திங்கள், 2 மார்ச், 2020

இளையராஜாவும் அல்லாமல் ரகுமானும் அல்லாமல் இருவருக்குமிடையே எவரது சாயலுமின்றி இடைமீட்டரில் ஒரு குட்டி இசை சாம்ராஜ்யாத்தை நிகழ்த்தியவர் வித்யாசாகர்.
இவரது இசையால் மட்டுமே எனக்கு அர்ஜூன் நடித்த படங்களின் மீது அட்டென்ஷன் திரும்பிற்று. கிட்டத்தட்ட அர்ஜூன் தயாரித்த இயக்கிய நடித்த அனைத்துப்படங்களுக்கும் வித்யாசாகர்தான் இசையென்று நினைக்கிறேன்.
தொன்னூறுகளில் விஜய் அஜீத்தில் ஆரம்பித்து நடிக்கவந்த பல விடலை ஹீரோக்கள் வித்யாசாகருக்கு அவர்களது வளர்ச்சிக்கு அவர் இயம்பிய இசைக்கு இப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். மறந்துபோய் இருக்கலாம்.
ஒரு கட்டத்தில் தன் படத்திற்கு ராஜா ரகுமான் தேவா தவிர யாருக்கும் அசங்காத ரஜினி சந்திரமுகியில் வித்யாசாகருக்காக அசங்கினார்.
ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்...
பனிக்காற்றே பனிக்காற்றே...
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது..
நீ காற்று நான் மரம்..
பூங்காற்று வீசும்.. பொன்மாலை நேரம்..
ஒரே மணம் ஒரே குணம்..
பூவாசம் புறப்படும் பெண்ணே..
காற்றின் மொழி..
கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்..
ஆராரோ ஆரிரரோ.. அம்புலிக்கு நேர் இவரோ..
and of course.. மலரே மௌனமா..
இதெல்லாம் 'யாரு சாமி இவரு..!! என் மனசுக்கு புடிச்சமாறியே ட்யூன் போடறார்' என்று வியந்து கேட்ட பாடல்கள். இன்ஃபேக்ட்... இவர் பாடல்களில் சிலவற்றுக்கு ட்யூன்களை ஏதோ நானோ மனதில் போட்டமாதிரியும் அவற்றை இவர் எனக்கே தெரியாமல் எடுத்தாண்டது மாதிரியும் எனக்குத் தோன்றும். ஒவ்வொரு பாடலிலும் ஏதாவதொரு wow factorஐ வைத்திருப்பார்.
மற்றதையெல்லாம் கூட விடுங்கள். 'யார் யார் சிவம்.. நீ நான் சிவம்' ஒன்றே ஒன்று போதும் வித்யாசாகரை ஜென்மத்திற்கும் நினைவில் கொள்ள. அந்தப்பாட்டில் அவர் ஏதோ உயிரின் ஓசையையே கேப்ச்சர் செய்து கம்போஸ் செய்ததைப்போல தோன்றுமெனக்கு. உலக அமைதி நிறுவனம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்கு இந்தப்பாடலை Anthemஆகவே வைக்கலாம்
மேற்சொன்ன பாடல்கள் சாம்பிள்கள்தான். ஏகப்பட்ட பாடல்கள், தீம் ம்யூஸிக், பின்னனி இசையென்று ஒரு ரவுண்டு வந்த வித்யாசாகர் என்னைப் பொருத்தவரையில் ஒரு பெரிய மெலடி டாக்டர்.
தமிழ் சினிமாவில் வித்யாசாகரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருக்குமிடம் தெரியாமல் இருந்துகொண்டு பொலைட்டாக இசைப்புரட்சி செய்தவருக்கு வாழ்த்தும் அன்பும்
. 'யார் யார் சிவம்.. நீ நான் சிவம்' ஒன்றே ஒன்று போதும் வித்யாசாகரை ஜென்மத்திற்கும் நினைவில் கொள்ள. அந்தப்பாட்டில் அவர் ஏதோ உயிரின் ஓசையையே கேப்ச்சர் செய்து கம்போஸ் செய்ததைப்போல தோன்றுமெனக்கு. உலக அமைதி நிறுவனம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்கு இந்தப்பாடலை Anthemஆகவே வைக்கலாம்
https://youtu.be/v5UoMnhowMM





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக