புதன், 20 டிசம்பர், 2017


RK எலைட் ...தமிழநாட்டு கட்சிகள் -கம்பளசமுதாயம்

கொஞ்சம் ஒளி கீற்று ...கம்பள சமுதாயத்தில் அரசியல் பதிவுகள் தெரிகிறது ..நம் இளைய சொந்தங்களின் உதவியோடு ....இது ஒரு நல்ல முன்னேற்றம் ..


*****தமிழ்நாட்டில் மொத்தம் 53 கட்சிகள்.இதில் பெருவாரியான கட்சிகள் தேவர், நாடார், கவுண்டர் , ஆதி திராவிடர் ஆகிய மக்களின் இயக்கமாகவே இருப்பதை போல் தெரிகிறது.
அரசியல் நமக்கு தேவை இல்லை. ஆனால் நாமும் அதனால் பாதிக்க பட்டுக்கொண்டே இருப்போம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நமக்கு இந்த கணத்தில் என்ன தேவை என்பதை பற்றிய விவாதம் தொடர்ந்தால் நாம் எதை நோக்கி செல்லலாம் என்பதில் இன்னும் தெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது..

*******தவராக யாரும் நினைக்க வேண்டாம் ...

நம்ம ஜாதிக்கு அரசியல் சுட்டு போட்டாலும் வராது ...

முட்டாள் நா ......ன் ....இது அடுத்த தலைமுறையில் மாறலாம்..

எல்லாருமே தலைவனாக வேண்டும் என்றால் ....யாருதான் தொண்டன்...

எத்தனை பாகுபாடுகள் நாம்மிடையே ....

தெளிவற்ற , தொலை நோக்கமற்ற பார்வை..

மாறினால் மட்டுமே மாற்றம்.. .


*******தனக்காக வாழ்ந்த 100 பேரை சொல்லலாம்....

******தன் சமுதாய வளர்ச்சிக்காக வாழ்ந்த யாரையாவது சொல்லுங்களேன்...
*****நமது சமுதாயத்தில் க.சுப்பு மட்டூமே அரசியல் தலைவராகவும் நமது சமுதாய நலனில் அக்கறை உள்ளவராகவும், அனைத்து அரசியல் தலைவர்களாளும் மதிக்கப் பட்டவராகவும் இருந்தார்

********எனக்கு தெரிஞ்சு ராம கிருஷ்ணனு ஒருத்தர் DMK ல நல்லா வளர்ந்தார் , திருப்பூர் மாவட்டத்துல...

நம்ம ஜாதில ஒரு 40 % சப்போர்ட் பண்ணி இருந்தா , MLA சீட் கூட கிடைச்சு இருக்கும்..

யாரையாவது நம்பனும்...ஒன்னும் வேணாம்...நம்ம ஜாதிக்காரன் நல்லா இருக்கட்டும்னாவது நினைக்கணும்...

ஏதுவுமே பண்ண மாட்டோம்....பின்ன எப்படி ?

*********நம் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஊராட்சி தேர்தலில் கூட நாம் ஜெயிப்பதில்லை ஜெயிக்க நாமே விடுவதில்லை


******ஆட்சி செய்தவர்கள் வீழ்வதும் வீழ்ந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் காலசுழற்சி பார்ப்போம் நம் எதிர்காலத்தை..

********இதுவரை எது சரியாக நடை பெற வல்லை என்பதை பற்றி மட்டும் பேசினோம்.

என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதை பற்றி உரையாடினால் இன்னும்
நன்றாக இருக்குமே...


*******@Sivakumar அண்ணன்
அவர்கள் அமைதியாக யோசித்து கொண்டு இருப்பார் போலவே...

******முக்கியமான விசயம் எல்லாம் பேச மாட்டார் ...
நமக்கு எடுக்கு  வம்புனு எஸ்கேப் ஆகிடுவார்

******முதலில் நாம் அதிகம் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் இதனால் ஒனறிய மாவட்ட வார்டுகளுக்கான பிரநிதித்துவத்தை எளிதாக பெறலாம் இதற்கு ஒருங்கிணைந்து நம் வேட்பாளரை ஆதரிப்பது அவசியம்
******நாம் படிப்படியாக உயர அதுவே சிறந்த வழி..
முற்றிலும் உண்மை....

******திறமையான இளைங்கர்களுக்கு RK Elite உதவலாம்


*******உதவி என்றால் எந்த
வகையில்?

******ஊருக்கு ஒருத்தரை அடையாளம் கண்டு அவரை வளர்க்க உதவ வேன்டும் ....

அந்த ஊருக்கு சிறு உதவிகள் அவர் மூலம செய்து பிரபலப்படுத்த வேன்டும் ...

******முதலில் , நாம் இருக்கிற மக்கள் தொகையில்
15% மக்களிடமாவது ஒருங்கிணைந்த
தொடர்பை ஏர்படுத்தினால் பல நன்மைகள் உண்டு....

******நம்மை போன்று பணியில் இருப்பவர்கள் பிரசார வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் நோட்டீஸ் அடித்தல் போன்ற செலவினங்களுக்கு உதவலாம்

*********நான் இப்போதும் ..நம் சமுதாயம் வசிக்கும் கிராமப்பகுதியில் ...ஒரு கவுன்சிலர் ...பஞ்சாயத்துபோர்டு ப்ரெசிடெண்ட் ...ஆக போட்டியிடுவோம் ...பலமுறை ..பண்பாட்டு கழக கூட்டங்களில் நம் தலைவர்களிடம் பேசியுள்ளேன் ...அவர்கள் பதில்...மாப்பிள இப்ப தானே சமுதாய பணிக்கு வந்திருக்கிறீர்கள் ...நாங்கள் உங்களுக்கு முன்னாலே கத்தி ...நாடி ,நரம்பு எல்லாம் அந்து போயி ..என்னோமோ பண்ணி தொலைங்கோ ...என்று விட்டு விட்டார்கள் ...அம்மாபட்டி ...ராமு ..திமுக .பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்ட் ....ஆண்டாள் சந்திரன் .பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்ட் ..ஜில்லாபோ நாயக்கன் பாளையம் ...அதிமுக ...பெரியகோட்டை ...திருமதி .சுசீலா ...கவுன்சிலர் (இவருக்கு நம் சமுதாயம் அல்லாத ஓட்டு அளித்தால் கவுன்சிலர் ஆனார்கள் )....திருமதி .கோமதி ...கவுன்சிலர் அதிமுக ..சுமார் 17 கிராமங்கள் நம் சமுதாய மக்கள் அதிகம் இருந்து ஓட்டு அளித்து இருந்தால் ..திருப்பூர் மாவட்டம் ...ஒரு 5 mla கண்டிப்பாக இருந்திருப்பார்கள் ....இன்னும் இது பற்றி வாரம் ஒருமுறை நம் அரசியல் பதிவு இடுகிறேன் ...அரசியலில் நம் சமுதாயத்தை நம்பாமல் ...இருந்தால் ..கண்டிப்பாக வெற்றி ...உறுதி ...தற்பொழுது கூட ..வசந்தம் குழுவில் நம் சொந்தம் ஒருவர் ஜப்பான் பனிச்சறுக்கு விளையாட்டை பதிவிட்டிருந்தார் ...அதை பார்த்தவுடன் ..என் நினைவுக்கு வந்தது ....நம் சமுதாயத்தை பற்றி தான் ...ஆனால் நம்பிக்கை ...நம் இளையசொந்தங்களின் ஆதரவோடு ...களத்தில் இறங்கினால் ...வெற்றி வாய்ப்பை பெறலாம் ...மற்ற சமுதாயத்தாரிடம் கேட்டால் ..இந்த சமுதாயமா ..சும்மா ஒரு ட்விஸ்ட் பண்ணிடவிட்டால் போதும் ..அவங்களே யாரை மேல வரவிடமாட்டார்கள் ...என்பார்கள் ...

******தெலுங்கர்கள் என்பதற்காக வைகோ விஜயகாந்த் ஆகியோரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதை விட வேண்டும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபடின்றி நம்மவர்ளை மட்டும் ஆதரிக்க வேண்டும்

*****தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சிகளில் நாங்கள் இதை நடைமுறைப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்!!!!!
*****அப்போது ஒன்றிய தலைவர் பதவி நமக்கு கிடைத்திருக்கே வேண்டுமே
*****நமதுமக்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊராட்சித்தலைவர்களாகவும் யூனியன் கவுன்சிலர்களாகவூம் வெற்றி பெறவைத்துள்ளோம்!!!!

*****எந்த ஊரில் ஒற்றுமை இருக்கிறது...
*****அதில் சில விதிவிலக்குககள் இருக்கத்தான் செய்கின்றன.

******நான்கு வீடுகள் இருந்தாலே ஒற்றுமை இல்லை என்பதே நிதர்சனம்
******Unmai..இப்படியே எத்தனை வருடங்கள் போவது....

எப்படி மாற்றுவது..

*****உண்மை எங்கள் பகுதி உள்ளாட்சி தேர்தல் உணர்த்தியது பாடம்

******முதலில் ௫௦ கிராமங்கள் போதும்....அந்த கிராமம் முழுக்க நம்மவர்கள் இருக்க வேன்டும் ...

உதாரணம்....தவச்செல்வன் கிரமம் ....

50 counsilor ,5 பிரசிடெண்ட் போதும் ...கொஞ்சம் கொஞ்சமா வளர்வோம்
*****நமது சமுதாயத்தாரின் பேச்சை மதிக்கும் பிற சமுதாய மக்களும் நமக்கு உதவிகரமாகவும் உள்ளார்கள்


****இது காலங்காலமாக நம் மக்களிடையே உள்ள ஒரு மிக பெரிய பலவீனம்..

இதை எவ்வாறு கடப்பது?

****மற்றவர்கள் மதிப்பார்கள்.நம்மில்தான் பிரச்சினை.
******அதை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை அரசியலுக்கு எதார்த்தை விட தந்திரம் அதிகம் தேவை

******ஊராட்சியில் நம்மவர்கள் மட்டும் பகுதியில் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்களா....அதிலும் போட்டிதான்
****[21:40, 12/20/2017] Sumathimohan kadavoorpalace: 20 வருடங்களுக்கும்  மேலாக அனுபவபூர்வமாக கண்காணிக்கிறேன்

*****போன முறை ...திருப்பூர் மேயர் தேர்தலுக்கு நம் அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ..அவர்கள் ...திமுக சார்பாக தலைமைக்கு மனு அளித்தார்கள் ...ஆனால் கவுண்டர் சமுதாயம் அதிகம் உள்ள திருப்பூரில் ...கவுண்டர் சமுதாய ஒருவர் தான் நிற்க வேண்டும் என்று பொங்கலூர் பழனிசாமி ...அமைச்சர் தலைமையிடம் வாதாடி மேயர் வேட்பாளர் நிறுத்தினர் ...இவர்கள் சமுதாய ஒட்டு அதிகம் இல்லை ...இவருக்கு கொடுத்தால் ..வெற்றி வாய்ப்பு இல்லை என்று ...முட்டுக்கட்டை போட்டுவிட்டார் ...நம் சமுதாய சொந்தங்கள் அதிகம் கவுன்சிலர் ...இருந்துருந்திருந்தால் ...நம் மண்ணின் மைந்தர் கம்பள சமுதாயத்தில் ..திருப்பூர் மேயராக வந்துஇருப்பர் ...திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் கம்பள சமுதாயத்தினர் இருந்து அதற்கான சிறு முயற்சியோ எடுக்கவில்லை வருத்தம் ...வருத்தம் என்று சொல்லுவதை விட ...சாபம் என்று சொல்லுவது மிக பொருத்தமாக இருக்கும் ....ஆனாலும் சிறு நம்பிக்கை யை கைவிடவில்லை ...இனி வரும் காலம் நம் இளைய சொந்தங்கள் இருக்கும்போது கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது ...பார்ப்போம் ...


***: பொதுநலம் கருதி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை முதலில் விதைக்க வேண்டும்
[**** இளைஞர்கள் முயற்சித்தால் முடியும்
****கடந்த சட்டசபை தேர்தலில் உடுமலை தொகுதியில் பாமக சார்பில் நம் சமுதாய நபருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது ஆனால் அவருக்கு நம் சமுதாயத்தினர் யாரும் உதவவில்லை

********யாரும் சமுதாயத்தை பார்ப்பதில்லை...கட்சியைத்தான் பார்க்கிறார்கள்

*****ஏற்கனவே நாட்டை ஆண்டுவிட்டோம் எனவே ஓய்வில் இருப்பதாக சொல்லி சமாளிப்போம்😝
*****குஜராத் ல மோடி ஜெயிக்கலை ? ஸ்கிரிப்ட் writter தான் ஜெயிச்சார் ?

இது ரொம்ப முக்கியம் ?

******அடுத்த
இலக்கு

உள்ளாட்சி தேர்தல்

100 பஞ்சாயத்து தலைவர்கள்

அவர்களுக்கான
பாராட்டு விழாவில் அனைவரும்
சந்திப்பது...

***முடியாதது எதுவும் இல்லை. முயற்சிகள் யாவும் தோற்பதும் இல்லை.
****பப்புவா இருந்த ராகுல் எப்டி பாயும் புலியா மாறினார்...எல்லாம் ஸ்கிரிப்ட் writting தான் ...

*****ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி மத்தவங்களை நம்ப வைச்சுறலாம் ஆனா மனிவாரிதே ஒய்ட்டி சேய முஞ்சது
****Enna fact.....100 பேர் நின்னா 10 பேர் ஜெயிக்கலாம் இல்ல....10 %. இது than முதற் படி ....
****மாற வேண்டியது
நமது சிந்திக்கும் விதம்.

சண்டை இட்டாலும் மீண்டும் சேர வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை கொண்டு இருந்தால் நம்மை ஆசைக்க ஆள் ஏது?
****நாம் ஆயிரம் பேசினாலும் நம்மவர்கள் கிட்ட ஒரு  கெட்ட பழக்கம் இருக்கு அண்ணா அது எப்போமே மாறாது...  மாத்திக்கவும் மாட்டாங்க ... எல்லாம் அவன் செயல் .. என்ன செய்ய ...
****படித்த ,
கருத்துக்கள் பேசுகின்ற நாமே இப்படி தடுமாறி கொண்டு இருக்கும் போது , கல்லாதோர் நிலமை?
யோவ்  ...திருப்பதி என்ஜினீயர் மாப்பிள ...உங்களை நம்பித்தான் அரசியல் இருங்கறோம் ...நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகள் ..அண்ணன்கள் ..எல்லாம் ...postive thoughts ..ஓட தான் ...இறங்கணும்

*****நாம் பேசலாம் அண்ணா செயல் முறையிலும் பயன் படுத்தலாம்  அனால் பெரியர்வகள்... மீதி இருக்கும் நடுத்திர  வயதினர்... முன்னே ஒன்று பேசிட்டு பின்னே ஒன்று பேசுவார்கள்...  அதிலே மனம்... நொந்து போகும் ... நல்லது செய்ய நினைத்தால்... நாமா பேருதா கெட்டு போயிருது  அதனாலே ...  நம் இளைய சமுதாயம் முன் வர  யோசனை செய்கிறார்கள்... அண்ணா..
*****We shall focus on results and not on others opinions - to move for and to have success,  is a general rule bro

Why you are bothered about people

Even “ Adi Sankara “ himself was criticized by the people of such attitudes.

So tell what is possible and not how the existing condition are bad.

Every one has problems identified but solutions none...
*****முயற்சியே முதல் படி... வெற்றி தோல்வி இரண்டாம்  படி... அதற்கான நடவேடிக்கையில் ஈடுபடுவோம் ...  அண்ணா
****இந்த சிவா மாமக்கிட்ட உடுமலை பகுதியை கொடுத்து தகுதியான 20 பேர கண்டுபிடிக்க செல்லலாம் ....முயற்சிதான் முக்கியம் .....
****Let us start with ward councillor..
*****அதற்கான முயற்சியை ஒரு வருடத்திற்கு முன்னால் தொடங்கிவிட்டேன் மாப்பிள ...💐💐💐💐👍👍👍

*********இன்றைக்கு
நல்ல தகவல் பரிமாற்றம்

ஓரளவுக்கு
திருப்தி..

இன்று நம் RK எலைட் ..கம்பள சமுதாய குழுவில் ...நடைபெற்ற ..அரசியல் ..பதிவுகள் அருமை ...கருத்துக்களை பகிரந்தவர்கள் ...
செந்தில் அப்பையன் ...பெருமாள்சாமி ...செந்தில் ராம் ...தங்கவேல்ச்சாமி ...சிவக்குமார் ..சுமதி மோகன் ...சரவணகுமார் ....திருப்பதி தேவராஜன் ....நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக