சனி, 7 மார்ச், 2020

மாநகர பேருந்துகளில், ஷேர் ஆட்டோக்களில் காலை வெயிலில் பதட்டத்துடன் வியர்த்த படி செல்லும் ஒரு பெண்ணை சென்னை,கோவை ,வாசிகள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்..

அவள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்திருப்பாள். பொறியியல் படித்துவிட்டு கனவுகள் பல கண்டு சென்னைக்கு வந்திருப்பாள்..

அவள் முதல் தலைமுறை பட்டதாரி. உறவுகளில் உதவ ஆள் இருக்காது.. முதல் ஒரு வருடம் பெரிய நிறுவங்களில் வேலை தேடி அலைந்து பின் கிடைத்த சிறிய நிறுவனத்தில் வேலைக்கு செல்ல துவங்கியிருப்பாள்..

காலை அவசரமாய் உணவு, பேருந்து உரசல்கள், மேனேஜர் திட்டு, மாதாந்திர வலி என எல்லாம் பழகியிருக்கும். நிச்சயம் ஒரு காதல் தோல்வியும் பின் இருக்கும்..இரவு சில சமயங்களில் ஹாஸ்டலில் உணவும் இருக்காது.

"வேலை வேண்டாம் வீட்டிற்கு வா" என சொல்லுமளவு குடும்ப நிலை இருக்காது..அவள் மாத சம்பளத்தில் தான் ஊரிலுள்ள அவள் குடும்பம் இயங்கும்..

அவள் பேஸ்புக்கில்,வாட்ஸாப்பில் , பெண்ணியம் பேசுபவள் அல்ல,  தான் ஆணுக்கு நிகர் என்று சொல்லிக்கொள்பவளும் அல்ல. ஆனால் உண்மையில் அவள் 10 ஆண்களுக்கு நிகர்..

பெண்கள் தின வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக