புதன், 27 டிசம்பர், 2017

கடந்த சில நாட்களுக்கு முன் ...தம்பி தவச்செல்வன் ...வேலை இழப்பு பற்றி ஒரு பதிவிட்டிருந்தார் ...நானும் கூட இதை பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன் ...என்னதான் இருந்தாலும் ...மாத சம்பள வாழ்க்கை ...பெரிய நிறுவனங்கள் பணிபுரிந்தாலும் ...ஒரு காலகட்டத்திற்கு பின் யோசிக்க வைக்கிறது ...இதை நான் ஒரு 11 வருடங்களுக்கு முன்னேற யோசித்து ..என் செல்ல மகன் ஷியாம் பிறக்கும் சமயம் ...மகனை வீட்டோடு பார்த்துக்கொண்டு மனைவி சுயதொழில் கால்பதித்து .அதை நல்ல முறையில் யான் வேஸ்ட் (இண்டஸ்ட்ரியல் கிளீனிங் )வியாபாரம் தொடங்கி...என் பணிக்காலத்தில் என் நிறுவன வியாபாரம் பார்த்துக்கொண்டு ..சொந்த நிறுவனத்தியும் வளர்த்துக்கொண்டு ...நல்ல நிலையில் வளர்ந்தும் வந்தது ...ஒரு கட்டத்தில் ...நம் சொந்த நிறுவனத்தையும் பார்த்துக்கொண்டு  வேலைவாய்ப்பு பறிபோகும் என்று கவலையில்லாமல் ...அதற்கான பணிகளை செவ்வனே செய்து வந்தேன் ...பின் சில குடும்ப சூழ்நிலையில் தவறிப்போய்விட்டது ...ஆனால் ஏதோ நான் நம்பிக்கையுடன் ,விசுவாசத்தால் பணிபுரிந்த நிறுவனம் ..வாழ்க்கையின் விளிம்பில் இருந்து என்னை காப்பாற்றியது ...இப்போதும் தொடராக பணிபுரிகிறேன் ...இருக்கும் கொஞ்ச காலத்தில் ...இன்னும் நம்பிக்கையுடன் பணிபுரிந்துகொண்டு ..நம் சொந்தங்களுக்கும் ,என் கூட பணிபுரியும் பணியாளர்களுக்கு ,நண்பர்களுக்கும் .நமது அறக்கட்டளையின்மூலமும் ,பண்பாட்டுக்கழகத்தின்  மூலம் நல்ல கருத்துக்களையும் ,முன்னேற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டு ..நம் செல்ல மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன் சேர்ந்து பணிபுரிவது எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி...வேலை இழப்பு பற்றி ...பன்முக நிறுவனத்தில் பணிபுரியும்  ...  தான் நடத்தும் அறக்கட்டளை மூலம் ...அதிகம் ..பல்வேறு பிரச்னைகளை ஆராயுந்து கட்டுரைகள் ,ஆலோசனை வழங்கும் என் மதிப்புக்குரிய நண்பர் .மணிகண்டன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன் ...அதை ஒரு கட்டுரை யாக பதிவிட்டு பகிர்ந்து உள்ளார் ...அதை உங்களிடம் பகிர்கிறேன் ..கருத்துக்களை விவாதியுங்கள் ...வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் மன தைரியத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் ...
வாழ்த்துக்கள் ...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக