சனி, 2 டிசம்பர், 2017


Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
திருகார்த்திகை தீப ஒளி திருநாளில் வரத்துடன் சேர்த்து வரலாற்றையும் வேண்டி ஓர் தேடல் எத்ததைய திட்டமிடலும் இன்றி எளிதாய் தொடங்கியது இன்றைய பயணம்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கரப்பாடி அமணலிங்கேஷ்வரர் ஆலயம் முதல் தரிசனமாக அமைந்தது
ஆற்றங்கரையோரமாக அமைந்த அமரர் வாழ்ந்த இடங்களில் அமையும் சிவாலயங்களே ஓர் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமையும்
அத்தகைய வகையில் கோவிலை ஒட்டிய தடுப்பனையும் அதை சார்ந்து ஓர் முன்னோரின் திருபூத உடல் புதைந்த இடமும் முன்பொருகாலத்தில் ஆறு வாழ்ந்தை தெளிவாக சுட்டிக்காட்டியது
ஓர் கோவில் கட்டப்படும் அமைப்பும் அது சார்ந்த கணக்குகளும் பிற குறியீடுகளும் அக்கோவில் எழுப்ப பயன்படுத்திய கற்களிலேயே அமைத்து முழுமையான வெளிப்புறம் முழுதும் வட்டெழுத்துக்கள் கொண்ட கல்வெட்டே பல நூறு ஆண்டுகள் பழமையானது ஆலயம் என்று விழிதிகைக்க வைக்கிறது
கோவில் அமைந்திருக்கும் இடமும் அங்கு நிலவிய நிசப்தமும் ஆத்மதிருப்தி நிறைந்ததாய் விளங்கியது
அடுத்ததாக நாம் கண்டது
மழைவேண்டி வழிபடும் வழிபடும் அண்ணப்பையன்சாமி கோவிலும் கல்திட்டையும்
சித்திரை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுப் என்ற கூடுதல் தகவலுடன்
அடுத்ததாக சென்றது
தற்போது வரை ஆவலப்பட்டி ஜமீன் வம்சாவழிதார்களின்
நேரடி கட்டுப்பாட்டில் அமைந்த
கரப்பாடி காளியம்மன் கோவில்
உக்கிரமாய் அமைந்த சாக்த வாழிபாடு செய்யும் அம்மனாக காட்சியளிக்கும் காளியம்மனை மேற்புறமாக வைத்து சாந்த முகம் கொண்ட அம்மனாக புதிய வடிவம் கொடுத்து இன்றுவரை ஊர் கூடி வழிபட்டு தேரோடும் கோவிலாக காட்சியளிக்கிறது
இந்த ஆலயம்
இக்கோவிலில் இருந்து பார்த்தால் அமணலிங்கேஷ்வரர் ஆலயம் தென்படுவது மற்றும் ஓர் கூடுதல் சிறப்பாக அமைந்தது
வழிபாட்டுடன் சேர்த்து வரலாறும் வேண்டியதால் அடுத்ததாய் சென்றது
ஆவலப்பட்டியில் அமைந்த ஆவல்ஜோத்தமுத்தையன் திருக்கோவில்
குஜ்ஜபொம்மு குலத்தோரின் குலதெய்வமாய் அமைந்த மாலையும் அதன் அருகில் அமைந்த ஆவல் ஜோத்தமுத்தையன் சிலையும்
மெய்சிலிர்க்க வைத்ததாய் அமைந்தது
அக்கோவிலுக்கு மேற்புறம் மேலும் ஓர் ஆலயம் அமைந்திருப்பது அறிந்து அங்கும் சென்றோம்
வல்லக்கொண்டம்மன் நினைவாக முன்னோர்கள் வழிபட்ட இடமாய் அது அமைந்ததாக இருந்ததை தெரிந்து மேலும் ஓர் ஆச்சர்யமாகவே அமைந்தது
அனைத்து வழிபாடுகளும் முடிந்து பாசம்கொண்ட தங்கை நேசமாய் கலந்தளித்த தேநீர் புது உற்சாகத்தை ஊட்ட
அடுத்ததாய் பயணப்பட்டோம்
ஆதிகுலதெய்வமான ஹீ வல்லக்குண்ட நாத சுவாமி ஆலயம் நோக்கி
ஆயிரமாயிரமாய் பணம் செலவழித்தாலும் வாங்க முடியா ஆத்ம திருப்தி நிறைந்ததாய் அமைந்தது இன்றைய பயணம்
உடன் வந்த சொந்தங்களுக்கும்
உபசரித்த நெஞ்சங்களுக்கும்
கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் காணிக்கையாக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக