வெள்ளி, 29 ஜூன், 2018

அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணம்...
ஒரு குட்டி பையன், அவன் அம்மாவிடம் கேட்ட கேள்வி, அவள் கண்களில் கணீரைப்பார்த்தவுடன்"நீ ஏன் அழுகிறாய்.?" "நான் ஒரு பெண் என்பதால்," அம்மா, மகனிடம் சொன்னாள். குழந்தைக்கு புரியவில்லை.
தந்தையிடம் கேட்டபோது கூறினார், "பெண்களுக்கு அழுவதற்கு காரணமே வேண்டாம், என்று..!
சிறுவ்ன், வளர்ந்து, பெரிய மனிதனாக ஆனதும்,பல அறிஞர்களிடம் கேட்டு, தெளிவான விளக்கம் பெற முடியவில்லை.
இறுதியாக கடவுளிடம் கேட்டு விடலாம் என நினைத்து, கடவுளை, தொலைபேசியில் அழைத்து, "பெண்கள் ஏன் அழுகிறார்கள்"..? என்று கேட்டார்...!!!
கடவுள் தெரிவித்தது: "நான் பெண்களை படைக்கும் போது,குழந்தைகளைத் தாலாட்ட‌, வலிமையான தோள்களை அளித்தேன்.
மகப்பேறு காலத்திலும், பின்னரும் இன்னும் ஆறுதல் அளிக்க, உள்ளத்திற்கும், உடலுக்கும் , வலிமை அளித்தேன். .
குடும்ப பாரத்தையும், வழிநடத்தும் பண்பையும், இயல்பான சகிப்புத்தன்மை மூலம் அளித்தேன்.
நீ, சிறுவனாக இருந்த போது, உனது தாயை காயப்படுத்தினாலும், உன்மீது அன்பை மட்டுமே வெளிப்ப்டுத்தும் குணத்தை அளித்தேன்.
கணவனால் துன்பம் அடையும் போதும், மனம் கலங்காத, வலிமையான இதயத்தை, அளித்தேன்.
ஒரு நல்ல கணவன், ஒருபோதும், தனது மனைவியை துன்புறுத்துவது கிடையாது என்று, தனது ஞானத்தின் மூலம் அறியும் திறனை கொடுத்தேன்.
ஆனால் சில நேரங்களில், பெண்கள், மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகும் போது, ஆறுதல் அடைய, கண்ணீரைக் ( அழுகையை) கொடுத்தேன்.
மகனே, பெண்க‌ளுக்கு, அழுகை என்பது, அவர்களது, மன வருத்தத்தின் வடிகால் என்பதை, நீ உணர வேண்டும்.
"பெண்களின் அழகு, அவர்களது புற தோற்ற‌த்திலோ, ஆடை, அணிகலன்களிலோ, அவர்களது கூந்தலின் அழகிலோ இல்லை, மகனே.
பெண்ணிகளின் அழகு, அவர்களின் கண்களின் வழியாகப் பார்க்கப்பட வேண்டும்.......
ஏனெனில்,பெண்களின் அன்பு, கண்களின் வழியாக, இதயத்தை ஊடுறுவுகிறது...அது தான் கண்ணீர்....
மீள்பதிவு ....
Sivakumar Kumar is feeling joyful at Brookefields.
காக்கா முட்டை ......(பாட்டி சுட்ட தோசை )
கோவையில் இருக்கும் என் ஷ்யாமை ஆசை ஆசையாக பார்க்க வேண்டுமென்று என் அம்மா சுட்ட ரெண்டு தோசை அரைகுறையுடன் சாப்பிட்டுவிட்டு சந்தோசத்துடன் நேற்று ஷ்யாமுடன் மாத கடைசி வரும் பிரச்னை நடுத்தரவர்க்க பற்றாகுறை பட்ஜெட்உடன் சமாளித்தேன் .....சாக்லேட்ம்,பின்கர்ப்ரிண்ட்ஸ் சாபிட்டுவிட்டு காக்க முட்டை படம் பார்த்தால்....படத்துலயும் பாட்டி சுட்ட தோசையுடன் கதை ஆரம்பித்து piza வில் முடிகிறது ....என் ஷ்யாமிக்கு பிடித்த piza பர்கர் வேண்டுமென்று அடம்பிடிக்கா அடுத்த முறை வாங்கி தருகிறேன் சமாதான படித்திவிட்டு இரவு வீட்டுக்கு வந்தால்....அம்மா கேட்கிறாங்க தோசை சுட்டு வைத்து இருக்கிறேன் சாபிட்டுட்டு தூங்குட என்கிறார்கள்...விடாத கருப்பு மாதிரி ....விடாது தோசை நாள் ....காக்க முட்டை படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அருமையான படம் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681



வியாழன், 28 ஜூன், 2018

கூட்டு குடும்பம் ...இன்று கம்பள விருட்சம் கார்த்தி மாப்பிள்ளை அழகான தலைப்பை கொடுத்து ..பதிவுகளும் பதிவு செய்தார் ..சில நல்ல உள்ளங்களும் அக்கறையும் உள்ள சொந்தங்களும் பதிவுகளை பதிவு செய்தனர் ...

என்னால் முடிந்த அளவு ...கூட்டு குடும்ப நிகழ்வுகளை பதிவு செய்கிறேன் ...

கூட்டு குடும்பம் ஒரு கை ஓசையல்ல இரண்டு கைகளும் இணைய வேண்டும் இல்லையென்றால் தினம் தினம் புது புது பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது அசட்டை செய்பவர்களாக இருக்க வேண்டும்..
பிரச்னை கொடுப்பவர்களை காணும் பொழுது அவர்கள் மேல் பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை....எம்புட்டு யோசிப்பார்கள்.,,யோசித்து யோசித்து அவங்க முகத்தில் கூட அருள் இல்லை..இருள் அடைந்து போய் உள்ளது..
அவர்கள் நம் குடும்பத்திற்குள் ஒற்றுமையை குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதனை நம்பாமல் ஒற்றுமையாக சந்தோசமாக இருப்பதை அவர்கள் பார்க்கும் பொழுது வயிறு எரிந்து அடுத்த முயற்சியை மேற்கொள்கின்றார்கள்...
ஏதோ ஒரு ரூபத்தில் வரப்போகும் பிரச்சனையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் மீண்டும் பயணம் திரில்லான வாழ்க்கையை நோக்கி..

கூட்டு குடும்பம் கலைந்தது ,பட்டாம்பூச்சிகள் பறந்தது ,கட்டிய வீடோ காலியானது, சிந்தையில் சில பல நிழலாடியது இதுதான் இன்றைய காலகட்டத்தில் நிதர்சனமான உண்மையானது

நம்முடைய பலமே கூட்டு குடும்பம் தான்!
இப்ப கூட்டு பிரிஞ்சு குடும்பமாக நிக்குது!
சாதி, மதம் இல்லை என்றால் இப்ப இருக்கிற குடும்ப அமைப்பு உடையும். குடும்பம் இல்லை என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் காணாமல் போகும்!
அப்புறம் என்ன எவர் எவருடன் வேண்டுமானாலும் கலவி பூண்டு குழந்தைகளை பெத்தெடுப்பர்! ( பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இது தான் நிலை )
பாவம் குழந்தைகள் தான் பெத்த அம்மா அப்பா யாருன்னு கூட தெரியாது ஸ்டெப் டேட் ஸ்டேப் மம் ன்னு பந்த பாசம் இல்லாமல் வாடி போகும்! ( ஏறக்குறைய விலங்கினங்களின் நிலை )
வளர்ந்த நாட்டில் பெரும்பாலான குடும்ப அமைப்பு பின்வரும்மாறு தான் இருக்கும்!
கணவன் : எனக்கும் X க்கும் பிறந்தது ஒரு குழந்தை!
மனைவி : எனக்கும் Y க்கும் பிறந்தது ஒரு குழந்தை!
கணவன் மனைவி: நமக்கு பிறந்தது ஒரு குழந்தை!
பாருங்கள் ஒரு வீட்டுக்குள்ளே எவ்வளவு பாகுபாடுகள் ஒரு குழந்தைக்கு அப்பா மட்டும் இருக்கு, இன்னொரு குழந்தைக்கு அம்மா மட்டும் இருக்கு, கடைசி குழந்தைக்கு அப்பா அம்மா இருவரும் இருக்கு. பாருங்கள் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு குழந்தைகள் மனதில் உருவாகும் என!!??
மேலுள்ள மாதிரி இங்கையும் இருக்கும் என்கிறீர்களா ஆமாம் இருக்கிறது அதாவது 1000 ல் 1. ( அனைவருக்கும் தெரிந்த எ .கா. நாட்டாமை )
ஆக குடும்ப அமைப்பை உடைக்க நினைப்பவர்களை அவங்கவங்க குழந்தைகளே மதிக்காது மன்னிக்காது!

கூட்டு குடும்பம் கூட தேவையில்லை
குறைந்தபட்சம் யார் என்ன உறவு
என்றாவது உங்கள் பிள்ளைகளுக்கு
சொல்லி கொடுங்கள் இந்த
காலத்து பிள்ளைகள் எல்லா
உறவுகளையும் ஆன்ட்டி அங்கிளுக்குள்
அடக்கி விடுகின்றன..!!

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றோ “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று சொல்லுமளவிற்கு மாறி விட்டது. பழைய குடும்ப கூட்டமைப்பு முறைகள் ஒட்டு மொத்தமாக மாறி தற்போது தனிக்குடும்ப முறைகள்தான் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த பழைய கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை மாறியதன் விளைவாக, குடும்ப பாசம் என்பதே மறைந்து விட்டிருக்கின்றது என சொல்லலாம்.

அன்றெல்லாம் குடும்பம், கோத்திரம் என்ற கலாச்சார சூழ்நிலையில் நாமெல்லாம் ஒரு கூட்டு குடும்பமாக ஒருமித்து வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த உறவே அப்பா அல்லது தாத்தா என்ற ஒரு தலைமையில் கீழ் இயங்கி வந்தது. அவ்வாறு வாழ்ந்த குடும்பங்களில் பெரும்பாலும் பாசம் என்ற ஓர் உணர்வு மிகைத்தோடி காணப்பட்டது. குடும்பங்களில் அவ்வப்போது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அதைக்கொண்டு தீராத பகை ஏற்படாத நிலை இருந்தது. குடும்ப தலைவராலோ அல்லது தலைவியாலோ அவைகளெல்லாம் உடனுக்குடன் களையப்பட்டு விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடியவர்களாகவும், குறிப்பாக உதவக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர்.

குடும்பத்தில் யாருக்காவது ஏதாகிலும் நேர்ந்தால் அதற்காக மற்றவர்கள் ஓடியாடி அவர்களுக்கு உதவக் கூடியவர்களாகவும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் அவை தலை போகிற காரியமாயிருந்தாலும், அவைகளை கூடவே இருந்து தீர்த்து வைக்க கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இந்த நிலை அக்குடும்பங்களில் ஒரு சப்போர்ட்டாகவும், பாதுக்காப்பாகவும் இருந்து வந்தது.

பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழும் வீடுகளில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் பாசம் மிகுதியானவர்களாகவும், மரியாதை மற்றும் தன்னடக்கம் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர் என்பது ஆய்வறிக்கையில் கிடைத்த தகவலாகும். தினமும் பாட்டியின் மடியின் படுத்துக் கொண்டு கதைக்கேட்டு உறங்கிய காலங்களை சற்றே நினைவில் கொண்டு வாருங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் குறும்புகளினால் அம்மாவோ, அப்பாவோ பிள்ளைகளை கண்டிக்கும்போது, அவர்கள் பயந்துக் கொண்டு பாட்டியிடம் தான் ஓடிவருவார்கள். பாட்டிதான் அவர்களை அரவணைத்து ஆறுதலும், புத்திமதிகளும் சொல்லுவார். இவ்வாறு தாத்தாவின் கண்காணிப்பிலும், பாட்டியின் அன்பான அரவனைப்பிலும் வளர்ந்தவர்கள் நன்னெறி மிக்கவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

அப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களில் யாராவது சிலர் தொலைவான தூரத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும், அவர்களின் அவசியத்தை கருதி தத்தம் மனைவி மக்களோடு தற்காலிக தனிக் குடும்பம் நடத்துவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் தலைமை குடும்பத்தினர்களுடன் இணைந்துக் கொள்வார்கள்.

வீட்டு நிகழ்ச்சிகளில் தங்களது ஒற்றுமையையும், பாச உணர்வுகளையும் கட்டக் கூடியவர்களாக இருந்து வந்தனர். அன்றைய காலத்தில் வீடுகளில் திருமணம் போன்ற காரியங்கள் நடந்தால் பல நாட்களுக்கு முன்பே உறவினர்கள் அனைவரும் வந்து தங்கியிருந்து வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். இவைகளை விவரிப்பதென்றால் தனி கட்டுரையே உருவாக்கலாம்.

அப்போதைய திருமண வீடுகளின் கொண்டாட்டங்களையும் கோலாகலங்களையும் தற்காலத்தில் பார்க்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு அனைத்து சூழ்நிலைகளும் மாறிவிட்டது. குறிப்பாக கூட்டு குடும்பம் என்ற சூழலே மாறிவிட்டது. திருமணமாகி கொஞ்சம் மாதங்களிலேயே கணவன், மனைவி இருவரும் தனிக் குடித்தனம் நடத்த தொடங்கி விடுகின்றனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெற்றவர்களையே கவனிக்க முடியாதவர்களாக இருக்கும் நிலையில், தாத்தா, பாட்டிகளின் நிலையை சொல்லவே வேண்டியதில்லை. அவர்களை அனாதை விடுதிகளில் அனாசயமாக சேர்த்து விட்டு விடுகின்றனர். பெற்றோர்களை அவர்களின் கடைசி காலம் வரை நல்லவிதமாக வைத்து கவனிக்க வேண்டிய, அதற்கான கடமையுடைய பிள்ளைகள் தத்தம் மனைவிமார்களின் மந்திரங்களினால் மாறு செய்யும் சூழல்களை நிறையவே காண முடிகிறது. மகிழ்ச்சிகரமான கூட்டு குடும்ப வாழ்க்கை முற்றிலும் சிதைந்து போய், இன்று இயந்திர வாழ்க்கை முறையே நடந்து வருகின்றது. பழமையை மறந்ததன் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம்.

நம் கம்பள சமுதாயத்தில் ...தற்பொழுது கூட்டு குடும்ப முறை உள்ளதா ..தெரிந்தவர்கள் கூறவும் ..செய்திகளை பகிரலாம் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ....9944066681..


புதன், 27 ஜூன், 2018

வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு,

எந்த விமர்சனத்தையும் தூக்கி ஏறியும் தைரியம் வர வேண்டும் !!!

எனது உலகம் .....

எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?..என்று நம்ம மாப்பிளை தம்பி ஒருவர் கேட்டார் ..எப்படி இந்த அளவுக்கு எழுதி பழகினீர்கள் ...சொல்லுங்களேன் என்றார் ..

உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.
ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் ,வாட்ஸாப்பிலும் ..மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது...நான் அடிக்கடி சந்திக்கும் மாப்பிள்ளைகள் ..நண்பர்கள் என்னுடன் பயணிப்பவர்கள் ...உங்களுக்கே தெரியும் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681....
நிர்வாகத்துறை. மற்றொன்று காவல் துறை. 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் இரண்டு கரங்கள் உண்டு. ஒன்று. 

நிர்வாகத்துறை. மற்றொன்று காவல் துறை. 

இந்த இரண்டுக்குள் பின்னிப் பிணைந்த நரம்பு மண்டலமென்பது பல்வேறு கிளையாகப் பிரிந்து அதன் மூலமே இங்கே மொத்த அரசு எந்திரமே நடக்கின்றது. 

சாதாரணக் கிராமத்தில் வசிக்கும் கிராம நிர்வாக அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரைக்கும் ஒரு பக்கம். 

மற்றொரு புறம் கடைநிலை காவலர் நிலையில் இருந்து அதிகபட்சமாக டி.ஐ.ஜி., ஐ.ஜி. வரைக்கும் நரம்பு மண்டலம் போல ஏராளமான அதிகாரிகள். இதில் பல நிலைகள். 

பல்வேறு பிரிவுகள். 

நமக்கு நம்மை ஆள்வது நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கடந்த 71 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருப்பது காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ள அரசு அதிகாரிகளே. அரசியல்வாதிகள் இவர்களை மிரட்டலாம், அதட்டலாம் அதிகபட்சம் வேறொரு இடத்திற்குத் தூக்கியடிக்கலாம். ஆனால் ஓய்வு பெறும் வயது வரைக்கும் இவர்களை அசைக்கவே ஆட்டவோ முடியாது என்பது தான் எதார்த்தம். 
அதிலும் இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி போன்ற பதவிக்கு வருபவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள். 

ஒரு மாவட்டம் சிறப்பாக இருக்க அந்த மாவட்டத்தில் இருக்கும் (குறைந்தபட்சம் ஆறு தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ? அதை விட நினைத்த நேரத்தில் எவரையும் கேட்காமல் தன் அதிகார வரம்புக்கு உட்பட அத்தனை நல்ல காரியங்களையும் அந்த மாவட்டத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு மாவட்ட ஆட்சியரால் செய்ய முடியும். 

துண்டு கஞ்சா விற்பனை வரைக்கும் இந்த மாவட்டத்தில் உள்ள இந்திய காவல் பணியின் மூலம் தலைமை பொறுப்புக்கு வந்தவரால் கட்டுப்படுத்த முடியும். 

அரசியல்வாதிகள் குறுக்கீடுகள், அதிகார துஷ்பிரயோகம், அரசியல்வாதிகளிடம் பணிந்து நின்று தன்னை வளப்படுத்திக் கொண்ட பல அதிகாரிகளைத் தான் நாம் பார்த்து பார்த்து வெறுத்துப் போயுள்ளோம். ஆனால் இந்தக் கூட்டமைக்குள் நூறில் பத்து நல்ல அதிகாரிகள் இருப்பதும், அவர்கள் மூலம் பல நல்ல விசயங்கள் நடந்து கொண்டிருப்பது பொது மக்களின் பார்வைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது என்பதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிலரால் விளம்பரங்களுக்குப் பெருமை. பலருக்கு விளம்பரமே சாபமாகவும் போய்விடுவதுண்டு. 

சகாயம் சுடுகாடு வரைக்கும் படுத்து எழுந்து வந்த போதிலும் நீதிமன்றம் கூட இன்று வரையிலும் அசைந்து கொடுக்கவில்லை. உமாசங்கர் என்னன்னவோ செய்து பார்த்தார். கடைசியில் பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டார்கள். இறையன்பு அரசாங்க செலவில் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டே சுய முன்னேற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். இது போலப் பல அதிகாரிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அஸ்ரா கர்க் என்ற அதிகாரி திருப்பூருக்கு வந்தார். மணல் லாரிகள் வெள்ளக்கோவில் தாண்டி இந்தப் பக்கம் உள்ள வர முடியவில்லை. நான்கு புறமும் சீல் வைத்தது போல ஆகிவிட்டது. ஊரடங்கும் வேலையில் தான் அவர் தினசரி வேலைத் தொடங்கும். ஒவ்வொருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தெறிக்க ஆரம்பித்தனர். ஏன் மாற்றினார்கள்? எதற்காக மாற்றினார்கள்? என்பது தெரியும் முன்பே வேறொரு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்.

திருப்பூரில் கமிஷனர் அலுவலகம் திறந்த நேற்றோடு மாறிய கமிஷனர் எத்தனை பேர்கள் என்று எண்ணிப் பார்த்தாலும் பட்டியல் நீளமாகத்தான் இருக்கும். 

இப்போது தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் போராட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு புதிய ஆட்சியர் வந்துள்ளார். ஏற்கனவே இருந்தவரின் வயது 37. அவர் 2009 ஆம் ஆண்டுத் தெலுங்கானா மாநிலத்தில் தேர்ச்சி பெற்று வந்தவர். ஒரு தேர்வு மூலம் பெற்ற சிறப்புகள் அனைத்தும் பொதுமக்களுக்குப் பலன் தராது என்பதற்கு உதாரணமாக இருந்தவர். மிகக்குறுகிய வயதிலே அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், தொழில் சமூகத்தோடு ஒன்றோடு கலந்து ஒன்றாக மாறி தன் புத்தியில் லத்தியைக் கொண்டு சாத்திக் கொண்டு பக்குவமாக அடுத்த மாவட்டத்திற்குச் சென்று விட்டார். இது போன்ற படித்த கூமுட்டைகளும் அரசியல்வாதிகளை விடக் கொடூரமானவர்களாகவும் இருந்து தொலைத்து விடுகின்றார்கள். 

ஆனால் அரசியல்வாதிகளின் அத்தனை அராஜகங்களையும் பொறுத்து, ஏற்று, வளைந்து , தடுமாறி தட்டுண்டு தனக்கான இடம் அமைந்த பின்பு சோர்ந்து போகாமல், பழைய நினைவுகளில் இருந்து மீண்டு தன்னால் இதையாவது செய்து விட முடியுமா? என்று முயற்சித்தவர்களின் சமீப காலத்தில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் முக்கியமாகத் தான் தெரிகின்றார். 

இந்தப் பேட்டியைப் பார்த்த போது மனதிற்குள் இலக்கியவாதி, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால் மக்களின் இயல்பான உலகத்தையும், அந்த உலகத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் செய்ய முடியும் என்று உணர்த்தியது. 

இவர் இதில் சொல்லியிருப்பது முக்கியமான ஒன்று. 

கஷ்டப்பட்டுப் படித்து முடித்து வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் ஆவது எளிது. அதன் பிறகு? நாம் தான் நம் வேலையை இஷ்டப்பட்டுச் செய்தால் இருக்கும் சவால்கள் நம் கண்களுக்குத் தெரியாது. 
செய்பவர்கள் எத்தனை பேர்கள்? 

இப்போது மோடி வேறு இவர்களை நம்பாமல் தனியார் நிறுவனங்களில் இருந்து இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு ஆட்களைப் பொறுக்கிக் கொண்டு வரப் போகின்றேன் என்று பயம் காட்டியுள்ளார். 

இனி வளைய மாட்டார்கள். ஓபிஎஸ் பாணியில் தான் ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கப் போகின்றார்கள். 

மகன்  ஆசைப்படுகின்றார் என்று ஊக்குவித்துக் கொண்டிருந்தேன். இனி ஊக்கு, பின் ஊசி போல எப்படி வளைய வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்? 





செவ்வாய், 26 ஜூன், 2018

இது நம்ம வீட்டு கல்யாணம் ....ஜூலை 5...2018

A .ஆதித்ய வெங்கடேஷ் .B .E ..Weds ...T .தனநந்தினி ..B .E

ஸ்ரீ முருகன் திருமண மண்டபம் ...கோவை ரோடு ..பொள்ளாச்சி ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ..

 A .ஆதித்ய வெங்கடேஷ்ன் தந்தை ..S அசோகன் (அபுதாபி )அவர்களை பற்றி சிறு குறிப்பு

நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,பெண்குழந்தைகள் ..கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர்  ..எனக்கு தெரிந்து 10 வருடங்களுக்கு மேல் நிதி உதவிகள் செய்துள்ளார்கள் ..இதை கூட அவர் சொல்லவில்லை ..அவரால் பயனடைந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இவரை முதன் முதலாக நான் சந்தித்தது திருப்பூரில்.. எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய நம் சமுதாய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தனது சமுதாய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ...தற்பொழுதும் தொடர்கிறது ..முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கும் பொழுது ...முதல் மனிதராக வந்து அறக்கட்டளை உறுப்பினராக சேர்ந்து நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் முத்தான ஆலோசகர் ....நமது திருப்பூர் மாப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களின் மூலம் இந்த நன்கொடை அளித்தார் ..இப்பொழுதும் நம் கம்பள குழந்தை செல்வங்களுக்கு நமது அறக்கட்டளை மூலம் கல்வி நிதிஉதவி அளித்துக்கொண்டுள்ளார் ... வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் அவரது நினைவுகள் முழுவதும் ..நம் கம்பள சமுதாய குழந்தை செல்வங்கள் கல்வி வளர்ச்சியின் மீது இருக்கும் ..மாதம் ஒருமுறை என்னிடம்  அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்துகொள்வார்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...


வாழ்க வளமுடன் ..தம்பி ...

திங்கள், 25 ஜூன், 2018


உடுமலைப்பேட்டை முனைவர்  மஞ்சுளாதேவி...

காமதேனு (வார இதழ்) தி இந்து...

பிடித்த ஊரும் காரணமும் ...

உடுமலை வரலாற்றை வழிநடத்தும்
ஆளுமையே ..
இந்திரசித்துவின் அறிவுலக வாரிசே
அற்புதப் மேடை பேச்சுத்திறனால்
அரசியல்வாதிகளையும் ,
அரசு அலுவலர்களையும் ,
அரசு அதிகாரிகளையும் ,
செந்நாவல் கட்டி வைத்த,
செஞ் சொற் சுடரே ..
செந்தமிழ்ச் செல்வியே ,
கவிஞர்,
கல்வியாளர்,
ஆய்வாளர்,
பத்திரிகையாளர்,
படைப்புத் தொகுப்பாளர்,
பள்ளிக் குழந்தைகளுடன் பயணிக்கும் பாசக்கார ஆசிரியை
உங்களோடு உடுமலை வரலாறு
பயணிப்பதில் பெருமை அடைகிறது ...

உடுமலை சிவக்குமார்..9944066681.. 

ஞாயிறு, 24 ஜூன், 2018

எட்டுத்திக்கும் கொட்டட்டும்
வீழ்த்த முடியா வீரனின் வரலாற்றை
பறைசாற்றும் எத்திலப்பன் வெற்றிமுரசு💐💐🥁🥁🥁🥁
 கம்பளவிருட்சம் செயற்குழு கூட்டம் ..24-06-2018

இன்று நடந்த செயற்குழு கூட்டம் அருமையான நடை செயல்முறை திட்டங்கள் ,நீண்டகால திட்டங்கள் ..பற்றி விரிவாக பேசப்பட்டது ...தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ...
இனிமேல் செயல் திட்டங்களை வாட்ஸஅப்..முகநூல் .சமூக தளங்களில் .பகிரப்படாது ..அறக்கட்டளையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ..வரும் உறுப்பினர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு விவாதிக்கலாம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ...

கம்பள விருட்சம் குழுமம் ..




..ஏன் என்றால் ...பல அமைப்புகள் ,சில அறக்கட்டளைகள் ,தயவு தாட்சினமின்றி ...நமது திட்டங்களை அவர்களின் சுயநலத்துக்காக பயன்படுத்துகின்றன ..இதில் பண்பட்டவர்களும் சரி ..பண்படாதவர்களும் ..விதிவிலக்கு இல்லாமல் செயலாற்றுகின்றார்கள் ..



உடுமலைப்பேட்டை புத்தக திருவிழா ....

மனங்கவர் திருவிழா ..
ஆயிரக்கணக்கான தலைப்புகள் ...
நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ...
பத்துநாள் திருவிழா ...
மக்களின் மனங்களில் மகிழ் உலா ....
காத்திருங்கள் .....


எத்தலப்ப மன்னர் மணிமண்டபம் ...25-06-2018
கோரிக்கை .சட்டமன்றத்தில் நிறைவேறியது ...
மிக்க மகிழ்ச்சி ...
எனது ..மறைந்த தமிழ் பேராசிரியர் .இந்திரசித்து ..
எனது ..மாமா பாவலர் மறைந்த .ஜல்லிபட்டி .பழனிசாமி ...
எனது ..இரண்டரை மாதங்களுக்கு முன் மறைந்த எனது தந்தை ..கிருஷ்ணசாமி ..அவர்களுக்கும் ...இந்த வரலாற்று செய்தியை காணிக்கை ஆக்குகிறேன் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பேராசிரியர்களுக்கும் ,அறிஞர்களுக்கும் ...திரு .அருட்செல்வம் அவர்களின் ...இவரின் உயிருக்கு மேலான உழைப்பு ..வாழ்த்த .வார்தைகள் இல்லை ..மற்றும் ..நம் கம்பள சொந்தங்கள்..தலைவர்கள் ,மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ..ஊடகத்துறைக்கும் ,நன்றி ..அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த செய்தி வந்து இருக்காது ...மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

..கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ...சட்டமன்றத்தில் அறிவிக்கட்டும் .நாளை  மதியம்"  வரை அமைதி  காக்கவும் ..மந்திரி  பேசும்    ஹாட்   காபியே   உள்ளது    அவசரம்    வே்ண்டாம்...என் பணிவான இருகரம் கூப்பி வேண்டுகொள்கிறேன் .....

மாப்பிள ..இது எல்லாம் ரகசிய ,பாதுகாக்கப்பட்ட செய்தி ...இப்படி வெளியில் பகிரக்கூடாது ..என்று விழிப்புணர்வு பதிவு ..போட்டி செய்தி இல்லை மப்பில்..அவர்கள் அறியாமையை காட்டுகிறது ..

கோவம் ..கோவம் மாக வருகிறது .....





சனி, 23 ஜூன், 2018

ஆசிரியர் முகப்பு படம் ...பற்றி ...
அதிக நண்பர்கள் ,சொந்தங்கள்..கேட்டார்கள் .ஆசிரியராக பணியாற்றினீர்களா ..எந்த கல்லூரியில் ,எந்த பள்ளிக்கூடத்தில் ..என்று ...நான் பணிபுரியும் நிறுவனத்தில் ..எனக்கு முழு சுதந்திரம்  அளித்து உள்ளது .. கல்லூரி ,பள்ளிகள் ,அரசு நிறுவனங்கள் ,தனியார் நிறுவனங்கள் ,மேலதிகாரிகள் சந்திக்கும் பொழுது ...நான்  அவர்களுக்கு தேவையான நிதியியல்  பற்றி மட்டும் சொல்வதில்லை ..நான்  கூறும் செய்திகள் ,தகவல்கள் ..பொதுவாக சொல்லிவிட்டு.. தேவையான நிதியியல் குறித்து விளக்கம் அளித்து பிறகு அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ..எங்கள் சகா ஊழியர்களுக்கும் தகவல்களை கூறுங்கள் என்ற அனுமதி தந்த பிறகு ..வகுப்புகள் நடைமுறை உதாரணங்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ள்வேன் ..இதற்கு ..தினந்தோறும் இரண்டு மணிநேரம் தகவல்களை படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்கிறேன் ...இதை நான் உற்சாகத்தோடு இந்த பணியை செய்வதால் வாழ்க்கையில் சலிப்பு என்று ஒன்று வருவதில்லை ..
நான் எடுத்த வகுப்புகளில் சில துளிகள் ...உங்களுக்கு ..

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய நிதியியல் கல்வி.....!!

'சிறுகச் சேர்த்து பெருக வாழ்' என்பது பழமொழி. எனினும், சிறுகச் சேர்க்கும் போது கூட, பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்ய வேண்டியதும் முக்கியம்.
பரீட்சை மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய பள்ளிக் கல்வியில் இது போன்ற செயல்பாட்டு ரீதியிலான படிப்பினைகள் மிகவும் குறைவே. எனவே, குழந்தைகள் மற்றும் பணம் தொடர்பாக உங்களுடைய பெற்றோர்களின் கையேடு என்ன சொல்கிறது என்று பாருங்கள். இதன் மூலம் உங்களுடைய குழந்தைகள் பணத்தை எப்படி பொறுப்புடன் செலவு செய்யலாம் என்று உணரச் செய்யுங்கள்.

பணம் என்றால் என்ன??? குழந்தைகள் தாங்களாகவே தங்களுடைய வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் முன்னதாக அவர்கள் பணம் என்னவோ மரத்தில் காய்ப்பது போன்ற எண்ணத்தில் செலவு செய்து கொண்டிருப்பார்கள். எனவே, பணத்தை கையாளும் பொறுப்புகளில் குழந்தைகளை சிறு வயதிலேயே ஈடுபடுத்தி, நிதிக்கல்வியை அவர்களுக்கு சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் முதிர்ச்சி கூட்டல் அல்லது கழித்தல் என கணக்குகளைக் கற்றுக் கொள்ளும் முன்னரே குழந்தைகள் பணத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். 4-வயதான குழந்தைக்கு கூட தன்னுடைய தந்தை பணத்தை ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து எடுக்கிறார் என்று தெரியும். எனினும், பெற்றோர்கள் உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் புரிந்து கொள்ள, சற்றே முதிர்ச்சியான மனம் வேண்டும் மற்றும் அதன் பின்னர் தான் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டின் நுணுக்ககங்கள் தெரியத் துவங்கும். எடுத்துக்காட்டாக, தன்னுடைய தந்தை வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார் என்று தெரிந்து கொண்ட குழந்தை அவரைப் பார்த்து, 'இன்று வேலை எப்படி இருந்தது? என்று கேட்பார். 'நன்றாக இருந்தது', என்று தந்தை பதிலளிப்பார். உடனே குழந்தை 'நீங்கள் அதற்கு பணம் பெற்றீர்களா?' என்று கேட்க்கும் குழந்தைகள் உண்டு.

சேமிப்பு மனநிறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பணத்தைக் கொண்டு பொம்மைகள், மிட்டாய் போன்றவற்றை வாங்க முடியும் என்று குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது தங்கள் கையில் கிடைக்கும் ஒவ்வொரு காசையும் சேமித்து வைத்துக் கொள்ள அவர்கள் நினைப்பார்கள். இந்த ஊக்கம் தான் குழந்தையை சரியான நிதி மேலாளராக வழிநடத்தி, இளைஞனாக கொண்டு வரும்.

இன்றைய விதை, நாளைய கனி குழந்தைக்கு நிதி தொடர்பான விழிப்புணர்வை இளம் வயதிலேயே கொடுக்கத் தொடங்குவது முக்கியமானதாகும். ஏனெனில், டீன்-ஏஜ் சிறுவர்/சிறுமிகள் இத்தகைய ஆலோசனைகளுக்கு அவ்வளவாக செவி கொடுப்பதில்லை. மேலும், பணத்தை செலவிடுவதில் உள்ள வழிகளிலே அவர்கள் பிஸியாக இருப்பார்கள்.

ஊக்கத் தொகையின் அருமை குழந்தைகளாக இருக்கும் போது சிறிய அளவிலான பணத்தை அவர்களிடம் கொடுத்து தினசரி செலவுகளை செய்யச் சொல்லுவது நல்லது. மேலும் செலவிற்கான கணக்கை அவர்களிடம் பெரியவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் நம்மை ஒரு கண்காணிக்கிறார் என குழந்தைகள் உஷாராக இருப்பார்கள். குழந்தைகள் வளரும் காலத்தில் பெரிய அளவிலான செலவுகளை சுயமாக செய்ய இந்த அனுபவம் உதவும்.

டீன்-ஏஜ் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகள் கணக்குகள், கிரெடிட் அட்டைகள் மற்றும் கடன்களை பரிசோதித்தல் ஆகியவை கல்லூரி செல்பவர்களுக்கான ஆரம்ப கட்ட நிதி செயற்கல்வியாக இருக்கும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வங்கி மற்றும் கடன் தொடர்பான விஷயங்களைப் பற்றி சொல்லித் தருவதன் மூலம், அவர்களுக்கு பணத்தை குறித்து ஒரு சிறந்த அறிவை அவர்கள் மனதில் புகுத்துகிறோம்.

முதலீட்டைப் பற்றியும் இளமையில் கற்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சந்தைகள் மற்றும் உண்மையான பணத்தைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி அந்த வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் இவர்கள் சிறுவையது முதலே பணத்தின் அருமையை உணர்ந்து வாழ்கையை சிற்ந்த முறையில் நடத்துவர்.

V.K.Sivakumar............9944066681......
Home Loans.....Coimbatore.....Pollachi....Udamalpet.....
வேலையில்லா திண்டாட்டம் ..

கம்பள விருட்சம் கார்த்தி ...சரியான தலைப்புகளை அழகாக தொகுத்து சிந்தனைகளை தூண்டும் தலைப்புகள் ...இப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்புகளை தந்து ...தகவல்களை தருவது மிக சிறப்பு ...

பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம்,அளவுக்கு அதிகமான வேலைப் பளு ,உடல் மன உளைச்சலை ஏற்படுத்தும் வேலையின் தன்மை,அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை,தற்சார்பான வாழ்வியல் என பல கோணங்களிலும் இன்று இயற்கை வழி விவசாயத்தை நோக்கி இளைஞர்கள் திரும்பியுள்ளனர்.
நடைமுறை சாத்தியம் சற்று சிக்கலாகதான் உள்ளது.இந்த வழியில் சென்று ஓரளவு பலன் பார்பதற்குள்ளே, குடும்பமும் சுற்றமும் வசை பாட ஆரம்பித்து விடுகிறது.பார்த்து கொண்டு இருக்கும் மனதுக்கு ஓப்பாத வேலையை விட்டு விட்டு விவசாயத்தை நோக்கி திரும்பிய இளைஞர்களுக்கு ஒன்று சொந்த நிலம் இல்லை,அப்பிடி இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு மிகக் குறைவு .பெரும்பாலும் அப்பாக்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பரிசோதனை முயற்சிகளை செய்வதற்கு வாய்ப்பு மிக குறைவு. நிலம் குத்தைக்கு எடுப்பது ,வேலி அடைப்பது(உயிர் வேலி வளரும் வரை) என முதலீட்டின் அளவு சற்று மலைக்க வைக்கிறது.எல்லாவற்றிலும் அவசரம் தொனி தான் உள்ளது.பருவ சூழ்நிலை,நிலத்தின் தன்மை ,பக்கத்து நில விவசாயிகளின் ஆதரவு பங்களிப்பு ,இயற்கை வழி விவசாயத்தை கற்று கொடுபவர்களின் தன்மை ,இயற்கையை பற்றிய நமது புரிந்துணர்வு ,காத்திருப்பு,சந்தைபடுத்துதல் என எத்தனையோ காரணிகள் சவாலாக உள்ளன.
உண்மையில் இயற்கை வழி விவசாயதிற்கு கூட்டமான ஒரு மனநிலை தேவை உள்ளது.புர்ந்துணர்வு மிக்க நண்பர்கள்,கணவன் மனைவு இணைந்து நல்ல சூழலை உருவாக்க முடியும்.நம்மை பெருதும் நிர்பந்ததிற்கு உள்ளாக்கும் பணம்,தண்ணீர் பற்றாக்குறை,பாதுகாப்பு போன்ற புறக் காரணிகளின் பாதிப்பு குறையும் போது இயற்கை வழி விவசாயம் இளைஞர்களுக்கு சாத்தியமாகும்.
ஆரோக்கியத்தை இழந்து தவிக்கும் முந்திய தலைமுறை,அதனை தக்க வைக்க தலைகீழாய் முயற்சி பண்ணும் இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமும் நமது கைகளில் தான் உள்ளது .நமது தோளில் கடினமான பணி சுமத்தபட்டுள்ளது.
சிறுதானியங்களும் அதன் உணவு வகைகளும் நடுத்தர குடும்பங்களின் கையை விட்டு நழுவி பெரு நிறுவனங்கள் நடத்தும் உணவு திருவிழாக்களிலும் ,அரசு சார்ந்து நிறுவனங்களின் விளம்பர பேணர்களிலும் தான் குடிகொண்டு உள்ளன.இயற்கை வழி விவசாயம் பயிற்றிவிக்கும் இடங்களும் ஆசிரம மனநிலைக்கு மாறி விட்டது.நல்ல உணவு எல்லோருக்கும் பொதுவானதாய் அமைய வேண்டும் மைய படுத்துதல் வேண்டாம் பரவலாக்கல் தான் நமக்கு வேண்டும்.இந்த ஏக போக சந்தையை,வழி பாட்டு மன நிலையை நிச்சயம் நம்மாழ்வார் ஐயா விரும்பவில்லை.அவர் விரும்பியது வாழும் கிராமங்களை தான்.சிறுதானியங்களும் அதன் உணவு வகைகளும் ரேசன் கடையையோ,பள்ளி மதிய உணவிலோ ,அங்கன் வாடி மையத்திலோ போய் சேர்ந்து இருந்தால் நாம் நிம்மதி கொள்ளலாம் ஆனால் பிஸ்கட் கம்பெனிகளிலும்,பெரு முதலாளி கைகளிலும் அவர்கள் கம்பெனி கேன்டின்களிலும் மட்டுமே போய் சேர்வது தான் கொடுமை .
இயற்கை வழி விவசாயத்தின் முக்கிய தேவையான நிலத்தை நிர்பந்தங்கள் ஏதுவும் இன்றி குத்தகைக்கு வழங்க சேலத்தில் உள்ள கூப் பாரஸ்ட் தற்பொழுது தயாராக உள்ளது .2 எக்கர் நிலம் வரை பெற்றுக் கொண்டு விவசாய பணியை துவங்கலாம் .மின்சாரம் தண்ணீர் நிலப் பயன்பாடு போன்ற செலவினை பகிர்ந்து கொள்ளலாம்.கால நெருக்கடி இல்லாத் காரணத்தால் பரிசோதனை முயற்சிகள் உழாத வேளாண்மை என சுதந்திரமாய் செயல்படலாம்.
நம்மாழ்வார் ஐயாவின் கூற்றுப்படி இயற்கை வழி விவசாயம்,மாற்று வழி மருத்துவம்,மாற்று அரசியல் என அத்தனையும் அடித்தட்டு மக்களையும் சென்று சேர வேண்டும்.ஆனால் அத்தனை மாற்றான விஷயங்களும் மேல் தட்டு மக்களிடையே தான் சிக்கியுள்ளன.மாற்று வழி மருத்துவம் அலோபதியிலிருந்து விடுதலை பெறவே எழுந்thaது .இன்று முழுக்க வணிக மயமாகி உள்ளது.கிராமங்களை நோக்கி யாரும் மாற்றங்களை எடுத்த செல்ல வில்லை .
விடுதலையை நோக்கி நாம் கை கோர்த்து நடப்போம்...

வானகத்தில்... அன்று..
ஒரே.. நம்மாழ்வார்தான்...
ஆனால்... இன்று..
தினம் ..தினம்....
நுாறு ..நம்மாழ்வார்கள்..

என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

வெள்ளி, 22 ஜூன், 2018


விருந்தோம்பல் ..அருமையான தலைப்பு ...நமது கம்பள விருட்சம் கார்த்தி மாப்பிளை ...அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்துஇருக்கிறார் ...இன்றைய சூழலில் ...விருந்தோம்பல் பண்பு மிக இன்றியமையாதது ...கோவையில் இருக்கும் முகநூல் நண்பர் திருமதி .சண்முகவடிவு அக்கா அவர்களிடம்  பேசிக்கொண்டு இருந்தபோது ...அவரின் சொந்தங்களை எப்படி ஒன்றிணைத்தார் என்ற அவரின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் ....அதை உங்களிடம் பகிர்ந்துகொள்வது மிக்க மகிழ்ச்சி ...

இதுதான் இன்றைய விருந்தோம்பல்.

சொந்தங்கள் கூடி சந்தோஷிக்கும் இன்பம் பற்றி இந்தத் தலைமுறை அறிவதற்கான சூழலை, பெரும்பாலான பெற்றோர்கள் தருவதில்லை. ஆனால், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 90 பேரை ஒன்றிணைத்து நாங்கள் நடத்திய ‘ஒன்றுகூடல்’ (கெட் டுகெதர்) நிகழ்வு பற்றியும், அதில் சம்பாதித்த சந்தோஷங்கள் பற்றியும் அறிந்தால், நீங்களும் அப்படி ஓர் நிகழ்வுக்கு ஆசை கொள்வீர்கள்!

ஈரோடு அருகே லக்காபுரம் கிராமம்தான் என் அம்மா பிறந்த ஊர். அம்மாவுக்கு மூன்று அக்காக்கள். சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் பெரியம்மாக்களின் பிள்ளைகளுடன் அடித்த கூத்தும் கும்மாளமும் சொல்லி மாளாது.

எல்லோரும் வளர்ந்து திருமணமாகி அவரவர் குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு, அவ்வப்போது ஏதாவது விசேஷங்களில் மட்டுமே சந்தித்துக்கொள்ள முடிந்தது… அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே! எதிர்பாராத ஓர் இன்ப அதிர்ச்சியாக, என் தம்பி ஒரு ஏற்பாடு செய்தான். வருடம் ஒருமுறை எல்லோருமாக அவனுடைய தோட்டத்தில் ஒன்றுசேர்வது என்பதுதான் அது. கிட்டத்தட்ட 25, 30 பேர் ஒன்று கூடி இரண்டு, மூன்று நாட்கள் சந்தோஷமாக, கொண்டாட்டமாக இருந்துவிட்டுப் போவோம்.

அப்படி போன வருடம் நடந்த ஒன்றுகூடலுக்கு வந்திருந்த தட்சிணாமூர்த்தி அண்ணன் (என் பெரியம்மா மகன்), ”ஏன் இதே போல நம் வீட்டிலும் ஒரு ‘கெட் டுகெதர்’ வைக்கக் கூடாது!’’ என்று சொல்ல, அண்ணியும் சந்தோஷமாக சம்மதித்தார். சங்கம மழையின் முதல் துளி விழுந்தது அந்த நிமிடம். அதைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் காட்டிய ஆர்வம்… அழகு!

நான்கு சகோதரிகளின் பிள்ளைகள், அவர்களின் பேரப் பிள்ளைகள் என்று என் அம்மா வழி சொந்தங்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட முடிவு செய்தோம். அப்போது ‘ஃபேமிலி ட்ரீ’ அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிட்டால் நன்றாக இருக்குமென்று ஒரு அற்புதமான யோசனை சொன்னான், என் தங்கை மகன் மதன்குமார். அதை வெறும் பெயர்களாக இல்லாமல், ஒவ்வொருவரின் புகைப்படம், விலாசம், தொடர்பு எண், பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பிளட் குரூப் உள்ளிட்ட விவரங்களுடன் சேகரித்தால் நன்றாக இருக்கும் என்று மதன் சொல்ல, அந்த விவரங்களைச் சேகரிக்கும் பணியை அவனுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்தாள் தங்கை பூங்கோதை. ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த தம்பதி பற்றிய பாஸிட்டிவ் விஷயங்களைப் பட்டியலிடும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

என் அம்மா தவிர, என் அப்பா மற்றும் மற்ற பெரியம்மா, பெரியப்பாக்கள் என்று யாருமே இப்போது இல்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு போன் செய்து நான் அந்தத் தகவல்களைக் கேட்க, தங்கள் பெற்றோர் பற்றிச் சொல்லும்போதே அவர்கள் கரைந்து அழுத தருணங்கள்… நெகிழ்வு! இறுதியாக என் அம்மாவிடம் வந்தேன். இத்தனை வருடங்களில் ஒருநாள் கூட நான் என் அம்மாவின் அருகில் அமர்ந்து, அவரை பேசவிட்டுக் கேட்டதில்லை. வாழ்வில் முதல் முறையாக மடை திறந்த வெள்ளமாக அம்மா பேசப்பேச, குற்ற உணர்வோடு கேட்டுமுடித்து, போனை வைத்ததும் கரகரவென அழுதுவிட்டேன்.

சேகரித்தவற்றை எல்லாம் எழுதத் தொடங்கினேன். புகைப்படங்கள் முதல் பிளட் குரூப் வரை தாங்கள் சேர்த்த விவரங்களை மதனும், பூங்கோதையும் தொகுத்தார்கள். எத்தனை போன் கால்கள், இ-மெயில்கள், ‘வாட்ஸ்ஆப்’ பரிமாற்றங்கள்! குறிப்பாக, ஒரு அக்கா மகனின் குடும்பப் புகைப்படம் கேட்டபோது… அவர்கள் டூரில் இருக்க, வழியிலேயே காரை நிறுத்தி, புகைப்படமெடுத்து, சுடச்சுட ‘வாட்ஸ்ஆப்’ மூலமாக அனுப்பி, வந்து சேர்ந்தது, சூப்பர்!

ஒருபுறம் புத்தகம் தயாராக, இன்னொருபுறம் அண்ணனின் குடும்பம் அழைப்பிதழ் அடித்து, உறவினர்களுக்கு அனுப்பி, அவர்களைத் தொலைபேசியிலும் அழைத்துக்கொண்டிருந்தனர்.

ஈரோடு, பெருமாள்புரத்தில் உள்ள என் அண்ணன் வீட்டில், ஒன்றுகூடல் விழா நாளுக்கு முதல் நாளான சனிக்கிழமை மதியமே பெங்களூரு, சென்னை, நெய்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர் என்று பல ஊர்களில் இருந்தும் உறவினர்கள் கூட ஆரம்பித்தோம். சின்ன வயதில் குதித்துக் கும்மாளமிட்ட அந்த பிரமாண்ட வீட்டில், மீண்டும் குழந்தை குட்டிகளுடன் கூடிய பரவசத்தை, வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 90 பேர் வீடு முழுக்க நிரம்பியிருக்க, ‘அண்ணா வந்தாச்சா?’, ‘சித்தி எங்கே இன்னும் காணோம்?’, ‘மாமா, நீங்க எப்ப வந்தீங்க?’, ‘குட்டித் தங்கம் எவ்ளோ வளர்ந்துட்டே!’ என்று ஒரே அன்பு விசாரிப்புகள். ‘கய்யாமுய்யா’வென்று சந்தோஷ அளவளாவல்கள்.

மதிய உணவு முடிந்ததும் ‘ஃபேமிலி ட்ரீ’ புத்தகம் விநியோகம் செய்யப்பட, அத்தனை பேரும் ஆவலோடு புரட்ட ஆரம்பித்தனர். புகைப்படங்களைப் பார்த்து குதூகலித்து, தங்கள் பெற்றோரைப் பற்றிய நினைவலைகளைப் படித்து கண்ணீர்விட்டு என, அந்தக் காட்சி, கவிதை! என் அம்மா அவருடைய பிறந்த வீடு, சகோதரிகளைப் பற்றி எல்லாம் படித்தபோது உணர்ச்சிப் பெருக்கில் அழுதவாறே, ”இந்த நிமிஷ நிறைவு போதும் எனக்கு. இப்போவே செத்தாலும் நான் நிம்மதியா சாவேன்!’’ என்று எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு சிறுகுழந்தையாய் விம்மினார். அத்தனை பேரின் ஒட்டுமொத்தப் பாராட்டும், அந்தப் புத்தகத்துக்காகப் பட்ட சிரமங்கள் அனைத்தையும் மறக்கடித்தது.

மாலை டீ சாப்பிட்டுவிட்டு, அப்படியே காலாற நடந்து ஒரு கோயில் விசிட் முடித்து, வீடு வந்து சேர்ந்தோம். சிறியவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டு, ‘உன் ஃபேஸ்புக் ஐ.டி என்ன?’, ‘நீ வாட்ஸ்ஆப்ல இருக்கியா?’ என்று விசாரித்து, அப்போதே ‘வேண்டுதல்’ அனுப்பி இணையத்தில் இணைந்தனர். தொடர்ந்து, ஜோடிப் புறா, கோகோ, மியூசிக்கல் சேர் என சிறியவர், பெரியவர் அனைவரும் விளையாடியதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

இரவு உணவு முடிந்து பேச்சும் சிரிப்பும் அரட்டையுமாக, உறங்க இரவு இரண்டு மணி ஆகிப்போனது. மறுநாள் காலை வீட்டின் பெரிய வாசலில், பெண்கள் ஒரு குழுவாக இணைந்து பிரமாண்ட கோலம் போட்டோம். பின் அனைவரும் குளித்து ரெடியாக, காலையிலேயே ஆரம்பமானது அசைவ விருந்து. அன்று என் அக்கா ஒருவரின் பிறந்தநாள். அவருக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டினோம். அவர் ஆனந்தக் கண்ணீரோடு குழந்தையாகி நன்றி சொன்னது, அழகுக் கவிதை!

உண்ட மயக்கம் தீர கொஞ்சம் ஓய்வு. தேநீர் நேரம் முடிந்து புறப்பட ஆரம்பித்தபோது, ஒவ்வொரு மனதிலும் சந்தோஷத்துக்கு சமமாக ஏக்கமும். ”அடுத்து எப்போ இப்படி சந்திக்கப் போறோம்?” என்ற கேள்வியே ஒவ்வொருவரிடமும். நிச்சயம் சந்திப்போம் என்ற உறுதியோடு, நம்பிக்கையோடு விடைபெற்றுக் கலைந்தோம்.

உறவுகளின் வலிமையை உணரச் செய்த ‘கெட் டுகெதர்’ அது!

இது மாதிரி நம் கம்பள சமுதாயத்தில் நடக்குமா ...நடந்து இருக்கிறதா ..பெருமூச்சு தான் மிஞ்சும் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...


விருந்தோம்பல்
தளி மண்ணின் மைந்தன் ...
இன்று தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..நமது எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூலை அலுவுலகம் தேடி வந்து வாங்கி சென்றார் ...
திரு .சுரேஷ்குமார்   விவசாயீ  சங்க பொறுப்பாளர்   இயற்கை   வேளாண் மையில்  ஆர்லமுள்ளவர்    தளி மண்ணின்  மீதும்   மாறா  பற்று  கொண்டவர்....

இன்று ...எனது முகநூலில் ..பதிவுகளை படித்து கொண்டு வந்தபொழுது ...சிறு நிமிடங்கள் ...பார்த்து ..வியந்து ...கடந்து சென்றேன் ...இந்த தம்பி நமது சொந்தம் ..மூன்று நாட்களுக்கு முன் ..வழக்கறிஞராக பதிவு பெற்றவராக தனது முதல் படி எடுத்துவைத்துள்ளார் ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ..நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பணியையும் சேர்த்து இணைத்து கொண்டது ..மிக்க மகிழ்ச்சி நமது அறக்கட்டளைக்கு இன்னும் கூடுதல் பலம் .....
Hari Krishnan is feeling பசுமையை உருவாக்க அன்புடன் வரவேற்கிறோம் with Karthi and 3 others.
1 min
நேற்று முன் தினம் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கோவை நீதிமன்றம் வந்த எங்கள் பாசமிகு தம்பி Karthiஅவர்களுக்கு இன்று Negizhi foundation சார்பில் மரக்கன்று கொடுத்து வரவேற்பு கொடுத்த மகிழ்வான தருணத்தில்..!!
மரக்கன்று உதவி:Kalaiyarasan Kathir சகோ......

புதன், 20 ஜூன், 2018

பெண் சுதந்திரம் ...அருமையான தலைப்பு ...கம்பள விருட்சம் ..கார்த்திக்கு எனது நன்றிகள் ...

முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள் : பெண் சுதந்திரம் என்றால் என்ன? பெண்ணுக்கு எதற்காகச் சுதந்திரம் வேண்டும்? எதற்கெல்லாம் பெண்ணுக்குச் சுதந்திரம் தேவை? எப்பொழுதெல்லாம் தேவை? எந்த அளவிற்குத் தேவை அதாவது அதன் எல்லை என்ன? யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து சுதந்திரம் தேவை?
பெண் சுதந்திரம் என்கின்ற ஒரு சிந்தனை புதியது அல்ல. இது மிகவும் பழையது. பல இடங்களில் பல பேரால் அலசி ஆராயப் பட்டுள்ளது. இக்கேள்விக்கான விடைகளும் விளக்கங்களும் காலத்திற்குக் காலம் மாறுபடும். மனிதர்கள் கண்ணோட்டங்களில் மாறுபடும். புதுப்புது விதமான பாதிப்புகளும் நிகழ்வுகளும் இதற்கு ஓர் வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கக்கூடும்.
நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்பட்டதோ, அப்பொழுதே அடிமைத்தனம் என்ற சங்கிலியில் இருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இது ஒரு நியாயமான எண்ணம் என்பதில் ஐயமே இல்லை என்பது ஒன்று கூடிய கரங்கள் அந்த நியாயப் போராட்டத்தில் அஹிம்சா வழியில் வெற்றி பெற்றது மூலம் பெறப்படுகின்றது. மனித மனங்கள் எப்பொழுதும் முறை கேடான அடிமைத்தனம் என்ற களையினைக் களைவதையே விரும்புகின்றன என்பதும், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைக்காக நாம் நியாயமாகப் போராடுவதில் தவறில்லை என்பதும் நன்கு விளங்குகின்றது. தானாகவே கிடைக்கக்கூடிய ஒன்றிற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு போரிடுவதுமில்லை. இது மனித இயல்பு.
இதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மையானது – எப்பொழுது பெண் சுதந்திரம் என்ற கருத்து வெளிவரத் துவங்கி யதோ, அப்பொழுதே பெண் ஏதோ ஒரு இடத்தில் சிக்கியிருப்பதும், அதிலிருந்து அவள் விடுபடத் துடிப்பதும் புரிகின்றது. நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் காந்தியடிகள் காலத்திற்கு முன்னரே கூட தோன்றியிருக்க நியாயம் உள்ளது. ஆனால், இந்த உணர்வைத் தட்டி எழுப்ப நமக்கு ஒரு மகாத்மாவும் அவருடன் கரம் சேர்த்த மற்ற தலைவர்களும் தேவையானார்கள். அதுபோல, பெண்ணடிமை பல நூற்றாண்டுகளாத் தொடர்ந்து இருந்திருக்கலாம். அக்காலங்களில் பெண்கள் அதை அடிமைத்தனமாக நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆணும் தான் பெண்ணை அடிமையாக நடத்துவதாக எண்ணாமலே இருந்திருக்கலாம். பரஸ்பரம் இரு பாலரும் இதுதான் தம் எல்லை என்ற வரையறையோடு வாழ்ந்திருக்கலாம். மேலும், அந்தக் காலங்களில் பெண்களுக்குச் சுதந்திரம் என்ற ஒரு உணர்வு தேவை இருப்பதற்கே வாய்ப்பு இல்லாமல் இருந்ததும் மன்னர்கள் காலத்தில் அந்தப்புரங்கள் தேவையான வசதிகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. வேண்டும் என்ற தேவைக்கே இடமின்றி இருந்தன. சாதாரண மகளிருக்கும் இல்லறத்தை நல்லறமாக நினைத்து வீட்டோடு வாழ்ந்து வந்ததில் அவர்களுக்கும் எந்த மனச்சுணக்கமும் இருந்திருக்க முடியாது. கடந்த நூற்றாண்டு வரை மகளிர் நிலை ஏறக்குறைய இப்படியே இருந்தது. மொத்தத்தில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் அபரிமிதமாகவே இருந்ததைக் காணலாம்.
நாகரிகம் வளர வளர, பெண் வீட்டை விட்டு வெளியே காலடி வைக்கத் துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு, இந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி, இன்றைய காலக்கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. செயல்கள் வரவேற்கத்தக்க பல மாற்றங்களையும் தருவதைக் காண்கிறோம்.
கண்டிப்பாகப் பெண் சுதந்திரம் என்பது ஆண்பாலிடம் தான் சுதந்திரத்தை வேண்டுவது என்பது தெளிவாகின்றது. ஆண்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் தாமும் செய்யும் சுதந்திரம் வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கின்றது. இங்கு எந்த வகை ஆண்களிடம் சுதந்திரம் வேண்டும் என்பது முதலில் தெளிவாதல் வேண்டும். தன்னைப் பெற்றதந்தை, மணந்த கணவன், தான் பெற்றமகன், உடன் பிறந்த சகோதரன் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல கட்டங்களில் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக என்று ஒரு பெண் பல விதமாக ஆண்பாலருடன் அவள் இணைந்து செல்லும் சூழ்நிலை அமைய வாய்ப்பு உள்ளது. இதனுடன், சமூகத்திலும் அவள் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆண்களுடன் சேர்ந்து செயல்படும் சூழல்கள் அமைகின்றன. அவளது சுயமான சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும், செயலாக்கத்திற்கும் இந்த ஆண்பாலரிடமிருந்து ஒரு தடை என்று வரும்பொழுதுதான் அவளது இயல்பான நிலைக்கு ஒரு முட்டுக்கட்டு ஏற்படுவதை உணர்கிறாள்.
பெண்ணுக்குச் சுதந்திரம் என்று சொல்லும் பொழுதே, அவள் முதலில் தன்னை ஓர் பணிக்கு – அது குடும்ப நிர்வாகமாக இருந்தாலும் – தகுதியாக்கிக் கொண்டு தான் அதற்காகப் போராடலாம் என்பது உண்மை. அவளது சிந்தனையும், குறிக்கோளும், திட்டங்களும் தெளிவாக இருத்தல் வேண்டும். இதற்கு நிகராக ஆண்களும் அதற்கு உறுதுணையாய் இருந்து அவள் காரியங்களில் கை கொடுக்க வேண்டும். சுதந்திரம் அளித்தல் என்பது அவர்களிடமிருந்து விலகுதல் என்பது அல்ல. இந்தச் சிந்தனையின் வெற்றிக்கு ஆண்களிடம்தான் அதிகமான எதிர்பார்ப்புகள், ஆதரவுகள் தேவைப் படுகின்றன – பெண் எண்ணங்களை மதித்தல், அடிப்படை யான இச்சிந்தனையை அங்கீகரித்தல், உடன் உதவுதல் – போன்றவை ஒரு ஆணிடம் இருந்தால் தான் பெண் சுதந்திரம் என்ற கருத்து வெற்றி பெறக்கூடும்.
ஒரு பேருந்துப் பயணம் நமக்கு வாழ்க்கையில் எத்தனை விஷயங்களைக் கற்றுத் தருகின்றது. ஒரு பெண் பேருந்தில் ஏறியதும், ஓர் ஆடவன் அருகில் மட்டும் ஓர் இருக்கை காலியாக இருந்தால், அப்பெண் எத்தனை முற்போக்கு சிந்தனை கொண்டவளாக இருந்தாலும் ஏன் உடனே அங்கே சென்று அமரத் தயங்குகிறாள்? அவள் சுதந்திரத்தை அந்த ஆடவனா பறித்துக் கொண்டான்? இதே நிகழ்ச்சி சில இடங்களில் வேறு விதமாக நிகழ்கிறது. அங்கே ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஓர் பாகுபாடு என்பது சாதாரணமாக நிகழ்வதில்லை. அப்பொழுது அந்தப் பெண் மிகவும் இயல்பாக அந்தக் காலி இடத்தில் சென்று அமர்கிறாள். திருமண விழாக்களில் பந்திகளில் பாருங்கள். ஓர் அந்நிய ஆடவன் அருகில் இடம் இருந்தாலும், ஓர் பெண் ஓர் இருக்கையாவது விட்டுத்தான் அமர்கிறாள். அவ்வாறு அடுத்த இருக்கையில் அமர்வது அவளுக்குச் சங்கடமா அல்லது அந்த ஆணுக்குச் சங்கடம் என்று அவள் நினைக் கிறாளா? இதுதான் நம் உள்ளே ஊறியுள்ள நமது பாரம்பரிய கலாச்சாரம். கேட்காமலே ஆண் சமூகத்திற்குச் செலுத்தும் ஓர் மரியாதை. யார் சொல்லியும் போராடியும் வரவில்லை இந்தப் பாரம்பரியம். அதுபோல் தான் வரவேண்டும் பெண் சுதந்திரம்.
அரசியலில் கூட முழுமையாகப் பெண் சுதந்திரம் பெறப்பட்டு, பெண் தலைமைகள் கூட வந்த பின்னர் இன்னும் பெண் சுதந்திரத்திற்குப் போராட அவசியமே இல்லை. பெற்றசுதந்திரம் ஆரோக்கியமான முறையில் பயன்பட வேண்டும்.
பெண் சுதந்திரத்தின் எல்லை நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மாறுபடலாம். அதை நிர்ணயிக்க முடியாது. சுதந்திரம் கருத்தை வெளியிடுவதில் தேவைப்படலாம். அதற்கு உடன் உள்ள ஆண் அங்கீகாரம் தேவை. குழந்தை வளர்ப்பில் ஆண் என்றும் பெண் என்றும் பெரும்பாலும் பெற்றோர் பாகுபாடு காட்டாத பட்சத்தில், கல்வி அளிப்பதிலும் தற்போதைய காலத்தில் வேறுபாடு செய்யாத பட்சத்தில், இருபாலருக்கும், சிந்தித்துச் செயல்படும் பருவம் வந்ததும், அதை வெளிப் படுத்த, செயலாற்ற, இணையான சுதந்திரம் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் அச்சுதந்திரத்தை வெளிப்படுத்தலிலும் செயலாக்கத்திலும் வழி பிறழாது இருக்க நெறிப் படுத்தும் ஆலோசனை களும், அறிவுரைகளும் தேவைப்படுகின்றன. அதனைக் கண்டிப்பாக அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
ஊடகங்களிலும், பிரமிக்கத்த வகையில் பெண் சுதந்திரம் பரந்து பேசப்படுகின்றது; காணக் கிடக்கின்றது. ஆனால் அது கலாச்சாரக் கேட்டிற்கு வழி நடத்தாமல், சுணக்கமான வற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும். தமிழ் பேச்சினைத் தங்கள் மூச்சென்று நம்மைப் பிரம்மிக்க வைக்கும் பெண்களும், ராக மாளிகைகளில் அழகாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மங்கையரும், மக்கள் அரங்கங் களில் உண்மைகளையும் உயர் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் சிறுமியர் முதல் அனுபவம் பெற்ற முதிய மார் வரை இன்றைய நாளில் மங்கையர் உலகம் அடைந்துள்ள வளர்ச்சி நிச்சயம் இன்று இருந்தால் பாரதியைக் கூட அவன் கண்ட புதுமைப்பெண்ணாய் அசர வைக்கும். ஒருபுறம் இப்படி இருக்க, மறுபக்கம் ஏன் சீரழிக்கும் ஆட்டங்களும் தலை குனிய வைக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளும்? விழித்துக் கொள்வோம். இதுவல்ல நாம் வேண்டும் பெண்சுதந்திரம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண் சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். தவறில்லை. ஆனால், அதுவும் தன்னை இதுகாறும் காத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் மூலம் நிகழ்வதில் என்ன தவறு? அவர்கள் ஆலோசனையும், அறிவுரையும் இதுபோன்றமுக்கிய தீர்மானங்களில் அவளுக்கு நிச்சயம் தேவை.
உயர்கல்வி பெறுவதில் பெண் சுதந்திரம் தேவை. ஆனால், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற சில சிக்கல்கள் காரணமாக அவளது இலட்சியங்களிலும் கனவுகளிலும் தேக்கம் ஏற்படலாம். சுதந்திரம் என்றபெயரில் பெரியோரைக் கீழ்ப்படியாமையும் ஆதிக்கம் செய்யவும் கூடாது.
மாணவப் பருவத்தில் சுதந்திரம் என்ற பெயரில் சில பள்ளி, கல்லூரி மாணவிகள் போகும் பாதைகள் தற்காலங்களில் அச்சுறுத்து வதாய் உள்ளன. இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? அவர்களை யார் திருத்துவது? இது போன்ற வினாக்களுக்கு விடை அளிப்பது சமுதாயத்தின் தலையாய கடமை. இன்றைய பெரியோர்களும் சான்றோர்களும் கூட ஊடகங்கள் மூலம் பெண் குலத்திற்கே உண்டாகும் தலை குனிவான நிகழ்ச்சிகளைக் கண்டும் காணாமல் போவதற்குக் காரணம் என்ன?
அயல்நாடுகளில் வாழும் நம் மக்கள் பாரதக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சுவாசிக்க அவ்வப்பொழுது தேக்கி வைத்த கனவுகளுடன் தாயகம் வருகின்றனர். அவர்களே நம்மிடையே சீர் கெட்டு வரும் சில நிகழ்வு களைக் கண்டு மனம் வருந்துவது நமக்குப் பெரும் தலைகுனிவே.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
வாழ்வின் வண்ணக் கனவுகளில் சிதறல்கள்
இல்லறம் என்ற வழித்தடம் பிசிறானது
கையில் ஓர் பெண் குழந்தை
எதிர்காலமே ஓர் கேள்விக்குறி!
கேள்விக்குறி ஆச்சரியக் குறியானது
ஆச்சரியக்குறி தொடர்குறியானது
தொடர்குறி முற்றுப்புள்ளியாகும் வரை
வாழ்வெனும் கடலில் எதிர் நீச்சலிட்டு
கரை சேர்வதே குறிக்கோளாய் அமைந்தது!
வாழ்வெனும் பாடம் கற்பிக்கும் செய்திகள் தான்
எத்தனை எத்தனை
புடம் போட்டு மாற்றி வரும் நிகழ்வுள்தான்
எத்தனை எத்தனை
அனுபவங்கள் வெளிப்படுத்தும் நியாயங்களையும்
நெறிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள
அமைந்த வாய்ப்பிற்கு நன்றி!
மாதம் ஒருமுறைசந்திப்போம்
வெளிவரும் கருத்துக்களை வாதிடுவோம்
அது குறித்து வரும் எதிர்வாதங்களை அலசுவோம்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு பலம் சேர்ப்பதே
நோக்கமாகக் கொள்வோம்!
முதல் மாதச் சிந்தனையாகப் பெண் சுதந்திரம் இருக்கட்டும்
சுதந்திரமாக இருபாலரும் சிந்திப்போம்
அவரவர் அனுபவங்கள் பேசட்டும்
உள்ளத்து உணர்வுகள் வெளிப்படட்டும்! வணக்கம்!
என்னை பொறுத்தவரையில் ...கட்டிய மனைவியே ...என்றாலும் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது ...அவரை நம்பியிருக்கும் கணவரின் வாழ்க்கையின் முடிவுவரை கைவிடாத நம்பிக்கையுடன் .....அது தான் பெண்மையின் ..பெண் சுதந்திரத்தின் அழகும்...மதிப்பும் கூட ....வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681


இலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்! ( Free Credit Score Report )

சமீபகாலமாக ‘உங்களது கிரெடிட் ஸ்கோரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ அல்லது ‘உங்களது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்களது கடன் தகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் பல்வேறு தனியார் கிரெடிட் ஏஜென்சிகள் தகவல் அனுப்பிவருகின்றன. ‘இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? வாங்கித்தான் பார்ப்போமே!’ என்று இந்த நிறுவனங்கள் அனுப்பும் லிங்கை (Link) நாம் க்ளிக் செய்தால், பல பிரச்னைகளை மாட்டிக்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதேயில்லை.

இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் லிங்கைச் சொடுக்கி னால், முதலில் நம் பான் நம்பர் கேட்கும். இங்கேதான் நாம் உஷாராக வேண்டும். இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் (Third Party) நமது முக்கிய விவரங்களைத் தெரிவிக்கும்போது அந்த நிறுவனங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெ ரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ அல்லது விருப்பமோ உங்களுக்கு இருந்தா ல், அவசரப்பட்டு இதுபோன்ற மூன்றாம் தரப்பிடம் நம்மைப் பற்றிய விவரங்களை அளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, கடன் தகவல் நிறுவனங்களிடமிருந்து (Credit Information Companies – CIC) அதனை நீங்கள் நேரடியாகவே பெறலாம். டிரான்ஸ்யூனி யன் சிபில் (Trans Union CIBIL), ஈக்­யூஃபேக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (Equifax), எக்ஸ்­பீ­ரியன் (Experien) மற்றும் ஹை மார்க் (High Mark) ஆகிய கிரெடிட் ஏஜென்ஸி நிறுவனங்கள்மூலம் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே நீங்கள் கடன் ஸ்கோரைப் பெறலாம்.
ஏற்கெனவே கிரெடிட் கார்டுமூலம் கடன் வாங்கியவர்கள், இதர தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் ( Home Loan )  வாங்கித் திரும்பச் செலுத்தியவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் கிரெடிட் ஸ்கோர் ( Credit Score ) என்ன என்கிற அறிக்கையை கிரெடிட் ஏஜென்ஸி ( Credit Agency ) நிறுவனங்கள் மூலம் இலவசமாகப் பெறுவதற் கான உத்தரவை ரிசர்வ் வங்கி ( Reserve Bank ) கடந்த 2017 ஜனவரியில் நடை முறைப்படுத்தியது.

இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு கிரெடிட் ஏஜென்சி நிறுவனமும் தனித்தனியே ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக கிரெடிட் ரிப்போர்ட் தரவேண்டும் என்பதால், ஒருவர் ஓராண்டில் மொத்தம் நான்கு ரிப்போர்ட்டுகளை இலவசமாக பெற முடியும்.அதேசமயம், சில மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு க்கு ஒருமுறைக்குமேல் இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுடன், மேலும் சில சேவைக ளையும் சேர்த்து வழங்குகின்றன. “வாடிக்கையாளர்கள் அவர்களது கிரெடிட் நிலை மையைப் புரிந்துகொள்ளும் விதத்திலும், அவர்களது கிரெடிட் ஸ்கோரை உயர்த்து வதற்கான வழிகாட்டுதலையும் அளிக்கின்றன. ஆனால், கடன் தகவல் நிறுவனங் கள் (CIC) இந்தச் சேவையை அளிப்பதில்லை. மேலும் தேர்டு பார்ட்டி நிறுவனங்கள், நீங்கள் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெரிந்துகொள்ள எத்தனை முறை வேண் டுமானாலும் அவர்களது தளங்களுக்குச் செல்ல அனுமதிக்கின்றன. இதற்குக் கட்டு ப்பாடு எதுவும் விதிப்பதில்லை.

எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம்

இத்தகைய வசதிகள் ஒருபக்கமிருந்தாலும், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள், வாடிக் கையாளர்கள் கேட்கும் கிரெடிட் ஸ்கோரை தெரிவிப்பதற்காகக் கேட்டு பெறும் அவ ர்களது பான் எண், அடையாள சான்று, முகவரி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் விவரங்களை மற்றவர்களுக்கு ரகசியமாகத் தெரிவிப்பதாகவும், அவற்றைத் தவ றாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில், இன்றைய உலகம் டேட்டா உலகம். வாடிக்கை யாளர்களின் டேட்டாக்களைப் பெறுவதற்காக த்தான் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இத்தகைய சூழலில் நமது தகவல்கள் பிற நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சம்மதம் இருந்தால்தான் அவர்களது கிரெடிட் ரிப்போர்ட்டை, தாங்கள் தொழில் தொடர்புகள் வைத்துள்ள மூன்றாம் தர ப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் கடன் தகவல் நிறுவனங்கள் (CIC) தெரிவிக்கின்றன. அதேசமயம், நீங்கள் ஒருமுறை அந்த சம்மதம் தெரிவித்துவிட் டால், அதன்பின்னர் உங்கள் தகவல்கள் மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் தவறாக பயன்படுத்தப்பட்டால், அதற்கு நீங்கள் கடன் தகவல் நிறுவனங்களைக் குறைகூற முடியாது.
இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்களிடம் நமது முக்கிய விவரங்க ளை அளித்தால், நமக்குத் தேவையற்ற இ-மெயில்கள், எஸ்.எம்.எஸ்-கள், போன் கள் வரவாய்ப்புள்ளன. எனவே, இத்தகைய நிறுவனங்களின் சேவையைப் பெறும் முன் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை களை நன்கு படித்துத் தெரிந்து கொ ண்டு, அதன்பின்னரே அந்த நிறுவனங்களின் தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்முன், அந்த மூன்றாம் தரப்பு நிறுவனம் ஏதாவது கடன் தகவல் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதா என்ப தை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்தக் கடன் தகவல் நிறுவனத்துடன் அது தொடர்பு வைத்துள்ளது, வாடிக்கையாளர்கள் விரும்பா விட்டால், எந்த நேரத்திலும் அதன் சந்தா பதிவை ரத்து செய்துவிட்டு விலகவோ அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களை அந்தத் தளத்திலிருந்து நீக்கவோ செய்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக, சிபில் தவிர எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் அளிக்கும் இலவச கிரெடிட் ஸ்கோரைப் பெற நாம் முயற்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி வாங்கப் போய், சிக்கலிலும் மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை!

என்றும் அன்புடன்
உடுமலை சிவக்குமார்
வாகன கடன் பிரிவு ..வீட்டுக்கடன் கடன் பிரிவு  ...9944066681

செவ்வாய், 19 ஜூன், 2018

வளரும் வாடகை ஓட்டுனர்களுக்கு ...நற்செய்தி ...

தமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

டாடா நிறுவன ஓப்புதலுடன் கோவையை சேர்ந்த நிறுவனம் சா்ரபில் டாடாட நேனோ எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் முதற்கட்டமாக ஓலா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் குறைந்த விலையில் மக்கள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையை மையமாக கொண்டு இயங்கும் ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் புதிய ஜெயம் நியோ எலெக்ட்ரிக் டாடா நேனோ என்ற காரை கடந்த பிப்., நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தினர். இந்த காரை அந்நிறுவனம் டாடா மோட்டார் குழுமத்துடன் இணைந்து தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி ஜெயம் நிறுவனம் டாடா நிறுவனத்திடம் இருந்து டாடா நேனோ காரின் பாடி ஷேல்லை வாங்கி அதனுடன் தங்கள் தயாரித்த மற்ற அண்டர் ஹூட் பாகங்களை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். முற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த காரில் 40 வோல்ட் எலெக்ட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 23 எச்பி மோட்டாருடன் ஒரு முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் வரை இயங்கும் திறன் கொண்டது.

இந்த கார் முதற்கட்டமாக கேப் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க ஜெயம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமான ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்காக 400 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கார்களை ஐதராபாத்தில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓலா கார்களுக்கு என தனி கலர் வண்ணங்களான வெள்ளை மற்றும் பச்சை கலரில் தான் இந்த காரின் பாடியும் அமைக்கப்பட்டுள்ளது. இது பலே நிறுவனங்கள் ஓலாவிற்கு கார்களை வழங்கியுள்ளது. இந்த காரில் டாடா நிறுவனத்தின் நேரம் பேட்ஜ் இல்லை. ஜெயம் நிறுவனத்தின் பேட்ஜ் தான் உள்ளது. ஜெயம் நிறுவனம் தான் இந்த காரை முழுமையாக தயாரித்து விற்பனை செய்கிறது. டாடா நிறுவனம் இந்த காருக்கான பாடி ஷேல்லை மட்டுமே வழங்குகிறது.

இந்த புதிய ஜெயம் நியோ எலெக்ட்ரிக் காரில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், ஏசி, முன்பக்க கதவுகளில் பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ப்ளூடூத் ஆகிய வசதிகள் இருக்கிறது. மேலும் அக்ஸ் இன், மல்டி இன்போர்மேஷன் டிஸ்பிளே மற்றும் 12 வோல்ட் பவர் சாக்கெட் இருக்கிறது. இந்த காருக்கான பவர் டிரைன் எலெக்ட்ரா இவி என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் தான் டிகோர் மற்றும் டியாகோ ஆகிய கார்களுக்கான எலெக்டரிக் டிரைவ் சிஸ்டத்தை வழங்குகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் பல பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களுக்கு இணையான கார்களை வெற்றிகரமான தயாரித்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. ஏற்கனவே ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெங்களூரு, கோவை, கரூர், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் காரிடாராக அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பல ஆட்டோ மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. இதன் மூலம் தமிழக இளைஞர்கள் ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கோவையை சேர்ந்த நிறுவனம் ஒன்று எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியாகும் செய்திகள் தமிழகத்தில் கொங்கு மண்டல பகுதிகள் அதிக அளவில் ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

உடுமலை சிவக்குமார் ...
வாகன கடன் ...வீட்டுக்கடன் ..
9944066681

திங்கள், 18 ஜூன், 2018

தமிழ் தம்பியின் கேள்வி ...?????
ஏந்த ஒரு நாட்டிற்கும் சாத்தியமற்றதே தற்சார்பு பொருளாதாரம் ...
அதற்கு பதில் ...கலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு?

கலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு?

 கலப்பு பொருளாதார முறையிலிருந்து தாராளமய பொருளாதார முறைக்கு இந்தியா மாறி 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

1992ல் தாராளமயக் கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது பல பொருளாதார நிபுணர்களும், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் அக்கொள்கையை வானளாவப் புகழ்ந்தார்கள்.  

அனைத்தும் தனியார் மயம் ஆக்கப்படுவதால் போட்டி ஏற்படும்... தரமான பொருட்கள் உற்பத்தி ஆகும்.... நிறுவனங்கள் தங்களது போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க விலையைக்  குறைக்கும்... இது  நுகர்வோர்களாகிய மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் மத்திய அரசு இரண்டு வித இந்தியாவை உருவாக்கியதுதான் மிச்சம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒன்று: ஒரு வீதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடுத்த வீதிக்குச் செல்வதற்குக்கூட சொந்த தனி விமானத்தைப் பயன்படுத்தும் மகா கோடீசுவரர்களின் இந்தியா.

மற்றொன்று: தங்களது குடிசையில் கழிப்பிட வசதி கூட இல்லாமல் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று காலைக்கடன்களை கழிக்கும் பரம ஏழைகளின் இந்தியா என அவர்கள் வகைப்படுத்துகின்றனர்.

           இது போன்ற கருத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கூறியிருக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கியது 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக               நாட்டை ஆண்ட காங்கிரஸ்தான் என்ற செய்தியை அவர் கூறவில்லை.
உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கும் நமது அரசுகள், ஏழைகள் மீது கரிசனம் காட்ட மறுகின்றன.   இதுதான் உலக அளவில், இந்தியாவில் ஏழைகளின் சதவீதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்கின்றனர் இடதுசாரிகள்.
    வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டுவதில் நமது அரசுகள் எவ்வளவு முனைப்போடு செயல்படுகின்றன என்பதை கீழ்க்காணும் நிகழ்வுகள் விளக்கும்.
      ஸ்ரீபெரும்புதூரில் சமீபத்தில் மூடப்பட்ட நோக்கியா நிறுவனம் 2005ல் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.675கோடி.         இதற்காக மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, உள்ளூர்வரி, லெவி, விற்பனை வரி, டர்ன் ஒவர் வரி, ஆக்ட்ராய்வரி, எலக்ட்ரிசிட்டி செஸ் போன்றவற்றில் சலுகை பெற்றது.
     2006 ல் தனது உற்பத்தியை தொடங்கிய நோக்கியா நிறுவனம் மதிப்புக் கூட்டுவரி, மத்திய விற்பனை வரி ஆகிய இரண்டின் மூலமாக மட்டும் 2008ல் செலுத்தியிருக்க வேண்டிய       தொகை ரூ.638 கோடி. ஆக தான் செய்த முதலீடு அளவுக்கு இரண்டே வருடங்களில் அரசின் வரிச்சலுகை மூலம் லாபம் அடைந்திருந்தது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தான்      சொன்னபடி நோக்கியா நிறுவனம் நடந்து கொள்ளவில்லை. 12000 பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் 4500 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியது.  தற்போது       இந்நிறுவனம் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியான ரூ 2000  கோடியை  பாக்கி வைத்தத்தோடு தொழிலாளர்களுக்கும்  பெப்பே காட்டிவிட்டு  நிறுவனத்தை மூடிவிட்டது.   

ஹீண்டாய் நிறுவனம் ரூ.100 கோடி பெறுமானமுள்ள 543 ஏக்கர் நிலத்தை ரூ.40 கோடிக்குப் பெற்றது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 1லட்சம் கார்களை உற்பத்தி செய்வதாக கூறியிருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்நிறுவனம் ஆண்டுக்கு  6லட்சம் கார்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் எண்ணிக் கையோ முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் குறைவு, தண்ணீர், மின்சாரம், திடக்கழிவு வெளியேற்றும் டேங்க், வேதியியல் கழிவுகளை வெளியேற்ற ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவற்றை அரசே ஏற்பாடு செய்து  தந்தது. இவை மட்டுமின்றி பல்வேறு வரிச்சலுகைகளையும் அரசு தந்தது.

இப்படி பல்வேறு சலுகைகளை பல்வேறு துறைகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு வாரி வழங்கியுள்ளது. சென்னை மாநகரைச் சுற்றி மட்டும் 300 கொரிய நிறுனங்கள், 170ஜப்பான் நிறுவனங்கள், 18 தைவான் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு அரசின் கரிசனம் எப்போதும் உண்டு.  
வருடத்திற்கு லட்சக்கணக்கான கோடிகளை ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளாக அரசு அளித்து வருகிறது. வரிச்சலுகைகைளப் பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அச்சலுகையால் கிடைத்த உபரி லாபத்தை திரும்பவும் இந்தியாவிலேயே முதலீடு செய்தாலாவது வேலைவாய்ப்பு பெருகும் என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால் உபரி வருமானம் பல்வேறு நாடுகளுக்கு முதலீடாகச் சென்று விடுகிறது.

இந்த உண்மையெல்லாம் மத்திய அரசுக்கு நன்கு தெரிந்திருந்தும் கார்பரேட் நிறுவனங்கள் மீது காட்டும் கரிசனத்தை மட்டும் கைவிடவே இல்லை.  அமெரிக்கா பின்பற்றும் கொள்கைகளையே இந்தியாவும் பின்பற்றுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

முதலாளித்துவ பொருளாதாரத்தையும்,  நுகர்வு கலாச்சாரத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இன்றைய நிலை என்ன?
14.5 லட்சம் கோடி டாலர் கடன் சுமையால் அமெரிக்கா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் கணக்கை கேட்டால் தலை சுற்றி விடும். இதன் மதிப்பு 6கோடி கோடி ரூபாய். எதிலும் நெம்பர் 1 ஆக காட்டிக்கொள்ளத் துடிக்கும் அமெரிக்கா கடன் சுமையிலும் உலக அளவில் நெம்பர் 1 ஆக இருக்கிறது. 1970களில் இந்நாட்டின் கடன் வெறும் 300 கோடி டாலர்தான். ஆக 40 ஆண்டுகளில் அந் நாடு கடனை வாங்கிக் குவிப்பதில் பெரும் முனைப்பு காட்டியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியால் 4.5 கோடி பேர் பரம ஏழைகளாகி விட்டனர். வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நுகர்வு  கலாச்சாரத்திற்கு  அடிமையானதால் கோடிக்கணக்கான மக்கள் பெரும் கடனாளிகள் ஆகிவிட்டனர்.

இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையின் பிடியில் இருந்தாலும் தனது பொருளாதார கொள்கையை அமெரிக்கா மாற்ற வில்லை. திவாலடைந்த நிறுவனங்களுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் லட்சக்கணக்கான கோடிகளை சலுகையாக வாரி வழங்கியது. திவாலடைந்த நிதி நிறுவனங்களை அரசு தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வராமல் இலவசமாக கோடிகளை அந்நிறு வனங்களுக்குக் கொட்டியது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே உள்ள மகா கோடீஸ்வரர்களுக்கே மீண்டும் இலவசமாக கோடிகளைக் கொட்டியது. வால்ட்ஸ்ட்ரீட் போராட்டம் வெடித் ததற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.
அமெரிக்காவை நம்புவது ஏன்?

அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நசிவைச் சந்தித்த போதிலும் இந்தியா, சீனா, ஜெர்மன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா என்ற என்ஜினையே பின்தொடர்வதற்கு காரணம் உண்டு.

அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்தாலும் டாலர்தான் உலகம் முழுவதும் செலாவணி பரிமாற்றத் திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒரு பொருளாதார நிபுணர் வேடிக்கையாகச் சொன்னார்:

டாலர்களை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. மற்ற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்’’
உலகில் டாலர்களின் ஆதிக்கம் இருக்கும் வரை அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும். டாலரின் ஆதிக்கத்தை ஒழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய  ஒன்றியங்களின் யூரோவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியால் தகிடுதத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலர்களில் 70 சதவீதம்  அமெரிக்காவிற்கு வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உற்பத்தி மதிப்புக்கேற்பதான் பணத்தை அச்சிட  வேண்டும் என்பது அடிப்படை பொருளாதார விதி. அதாவது பணம் என்பது ஒரு கருவி தான். உற்பத்திதான் உண்மையான மதிப்பு. இந்த அடிப்படை பொருளாதார விதி அமெரிக்காவிற்கும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் டாலர்களில் வர்த்தகம் நடை பெறுவதால் இதை தனக்குக் சாதகமாக  மாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.
டாலரை மட்டும் அச்சடித்து கோடிக்கணக்கான மதிப்புள்ள உற்பத்தி பொருட்களை இறக்குமதி  செய்து தனது பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொண்டது. இந்த குறுக்கு வழியை ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பயன்படுத்த முடியும் என்பதை அமெரிக்கா அறியாததல்ல...

அமெரிக்காவிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் டாலர்களில் 5 சதவீதத்தை திரும்பப் பெற வேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டாலே அமெரிக்காவின் கதி அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்து விடக்கூடாது என்பதில்  பல நாடுகள் ஆர்வத்துடன் முனைப்பு காட்டுகின்றன. ஏனெனில் அந்நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு அமெரிக்காவையே சார்ந்துள்ளது.

இப்படி அமெரிக்காவை நாம் சார்ந்திருப்பதால்தான் தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து வெளிநாட்டு மூலதனம் நம்நாட்டுக்கு வருமா  என்று ஏங்கித் தவிக்ககூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலை மாற வேண்டுமெனில் நேரு காலத்து கலப்பு பொருளாதார முறைக்கு இந்தியா மாறவேண்டும். ஆனால் இந்தியா அப்படி மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்......