செவ்வாய், 10 மார்ச், 2020


உங்களின் வயது அதிகமாகிவிட்டது என்று அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்தும் விஷயங்கள் எவை?

 சிவக்குமார்  குமார் ....

வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் போது உங்கள் வயது என்ன என்பது தெரியாது.

என் வாழ்க்கை ஓட்டமும் அப்படித்தான்.

1995 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தவுடன் உடனே வேளையில் சேர்ந்தேன். அன்று தொடங்கிய இந்த ஓட்டம் 22 ஆண்டுகளாக தொடர்கிறது. இன்று கண்ணாடி முன் நின்று சுய பரிசோதனை செய்தால் நிறய மாற்றங்கள். இப்பொழுது 46 வயது ஆகிறது.

வாருங்கள் எந்த விடயங்கள் என் வயதை காட்டுகிறது என்ன உங்களிடம் பகிர்கிறேன்.

1. கண் கண்ணாடி/ மூக்கு கண்ணாடி

இன்று இந்த கண்ணாடி இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாது.

வயது ஆகிறது என்பதை எனக்கு முதலில் உணர்த்துவது என் கண் பார்வை.


2.தலை முடி உதிர்தல்

நிறய முடி கொட்டி விட்டது. முன் நெற்றி முடி கொட்டி சொட்டை ஆகி விட்டது, என் மனைவி என் மகன்  தான் அதிகம் நகைக்கிரார்கள்.எனக்கு வயது ஆகிறதை சொல்லும் அடுத்த விடயம் என் தலை முடி.

3.நரை முடி

முடி கொட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும் . நரை முடி என்ன செய்வது. இதில் எனக்கும் என் மனைவிக்கும் போட்டா போட்டி

நான் கட்டாயம் தலைக்கு கருஞ்சாயம் பூசுவது என்று. இன்று வரை அந்த கொள்கையில் பிடிவாதமாக உள்ளேன்.

தல அஜீத் புண்ணியத்தால் இன்று நரையும் அழகாக மாறி விட்டது.


நரை இறைவன் நம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும் வகை என்று எண்ணிக் கொள்கிறேன்.

சரிதானே!!!!!

4. நரை மீசை

தலை முடி நரை பரவாயில்லை , தேங்காய் எண்ணெய் போட்டு வழித்து சீவினால் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் இந்த ஆசை ஆசையாய் வைத்த மீசை ஒன்று இரண்டு மூன்று என வெள்ளையன் வர அதை வெட்டி வீழ்த்த இன்று வெள்ளயன் முழுமையாக ஆட்சி செய்கிறான். பல வருடங்கள் கழித்து ஆசையாய் மீசை வைத்தால் மனைவியும் மகனு ம் மற்றும் நண்பர்களும் ரொம்ப வயதானவர் போல் தெரிகிறது என்று சொல்ல மறுபடியும் மீசையை இழக்க வேண்டி இருக்கிறது.

5. பற்கள்

பல் போனால் சொல் போச்சு என்பார்கள் . நல்ல வேலை எந்த பல்லையும் இழக்கவில்லை ..ஒரு கடவாய் பல்லைத்தவிர ..எனது பல் மருத்துவர் நண்பர் வெங்கடேஷ் ம் கூட சொன்னார்கள் ..பல்ல எடுக்கவேண்டாம் ..நன்றக உள்ளது என்று ..ஒரு சிறு சொத்தை மட்டும் தான் ..அடைத்த விடலாம் என்று ..ஒரு பல்லவிட்டால் பரவி விடும் என்று எடுக்க சொல்லவிட்டேன் ..இப்பொழுதும் என்னை திட்டுவார் நண்பர் .

6. மறதி

வயதானால் மறதி வரும் என்பது அறிந்த விடயம் தான் என் மறதி சற்று நகைப்புக்கு உரியது.

தொலைக்காட்சி ரிமோட் பெட்டியில் வைத்து விட்டு அறை முழுதும் தேடுவது.

வலது கையில் அலைபேசி வைத்து கொண்டு தேடுவது.

எடுத்த பொருள் எங்கே வைக்கிறோம் என்று தெரிவதில்லை.

கட்டாயம் இந்த மறதி வயது ஆவதை தெரிவிக்கிறது.

இதில் கணக்கு என்றால் ரொம்ப பயம்.

7. பசியின்மை

முந்தியெல்லாம் பந்தி கட்டி சாப்பாடில் விளையாடிய காலம்.வீட்டு தோசை கறி குழம்பு என்றால் 5 ..6.. தோசை சாப்பிட்டு படிப்படியாக குறைந்து இன்று காலை ரெண்டு தோசை சாப்பிட்டால் மதியம் பசி எடுக்க மறுக்கிறது.

அதுவும் சாப்பாடு  என்றால் ஜீரணம் குறைவு.

இன்று உணவு கட்டுப்பாட்டில் உள்ளேன்.

காலை மற்றும் இரவு உணவு மட்டும் தான் மதியம் உணவு  அல்லது பழங்கள் மட்டுமே.

அப்பறம் இரவு உணவு கட்டாயம் எண்ணை உணவு தவிர்த்து .

8. சிரிக்க மறப்பது

முன்பெல்லாம் நாளெல்லாம் சிரித்து கொண்டிருந்த நான் இன்று அந்த சிரிப்பு குறைந்து விட்டது போல் தெரிகிறது..ஒரே டாம் அந்து ஜெர்ரி கார்ட்டூன் பார்த்து சிரித்த இந்த மனது பல வடிவேல், விவேக் சந்தானம் நகைச்சுவைக்கு சிரிக்க மறுக்கிறது.

இதுவும் வயதின் மூப்பு சொல்லும் காரணம்.

குழப்பம்

முன்பெல்லாம் மனது தெளிந்த நீரோடை போல் தெளிந்து புள்ளிமான் போல் ஓடும் , 2500₹ சம்பளம் வாங்கிய போது இருந்த தெளிவும் குழப்பம் இன்மை இப்பொழுது 25000  சம்பளம் வாங்கினாலும் குழப்பம் அதிகமாகி தெளிவு குறைந்து விட்டது.

கவலை அல்லது நாளை பற்றிய சிந்தனை.

23 ஆண்டுகள் கடுமையாக உழைத்து விட்டேன். அன்பான மனைவி , பாசம் நிறைந்த அன்பு மகன்  இன்று பள்ளி படிப்பு ல்  உள்ளார். இறைவன் அருளால் இந்த இந்து வருடா வன வாசம் பலனாக ஓரளவு சேமிப்பும் உள்ளது. ஆனாலும் நாளை எண்ணி மனம் கவலை அடைகிறது.

மனைவிக்கு ஒரு சொந்த வீடு வாங்கும் ஆசை.

அன்பு மகனை  நன்கு ஒரு பொறியியல்அல்லது அவருக்கு பிடித்த  படிப்பை துறை  பெற வைப்பது,

அக்கா ..தம்பிக்கு முடிந்த அளவு  பொருளுதவி செய்வது, அம்மாவை  கவனித்து கொள்வது,

நிரந்தர வருமானம் பெறுவது.

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த 23 வருட ஓட்டப் பந்தயம் கொஞ்சம் நிறுத்துவது என குழப்பங்கள் ஏராளம். ஆனால் கடவுள் அருள் மற்றும் என் தாயின் பாதுகாப்பு என்றும் எனை கை விடுவதில்லை.

கோபம் மற்றும் வெறுப்பு

இப்பொழுது கோபம் அதிகம் வருகிறது . முன்பெல்லாம் எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காது இப்பல்லாம் சிறு தவறு என்றாலும கோபம் வருகிறது. உயர் அதிகாரிகள்  சிறிது கோபம் பட்டாலும் வேலை விட்டு ஓடி விட தோன்றுகிறது.

வயதாக வயதாக இப்படி தோன்றுமா

தூக்கமின்மை

முன்பெல்லாம் ஏப்ப படுத்தாலும் உறக்கம் உடனே வரும் இன்று 12மணி இரவு ஆனாலும உறக்கம் வர மறுக்கிறது.

இப்பொழுதெல்லாம் தூக்கம் வருகிறது இல்லையோ கண்ணை மூடினால் திறப்பத

திறப்பது இல்லை. தூக்கம் குறைந்துவிட்டது.

இது புலம்பல் இல்லை உண்மை நாளை நீங்கள் 40 கடக்கும் போது இதுபோலl இல்லாமல் நீங்கள் சுகமாக இருக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

நன்றி வாசித்ததர்க்கு.!!!!!

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக