சனி, 23 டிசம்பர், 2017

தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

நமது இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மாவீரர் .வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ...ஜனவரி 3 ம் தேதியும் ,ஜனவரி 26 ம் தேதி இரண்டு ,நான்கு சக்கர வாகன பேரணியும் நடைபெற  இன்று ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக ,அருமையாக நடந்தது ...இந்த கூட்டம் 55 கிளைகள் கொண்ட உடுமலைப்பேட்டை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து  ...மாவட்ட ,நகர ,ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் நமது சமுதாய கூட்டத்தில் தங்களின் கருத்துக்களை விவாதித்தது நல்ல முன்னேற்றம் ...இனி வரும் காலங்களில் மாதம் ஒருமுறை சமுதாய முன்னேற்ற கருத்துக்கள் விவாதிக்கப்படும் ...வாகன பேரணி நடைபெறும் ஊர்களின் விவரம் ..சமுதாய பொதுக்கூட்டம்  நடைபெறும் இடம் பற்றி விவாதிக்கப்பட்டது ...மாதம் கிராமங்களில் கிளை கூட்டங்கள் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது ...கிளை நிர்வாகிகள் தங்களின் மனம் திறந்து சமுதாய முன்னேற்றக்கருத்துகள் விவாதித்து மிக்க மகிழ்ச்சி ..மாநில செயல் தலைவர் இந்த கூட்டம் சிறப்பான முறையில்  நடைபெற்றதுக்கு நன்றி தெரிவித்தார் ..
இங்ஙனம் ..
கோவை திருப்பூர் மாவட்ட தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக