செவ்வாய், 19 டிசம்பர், 2017

வல்லக்கொண்டம்மன் துணை
அந்த நாளும் வந்திடாதோ!
நில்லாடிய நிலத்தையும், சொல்லாடிய அவையையும் தேடி ஒரு பயணம்!

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தடம் பதித்த, ஒரு சமூகம், அனைத்தையும், தொலைத்து விட்டு, தலைமுறைகள் தாண்டி, ஒரு தேடலை துவக்கியுள்ளது. சுதந்திர காற்றை, நாடு சுவாசிக்க, வாழ்வாதாரம் தொலைத்து, ஜமீன்களாய், பாளையக்காரர்களாய், அரண்மனையாராய், கோலோச்சியவர்கள், வெறும் பட்டத்தை மட்டும், தாங்கி, காலம் தள்ளுவது யாரின் குற்றம் என தெரியவில்லை. தியாகத்தை போற்றாவிட்டாலும் பரவாயில்லை, வந்தேறி உட்பட பல, புதிய பட்டங்களை சூட்டி ஒரு தரப்பினர் இகழ்கிறார்கள். மற்றொரு புறம், ஆதிக்க சாதியாய், அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும், ஆதிக்கம் செலுத்துபவர்கள், மண்ணின் வரலாறு, வெளிப்படாமல் இருக்க, தங்களால், இயன்றளவு முயற்சி செய்கின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்களே, லட்சங்களில் புரள, நுாற்றுக்கணக்கான கிராமங்களை ஆட்சி செய்த  ஆட்சியாளர்களின், சமூகத்தினர், ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல், ஆடு மேய்க்கும் ஆச்சரியம், தற்போதும், நடக்கிறது. நிலங்களை மானியம் அளித்தவர், கிணறு தோண்டும் கூலி வேலைக்கு செல்ல, மானியம் பெற்றவர், சொகுசாக வாழ, கோவிலும், தானமளித்தவரும், பரிதாப நிலையில் இருப்பதை, கள ஆய்வில், நேரில் கண்டதுண்டு. இவ்வாறு, வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பதிவே, இந்த சிறு புத்தகம். கொங்கு மண்டல பாளையக்காரர்களின் வரலாற்றில், வல்லக்கொண்டம்மனுக்கு தனியிடம் உண்டு. பல ஜமீன்கள் வழிபட்ட கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலுக்கு பல சிறப்பு இருந்தாலும், பராமரிப்பில்லாத பழமையான கோவில் என்ற ஆதங்கம் மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளது.  ஒதுக்கப்பட்ட நிலங்கள் இந்து அறநிலையத்துறையிடமும், கோவில் இடம் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ள நிலையில், மீட்டெடுக்க முடியாத ஒரு வரலாற்று நினைவை பதிவு செய்துள்ள என் இளவல்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
காயத்ரிராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக