எனது உலகம் ...
கோவையில் ..எனது வாடிக்கையாளர்களில் அதிகம் ..வழக்கறிஞர் நண்பர்கள் இருக்கிறார்கள் ..எனது பணிகாரணமாக சந்திப்பது வழக்கம் ..அவர்களுடன் சேர்ந்து நானும் நீதிமன்றங்களில் சுற்றி பார்க்கும் பழக்கம் உண்டு...அதுவும் திருமதி ஷர்மிளா அவர்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நண்பர் ..அவரிடம் கலந்துரையாடுவது உண்டு ...சில வழக்குகளை மனிதாபிமானத்தோடு ..செலவு இல்லாமல் செய்து இருக்கிறார் ..அதன் பகிர்வு ..
செல்வி...சாயந்திரம் ஆபீஸ் முடிஞ்சு போறப்ப இங்க வந்துட்டுப் போறியா....??? என் வழக்கறிஞர் தோழி..போன் செய்தாள்.
என்ன விஷயம்...சொல்லு...
ஒரு டிவோர்ஸ் கேஸ்.. இன்னும் பதிவு பண்ணல. நீ ஒரு தரம் பார்ட்டியப் பார்த்துப் பேசிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். வரியா...??
சரி என்று சொல்லிவிட்டு என் வேலையைக் கவனித்தேன்., சாயந்திரம் அவள் ஆபீஸ்க்கு போனேன்.
ஒரு இளம் தம்பதி காத்துக்கொண்டிருந்தனர். ரெண்டு பேரும் பார்க்க லட்சணமா, பொருத்தமா இருந்தாங்க..தோழி எங்களை விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். நான் அவர்களை ஏறிட்டு, சொல்லுங்க....என்றதும் ரெண்டுபேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டார்கள்...
மேடம் ....எங்களுக்கு போனவருஷம் கல்யாணமாச்சு.. இவங்க வீட்டுல 20 பவுன் போட்டு கல்யாணம் பண்ணிவைச்சாங்க.. நான் ஒரு தனியார் காலேஜ்ல லெக்சரரா இருக்கேன்.. பிஎச்டி படிச்சிட்டிருக்கேன். என் தீஸிஸ் முடிச்சு டாக்டரேட் வாங்கற வரைக்கும் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி, என் மனைவியும் ஒத்துக்கிட்டாங்க... ஆனா இது எங்க ரெண்டு
பக்கத்து பெரியவங்களுக்கும் தெரியாது.. ஆறுமாசம் அமைதியா இருந்தாங்க எங்க அம்மா. அப்புறம் என் மனைவிக்கு ரொம்ப குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சாங்க.. ஒரு கட்டத்துல, எங்கப்பாவும் அம்மாவோட சேர்ந்துக்கிட்டார்.
ஒருநாள் , எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் இவங்க வீட்டுக்குப் போய், உங்க பொண்ணுக்கு என்னமோ உடம்புல பிரச்னை இருக்கு...அதான் குழந்தை உண்டாகல...அதை மொதல்ல சரி செஞ்சு, அப்பறமா எங்க வீட்டில் கொண்டு வந்து விடுங்கன்னு சொல்லவும் என் மாமனார் மாமியாருக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு... எனக்கும் இது ரொம்ப அதிகமா படவே, என் அப்பா அம்மாகிட்ட உண்மைய சொன்னேன்... ஆனா, அவங்க இதை நம்பவே இல்ல...நான் என் மனைவிய காப்பாத்த பொய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.. என் படிப்பு சம்பந்தமா..எல்லா ரெகார்ட்ஸையும் காண்பிச்சேன்.. அப்பவும் நம்பல.. இப்போ எங்கம்மா, வம்படியா...என் மனைவிய டிவோர்ஸ் பண்ணியே தீரணும்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்க..
என்ன பண்ணறதுன்னு தெரியல.. நான் ஒரே பையன்..வயசான அப்பா அம்மாவை தனியே விட்டுவிட்டு,
தனிக்குடித்தனம் போகவும் மனசில்ல...பெரியவங்களை சமாதானம் பண்ணவும் தெரியல.. இப்போ என் மனைவி அவங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்க. நான் ரெண்டு பேரும் சேர்ந்து இங்க வந்தது எங்க வீட்டுக்குத் தெரியாது... ப்ளீஸ் உதவி செய்யுங்க....மேடம்னு...ஒரே மூச்சில் சொல்லி முடிச்சார் அந்தக் கணவர்...
இந்தப் பேச்சு முடியும் வரைக்கும், அந்தப் பெண் கண்ணில் வழியும் நீருடன் தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்...
நான்கு வாரங்கள் கழித்து, என் தோழி மீண்டும் எனக்கு போன் செய்தாள்.... செல்வீ...அந்த டிவோர்ஸ் பார்ட்டி...இன்னிக்கு என் ஆபீஸ் வந்தாங்க...பை நிறைய பூ, பழம் ஸ்வீட்டு எல்லாம் வாங்கி வந்தாங்க. டிவோர்ஸ் பெட்டிசன் போடலயாம்....
ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்...!!!
முகம் முழுக்க சிரிப்பு .....!!!
அப்படி என்ன மாய மந்திரம் பண்ணே...?????
நீங்க சொல்லுங்க பிரண்ட்ஸ்.... நான் என்ன செஞ்சிருப்பேன்னு...???
புரிதல் உண்டு...பிரிதல் இல்லை....
கணவரின் பிஎச்டி படிப்பு முடிந்து பட்டம் வாங்கும் பொருட்டு குழந்தைப்பேறை ஒத்திப்போட்டனர் இளம் கணவன் மனைவி. இதில், சம்பந்தப்பட்ட பெரியவர்கள்..தன் மருமகளிடம் ஏதோ குறை இருப்பதாகவும் அதை மறைக்கவே தன் மகனும் மருமகளும் படிப்பு , பட்டம் என்று நாடகமாடுவதாகவும் தவறாகப் புரிந்துகொண்டு, மருமகளை விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்று விதண்டாவாதம் செய்யகின்றனர்..அம்மா அப்பாவை சமாதானம் செய்யத் தெரியாத, மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாத, அந்த இளம் கணவருக்கு நான் எப்படி தீர்வு சொன்னேன்....???
உங்க அம்மாவைப் பத்தி சொல்லுங்க....???அந்தப் பையனிடம் கேட்டேன்....
எங்க அம்மா...ரொம்ப நல்லவங்க மேடம்...ஆனா முரட்டுப் பிடிவாதம் . அதனாலேயே அவங்களுக்கு யாரும் பிரண்ட்ஸ் கிடையாது..
அப்டியா...?? சரி...அவங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் ..?? என்ன ஐட்டம் விரும்பி சாப்பிடுவாங்க...?? எந்த சாமி பிடிக்கும்...??
ப்ளூ கலர் ரொம்பப் பிடிக்கும் மேடம்...கடலைப்பருப்பு ஒப்பட்டு அவங்களுக்கு பிடித்தமான இனிப்பு..வாரா வாரம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவை தண்டுமாரியம்மன் கோவிலுக்கு போகலன்னா எதோ பறிபோன மாதிரி இருப்பாங்க..அவ்ளோ பக்தி அந்த அம்மன் மேல...
அடடடா....மாட்டிக்கிட்டாங்களே மாமியார்....என் மனக்குயில் கூவியது....
ஓக்கே... நீங்க போய்ட்டு வாங்க... இந்த வாரம் மட்டும் உங்க அம்மா கூட நீங்க கோயிலுக்கு வாங்க...உங்க போன் நம்பர் உங்க அட்வகேட் கிட்ட குடுத்துட்டுப் போங்க....
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை...சரியாக ஆறு மணிக்கெல்லாம் கோவை ...ஸ்ரீதேவி சில்க்ஸ் ......ப்ளூ கலர்ல அழகா ஒரு சில்க் காட்டன் புடவை...எடுத்துக்கிட்டு, கோயிலுக்குப் போனேன்.. அந்தப் பையனும் அம்மாவும் ஆறேகால் மணிக்கு வந்தாங்க.. என்னைப் பார்த்துட்டு அந்தப்பையனுக்கு ஆச்சர்யம்...ஆனா கண்டுக்காதன்னு சாடை காட்டிவிட்டேன்...
பொறுமையா அம்மன் தரிசனம் ஆனது.. பிரகாரம் சுற்றி வந்து, அம்மாவும் பையனும் உட்கார்ந்தார்கள்... நானும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தேன்.. அஞ்சு நிமிஷம் கழிச்சு, அந்த அம்மா கிட்ட போய்,
அம்மா, இன்னிக்கு என் மாமியார் நினைவு நாள்.. வருஷா வருஷம் அவங்க ஸ்தானத்துல யாராவது ஒரு தாய்க்கு புடவை வச்சுத் தருவோம்.. இதை வாங்கிக்கொண்டு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..என்று புடவை, பூ, இனிப்பு போளி எல்லாம் வச்சு...கொடுத்தேன்...
ஒரு நிமிஷம் தயங்கினாங்க..அப்புறம் ஆச்சர்யம் சந்தோஷம் எல்லாம் கலந்து,..புடவைய வாங்கிக்கிட்டாங்க... பிரிச்சுப் பாருங்கம்மான்னு சொன்னேன்... புடவைய பிரிச்சு கலரைப் பார்த்ததும் அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம்... அந்தப் பையன் நான் என்னமோ பண்றேன்னு...புன்னகையோட கவனிச்சுட்டு இருந்தான்....
அடுத்த வாரம், அந்த அம்மா மட்டும் கோயிலுக்கு வந்தாங்க... என்னை பார்த்ததும் ஒரு நொடி யோசிச்சு, அப்புறம்அடையாளம் கண்டுகொண்டு புன்னகைச்சாங்க... அம்மன் தரிசனம், பிரகாரம் சுற்றி வருதல் எல்லாம் முடிச்சு உட்கார்ந்தோம்.. மெதுவா...என் பேரு,,,நான் என்ன பண்றேன்னு ஆரம்பிச்சாங்க.. நானும் சொன்னேன்...( வக்கீல்னு சொல்லலை..) அப்பறம் மடைதிறந்த மாதிரி வெள்ளமா கொட்டித் தீர்த்துட்டாங்க அவங்க குடும்ப விஷயங்களை...
அடுத்தடுத்த வாரங்களில், அவங்க குடும்பத்தில் இருக்கற பிரச்னை...ஒரு விஷயமே இல்லை...என்றுஅவங்க நினைக்கற அளவுக்கு நான் ஊர் உலகத்தில் எப்படி இருக்கு என்று புரிய வைத்தேன்... அப்புறம், அவங்க மருமக இருக்கற ஊர் பேரைச் சொல்லி, எங்க பக்கம் தெரிஞ்சவங்க வீட்டுல கூட இப்டிதாங்க...மாமியா அவங்க மருமக உடம்புலதான் என்னமோ குறை இருக்குன்னு...நினைச்சு அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... ஆனா அந்தப் பொண்ணு, பாவம் மாமியாரை தெய்வமா நினைச்சுட்டிருக்கு....அவங்க நல்லா இருக்கணும்னு கோயில் கோயிலா சுத்திட்டிருக்கு...
பாருங்கம்மா..இந்தக்காலத்துல கூட இப்படிலாம் பொண்ணுங்க இருக்கு.... உங்களுக்கும் வாய்ச்சிருக்காளே ஒரு ராட்சசி....ன்னு சொல்லவும் அந்தம்மாமுகமே மாறிடுச்சி....
அப்டியா....??, அந்த ஊரா....?? அந்தப் பொண்ணு பேரு என்ன...???
நான் சொன்னேன்.... சட்டுனு அந்தம்மா கண்ணுல தண்ணி வந்துருச்சி....செல்வி....என்னை என்ன பண்ணாலும் தகும்... அந்தப்பொண்ணுதான் என் மருமகள்... இந்த கோவை தண்டுமாரியம்மன் இன்னிக்கு என் கண்ணைத் திறந்துட்டா.... நாளைக்கே என் பையனை போய் மருமகளை...கூட்டிட்டு வரச் சொல்றேன்..நீ நல்லா இருப்பே ..... ஒரு நாள் உன் வீட்டுக்காரரை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு கட்டாயம் வரணும் செல்வி....
அதுக்கென்னம்மா கட்டாயம் வரோம்...ன்னு சொல்லிட்டு, கோவை தண்டுமாரியம்மன் கோவில் இன்னொரு கும்பிடு போட்டுட்டு....கிளம்பினேன்....சிலசமயம் சினிமா, சீரியல்களில் நடப்பதை விட....நிஜ வாழ்க்கையில் சுவாரசிய சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன...
என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ....தொடரும் ..