வெள்ளி, 29 டிசம்பர், 2017

ஷியாம் ...சைக்கிள் ...2011..டிசம்பர் 29..நாள் ..

சைக்கிள் என்பது எனக்கு நினைவு தெரிந்து 13 வயதுக்கு மேல்தான் சைக்கிள் பற்றியே நினைவு வரும் ..அந்தவயதில் பெரியவர்கள் ..அண்ணன்கள் ஓட்டும் சைக்கிள் பார்த்து வேடிக்கை மற்றும் பார்ப்போம் .,.எனக்கு விவரம் தெரிந்தவுடன் ஆறாவது வகுப்பு மேல் ஓட்டவும் கற்றுக்கொண்டோம் ..ஷ்யாமுக்கு நான்கு வயதில் சைக்கிள் வாங்கவதற்கு போவதற்கு ..ஆடி கார் வாங்க சொல்லுவது போவதுபோல் போனது இன்னும் நினைவில் உள்ளது .ஒரு வாரத்துக்கு முன்னரே ..நண்பர் வீட்டுக்கு   சென்று இருக்கும் பொழுது  ஷியாம் அவர்கள் வீட்டில் இருந்த சிறிய சைக்கிளை பார்த்து ..அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாலன்ஸ்சுடன் விழுக்காமல் ஒரு ரவுண்டு சுற்றும்போது ...அடடா ..பயம் இல்லை ..தாராளமாக வாங்கி கொடுக்கலாம் என்று தோன்றியது  ..மாலை காரில் சென்று ...கோவை ராஜவீதியில் தடிக்கி விழுந்தால் சைக்கிள் கடையில் விழவேண்டும் சுற்றி 15 கடைகள் ...விதவிதமான வண்ணங்களில் ..விளையும் அதேமாதிரிதான் ..ஷ்யாமுக்கு பார்த்தவுடன் மகிழ்ச்சி ஆர்வம் ..அப்பவே எடுத்தவுடன் ராஜவீதில் பெரியாவாகனங்களின் நெரிசல் பகுதியில் ஓட்டவேண்டும் என்று கொஞ்சம் அவர்கள் அம்மா மாதிரி வேகம் ...பொறுமையாக ..அன்பாக சொல்லி ...காரில் பின்சீட்டில் வைத்து ...சைக்கிளின் மேல் உட்கார்ந்து வடவள்ளி வீடு முடிய கெட்டியாக பிடித்து உட்கார்ந்து வந்தார் ..பற்றை என்னவென்று சொல்லுவது ...வீட்டில் வந்தவுடன் வீட்டிற்குள் உட்கார்ந்து முன் பின் நகருத்துவது ..பயிற்சி ...அப்பா நாளை காலை நேரமே எழுந்து தார் ரோட்டில் ..தனியாக ஓட்டவேண்டும் என்று கட்டளை வேறு ..காலை விரைவாக எழுந்துவிட்டார் ஷியாம் ..அப்பா சைக்கிள் பழகலாம் என்று ..பின்னாளில் ஸீட் ஹாண்ட் பிடித்துக்கொண்டு வடவள்ளி இடையார்பாளையம் ரோடு .....காலப்பநாயக்கன் பாளையம் ரோடு ....வானப்ரஸாத முதியோர் இல்லம் வழியாக வந்து ..எப்படியும் 5 கிலோமீட்டர் தூரம் ..பயற்சி ..அவருக்கும் பயற்சி ..எனக்கும் நல்ல மூச்சு பயிற்சி ..அதைவிட சின்ன சின்ன ஆசை ..எனக்கு இந்த சிறுவயதில் கிடைக்காத ஆசைகள் எல்லாம் ஷ்யாமின் மூலம் கிடைத்தது ...வருடங்கள் எட்டு ஆனாலும் நினைவுகள் என்றும் மறப்பதில்லை ...இன்று டிசம்பர் 29..2011..என்றும் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது ...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக