தாரணி அகில் .....
காலை 9 மணிக்கே உறவினர் இல்ல விழாவுக்கு திருமண மண்டபம் சென்றாகிவிட்டது. திருமண நிகழ்வுகள், சக உறவினர்களுடன் அரட்டை, இடையிடையே சாப்பிட, அருந்த பானங்கள் என ஒரு குறைச்சலும் இல்லை. மதியம் உணவருந்தி விட்டு நிற்கும் வேளையில் கவனித்தேன். விறகு அடுப்பு வைத்து கொஞ்சம் மறைவாக நான்கைந்து வயதான பெண்கள் மண்பானைகளில் ஏதோ கிளறிக் கொண்டிருந்தார்கள். அது ராகி களி என்று தெரிய வந்தது. காலம் காலமாக ராகி களி உருண்டை எனப்து மிகவும் பிரபலம் இங்கே கொங்கு மண்ணில். ஆனால் அதை செய்ய தனியாக ஒரு பி ஹெச் டி படிப்பு படிக்கவேண்டும். நமது பாட்டிகளை இந்த விஷயத்தில் யாரும் அடித்துக் கொள்ளவே முடியாது. அதன் பின் வாழ்ந்து வரும் தலைமுறையினருக்கு இது பற்றித் தெரியுமா என்று கூட தெரியவில்லை..ஆர்வம் மேலிட, நான் அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ள முற்பட்டேன். ஆனால் அவர்கள் அருகே கூட என்னால் நெருங்க முடியவில்லை. திருமணத்திற்கு வந்த அனைவரும் அந்த களி உருண்டையை விரும்பி உண்டார்கள் என்பது கண்கூடான உண்மை.
சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பெண்கள் அனைவரும் இன்று மகளிர் தினம் என்று போற்றப்படுகிறார்கள். ஆனால் தள்ளாத வயதிலும் போஷாக்கு நிறைந்த ராகி உருண்டை குணம் மணம் மாறாது தயாரித்து அனைவர் வயிற்றுக்கும் ஆரோக்கியம் சேர்த்த இந்தப் பெண்களுக்கு இது "உலக பெண்கள் தினம்" என்றால் புரியுமா?
பெண்ணை எப்போதும் மகளாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக மட்டும் பார்த்து அவளுக்கு வாழ்த்து சொல்லும் உலகம் பெண் ஒரு தனிப்பட்ட மனுஷி என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறது. மனிதம் நேசிப்பதால் இது மனித தினம் என்று நான்
முடிவு செய்து, அவர்களிடம் எனக்கு தெரியாத ஒன்றைக் கற்றுக் கொண்டு, சந்தோசமாக அவர்களிடம் இது உங்கள் தினம் என்று மனதளவில் கூறிக் கொண்டு நகர்ந்தேன். வாழ்க இந்த மாமனுஷிகள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக