ஜென்மமெடுத்தாலும் சம்பாதித்துவிட முடியாதவை. அந்த தீபாவளிகள் தான் புகையை விட அதிகமாய் நினைவுகளையும் சத்தங்களைவிட அதிகமாய் சந்தோஷங்களையும் நிரப்பிவைத்தவை. தனித்தனி குடும்பங்களாய் வாழ்வதை பெருமையாய்க் கூறிக்கொள்ளும் இன்றைய வாழ்வில் கைப்பேசியில் வந்துவிலும் ஜிப் பைல்களில் வெடிக்கின்றன டெக்கனாலஜி பட்டாசுகள்.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கு போகும்போது நமக்கு வேண்டியவைகளை எடுத்துப்போட ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருப்பார்களே அப்படியான ஒரு கூடை இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் அந்தக்கூடை முழுவதும் பட்டாசு வந்துவிடும். சிறுவயது என்பதால் வெடிகள் கொஞ்சமாகத்தான் இருக்கும். அண்ணனும் நானும் வெடிகளை பிரித்துக்கொண்டு வெடியில்லாத பட்டாசுகளையும் மூன்றாக பிரித்து அக்காக்கென ஒரு பங்கு கொடுத்துவிடுவோம். அவள் வெடிக்க பயப்படும் நேரங்களில் அதையும் நாங்களே வெடிக்கவும் செய்வோம். துப்பாக்கிகளில் சுருள் கேப்பை போட்டு இப்படி வெடிக்கவேண்டுமென சொல்லித்தரும் சாக்கில் அதையும் பெரும்பாலும் நானே வெடித்துவிடுவேன். முக்கால்வாசியை தீபாவளிக்கு முந்தைய இரவே வெடித்துவிட்டு என் பங்கை தீபாவளி அன்று இரவு எடுத்து அவர்களுக்கு தராமல் வெடித்து அவர்களை வெறுப்பேத்துவதில் வரும் ஆனந்தம் இப்போது எத்தனை கோடிக்கு பட்டாசு வாங்கி வெடித்தாலும் கிடைக்காத ஒன்று.

சரமாய் வாங்கிவரும் பட்டாசுகளை தனித்தனியாய் உதிர்த்து திரிகளைக்கிள்ளி வைத்துக்கொண்டு கையில் பிடித்து தூக்கிப்போடும் ஊசிப்பட்டாசுகள் கொடுத்த உற்சாகத்தை இப்போது வெடிக்கும் பத்தாயிரம் வாலாக்கள் , ஐயாயிரம் வாலாக்கள் கொடுத்துவிடுவதில்லை. மதிய நேரத்தில் தெருத்தெருவாய் சுற்றி வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கிவந்து அதிலுள்ள மருந்துகளை மட்டும் தனியே சேர்த்து ஒரு காகிதத்தின் நடுவில் கொட்டி நாலு பக்கங்களிலும் நெருப்பு வைத்து அந்த நெருப்பு மருந்தின் கிட்டே வரும்போது தொற்றிக்கொள்ளுமொரு பரபரப்பு, மருந்தில் நெருப்பு பட்டவுடன் பொங்கிவரும் "புஷ்வானம்" என இந்த தலைமுறைக் குழந்தைகள் நெருங்கிவிடாத ஒரு சந்தோசத்தின் உச்சியில்தான் மிதந்தன எங்கள் தீபாவளிகள். பட்டாசு வாங்க வசதியில்லாத குழந்தைகள் ஏக்கத்தோடு பார்க்கும் தருணங்களில் அவர்களிடம் கொடுக்கும் சில கொள்ளு பட்டாசுகளிலும் சில மத்தாப்புகளிலும் எங்களைவிட அவர்கள் அதிகமான சந்தோசத்தை உணர்வார்கள். ஒருகாலத்தில் நாங்களும் பட்டாசுகள் வாங்க முடியாமல் தூரத்தில் வெடிப்பவர்களைப் வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்ட தீபாவளிகளும் உண்டு. மிச்சமிருக்கும் பட்டாசுகளை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க வேண்டுமென எடுத்து பத்திரப்படுத்திவிட்டு கார்த்திகை தீபம் எப்போ எப்போ என கேட்டு நச்சரித்த நாட்களின் நினைவுகள் பாம்பு பட்டாசு போல சுருள் சுருளாய் பொங்கிவருகிறது. சிறிய அணுகுண்டு ஒன்றை பற்றவைத்துவிட்டு சத்தத்திலிருந்து தப்பிக்க காது பொத்தியபோது ஊதுபத்தியால் சுட்டுக்கொண்டது , பட்டாசிலிருந்து தெரித்துவிழுந்த நெருப்புத்துண்டு புதுசட்டைக்குள் புகுந்து வயித்தில் காயமானது, எங்கோ பார்த்துக்கொண்டு பிடித்த மத்தாப்பின் மருந்து எரிந்து முடிந்து கையைச்சுட்டு கொப்பளமானது, கல்லுவெடியை வாங்கிக்கொண்டு வெடிக்கத்தெரியாமல் வெடித்து சிதறிய கற்களால் சுரீரென அடிவாங்கியதென எத்தனை எத்தனை நினைவுகள் பிஜிலி வெடிகளைப்போல விட்டு விட்டு வெடிக்கின்றன.

தீபாவளி முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாளன்று தீபாவளிக்கு எடுத்த புதுத்துணியை போட்டுவரலாம் என கொடுத்திருக்கும் சிறப்பு சலுகைக்காகவே  இன்னுமொரு பண்டிகைபோல அந்தநாள் இனிப்பாய் விடியும். தெருவெங்கும் புத்தகப்பை சுமந்துபோகும் பள்ளிக்கூட பிள்ளைகளை அந்த ஒருநாள் மட்டுமே கலர் துணிகளில் பார்க்கமுடியும். அடுத்த தீபாவளி வரும் வரை  கல்யாணம், காதுகுத்து, கோவில் பண்டிகை என காத்திருக்கும் அத்தனை நல்ல விசேஷங்களுக்கும் அந்த புது துணிதான். அதைப்போட்டுக்கொண்டு உருண்டு, பெரண்டு, அழுக்காக்கி, கரையாக்கி அந்த ஒற்றை புதுத்துணியோடு வருடம் முழுவதும் விடியும் இரவுகள் இனி எந்த விடியலிலும் கிடைக்காது.

தீபாவளிக்கு இரண்டுநாள் முன்பே எல்லோருக்கும் சேர்த்து பலகாரங்களும், முறுக்குகளும் சுடும் அத்தைகளையும், சித்திகளையும் இப்போது பார்க்கமுடியவில்லை. ஊருக்குள் வந்து நிற்கும் தள்ளுவண்டியை ஆக்கிரமித்து தங்கள் தாவணி பாவாடைகளுக்கோ சேலைகளுக்கோ மேட்சாக வளையல்கள், கிளிப்புகள், ரிப்பன்கள், ஹேர்பின்கள் என வேண்டியதைத் தேடும் அக்காக்களையும், மருதாணியை அரைத்துக்கொடுத்துவிட்டு சிவந்துகிடக்கும் அம்மிக்கல்லுகளையும் பார்க்கமுடியவில்லை. தீபாவளிக்கு ரிலீசாகும் தங்கள் தலைவர்களின் படங்களில் அவர்கள் உடுத்தும் உடைகளைப்போலவே உடுத்திக்கொண்டு கொத்தாக கிளம்பும் நண்பர்கள் இப்போது தங்கள் குழந்தைகளின் புது துணிகளுக்கு மஞ்சள் வைத்துக்கொடுக்கும் வேலையை சலித்தபடி செய்கிறார்கள். கடந்து வந்திருக்கும் காலம் மிகச்சிறியதுதான் ஆனால் இழந்துவிட்ட சந்தோசங்கள் மிகப்பெரியவை. எப்போதும் வற்றாமல் நினைவுகளில் தேங்கி நிற்கும் இந்த தொலைந்துபோன தீபாவளிகளைப்போல.

இத்தனை வருடங்களைக் கடந்துவந்தபின்னும் இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் பெண்களும் சமையலறைகளும்தான். பண்டிகைகள் வந்துவிட்டால் என்ன சமைக்கணும், யார் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எதைச்செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள், என்ன செய்து அசத்தலாம் என அம்மாக்களின் யோசனைகளிலேயே பாதி தீபாவளி முடிந்துவிடும். காலையிலேயே குளித்து முடித்துவிட்டாலும் சமையலை சாக்காக வைத்து புது சேலையக் கூட கட்டமாட்டார்கள், சிறப்பு பட்டிமன்ற பேச்சுக்களை காதில் கேட்டபடி சமையல் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் கொஞ்சநேரம் கட்டிவிட்டு அவர்கள் தீபாவளியை சமையலறையோடு முடித்துக்கொள்வார்கள். அவர்களைப்போன்ற அம்மாக்களும், பெண்களும் திளைத்துக் கொண்டாடும் விதமாகவும், முடிந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, யாருக்கும் காயமாகாத தீபாவளியாய் இந்த தீபாவளி அமையட்டும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!
இன்று ..26-10-2019.....கு .க .பிறைசூடிப்பித்தான் -சித்தமருத்துவர் -கவிஞர்
(மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம்-கொழுமம்  )

சித்தமருத்துவருடன் ஒரு அருமையான சந்திப்பு ...மருத்துவர் அய்யா அவர்கள் ...சித்தமருத்துவ Encyclopedia ....

விண்ணோடும் முகிலோடும் விளையாடி நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்... அருகில் வளைந்து நெளிந்து ஓடும் அமராவதி... காயப்போட்ட பச்சைப் புடவைகளாகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் நெல்வயல்கள்... இடையிடையே தோகைத் தோரணம் வீசும் கரும்புத் தோட்டங்கள்... இப்படி இயற்கையன்னை ஜீவனோடு வாழும் கொழுமம் கிராமத்தில்... இயற்கை வேளாண்மையோடு... மூலிகை ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் 86 வயது பெரியவர் பிறைசூடிப் பித்தன்.

ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
 உடுமலைப்பேட்டையில் இருந்து பழநி செல்லும் வழியில்தான் இருக்கிறது இந்த கொழுமம். இங்கேயுள்ள தன்னுடையத் தோட்டத்தில், மஞ்சள்வெயில் மருதாணி பூசும் மாலை நேரத்தில் உலாவிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை சந்தித்தோம். மகிழ்ச்சி பொங்க வரவேற்றவர், உலாத்தியபடியே பேச ஆரம்பித்தார்.

''எனக்கு மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அதுல 30 ஏக்கர்ல கிணற்றுப் பாசனம். 7 ஏக்கர்ல அமராவதி ஆத்துப் பாசனம் நடக்குது. கடந்த நாலு வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன். 10 ஏக்கர்ல தென்னை,

20 ஏக்கர்ல 70 மாமரங்கள், 300 உரிகம்புளி மரங்கள், 500 பெருநெல்லி, 500 சப்போட்டானு கலந்து வெச்சிருக்கேன். அதோட... இந்த 20 ஏக்கர்லயும் ஊடுபயிரா ஏகப்பட்ட மூலிகைச் செடிகளை வெச்சிருக்கேன்'' என்றவர், தென்னை மற்றும் மா ஆகிய பயிர்களில், தான் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விவரித்தார். அது-

ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை மருத்துவம்!

ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
தென்னை... முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். இந்த நிலங்களில் உழவுபோட்டு நாலு வருஷமாகிறது. முள், விஷச்செடிகளைத் தவிர... மற்றச் செடி, கொடிகளை அகற்றுவதில்லை. பாசனநீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைத்துள்ளேன். ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் என மாறி, மாறி சென்றுகொண்டே இருக்கும். தென்னை மரத்தைச் சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் செய்துள்ளேன். கற்றாழையின் கசப்புத் தன்மை, தென்னை வேர்களுக்குப் போகிறது. இதனால் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட், வாடல் நோய் போன்றவை குறைகிறது. இளம் குரும்பைகள் அதிக அளவில் உதிர்வதும் நின்றுவிட்டது.

சராசரியாக ஒரு மரத்தில் இருந்து,

ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
40 நாட்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 முற்றிய காய்களை அறுவடை செய்கிறேன். தேங்காயின் தரம், கொப்பறையின் பிழிதிறன் அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மரத்துக்கு 10 கிலோ தொழுவுரமும், ஒரு முறை 5 கிலோ மண்புழு உரமும் கொடுக்கிறேன். இயற்கை உரங்களை பருவமழை காலத்துக்கு முன்பாக கொடுப்பது மிகவும் சிறந்தது என்பதால், அதை கடைபிடிக்கிறேன். தொடர்ந்து தோப்பினுள் விழுகின்ற தென்னை மட்டைகளை வெட்டி, மரத்தைச் சுற்றிலும் மூடாக்காகப் போட்டு விடுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வெயில் காலங்களில் ஈரம் காக்கப்படுவதுடன், மட்கி எருவாகவும் மாறிவிடுகின்றன தென்னைக் கழிவுகள்!

மாமரங்களைக் காக்கும் மூலிகை!

மாமரங்கள், தை மாதம் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் 500 மில்லி பஞ்சகவ்யாவை, 10 லிட்டர் நீரில் கலந்து புகைமூட்டம் போல வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால், பூக்கள் எல்லாம் உதிராமல் நிற்கும். காய்கள் வளரும் சமயத்தில் மீன் அமிலம்

50 மில்லியை பத்து லிட்டர் நீரில் கலந்து, இரண்டு முறை தெளிக்க வேண்டும். காய்கள் அனைத்தும் தரமாக வளர இது அவசியம். தொடர்ந்து வாரம் ஒருமுறை பாசனநீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் இரண்டும் கலந்து செல்வதால்... வேர் அழுகல் நோய் தாக்குவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்த கையோடு மழைக் காலங்களில் மரத்துக்கு 10 கிலோ தொழுவுரம் இடுவது அவசியம். பழஈக்களின் 'லார்வாக்கள்’ தோலைச் சுரண்டி, சேதப்படுத்தும். அதைத் தவிர்க்க மூலிகை மருந்து தயாரித்துப் பயன்படுத்துகிறேன் 

மாமரத்துக்கு மட்டுமல்ல... தோட்டத்தில் இருக்கின்ற சப்போட்டா, நெல்லி, உரிகம்புளி என எல்லா பழப் பயிர்களுக்கும் இதே முறையைத்தான் கடைபிடிக்கிறேன்.

கூடுதல் மகசூல் இல்லை... கூடுதல் செலவும் இல்லை!

தொழில்நுட்பங்களைப் பேசி முடித்த பிறைசூடிப்பித்தன், ''இயற்கை முறையில காய்கறி சாகுபடியும் செய்றேன். ஆத்துப் பாசனத்துல 6 ஏக்கர்ல ஒற்றை நாற்று முறையில நெல் சாகுபடி செஞ்சு, ஏக்கருக்கு 25 குவிண்டால் மகசூல் எடுத்துக்கிட்டிருக்கேன்.

இயற்கை விவசாயம் செய்றதால... எனக்கு அதிகமான மகசூல் கிடைக்கல. ஆனா, மற்ற ரசாயன விவசாயிகளுக்கு கிடைக்குற அதே அளவுக்கு கிடைக்கத்தான் செய்யுது. அதேசமயம், அவங்க அளவுக்கெல்லாம் நான் செலவு செய்றதில்ல. சொல்லப்போனா... செலவுனு பெருசா எதுவுமே இல்ல'' என்றவர்,

''நோய் இல்லாத அடுத்தத் தலைமுறைக்கான உணவையும், மூலிகைகளையும் விட்டுச் செல்றேங்கற பெருமையே போதும்... வருமானக் கணக்கு தேவையில்ல'' என்று விடைகொடுத்தார்.

 பூஞ்சணம் மற்றும் மாவுப்பூச்சிகளை விரட்ட...
சோற்றுக் கற்றாழை, போகன் வில்லா என்கிற காகிதப் பூச்செடி, உண்ணிச்செடி ஆகியவற்றை தலா 5 கிலோ எடுத்து, மண் பாத்திரத்தினுள் போட்டு, மூழ்கும் அளவு சுத்தமான தண்ணீர் நிரப்பி, நன்றாக வேகவைக்க வேண்டும். சிவப்பு நிற திரவமாக மாறியிருக்கும். அதை வடித்து, வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனுள் 250 கிராம் மஞ்சள்தூளைப் போட்டு கலக்கி, 12 மணிநேரம் கழித்து பயன்படுத்தலாம். இதில் 300 மில்லி கரைசலை எடுத்து, 10 லிட்டர் நீரில் கலந்து, காலை நேரம் வயலில் தெளித்தால், பூஞ்சணம் மற்றும் மாவுப்பூச்சிகள் அறவே அழியும்.

கருவேல் மூலிகை

100 மில்லி கொழுந்து கருவேல் இலைச்சாறு, 300 மில்லி அமுதக்கரைசல் இரண்டையும் 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால்... நெற்பயிரைத் தாக்கும் பல நோய்கள் காணாமல் போய்விடும்.

பழஈக்களுக்கு பூண்டு வைத்தியம்

வெள்ளைப்பூண்டு-500 கிராம், பச்சை மிளகாய்-100 கிராம். இவை இரண்டையும் அம்மியில் போட்டு நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். 250 கிராம் இஞ்சியில் சாறு எடுத்து, இதனுடன் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் 250 மில்லி மண்ணெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட வேண்டும். இதை நன்றாக வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தால், பழஈக்கள் காணாமல் போய்விடும்.

வண்டு விரட்டி!

நொச்சி, எருக்கன், பீநாரி, வேம்பு இலைகளை தலா இரண்டு கிலோ அளவுக்கு எடுத்து, நன்றாக இடித்து, மண் பாத்திரத்தில் போடவேண்டும். கலவை மூழ்கும்படி பசுமாட்டுச் சிறுநீரை ஊற்ற வேண்டும். கூடவே, ஒரு கிலோ மஞ்சள்தூளைப் போட்டுக் கலக்கிவிட்டு, அந்தப் பாத்திரத்தை

12 மணி நேரம் வெயிலில் காயவைத்து, வடிகட்டினால் வண்டு விரட்டி தயார். இந்தக் கரைசலை 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளித்தால்... வண்டுத் தாக்குதல் குறைந்து, பழங்கள் தரமானதாக கிடைக்கும்....


அறிஞர் அண்ணா அவர்களின் நட்பு ...பற்றி ஏராளமான தகவல்கள் இன்று தீபாவளி பரிசாக செவிக்கு இனிமையாக அமைந்தது ..அவரின் மூலிகை மருத்துவ தோட்டத்தில் கால்பதித்து வந்தது ..இனிமையான தீபாவளி சந்திப்பு ..மகிழ்ச்சி .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681
கணவன் என்ற பதவி..

இயற்கையாகவே வரம் வாங்கி வந்து வாழ்கின்றவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் அல்லது வரத்தை நாமே முயன்று பெற்றுக் கொண்டு வாழும் வாழ்க்கை எப்படியிருக்கும்?

பண்டிகை சமயங்களில் ஒரு வாரத்திற்கு முன்பே மொத்த சாமான்களையும் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். பட்டியலில் எழுதச் சொல்லிவிட வேண்டும். "நான் சொன்னேன். நீங்கள் மறந்து விட்டீர்கள்?" என்ற பஞ்சாயத்து தவிர்க்க இது உதவும். கடைக்குச் செல்லும் போது கையில் கட்டாயம் அலைபேசியை எடுத்துச் சொல்ல வேண்டும். கடைக்காரர் சாமான்கள் போட்டு முடித்ததும் மீண்டும் ஒரு முறை அழைத்துக் கேட்க வேண்டும். சொல்லிவைத்தாற்போல அப்போது சில சாமான்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார்.

சிரித்துக் கொண்டே சேர்த்துக் கொண்டு அதனையும் சேர்த்து வாங்கி வந்து விட வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு நாளைக்கு முன்பே பூ, பூஜை சாமான்கள், மாவிலை, தோரணம் கட்ட உதவும் சாமான்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சேகரித்து வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும். பண்டிகை கால சிறப்புப் பணம் என்று புதிய நூறு ரூபாயாக மாற்றி உன் கையால் மகள்களுக்குக் கொடுத்து விடு என்று கொடுத்து விட வேண்டும்.
சரி? இப்படியெல்லாம் ரிஸ்க் எடுப்பதால் என்ன ஆகும்?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது உங்களுக்கு எந்த வேலையையும் மனைவியும் மகன்  கொடுக்க மாட்டார்கள். நீங்க கம்யூட்டர போய் நோண்டுங்கள் என்று கட்டம் கட்டி ஒதுக்கி வைத்து விடுவார்கள். கட்டாயம் ஒரு சாமிப்பாட்டை ஒலிக்க வைத்து விட வேண்டும்.

சாமி விளக்கேற்றும் போது அழைப்பு வரும். சாம்பிராணி போட்டுக் குளிர குளிர வீடு முழுக்க பரவும் போது அவர்கள் பின்னால் பவ்யமாகச் செல்ல வேண்டும். மகன்   மிரட்டுவார். அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டம் ஒன்றும் செய்யாது. காரணம் சபாநாயகர் அனுசரிப்பு பரிபூரணமாக இருக்கும். அவர்களையும் பக்கவாட்டில் அனுசரித்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்தில் காஷ்மீர் பிரச்சனையை விட அதிக பிரச்சனைகள் உள்ளே நடந்து கொண்டிருக்கும். வாயை மூடிக் கொண்டு உள்ளே நடக்கும் எந்த பஞ்சாயத்துக்களையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்.

காரணம் இப்போது சிறப்புச் சட்ட அதிகாரத்தின்படி குடும்பத்தின் ஒவ்வொரு முடிவும் அட்மின் எடுத்துக் கொண்டிருப்பார். ஒருவர் மட்டும் உங்களைத் தொடர்ந்து கண்காணிப்பு பட்டியலில் வைத்திருப்பார். சாமி கும்பிடுவதற்கு முன்பு சமையலறை பக்கம் சென்று ஏதாவது எடுக்க முயல்கின்றோமோ? என்று பார்த்து உளவு சொல்லத் தயாராக செல்ல மகன்  இருப்பார்.

சரி? இப்படியெல்லாம் இருந்தால் உங்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன?

உங்கள் இருக்கையைத் தேடி உண்பதற்கு ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கும். ....

வெள்ளி, 25 அக்டோபர், 2019

 தீபாவளி நினைவுகள் – 2
—————————————–

வாங்கிவைத்திருக்கும் வெடிகள் கொஞ்சமாகவே தெரியும் ஒவ்வொரு தீபாவளிக்கும். நண்பர்களின் வீடுகளில் வாங்கியிருப்பது எப்போதும் அதிகமாகவே தெரியும். எல்லோரும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெடிகளை வெடிக்கத் தொடங்கியிருப்பார்கள். இங்கோ தீபாவளிக்கு முதல் நாள்தான் வெடியே வாங்கலாமா என்று யோசிப்பார்கள். எல்லாம் வறுமைதான். அது அப்போது புரிந்ததே இல்லை. வெடிப்பவர்களின் வீட்டின் முன் ரெண்டு காலையும் அகற்றி நின்றுகொண்டு கைகளைப் பின்பக்கம் பிணைத்துக்கொண்டு ஸ்டாண்- அட்- ஈஸில் அவர்கள் வெடிப்பதை நானே வெடித்ததாய் நினைத்து சந்தோஷம் கொண்டிருப்பேன்.

வீட்டில் சகோதரர்களுடன், ரொம்ப லேட்டாக வாங்கிய வெடியைப் பிரித்துக்கொள்வதில் அவ்வளவு சீக்கிரம் உடன்பாடும் காணமுடியாது. வழக்கம்போல நான் இளிச்சவாயனாகி நிறைய கேப் டப்பாக்களோடு லொடுக்கு சீட்கள் கிடைத்த அதிமுக கூட்டணிக் கட்சிமாதிரி வருவேன். கொடுத்த ஒரே ஒரு சர வெடியையும் டிஸ்மேண்டில் செய்து ஒத்தை வெடிகளாக்கி ரொம்ப நேரம் வெடிப்பேன். மதியம் அப்படி வெடித்துக்கொண்டிருந்த ஒரு நாள், தூக்கம் கெட்டுப்போன கடுப்பில் எல்லாவற்றையும் பிடுங்கி சாக்கடையில் போட்டுவிட்டான் பக்கத்து வீட்டுக்காரன். யாரிடமும் சொல்லாமல், வெடிக்காத வெடிபோல நான் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தேன்.

ஒரு தீபாவளின் நாளின் முன்தினம் வெடிவாங்கப்போகும் குழுவில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டு டவுனுக்கு ஐந்து மைல் நடந்துபோனோம். வெடி வாங்கப்போகும் உற்சாகத்தில் நடப்பது ஒன்றும் ஸ்ரமமாகத்தெரியவில்லை. வரும்போது பஸ்ஸில் வந்துகொள்ளலாம் என்று பெரியவர்கள் தீர்மானம் செய்து கொண்டதில் எனக்கு ஒன்றும் பங்கு இல்லை என்றாலும் கூட்டணி தர்மத்தில் சிறிய கட்சிகளின் கருத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது எனக்கு அப்போதே தெரிந்திருந்தது. பெரிய கடைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இருப்பதிலேயே வெளிச்சம் கம்மியான கடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து ( அங்குதான் ரேட் கொஞ்சம் கம்மிஎன்று டேபுலேஷனில் தெரிந்தது) வெடிகளை ரெண்டே செகண்டுகளில் ஆர்டர் செய்துவிட்டார்கள். எனக்கு அங்கு இருந்ததிலேயே ஒரு ராக்கெட்மட்டும்தான் பிடித்திருந்தது. சந்திராயன்போல இருந்த அதை ரொம்ப அலங்காரம்பண்ணி பாதுகாப்பாக வைத்திருந்தான் கடைக்காரன். தாய்க்கலன் சந்திரனில் நிற்பதுபோல நின்றுகொண்டிருந்தது அது. நான் பார்த்துகொண்டிருந்ததை கவனித்த கடைக்காரன், அது ஐந்து ரூபாய் என்று காங்கிரஸ் சின்னத்தைக்காட்டினான். அதோடு, அந்த ராக்கெட் மேலேபோய் ரெண்டு தடவை வெடிக்கும் டபுள்ஷாட் என்று பில்ட் அப் கொடுத்தான். ரஷ்ய க்ரயோஜனிக் உதவியோடு செய்ததுபோல அதை வாஞ்சையோடு எடுத்து தடவிக்கொடுத்தான். ஒரு பக்கம் பார்த்தால் கட்டிங் ப்ளேயர் போலவும் இருந்தது அது. சிகப்புக் கலர் பேப்பர் அலங்காரத்தில் மெல்லிய பளபளப்பான பாலித்தின் பேப்பர் சுற்றப்பட்டிருந்ததில் குண்டு பல்பின் வெளிச்சம் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தியிருந்தது.’ மொத்தமாகவே ஐம்பது ரூபாய்க்குத்தான் பட்டாஸ் வாங்குவார்கள் போலிருந்த சமயத்தில் ஒரு ராக்கெட் மாத்திரம் ஐந்து ரூபாய்க்கு வாங்குவார்களா என்ன’, என்ற கேள்வியெல்லாம் காதல் கொண்ட மனதிற்கு தெரியுமா என்ன? நான் ஒன்றுமே பேசாமல் ப்ரமை பிடித்ததுபோல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த திக்கில் என் பெரிய அண்ணனும் பார்க்க நான் அந்த ராக்கெட்டை நோக்கிக் கைகாட்டினேன். அதெல்லாம் நம் குடும்பத்துக்கு சரிவராது ; வேண்டுமென்றால் இதை வாங்கிக்கொள் என்று இருப்பதிலேயே ஒல்லிப்பிச்சானாய் இருந்த ஒரு ராக்கெட்டைக்காண்பித்தான் என் அண்ணன். எனக்கு அழுகை பிய்த்துக்கொண்டுவர, கடைக்காரன் ” புள்ள கேக்குதில்ல, வாங்கிக்குடுங்க சாமி. வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே” என்ற உபரியான தகவலையும் கொடுத்தான். என் அழுகை இன்னும் பெரிசாகியது, வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே என்ற சோகத்தினால். இப்போது எதிர்பாராமல் என் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார் எப்போதும் சாந்த ஸ்வருபீயான என் அப்பா. நான் இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தேன். சீன் கிரியேட் ஆவதைத் தவிர்க்க உடனே என் அண்ணன் என்னைக் கூட்டத்திலிருந்து தள்ளிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். என்னைக் கூட்டிக்கொண்டுவந்ததே தப்பு என்றும் ஒரு முறை திருப்பதியில் நான் டெம்பரரியாகக் காணாமல்போயிருந்தபோது தேடிக்கண்டுபிடித்திருக்கவே கூடாது என்றும் இன்னும் ஃப்ளாஷ் பேக்கில் போய் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கௌண்டில் சரிசெய்யமுடியாத திருத்தங்களை வார்த்தைகளில் போட்டுக்கொண்டிருந்தான். இதனிடையே, அப்பா மீண்டும் சாந்தஸ்வரூபியாகி, என்னை அடித்ததற்கு ப்ராயச்சித்தமாயாய் அந்த ராக்கெட்டையே வாங்கிவந்திருந்தார். கடைக்காரனும், என்னை செட்யுஸ் பண்ணினதற்குப் ப்ராயச்சித்தமாய் ஒரு ரூபாய் டிஸ்கௌண்ட் கொடுத்திருந்தான் ( மொத்தத்தில்தான் ). கதை இங்கே முடியவில்லை.

தீபாவளி அன்று ராக்கெட்டை லான்ச் செய்வதென்றும் வீட்டிற்கு எதிரே உள்ள ட்ரைனேஜ் மூடியை லான்ச்சிங்க் பேடாகவும் இஸ்ரோ ரேஞ்சுக்கு திட்டமிட்டிருந்தோம் நானும் என் அன்புத்தம்பியும். எங்களின் பெருமைமிகு தருணமே அந்த தீபாவளியின் இரவாக இருக்கப்போவதாக பகலையெல்லாம் சாதரணமாகச் சில்லரை விஷயங்களில் கவனம் செலுத்தாது கழித்தோம். அந்தக் குறிப்பிட்ட சுபயோக வேளை நெருங்க நெருங்க அட்ரீனலின் ரொம்பப்படுத்தியது. தம்பிக்கு அந்த ராக்கெட், நிலாவில் போய் லேண்டாகி வெடித்தால் அங்கு வடைசுட்டுக்கொண்டிருக்கும் கிழவிக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்து நிலா க்ளீன் ஸ்லேட்டாகிவிடுமோ என்ற அச்சம்வேறு. ” எல்லாரும் போந்தாரோ போந்தென்றெண்ணிகொள்” என்று சரஸ்வதி டீச்சர் சொல்லிக்கொடுத்த திருப்பாவையின்படி தம்பி வந்த நண்பர்களை எண்ணிக்கொண்டிருந்தான். மழைவேறு ராகெட்டை விண்ணுக்குள் செலுத்துவதைத் தடை செய்ய சதிபண்ணிக்கொண்டிருந்தது. சரியாக 7.31க்கு கௌண்ட் டவுன் ஆரம்பித்து நானும் என் தம்பியும் சேர்ந்து அந்த ராக்கெட்டின் அனியாயத்துக்குக் கொஞ்சமான திரியில் நடுங்கிக்கொண்டே எரியும் கம்பிமத்தாப்பை வைத்தெடுத்தோம். ஒரு புள்ளி நெருப்பு ஒட்டிக்கொண்டிருந்து எப்போதுவேண்டுமானாலும் அணைவேன் என்று பயப்படுத்திக்கொண்டிருந்தது. எல்லோரும் மகரஜோதிக்குக் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்போல காத்திருந்தார்கள். தம்பியோ ரெண்டு மூன்றுதடவை டாய்லெட் போய்வந்தான்.
கடைசியாக யாரும் எதிர்பாரா தருணத்தில் ராக்கெட் கிளம்பி சரியாகப் ப த்தடி மேலெழும்பி ஒருதடவையும் உடனேயே அவசரமாக மறந்துபோய்விடக்கூடாது என்பதுபோல ரெண்டாவது தடவையும் வெடித்துவிட்டுத் தாயகம் திரும்பிவிட்டது. நண்பர்களெல்லோரும் ஓவென்று கத்திக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் ஏதோ அபர காரியத்துக்கு வந்தவர்கள்போல் ஓடிவிட்டார்கள். எங்களால் அன்றிரவு மட்டுமல்ல சில வாரங்களுக்கே தூங்கமுடியாமல் போயிற்று. அந்தத் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சமிருந்ததையும் வெடிக்கமனமில்லை. ஆனால் என் பெரியண்ணன் மட்டும் ரொம்ப சந்தோஷமாயிருந்ததுபோல எனக்குப்பட்டது.

வியாழன், 24 அக்டோபர், 2019

அங்கீகாரம்....

பொதுவாக எந்த ஒன்றை செய்யும்போதும் அதற்கான அங்கீகாரத்திற்காக மனம் ஏங்கும். வெளியிலிருந்து அங்கீகாரம் கிடைத்தாலே தவிர நீங்கள் செய்வதை உங்களாலேயே அங்கீகரிக்க முடியாமல் மனம் தவிக்கும்.

அங்கீகரிக்கப் படாத எந்த ஒரு செயலுமே உங்களுக்கு சாதனையாகவே தெரிய மறுக்கிறது. ஆனால் அந்த அங்கீகாரத்திற்கான ஏக்கமே, அது கிடைக்காத போது உங்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் பிறரது அங்கீகாரமென்பது அவர்களின் விருப்பு வெறுப்பிற்கும் பல் வேறு விதமான கோணங்களுக்கும் உட்பட்டது என்பதை புரிந்து கொண்டால் அங்கீகாரத்திற்காக இல்லாமல் ஆத்ம திருப்திக்காக செயல் படத் தொடங்கி விடுவீர்கள்.

அதனால், எதை செய்தாலும் நீங்கள் செய்யக் கூடிய அந்த விஷயம் முதலில் உங்களுக்கு திருப்தி தரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள், இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற தன்னம்பிக்கையோடு செயலைத் தொடருங்கள்.

பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லையென்றால் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பிடித்தமானதாக உருவாக்கிக் கொள்ள உங்கள் எண்ணத்தை சீர் செய்யுங்கள். எந்த மாதிரியான எண்ணம் உங்கள் ஆற்றலை தூண்டி விட்டு நீங்கள் செய்யும் வேலையை உங்களுக்கு சுவாரஸ்யமானதாக மாற்றக் கூடும் என் சிந்தித்துப் பாருங்கள்.

வெற்றி என்பது பணத்திலோ அல்லது புகழிலோ இல்லை. உங்கள் செயலால் இந்த பிரபஞ்சம் அடையும் பலனில் இருக்கிறது.

அது ஒருவருக்கானதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நாட்டுக்கோ இந்த உலகிற்கோ ஆனதாக இருந்தாலும் சரி, அந்த செயலைத் தொடர்ந்து செய்வதற்குப் பெருமைப் படுங்கள்.

பொதுவாக நம் கனவுகளோடும் கற்பனைகளோடும் எப்போதும் நம் வாழ்க்கையை ஒத்து பார்த்து நிறைவில்லாத தன்மையில் பெரும்பாலும் உழல்கிறது மனம்,

அதனால் நாம் செய்து கொண்டிருக்கும் எந்த வேலைக்கும், நம்மிடம் இருக்கும் எந்த பொருளுக்குமான மதிப்பு நமக்கு தெரியாமலே போகிறது.

எத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் நீங்கள் விரும்பி, நடக்காமல் நழுவிப் போகும் அந்த ஒன்றில் உங்கள் முழு கவனமும் தேங்கி, சறுகிய பாறையில் வழிந்தோடும் நீராக மகிழ்ச்சியெல்லாம் வழிந்தோட ஆற்றாமையும் வெறுமையுமாக மனம் பாசி படிந்து போகிறது. எனக்கு எதுவுமே சரியாக அமைவதில்லை நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று இயலாமையாக தோன்றி விடுகிறது. மகிழ்ச்சி அந்த கிடைக்காத ஒன்றில் மறைந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட, வாழ்க்கை சலிப்பு தட்டுகிறது.

உண்மையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அதை இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்தி பார்த்தால் அதன் மதிப்பு உங்களுக்கு பெரிதாகத் தோன்றும். வாழ்வின் அர்த்தம் புரியும்.

அதாவது, நீங்கள் எது செய்தாலும் ஏதோ என் கடமையை செய்கிறேன் என்றில்லாமல் எதற்காக செய்கிறோம் என்னும் அந்த புரிதல் இருந்தால், அதனோடு ஒரு குறிக்கோளை இணைத்துக் கொள்ள முடிந்தால், அந்த வேலை சலிப்பில்லாத சந்தோஷத்தை தரும்.

ஏனென்றால். எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று புரிந்து செய்யும் போது, அதை ஈடுபாட்டோடு செய்ய முடியும். தவிர உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது, அதில் முன்னேற்றத்தை பார்க்கும் போது, அதன் வெற்றியை தரிசிக்கும் போது வாழ்க்கை தொய்வில்லாமல் struck ஆகாமல் சுவாராஸ்யமானதாக இருக்கும்.

உண்மையில் வாழ்வின் முன்னேற்றம் என்பது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தை எட்டிப் பிடிப்பது மட்டுமல்ல. உங்கள் அன்றாட செயல்களை அழகான முறையில் அமைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. அது உங்கள் கைவசமே இருக்கிறது.

உற்சாகமான உழைப்பும், புத்திசாலித்தனமான சிந்தனைகளும் இருந்தால் எதிலும் புதுமை படைக்கலாம். ஒரு மணி நேரம் செய்யக் கூடிய வேலையை பயிற்சியின் மூலம் அதற்கு முன்பாக முடிக்குமளவு செய்ய தேர்ச்சி பெறுவதும் முன்னேற்றம்தான்.

உங்களுடைய எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு முறை செய்யும் போதும் அதன் தரத்தை, அதன் வேகத்தை இன்னும் நேர்த்தியாக கூட்டுமளவு செய்வதும் ஒரு சாதனை தான். உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் சின்ன சின்ன சாதனைகளே பெரிய சாதனைகள் படைக்க உங்களை ஈர்த்து செல்லும்.

உங்களுடைய ஒரு நாள் எப்படி போகிறதென்று சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலுமே லிஸ்ட் போட்டு பாருங்கள். நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று எழுதி பார்க்கும் போது, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான வேலைகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புலப்படும் அல்லது இன்னும் நேர்த்தியாக பயனுள்ளதாக நேரத்தை செலவிடலாமே என உங்களை productive ஆக சிந்திக்கச் செய்யும்.

அப்படி நீங்கள் உங்கள் அன்றாட செயலை பட்டியலிடும்போது உங்களுடைய ஒரு நாளில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது நடக்கிறது, உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எத்தனை செய்கிறீர்கள், அதை உங்கள் மனம் எந்த அளவு ஏற்றுக் கொண்டுள்ளது அல்லது முரண்படுகிறது, என்பதை அலசிப் பார்க்க முடியும். உங்கள் சூழலில் உங்கள் திறமைக்கு தீனி இருக்கிறதா அல்லது திறமை அற்ற விஷயங்களில் உங்கள் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்.

தவிர, உங்களுக்கு பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்கள் எந்த வகையில் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பது புலப்படும். அப்படி புலப்படும்போது, உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் விரிவடையும். உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்ப விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் திறமை அகன்று கொடுக்கும். என்னால் முடியும் எனும் உந்து சக்தி எழும்.

மொபைல் ஃபோன்கள் பயன்பாட்டிற்கு வந்த புதிதில் அவற்றில் பயன்படுத்திய சிம்பியன் ஓ.எஸ் பற்றி அறிவீர்களா? மனிதர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்பில் இருக்கும் மொபைல் ஃபோன் இயங்குவதற்கு ஒரு இயங்கு தளம் தேவை என்ற ஒற்றை குறிக்கோளில்தான் அந்த சாஃப்ட்வேரை உருவாக்கினார்கள்.

இன்று உலகையே உள்ளங்கைகளில் கொண்டு வந்து சேர்க்கும் ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த சிம்பியன் ஓ.எஸ் உருவாக்கியவர்களுக்கு எந்த அங்கீகாரமும் தேவைப் படவில்லை. David Potter ஆரம்பித்த PSION Software Co கொண்டு வந்த அந்த செயலியை இன்று பெரும்பாலானவர்கள் அறிந்திருக்காததைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவர்கள் குறிக்கோள் இந்த உலகை தங்கள் இணைக்க வேண்டும் என்பதுதானே தவிர அதற்கான அங்கிகாரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதல்ல.

பொதுவாக எது செய்தாலும் என்ன purpose க்காக செய்கிறோம் என்பதை யோசியுங்கள் அல்லது ஒரு ஆக்கபூர்வமான் purpose சை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சேர்த்தே நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


புதன், 23 அக்டோபர், 2019

அந்த தீபாவளி நினைவுகள்...
தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் அக்காமார்களும் ,தங்கச்சிமார்களும் எல்லாம் சேலை,தாவணி ,பட்டுப்பாவாடைனு , எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே பழனி ரோட்டுல இருக்கிற குறிஞ்சி துணிக்கடையில   துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு காதர் பாய் அண்ணா ..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் காந்தி சவுக் மாடர்ன் டெய்லர் அண்ணாகிட்ட  துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி தளி ரோட்ல வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே தளி ரோட்ல இருக்கிற கோமதி ஏஜென்சிஸ் ல  பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வாங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டுமாடர்ன்  டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...நெறைய பேர் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி க்கு  கல்பனா தியேட்டர் ல கமல் படம் புன்னகை மன்னன் சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க....தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மலரும் நினைவுகளை ...

என்றும் அன்புடன் தீபாவளி வாழ்த்துக்களுடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..













தீபாவளி நினைவுகள் -பலகாரம் 

தீபாவளி நினைவுகள் — 1
——————————————-

நடு வயதுக்காரர்களுக்கு இப்போதும் தீபாவளி பற்றிய பழைய ஞாபகங்கள் பக்ஷணங்கள்போலவே சுவையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு மனசு தயாராகிவிடும். நண்பர்களோடு பேச்சு தீபாவளியைப் பற்றி மாத்திரமே இருக்கும். எத்தனை ஸ்வீட், எத்தனை ட்ரஸ், எவ்வளவு பட்டாசு என்ற பேச்சில் நிறைய புருடாக்கள் இருக்கும். மிஷினுக்குப்போய் மாவு அரைத்து வருவது எனக்குப் பிடிக்காத வேலை. முதல் காரணம் கும்பல். இரண்டாவது, மிளகாய்ப் பொடி அரைக்கவும் மற்றவை அரைக்கவும் தனித்தனி மிஷினும் தனித்தனி வரிசையும். நான் ஒருவனே இரண்டையும் அரைத்துவர அனுப்பப்படுவேன். அண்ணன், தம்பி அக்கா எல்லோருக்கும் நிறைய ஹோம் வொர்க்கோ அல்லது திடீர் வயிற்று வலியோ வந்துவிட நான் மட்டும் பைத்தியம் போல் மாட்டிக்கொள்வேன். கூட இரண்டு முறுக்கு தருவதான பொய் வாக்குறுதியில் ஏமாந்து சிங்காரவேலன் கமல் மாதிரி உடம்பெல்லாம் பைகளையும்( அழுக்கு வெய்ட் வேறு) பாத்திரங்களையும் சுமந்துகொண்டு போய் அம்மாவின் அன்புக்கும் பாத்திரமாவேன்.

மாவு அரைக்கும் மில்லில் முதல் நாளே கல்லை அடையாளமாகப் போட்டுவிட்டுப்போனவர்கள் நான் போய் ஒரு மணி கழித்துத்தான் வந்தாலும் அவர்கள்தான் ஸீனியர்களாகக் கருதப்பட்டு பரமபதத்தில் பாம்பு கடிபட்டவனாய் கடைசிக்குப்போய் விடுவேன்.( இதைச் சொன்னால், எனக்குத் துப்பு இல்லை என்று சொல்வான் வயிற்று வலியால் துடித்துகொண்டிருந்து நான் கிளம்பிப்போன பத்து நிமிஷத்திற்கெல்லாம் வயிறு சரியாய்ப் போகும் என் தம்பி ). ரெண்டு வரிசையிலும் பாத்திரங்களையும் பைகளையும் வைத்துவிட்டு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நமக்கு முன் கேழ்வரகு அரைக்க வைத்திருந்தால் நாம் அரிசியோ கடலைப்பருப்போ அரைக்க முடியாது. மறுபடியும் சீனியாரிட்டி தள்ளிப்போகும். அதை வேறு கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் துப்புக்கெட்டுப்போய்விடுவேன் என்பதோடு இல்லாமல் முறுக்கும் ஐயர்ன் டானிக் சாப்பிட்டவன் டாய்லெட் போல கருப்பாக இருக்கும். ” ஏன்  முறுக்கு செவந்துபோச்சு?” என்று கேட்பதற்கு பதிலாக,” ஏன்  கறுத்துப் போச்சு?” என்று கேட்கும்போதெல்லாம் எல்லோரும் என்னையே முறைப்பார்கள். அடிஷனாலாக இரண்டு இல்லை, எல்லா முறுக்கையும் எனக்கே கொடுத்துவிடுவார்கள்.

கடலை மாவை கடலைமாவு அரைத்தபின்னும், அரிசியையும் அணிமாறாமலும் அரைத்துவரவேண்டும் என்றால் யாரவது ஒருவர்  வீட்டில் திட்டு வாங்கியே ஆகவேண்டும்.
இது தவிர மிளகாய் வரிசையின் பக்கம் கண் வைத்துக்கொள்ளவும் வேண்டும். அங்கும் ஹைப்ரிட் ஆகிவிடக்கூடாது. போஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷனைவிட இது கஷ்டம். இதுதவிர, மில்காரன் அம்மாசொல்லிவிட்ட அளவை ஒத்துக்கொள்ளமாட்டான். அரை கிலோ அதிகம் என்று சொல்லி கூடக்காசு வாங்கிவிடுவான். நானே அளவுகளை மாற்றிச் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. மிளகாயோடு மல்லி, மஞ்சள், எள், இலை தழை குச்சி என்று எதெதையோ போட்டு வைத்து ( வாசனைக்காம்) அதற்கும் மில்காரனிடம் திட்டுவாங்கவேண்டியிருக்கும். சிலசமயம் இந்த கூட்டணி தான்யங்களால் மிஷின் நின்றுபோனதும் உண்டு. தனித்தனியாய் ( தனியா என்று இதனால்தான் பெயரோ?) லோகல் பாடி எலெக்ஷன் போல அரைத்துவரவும் கட்டளை இருக்கும். இவ்வளவு தடைகளைமீறி அரைத்தபின், பாத்திரங்களை உடனே மூடிஎடுத்துக்கொண்டு வர முடியாது. கொஞ்சம் காற்றாட வைத்துக்கொண்டு வரவேண்டும். பலசமயங்களில் காற்று ரொம்ப ஆடிவிட அதனால் வந்த துன்பங்களும் அதிகம். மிளகாய் அரைக்கும்போது வந்த தும்மலின் தொடர்ச்சியோடு வீடு போய்ச்சேரும்போது மணி எட்டாகியிருக்கும். அம்மா மட்டும் சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். குழைந்த சாதமும் ரசமும் ” உனக்கு மாத்திரம்தான்” என்று போடும் வடாமும் அம்மாவின் அன்பை ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் காட்டும்...

தீபாவளி நினைவுகள் நாளையும் தொடரும் ...

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கேள்வி :நீங்கள் எதற்காக மலரும் நினைவுகளாக எதை நினைத்து சிரித்தீர்கள்?

பதில் :


மூன்று வருடங்களுக்கு  முன் நான்‌ பண்ண வேலையே தான்!

இடம்: சமையலறை

செய்யும் வேலை: புதினா சாதம் செய்வது

அரைக்க வேண்டியவற்றை வதக்கி ஒரு தட்டில் வைத்திருந்தார் அம்மா

“நான் அரைக்கிறேன் மா” என்று நானே வாயை கொடுத்தேன்

“இதில் இருப்பதில் கொஞ்சம் போட்டு அரைக்க வேண்டும். அது அரைந்ததும் இன்னும் கொஞ்சம் போட்டு அரைக்க வேண்டும். மிக்ஸி ஜார் குட்டியா இருக்கு பாத்து அரைக்கனும்”

“கவலையே வேண்டாம் எல்லாம் பக்காவா பண்ணிடுவேன்.”


சரி என்று என்னை நம்பி என்னிடம் கொடுத்து விட்டு, வெங்காயம் நறுக்குவதற்காக இரண்டு அடி தள்ளி தரையில் உட்கார்ந்தார் அம்மா. நமக்கு தான் மூளை வேற லெவல்ல யோசிக்குமே.

வதக்கி வைத்த புதினாவை கொஞ்சம் மிக்ஸியில் போட்டேன். “அடடே! இன்னும் கொஞ்சம் இடம் இருக்கே. இன்னும் கொஞ்சம் போடுவோம்.” இப்படியே இடம் இருக்கிறது என்று தட்டில் இருந்த மொத்தத்தையும் முதல் சுற்றுக்கே திணித்து விட்டேன்.


“சூப்பர்! ஒரே சுத்துல வேலை முடிஞ்சிரும்‌. அம்மா பாராட்ட போறாங்க.” என்று நினைத்துக் கொண்டே மிக்ஸியை சுற்றியது தான் தாமதம் நான் அழுத்தி வைத்த அழுத்தம் தாங்காமல் மிக்ஸி மூடி பறந்து போக‌, என் அம்மா வேறு தரையில் உட்கார்ந்திருந்தாரா அவரின் முடியெல்லாம் பசுமையாக மாறி விட்டது.

"ஆத்தாடி! இன்னிக்கு இருக்கு கச்சேரி." எனக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதர ஆரம்பித்து விட்டது‌‌. ‌

அம்மாவோ நிமிர கூட இல்லை. ஹாலிலிருந்து அப்பா வந்து “பரவாயில்லையே! உங்கம்மாக்கு பச்சை கலர்‌ Dye கூட நல்லாருக்கு” என்றாரே பார்க்கனும் அம்மா குபீர் என்று சிரித்து விட்டார்.

எனக்கு சிரிக்கலாமா என்று கூட சரியாக தெரியவில்லை

ஹி…. ஹிஹி… ஹிஹிஹி…
கேள்வி : வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயங்கள் எவை?

பதில் :நான் எழுதும் விஷயங்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்ககையில் நடந்தவை

வசதி இல்லையென்று சொந்தகாரர்கள் நம்மை வெறுப்பதும் மற்றும் தள்ளி வைப்பதும்.
குடும்பமாக வாழ நினைக்கும்போது சொந்தங்களின்  பேச்சைக்கேட்டு தனிக்குடித்தனம் செல்வதும்.
வாழ்க்கையில் ..கணவன் மனைவி வேளைக்கு சென்று .10 வருட சொந்த முயற்சியில் .கொஞ்சம் கொஞ்சமாக ..சொத்து ..வாகனம் ..குழந்தைச்செல்வம் ..அழகா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு செல்லும் வேலையில் ..நண்பர்களோ ..சொந்தங்களோ ..குடும்ப வாழ்க்கையை நிலைகுழைய செய்வது ..

சக மாணவர்கள் என்னிடம் என் அண்ணன் வாங்கி கொடுத்தான்,என் அக்கா வாங்கி கொடுத்தார்கள் என்று சொல்லும் போதும்,நமக்கு யாருமே இல்லையெ என்று எண்ணிய நேரம்.
பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்கும்போது அவன்லாம் படிச்சு என்னத கிளிக்க போறான்னு என்று சொன்னவர்களின் வாக்கியங்களும்.
பிள்ளைகள் கேட்பதை வாங்கி தர முடியாத சூழ்நிலை உள்ள தாய் தந்தையர்களின் நிலைகளும்
நமக்கு உடுத்த துணி எடுத்து கொடுத்து அவர்கள் கிழிந்த துணியை தைத்து போட்டு கொண்டு நிற்கின்ற நேரம்
நமக்கு இரவு உணவு கொடுத்து தாய் தந்தைக்கு உணவு இல்லாமல் தண்ணீரை பருகுகின்ற நேரம்.
நிறைய உண்டு இதுவே போதும் என நினைக்கிறேன்..

வியாழன், 17 அக்டோபர், 2019

நீங்கள் கண்டிப்பான பெற்றோரா?❤👍✒📚

'பிரம்பை எடுக்காத பிள்ளை கெட்டு போகும்' என்ற கொள்கையை கண்டிப்புடன் பின்பற்றும் பெற்றோரா? இப்படி கண்டிப்புடன் நீங்கள் நடந்து கொண்டால், உங்கள் குழந்தைகள் மூர்கத்தனமாக நடந்து கொள்வார்கள். மேலும் தங்கள் பெற்றோரின் குணங்களையும் குழந்தைகள் கவனித்து, அதையும் பின்பற்றுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

கண்டிப்பான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் வாழும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். மேலும் குழந்தைகளின் சுய மரியாதையையும் அது குறைத்துவிடும். மேலும் இது குழந்தையின் மன வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்தால், பயம் மற்றும் பதற்றத்துடன் அவர்கள் வளர்வார்கள். இதன் விளைவாக அவர்கள் பாதுகாப்பின்மை உணர்வுடன் கூடிய மனிதர்களாக மாறுவார்கள். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு விருப்பம் உள்ள காரியங்களை அவர்களை செய்ய வையுங்கள். அதற்கு போதிய வழிமுறையையும் அக்கறையும் செலுத்துங்கள்.

பெற்றோர்கள் ஏன் கண்டிப்புடன் நடக்கக்கூடாது என்பதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம். கண்டிப்புடன் நடப்பதற்கும், ஒழுக்கத்துடன் வளர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கண்டிப்பு என்பது குழந்தைகளுக்கு மத்தியில் பயத்தை உருவாக்கும். இதுவே ஒழுக்கம் என்பது நல்ல மனிதனாக வாழ தேவைப்படும் நல்ல குணங்களைப் பின்பற்ற வைக்கும்.

உங்கள் குழந்தை பயத்தில் வாழும்:

நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தை எப்போதும் பயத்தில் வாழும். தங்கள் சொந்த வீட்டிலேயே எந்த குழந்தையும் பயத்துடன் வாழ கூடாது. உங்கள் கண்டிப்பின் அளவை கட்டுப்படுத்துங்கள். தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உங்களை எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும் என்ற எண்ணம் உங்கள் குழந்தைக்கு ஏற்பட வேண்டும்.

மோசமடைவதற்கான மாற்றம்:

கண்டிப்பான வீட்டில் வளர்ந்த குழந்தைகள் காற்று நிரப்பப்பட்ட பலூன்களை போலே, எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும். பலூன் வெடிக்கும் போது அவர்கள் முழுமையாக ஒரு புது மனிதனாக மாறுவார்கள். வாழ்க்கையில் அவர்கள் ஈடுபடும் காரியங்களும் சுருங்கி போவதால், இந்த மாற்றம் இன்னும் மோசமடைய தான் செய்யும்.

உங்கள் குழந்தைக்கு எப்போதும் சந்தோஷம் கிடைக்காது:

நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால், பயத்துடனான சூழ்நிலையில், உங்கள் குழந்தை எப்போதும் சந்தோஷமாகவே இருக்க மாட்டார்கள். பெற்றோராக, உங்கள் குழந்தைக்கு நிபந்தனையற்ற அன்பையும் சந்தோஷத்தையும் வழங்கிடுங்கள். மாறாக அவர்களுக்குள் பயத்தை விதைக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் மனப்பாங்கை மாற்றும்:


கண்டிப்பான பெற்றோராக இருந்தால், அது குழந்தையின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் குழந்தைக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையென்றால், அதன் பாதிப்பு இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தையை மன ரீதியாக ஆரோக்கியமாக வளர்க்க நீங்கள் அன்பான, அதே சமயம் ஒழுக்கமான பெற்றோராக இருக்க வேண்டும்.👍👍👍📚📚📚
தோல்வியில் பாடம் கற்று வெற்றியை நோக்கி முன்னேறுவது எப்படி?

தோல்வி என்பது தொழில்முனைவு பயணத்தின் ஒரு அங்கம் என்பதால் அதன் வகைகள் மற்றும் காரணங்களை அறிந்து கொள்வது மற்றும் தோல்வி, வெற்றியடைந்த தொழில் உதாரணங்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். இது சற்று நீளமான புத்தகம் என்றாலும், பல வகையான தோல்விகளில் கவனம் செலுத்தும் புத்தகமாக இருக்கிறது.

’தி அப்சைடு ஆப் டவுன்’; ’வை பெயிலிங் இஸ் தி கீ டு சக்சஸ்’, எனும் இந்த புத்தகத்தை எழுதிய மேகன் எம்க் ஆர்டல் (Megan McArdle) வாஷிங்டன் போஸ்ட் பத்தியாளர் மற்றும் அதற்கு முன், தி அட்லாண்டிக் மற்றும் தி எக்கனாமிஸ்ட் இதழ்களில் செய்தியாளராக இருந்தவர்.

பத்து அத்தியாயங்கள் கொண்ட இந்த 300 பக்க புத்தகம், வர்த்தக ஊழல்கள், திரைப்பட தோல்விகள், தொழில் தோல்விகள், கல்வி குறைபாடுகள் மற்றும் தண்டனைச்சட்டம் ஆகியவறை பற்றி பேசுகிறது. பொருளியல் வல்லுனர்கள், உளவியல் வல்லுனர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் நடத்திய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தோல்வி வகைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக புத்தகம் உணர்த்தும் எட்டு முக்கிய அம்சங்கள்: வேகமான, இணைக்கப்பட்ட மற்றும் சிக்கலான உலகம் பரிசோதனை, சுய ஆய்வு, முடிவு எடுத்தல் ஆகியவற்றில் மேம்பட்ட திறனை கோருகிறது என்கிறார் மேகன். வெற்றிக்கு நடுவே அடிக்கடி தவறுகள் ஏற்படுவது வழக்கம் தான். செயல்திறன் வாய்ந்தவர்கள், ஆரம்பத்திலேயே, அடிக்கடி, அதிக பாதிப்பில்லாமல், கண்ணியமாக ஏன் மகத்தானதாகவும் தோல்வி அடைகின்றனர்.

1. தோல்வியில் இருந்து மீள்வது பல வர்த்தக ஜாம்பான்கள் தோல்வியை சந்தித்துள்ளன. சில நேரங்களில் பிரம்மாண்டமாகவும் சந்தித்துள்ளன. ஆனால் சில நிறுவனங்கள், நியூட்டன் சாதன தோல்விக்கு பின் ஆப்பிள் வெற்றி பெற்றது போல, அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன. பின்னடைவுகளில் இருந்து மீண்டு வருவது தொழில்முனைவோர்களை வெற்றிக்கான புதிய பாதையில் பயணிக்க வைக்கிறது. கர்னல் சாண்டர்ஸ் நெடுஞ்சாலை பணி காரணமாக தனது டிரெக் மையத்தை இழந்தாலும், அவர் பிரைடு சிக்கன் வர்த்தகம் பற்றி யோசித்து புகழ்பெற்ற கேஎப்சி வர்த்தத்தை துவக்கினார். வேலை இழப்பு விரக்தியை தரலாம் என்றாலும் புதிய வாய்ப்புகளை தேட வைத்து, மேம்பட்ட வாழ்க்கைகான வழிகாட்டலாம். தொடர்ந்து வலைப்பின்னலை உருவாக்குவது, பகுதி நேர பணிகள் மற்றும் தன்னார்வ முயற்சிகள் புதிய வாய்ப்புகளை அளிக்கும். நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு முன் பல தோல்விகளை சந்திக்கும் விற்பனை பிரதிநிதிகள் போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் பயன் அளிக்கும்.


இலக்கில் தெளிவு, செயல்பாடுகளை குறிப்பெடுப்பது, திட்டங்களை தயாரிப்பது ஆகியவை மூலம் நிராகரிப்பு அச்சத்தை வெல்லலாம். மேகன் இதற்காக புகழ்பெற்ற வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார்.  “அனுபவம் மூலமே சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அனுபவத்தை மோசமான முடிவுகள் மூலமே பெற முடியும்.“  தோல்வி மற்றும் விபத்தில் இருந்து மீண்டு வருவது உறுதியான அடையாளமாக விளங்கும். இது தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் மற்றவர்களுடனான உறவுக்கும் பொருந்தும்.

2. தடைகளை கண்டறிவது திட்டமிடுதல் மற்றும் பரிசோதனை ஆகியவை தோல்வியை தவிர்ப்பதற்கான வழிகளாக கருதப்படுகின்றன. ஆனால் பரிசோதனைக்கு கூட எல்லை உண்டு. கோகோ கோலாவின் சோதனைகள் நியூ கோக் வெற்றி பெறும் என உணர்த்தினாலும் இந்த தயாரிப்பு 3 மாதம் மட்டுமே தாக்குபிடித்தது. வெற்றிகரமான முன்னோட்ட திட்டத்தின் சாபத்திற்கான சரியான உதாரணம் இது என்கிறார் மேகன். நுகர்வோர் இலவச கோக் மாதிரிகளை விரும்பியதாக கூறினர். ஆனால் கடையில் காசு கொடுத்து வாங்கவில்லை. வேறு ஒன்றில் கவனம் செலுத்துவதால் பளிச் என தெரியும் தவறுகளை கோட்டை விடும் கவனிக்காத பார்வையற்றத்தன்மை தோல்விக்கான மற்றொரு காரணமாகிறது. சிபிஎஸ் தொலைக்காட்சி குழுவான டான் ரேதர் மற்றும் மேர் மேப்ஸ் தங்கள் செய்தி ஒன்றுக்கு அடிப்படையாக கருதப்பட்ட ஆவணங்கள் போலியானவை என உணராத சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.

ஜிஎம் நிறுவனம் கார் தயாரிப்பில் பல வகை மாதிரிகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்தி அவற்றுக்கான நிதி வாய்ப்புகளை அளித்தாலும், 2009 ல் நிதி நெருக்கடி காரணமாக கடின போட்டியை எதிர்கொண்ட போது ஊழியர் சலுகைகள் மற்றும் டீலர்கள் திட்டங்களை குறைக்க வேண்டியிருந்தது. வெற்றிகரமான நிறுவனங்கள் மாற்றத்தை கடினமாக உணர்ந்து தங்கள் வெற்றியின் பலிகடாவாகலாம். “நிலைமை சரியில்லாத போது எல்லாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்வதற்கு, சகஜநிலை சார்பு என உளவியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர் என்கிறார் மேகன். இது தோல்விக்கு வழி வகுக்கலாம்.” மேலாளர்கள் தோல்வி திட்டங்கள் மீதான ஈடுபாட்டை அதிகமாக்கி, தங்கள் தவறுகளை விடாப்படியாக பிடித்துக்கொண்டிருக்கலாம். தோல்வி வெறுப்பு அல்லது தவறுகளை ஒப்புக்கொள்ள முடியாத தன்மை மனித இயல்பு தான்.  நம்முடைய தவறுகளில் உணர்வு பூர்வமாக ஒன்றி போய்விடுவது மோசமான வழக்கமாக இருக்கிறது என்கிறார் மேகன். தோல்விகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் தன்மை நிறுவனங்களுக்கும் உண்டு. இதை குருப்பிடிட்டி என்கிறார் மேகன். அதாவது குழு மடத்தனம். என்ன செய்வது மந்தை உணர்வும் மனிதர்களுக்கு இருக்கிறதே. தோல்விக்கான காரணங்கள் சிக்கலானவை என ஒப்புக்கொள்வதற்கு பதில் ஆலோசனை நடத்துவது அல்லது பலிகடா தேடுவது என்பது தொடர்புடைய நிகழ்வாகும். 2009 நிதி நெருக்கடியின் போது மேட் ஹாட்டர்ஸ், மூச்சர்ஸ், கான்மென் மற்றும் கார்ப்பரேட் ஷில்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டன என்கிறார். ஒரு விளக்கத்தின் ஆறுதலை எதிர்நோக்குவது மனித இயல்பு தான். சதி பற்றிய காரணங்களை கூறுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

சில நேரங்களில் மனிதர்கள் தங்களை தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் தகவல்கள் திரிக்கவும் செய்கின்றனர். இது உறுதிப்படுத்தல் சார்பின் விளைவாகிறது. இதன் காரணமாக சரியான ஆனால் கடின கேள்விகளை கேட்க தடையாக அமையலாம். மாற்று கோட்பாடு கொண்டவர்களின் விமர்சனங்களையும் நாம் நிராகரிக்கலாம். தவறுகளை ஒப்புக்கொள்ள துணிச்சல் தேவை. தவறான முடிவுகள் தார்மீக மீறலுக்கு வித்திடக்கூடாது. நுகர்வோர் பழக்கங்களை கண்டறிவது மற்றும் மாற்றுவது கடினமானது என்பதாலும் தயாரிப்புகள் தோல்வி அடைகின்றன. பலர் ஆரோக்கிய உணவை விரும்பி, உடற்பயிற்சி செய்ய விரும்புவதாக கூறினாலும் நிஜம் வேறு விதமாக இருக்கலாம். இது பல லட்சிய திட்டங்களை தோல்வியில் ஆழ்த்தலாம்.

3. கலாச்சாரம், அரசியல் “நிதி கொள்கை போலவே தார்மீக தன்மை மீதும் சந்தை அதிகம் சார்ந்திருக்கலாம். அமைப்பு போலவே சமூக பழக்கமும் முக்கியமானது என்கிறார் மேகன்.
 சமூக பொருளாதார சூழலுடன், தனிப்பட்ட குணங்கள் மூலம் தோல்வியை கணிக்கலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தோல்வி, ரிஸ்க் தொடர்பான மாறுபட்ட விதிகள் மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளன. சிலிக்கான் வேலியின் தோல்வி என்பது பெருமையானது மற்றும் தொலைநோக்கு கொண்டவர்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் ஐரோப்பாவில் பொறுப்பற்றத்தன்மையாக கருதப்படலாம் என்கிறார் மேகன்.



அமெரிக்காவில் திவால் சட்டம் நிறுவனர்கள் புதிதாக ஆரம்பத்தில் இருந்து துவங்க வழி செய்கிறது. “அமெரிக்கா உலகின் திவால் தலைநகராக விளங்குகிறது. மற்ற இடங்களில் எல்லாம் அது களங்கமாக, அவமானமாக பார்க்கப்படுகிறது என மேகன் விளக்குகிறார்.  தோல்வியின் விலையை குறைப்பதன் மூலம் திவால் சட்டம் ரிஸ்க் எடுப்பதை ஊக்குவிக்கிறது. தோல்விடைந்த வர்த்தகத்தின் செலவுகளில் இருந்து விடுவிப்பதன் மூலம் அவர்கள் புதிதாக முயற்சிக்க ஊக்கம் பெறுகின்றனர் என்கிறார் அவர். அலைந்து திரிதலில் இருந்து விவசாயம் சார்ந்த பரிணாம வளர்ச்சி சமூக போக்கு மற்றும் புதிய வகை ரிஸ்குகளுக்கு வித்திட்டது. வேட்டையாடியவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் சார்ந்திருந்தனர் என்றால் விவசாயிகள் அலைதலைவிட கடின உழைப்பை நம்பியிருந்தனர். ஆக, ஐரோப்பா தொழில்முனைவை விவசாயம் போல கருதுகிறது என்றால் அமெரிக்கா அதை வேட்டை போல கருதுகிறது என்கிறார் மேகன்.

4. தோல்வி மற்றும் கொள்கை அமெரிக்காவில் பாரம்பரிய எண்ணம் கொண்டவர்கள் மற்றும் தாராளவாதிகள் மத்தியில் தோல்வி மற்றும் நியாமாக நடத்துவது தொடர்பாக அணுகுமுறை மாறுகிறது. தாராளவாதிகள் சமத்துவம் பற்றி கவலைப்படுகின்றனர் என்றால் பாரம்பரிய மனதினர் அளவு பற்றி கவலைப்படுகின்றனர். இது வரி விதிப்பு, பாதுகாப்பு திட்டம், வேலையில்லா காப்பீடு போன்ற சமூக நலத்திட்டங்கள் தொடர்பான அவர்கள் அணுகுமுறையையும் பாதிக்கிறது. அமெரிக்காவில் கொள்கை மாற்றங்களை எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், சமூக பரிசோதனைகளை நடத்துவது கடினமானது மற்றும் நீண்ட காலம் பிடிப்பது என எச்சரிக்கிறார் மேகன். ஒரே புள்ளிவிவரம் அரசியல் சார்புக்கு ஏற்ப வேறு விதமாக புரிந்து கொள்ளப்படலாம்.

5. திரைப்படங்கள்; வெற்றி, தோல்வி ஆய்வு, வல்லுனர்கள், அனுபவம் உங்கள் வசம் இருந்தாலும் வெற்றி தோல்விகளை கணிப்பது எத்தனை கடினமானது என ஹாலிவுட் உணர்த்துகிறது. பெரும் பொருட் செலவில் உருவான டைட்டானிக் திரைப்படம் தோல்வி அடையும் என கணிக்கப்பட்டு, பின்னர் மெகா ஹிட்டானது. ஆனால் வாட்டர்வேர்ல்டு விஷயத்தில் நேர் எதிராக அமைந்தது. ஸ்டீவன் ஸ்பில்பெர்க் தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் தோல்வி படம் கொடுத்தார்.  “கடந்த கால வெற்றிகள் எதிர்கால பலனுக்கான உத்திரவாதம் அல்ல என்கிறார் மேகன். அதே நேரத்தில் மனித இயல்பு முற்றிலும் கணிக்க முடியாதது அல்ல. சிக்கலான அமைப்புகளுக்கு ஏற்ப மேலும் பரிசோதனைகள் தேவை என்றாலும், அவற்றுக்கு எல்லை உண்டு.

 6. மருத்துவ தவறுகள் தவறுகள், தோல்விகள் மற்றும் விபத்துகளை பகுத்துணர மருத்துவ உலகம் கற்றுத்தருகிறது. விபத்துகளை எதிர்பார்க்கவோ திட்டமிடவோ முடியாது. தவறுகளை எதிர் நோக்கலாம் ஆனால் மோசமானவை அல்ல. தோல்விகள் தீவிரமானவை. இவை தவறான கணிப்பு அல்லது பொறுப்பற்றத்தன்மையால் நிகழலாம். அமைப்பு வடிவமைப்பு, மருத்துவ செயல்முறைகள், மருத்துவ கருவிகள் மற்றும் மனித முடிவுகள் ஆகியவற்றில் தவறுகள் ஏற்படலாம். மேலும் பல காரணங்களினால் தவறுகள் நிகழலாம். மருத்துவ ஊழியர்கள் முறையான செயல்முறை பின்பற்றப்படாத போது தவறுகள் நிகழலாம்.

7. சந்தை தோல்விகள் சந்தை நிர்வாக விதிகள் வகுக்கப்படும் விதத்தில் பிரச்சனைகள் தோன்றலாம். மோசமான எண்ணம் கொண்டவர்கள் ஒட்டைகளை பயன்படுத்தி ஏமாற்றலாம். என்ரான் விஷயத்தில் இப்படி தான் நடந்தது. “எழுதப்பட்ட விதிகளுடன் எழுதப்படாத விதிகளும் வலுவாக இருக்கும் போது சந்தை செயல்பாடு சிறப்பாக அமைகிறது,” என்கிறார் மேகன்.  வழக்கமான பொருளாதாரத்தைவிட, பரிசோதனை பொருளதாரம் போன்ற உத்திகள் இத்தகைய சந்தையை உருவாக்க உதவி, தவறுகளை முன்னதாகவே உணர உதவலாம்.


8. நீண்ட கால எதிர்வினை அறிவியல் மற்றும் இலக்கிய வெற்றியில் தான் கல்வி அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் வெற்றிக்கு முந்தைய போராட்டங்களில் அல்ல. திறமை மட்டும் அல்லாமல் கடின உழைப்பும் வெற்றிக்குக் காரணம் என்கிறார் மேகன். மாணவர்கள் தோல்வி அடைய மற்றும் மீண்டு வர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிறார். ஏழை பள்ளிகள் இந்த வாய்ப்புகளை அளிப்பதில்லை. இந்த புத்தகத்தின் இறுதி அத்தியாயம், குற்றவாளிகள் குணத்தை மாற்றுவதில் தண்டனை அமைப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறது.

கடின தண்டனைகள் அல்லது பழிவாங்கல் பதிலாகாது. சரியான மாற்று நடவடிக்கைகளே பொருத்தமாக இருக்கும். பெற்றோர் காட்டும் கடின அன்புடன் இதை மேகன் ஒப்பிடுகிறார். தவறுகள், தோல்விகள், விபத்துகள், பேரழிவுகள் ஆகியவற்றை வகைப்படுத்த இந்த புத்தகம் வழிகாட்டுகிறது. கணிப்புத்தன்மை, தாக்கம், மறுசீரமைப்பு வாய்ப்பு, எதிர்கால திட்டமிடல் தாக்கம் ஆகிய அம்சங்களை இது கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் தோல்வி குறித்த கலாச்சார பழக்கங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். முறையான ஆவணப்படுத்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மூலம் துறைகளுக்கு ஏற்ப தோல்வி அனுபவத்தை வகைப்படுத்த முடியும். உதாரணமாக ஸ்டார்ட் அப் அல்லது என்.ஜி.ஒ அமைப்புகளுக்கான வர்த்தக மாதிரி கண்டறியப்பட்டு பலவீனமான அம்சங்களை கணித்து, தோல்வி வாய்ப்புகளையும் முன்கூட்டியே கணிக்கலாம். “உறுதியான சமூகம் தோல்வியை அனுமதித்து அதன் தாக்கம் அந்த கணத்தில் மட்டுமே இருக்க அமைகிறது. இது மீண்டு வர வழி செய்து அதன் பலனை அனைவருக்கும் அளிக்கிறது என்கிறார் மேகன்.