கேள்வி : கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் எவ்வாறு உதவுகிறது?
என் பதில் :.
இப்பொழுதெல்லாம் என்னை போன்ற வங்கி மேலாளர் உங்களுக்கு கடன் வழங்குவதற்கு எந்தவித சலுகைகளை அல்லது அறிமுகத்தையோ அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்களது சொத்து மதிப்பு வங்கி பரிமாற்றம், செலவு செய்யும் விதம் மற்றும் ஊர் முழுக்க வாங்கிய கடன்கள், வீட்டுக் கடன் , நகை கடன், கடன் அட்டை விபரம் மற்றும் வரி விவரம் போன்ற பணம்சார்ந்த , பணம் சாரா அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் எத்தனை சதவிகிதம் வட்டியில் வழங்கலாம் என்ன ரிஸ்க் உள்ளது என்பதை ஆராய்ந்து இறுதி முடிவை எட்டுவதற்கு சிபில் ஸ்கோர் உதவுகிறது.
900 என்பது டாப் ஸ்கோர்.
இவர் நல்ல கடனை பெறுவதற்கு தகுதியானவர் கேட்கும் தொகையை அவரது சம்பள விவரத்தின்படி ஐம்பது மாத ஊதியங்களை கடனாக பெற தகுதி உள்ளவர் . இந்த வாடிக்கையாளரை நம்பலாம். இவருக்கு கடன் கொடுத்தால் ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடலாம்.க
800–850 ஸ்கோர் உள்ளவர்கள் நல்ல வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் சில பணம் நடவடிக்கைகளில் தவறி உள்ளதால் சில நிபந்தனைக்கு உட்பட்டு அவர் கேட்கும் தொகையை வழங்கலாம் ரிஸ்க் உள்ளதால் விதிக்கப்படும் வட்டியுடன் ரிஸ்க் ஃபேக்டர் வட்டியை இணைத்து விதிக்கலாம். நம்பலாம். முதலுக்கு மோசமில்லாத ஆசாமி.
மேற்கண்ட விகிதத்தில் உங்களை 300 முதல் 900 புள்ளிகள் கொண்ட அளவுகோலால் உங்களை அளந்து அதிக மதிப்பெண் பெறுபவர் தக்கவைக்க வங்கிகள் முயற்சி செய்யும் . அவருக்கு கடன் தொகையை வழங்கும். வட்டி விகிதத்தை குறைத்தாவது அல்லது சலுகை தந்து கடன் வழங்கி தக்க வைத்துக் கொள்ளும்.
இந்த அளவுகோலை நிதி நிறுவனங்களும் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் ஒரு நபரின் கடன் பெறும் தகுதியை நிர்ணயிப்பதில் பயன்படுத்திக்கொண்டு கடன் வழங்குகின்றன . மேலும் இந்த அளவுகோல் தற்போது புதுப்பிக்கப்பட்டு சிபிள் 2.0 என்ற புதிய அளவுகோலும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சிபில் மதிப்பெண்ணை நீங்கள் உயர்த்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவதில்லை . மேலும் பிறர் நினைத்தாலும் அதை அதிகப்படுத்த இயலாது. எனவே கடன் பெற்று அதை உரிய நேரத்தில் திரும்ப செலுத்துபவர் , சரியான விதத்தில் பல்வேறு கடன்களை பயன்படுத்துபவர், நல்ல நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்கிற வரைக்கும் இந்த சிபில் அளவுகோல் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டும் நிதி வசதியை பெற்றுத்தர நிச்சயம் உதவும்.
இதுவரை வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் எந்த ஒரு கடனும் பெறாத ஒருவர் கடன் பெற இந்த அளவீடு உதவுமா? என்ற வினா எழும். இது மாதிரியான பழைய மற்றும் புதிய நபர்களுக்காகத்தான் இந்த இரண்டாவது அளவுகோல் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதிரியான புது ஆட்களை கண்காணிப்போடு கடன் தகுதியை அடிக்கடி ஆய்ந்து அளவிட்டு கடன் வழங்கப்படும்.
அப்ப… எப்படி சார் ஒரு சில ஆட்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி விட்டனர் என்று கேட்கத் தோன்றும்…..அவுங்க ஸ்கோர் என்னாச்சி?….கேள்வி கேக்காதீங்க…. அவங்க எங்க முன்னாடி மலையளவு நிற்கும்போது நாங்க ஒரு அடி அளவுகோலை வைத்து என்னைக்கு அளந்து முடிகிறது? அதனால பார்த்து பார்வையாலயே அளந்துட்டோம்னு சொல்லுவாங்க.
சிபில் தனி நபர் கடனுக்குதான். மத்ததுக்கு ப்ராஜெக்ட் அப்ரைசல்..
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக