சனி, 7 மார்ச், 2020

சிகரங்கள் தொட்டதில்லை....
பள்ளிக்கூடம் போனதில்லை....
வருடங்கள் பல கடந்தும்
மனதின் வைராக்கியம்
தொலைத்ததில்லை.......
அரசியல் அறிந்ததில்லை...
அறிவிலக்கியம் மொழிந்ததில்லை....
போர்முனை போனதில்லை
விண்வெளி அளந்ததில்லை....
வித்தைகளேதும் புரிந்ததே இல்லை....
கள்ளிப் பாலுக்கு நடுவே
முட்டி மோதி முளைத்து
வயல்வெளிகளில் வசந்தம் தேடி
வான் வெளியில் நிலவு தேடி
இன்னும் வாழ்ந்து வரும்
கிராமப்புற இந்தியாவின்
கீர்த்திமிகு சிற்பிகள் நாங்கள்......
வாழ்வதைச் சரித்திரமாக்குவர்களிடையே
வாழ்வையே சரித்திரமாக்குபவர்கள் நாங்கள்....
என்ன
எங்கள் சரித்திரம் எழுதப்படாதது
அவ்வளவே......
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக