திங்கள், 4 டிசம்பர், 2017

செந்தில் சார் ...விவசாயிகளுக்கு நேரம் எங்கே உள்ளது ..என்று கேட்கறீர்கள் ...எனக்கு கோவை ,திருப்பூர் ஈரோடு ..கொங்கு பகுதியில் கவுண்டர் சமுதாயம் ..அதிகம் நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டு ...தங்களின் வேலையும் பார்த்துக்கொண்டு ..கிடைக்கும் சில மணி நேரங்களில் ..தோட்டத்தில் என்ன நடக்கிறது ..எத்தனை தேங்காய் விழந்தது ..என்று எண்ணிக்கொண்டுஇருப்பார்கள் .. என் NRI வாடிக்கையாளர் ..இப்போதும் நியூஜெர்ஸி லிரிந்து வீடியோ கான்பரென்ஸ் மூலம் தோட்டத்தில் விளையும் பயிர்களின் நிலையை அறிந்துகொண்டுள்ளார் ..எப்போது வேண்டும் என்றலும் தன் சொந்த நிலத்திற்கு வந்துவிடவேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் ...நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் கூட

இன்னொரு வெளிநாட்டு வாடிக்கையாளர் ...தோட்டம் வாங்கவதற்காக தன் வெளிநாட்டுப்பணியில் இருந்து மாறுதல் வாங்கவந்து ...தான் வாங்கிய வீட்டை அடமானம் வைத்து ...40 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி அதில் தோட்டம் வாங்கி விட்டு இப்பொழுது வெளிநாட்டு பணிக்கு சென்றுவிட்டார் ..அடமான கடன் ..பர்சனல் லோன் வங்கியில் தரமாட்டார்கள் ..வாடிக்கையளரின் நோக்கம் ..preplanning ..எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் ...நான் அவர்களுக்கு உதவியது பெருமை கொள்கிறேன் ...

எந்த ஒரு செயலுக்கும் ..மூலதனம் தேவை ...தனிநபரால் இயலாது ..அதற்கு தான் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை மூலம் நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்கு நல்ல ஆலோசனைகளை அறக்கட்டளையின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் வழங்கி வருகிறார்கள் ..இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறோம் ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக