வியாழன், 19 மார்ச், 2020

Whats App/Telegram/Tik Tok/Instagram/LinkedIn செயலிகள் குறித்து?

தொழில் சமூகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். உலகத்தின் மறுமுனையுடன் பேச, பரிமாற, தொழில் வளர்க்க முழுமையாக உதவுகின்றது. குறைவான உரையாடலில் நிறைவான லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குப் போலிச் செய்திகளைப் பரப்ப உதவுகின்றது. வாசிக்கவே தேவையில்லை என்ற புதிய கலாச்சாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

Telegram அற்புதமான பாதுகாப்பான செயலி.  மேற்படிப்பு படிப்பவர்கள், யூபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள், இலவசமாக மின் புத்தகங்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய செயலி. திரைப்படங்களை இலவசமாக இதில் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

Tik Tok எனக்கு இதில் கணக்கு இல்லை. விருப்பம் இல்லை. மகனுடன்  படிக்கும் சக தோழர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ளார்கள். ஆண்களை விட நடுத்தரக் குடும்பத்து இளைஞிகள் இதில் காட்டும் ஆர்வமும் அவர்களின் திறமையும் என்னை வியக்க வைக்கின்றது.

Instagram தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்தினேன். கணக்கு உள்ளது. ஆனால் விருப்பமில்லை.  தன்னை, தன் பொருட்களை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு பிடித்தமான தளம்.

Linkedin கணக்கு உள்ளது. விருப்பத்துடன் செயல்பட்டேன்.  பெரிய நிறுவனங்கள் தங்களின் கௌரவமாகக் கருதுகின்றார்கள். அதிர்ஷ்டம் கட்டாயம் தேவை. நபர்கள் அறிமுகமாக, வாய்ப்புகள் நம்மிடம் தேடிவரப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.  தொழில்நுட்ப அறிவு நன்றாகத் தெரிந்து இருந்தால் இது முக்கியமான தளம். தொடர்புகளை உருவாக்க முடியும்.


பள்ளி, கல்லூரி இளைய சமுதாயம் எவ்விதச் செயலிகளை விரும்புகின்றார்கள்.

Share chart/Hello App/Instagram

நீங்கள் பயப்படுவது யாரைப் பார்த்து?

பார்வோர்டு செய்திகளைச் சலிக்காமல் படிக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்து தினமும் பயந்து சாகின்றேன். மெல்லவும் முடியவில்லை. ஒரு ஆடிட்டர் பதவியில் இருந்தவரிடம் இப்படிச் செய்யக்கூடாது என்று மெதுவாக மென்மையாக அழைத்துச் சொன்ன போது காச் மூச் என்று கத்தி தீர்த்துவிட்டார்.  "நான் எந்த அளவுக்கு உங்களுக்குச் சேவை செய்கின்றேன். உங்களுக்குப் புரியவில்லை" என்று அரைமணி நேரம் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

தொலைக்காட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

என் அம்மாவின் வயது 73.... அவரை இன்னமும் ஆரோக்கியமாக வைத்திருப்பது தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்கள்,,நான் பார்க்கும் செய்திகள் நாட்டு நடப்புகள் மோடி முதல் ஸ்டாலின் ..எடப்பாடி ..கொரென முடிய தெரிந்து வைத்து இருக்கிறார்கள் ... தம்பி மகன், "ஏன்டா அப்பத்தாவிடம் பேச மாட்டுறீங்க?" என்று கேட்ட போது "அவங்க பேசுறது புரியவில்லை" என்றார்கள்.  சிந்தனைகள் முன்னும் பின்னும் மாறி பேச்சுக்கள் குளறி குழந்தைத்தன்மையாக மாறியுள்ளதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் தொலைக்காட்சி அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

"நீங்கள் எல்லாம் அடிமுட்டாள்கள்". "எங்கள் அடிமைகள்". "உங்கள் நேரத்தை, பணத்தை எங்களால் தைரியமாகத் திருட முடியும்" என்று இன்றைய வாழ்க்கையில் நம்மிடம் மறைமுகமாக, நேரிடையாகவே சொல்பவர்கள் தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவர்கள், நிகழ்ச்சி தயாரிப்பவர்கள். 


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக